வி.எ.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவில் வாசலில் கூட்டம் ஏகத்துக்கு கூடியிருந்தது. பின்னே மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அகிலஉலக அசத்தல் நாயகனின் அடுத்த படமாச்சே! படபூஜைக்கு பல முக்கிய தலைகள் பங்கேற்க வந்திருந்தனர்.தவிர கமெர்ஷியலுக்கு பெயர் போன பிரபல இயக்குனர் வேற. பெரிய பட்ஜெட் படம்- அகில உலக ஸ்டார் விமலகாந்த் - உலக அழகி பட்டம் வென்ற ஜில் ஜில் ரமாமணி ஹீரோயின் - ஆஸ்கார் விருதைப் பெற்ற கமானின் இசை- ரன் பிக்சர்சின் விளம்பர உக்தி, தாராள சக்தி. அதனால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது.
அய்யர் மந்திரம் சொல்ல, அகிலஉலக ஸ்டாரும், ஜில்லும் நெருங்கி உரசியபடி நின்று கொண்டிருந்தவாறே கற்பூர தீபத்தை எடுத்து தத்தம் கண்களில் ஒற்றிக் கொள்ள, படத்தின் தயாரிப்பாளர் அகிலஉலகத்துக்கு மலர்மாலையை பொன்மாலையாக அணிவிக்க அந்த இடமே கோலாகல களேபரங்களில் திளைத்திருந்தது.
பரபரப்பை மேலும் தீவிரமாக்கி காசு பார்க்கும் முயற்சியில் மீடியாக்கள் வேறு. இந்த பூஜையின் ஒட்டுமொத்த ஓளிபரப்பு உரிமை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரன் பிக்சர்சின் தொலைக்காட்சியான ரன் டி.வி க்கு கொடுக்கப்பட, என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற ஒருபுறம் மற்ற தொலைக்காட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்க, பிணகரன் செய்தித் தாளுக்கு மட்டும் ஸ்டில்களை கொடுக்குமாறு பி.ஆர்.ஒ அகில உலகத்துக்கு கட்டளையிட மற்ற பத்திரிக்கை நிருபர்களும் கொதிக்கத் தொடங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து ரன் டி.விக்கு படத்தின் இயக்குனர் பங்கர் அளித்த பேட்டியில், "இது வரைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத விஷயங்கள் படத்தில் இருக்கும். அகில உலக ஸ்டாரை இவ்ளோ இளமையாய் அழகாய் அவரது ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். ஷூட்டிங் இதுவரைக்கும் யாருமே போகாத லொகேஷனில் தான் இடம்பெறும். மொத்தத்தில் தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனவே அனைவரும் திருட்டு வி.சி.டி யில் இந்த படத்தை பார்க்காதீர்கள்.தியேட்டரில் போய் பாருங்க..நன்றி வணக்கம்!" என்று முடித்தார்.
பூஜை முடிந்ததும் ஜில்லும், அகில உலகமும் ஒரே காரில் ஏற கார் உண்மையான பூஜையை நிறைவேற்ற நோக்கிப் புறப்பட்டது.
இயக்குனர் பங்கர் தனது பங்காளிகளுடன் இப்போது பாட்டிலுடன் பாண்டிச்சேரியில். "யோவ்! இப்போ இருக்குறவன் மட்டும் இல்லாம புதுசா வர்றவன் கூட எல்லா ஹாலிவுட்,உலக படத்துல வர நல்ல சீன்களை எல்லாம் சுட்டுடுரானுங்க. இப்போ நான் என்னய்யா பண்றது. கதைக்கு எங்க போவேன். தவுளத்தா தமிழ் சினிமாவின் புதிய முயற்சி..அது இதுன்னு பேசிட்டேன். ஏதாவது யோசனை சொல்லுங்கப்பா" என்று தனது பங்காளிகளிடம் புலம்பினார் பங்கர்.
"சார்! எனக்கு தெரிஞ்ச சி.டி கடை ஒன்னு இருக்கு. ஒனர் என் பிரெண்டு தான். ஒ.கே ன்னா இப்போவே போயி பல பேரு பார்க்காத நல்ல நல்ல உலக படங்களையும், அப்படியே நம்ம போதைக்கு ஊறுகாயாக சில கில்மா படங்களையும் அள்ளிட்டு வந்துடுறேன்.நம்ம போதைக்கு மட்டுமில்லாம, நம்ம படத்துக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு இந்த கில்மா படங்கள் உதவும் சார்." என்றார் பங்கரின் பங்காளிகளில் ஒரு புத்திசாலி பங்காளி.
இப்படியே பாடலாசிரியர், கேமராமென், ஸ்டன்ட் மாஸ்டர் என ஒவ்வொருவரும் தத்தம் திறமையை சி.டிக்கள் மூலம் சொந்தமாக யோசித்து எல்லாம் கலந்த பிச்சைக்காரனின் தட்டைப் போல படம் சுவையாக வந்திருப்பதைக் கண்டு தங்கள் உழைப்பில் புல்லரித்துப் போய் இருந்தனர்.படமும் வெளியானது. ப்ரோமோ காட்சிகளில் அனைவரும் படத்தைப் பாராட்ட, மீண்டும் படக்குழுவினர் "இப்படி கஷ்டப்பட்டு நாங்கள் உழைத்து எடுத்த இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்க...திருட்டு வி.சி.டியில் பார்க்காதீங்க. எங்க உழைப்பை சுரண்டி யாரோ பிழைக்கறாங்க." என்று ஒரே விஷயத்தை பலவாறு பேசிக்கொண்டிருந்தார்கள்.
படம் அனைத்து நகர பிரதான திரையரங்குகளிலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 10000 பிரிண்ட்டுகள் போடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை தட்டி சென்றது. பாலபிஷேகம், பீர் அபிஷேகம் என தியேட்டர்கள் அமர்க்களப்பட 5000 , 10000 என முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி ரசிகர்கள் கண்டு களித்தனர். ஒரு வாரத்துக்கு ஊரெங்கும் இதே பேச்சு தான்.ஐந்து நிமிட இடைவெளியில் "தந்தீ.....ஈஈஈஈஈஈ...ரா!" என்று படத்தின் விளம்பரம் ரன் டி.வியில். முன்பு பூஜை போடும் போது தங்களுக்கு ஸ்டில் மற்றும் செய்தி தராததை மனதில் கொண்டு மற்ற சில பத்திரிக்கைகள் படத்தைப் பார்த்து "குப்பை. இந்த காட்சி அந்த படத்தில் வந்தது. அந்த காட்சி இந்த உலகப் படத்தில் ஏற்கனவே டோகோமோ சுசுகி எடுத்துவிட்டார்" என்றெல்லாம் விமர்சனம் எழுதிய கிழித்துக் கொண்டிருக்க... ரன் டிவி மட்டும் இந்த படத்தின் வெற்றிகரமான 50 நாளை 30 வது நாளிலேயே கொண்டாடிக் கொண்டிருந்தது. ரசிகர்கள் போதையில் திளைத்திருக்க, நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பணத்தில் திளைத்திருக்க, வயிற்றெரிச்சலில் இருந்த ஏனைய பத்திரிக்கைகள் இந்த படம் பல படங்களில் தழுவல் என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தது. பட விமர்சனம் எழுதிய விமர்சகர் பர்மா பஜாரில் அடுத்த பட விமர்சனம் எழுத அது தொடர்பான சி.டிக்களை வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் காலை, "திருட்டு வி.சி.டி புழக்கத்தை தமிழக அரசு தனது சட்டக் கரங்களால் ஒடுக்கி விட்டது" என தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் பாராட்டு விழா நடத்தும் செய்தி 23 -செப்- 2050 அன்று ஒரு இதழில் வெளியாகியிருந்தது.
45 comments:
எப்பவோ வந்திருக்க வேண்டியது. ஏனைய்யா லேட்டு?
நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்...வருகைக்கு நன்றி சார்
வணக்கம் சகோ, எப்படி நலமா?
எங்கே ஐயா போயிருந்தீர்கள்?
வி.எ.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவில் வாசலில் கூட்டம் ஏகத்துக்கு கூடியிருந்தது. பின்னே மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அகிலஉலக அசத்தல் நாயகனின் அடுத்த படமாச்சே! படபூஜைக்கு பல முக்கிய தலைகள் பங்கேற்க வந்திருந்தனர்.தவிர கமெர்ஷியலுக்கு பெயர் போன பிரபல இயக்குனர் வேற. பெரிய பட்ஜெட் படம்- அகில உலக ஸ்டார் விமலகாந்த் - உலக அழகி பட்டம் வென்ற ஜில் ஜில் ரமாமணி ஹீரோயின் - ஆஸ்கார் விருதைப் பெற்ற கமானின் இசை- ரன் பிக்சர்சின் விளம்பர உக்தி, தாராள சக்தி. அதனால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது.//
ஆரம்பமே ஒரு அரசல் புரசலாகத் தான் இருக்கிறது, நிஜமான கதாபாத்திரங்களைப் பெயர் மாற்றிப் போட்டு பூஜையினைத் தொடர்ந்திருக்கிறீர்கள்...
அய்யர் மந்திரம் சொல்ல, அகிலஉலக ஸ்டாரும், ஜில்லும் நெருங்கி உரசியபடி நின்று கொண்டிருந்தவாறே கற்பூர தீபத்தை எடுத்து தத்தம் கண்களில் ஒற்றிக் கொள்ள, படத்தின் தயாரிப்பாளர் அகிலஉலகத்துக்கு மலர்மாலையை பொன்மாலையாக அணிவிக்க அந்த இடமே கோலாகல களேபரங்களில் திளைத்திருந்தது.//
சகோ அது மலர் மாலையா இல்லை செருப்பு மாலையா? கண்ணைத் திறந்து பாருங்கோ.
வணக்கம் சகோ, எப்படி நலமா?
எங்கே ஐயா போயிருந்தீர்கள்? //
I am busy...
பூஜை முடிந்ததும் ஜில்லும், அகில உலகமும் ஒரே காரில் ஏற கார் உண்மையான பூஜையை நிறைவேற்ற நோக்கிப் புறப்பட்டது. //
அஃதே.....அஃதே... என்ன ஒரு சிந்தனை...
படத்தை தியேட்டரில் போய் பாருங்க...திருட்டு வி.சி.டியில் பார்க்காதீங்க. எங்க உழைப்பை சுரண்டி யாரோ பிழைக்கறாங்க." என்று ஒரே விஷயத்தை பலவாறு பேசிக்கொண்டிருந்தார்கள்.//
சினிமாவிலையும் ஜனநாயகம் பேசுகிறார்கள்.
அஃதே.....அஃதே... என்ன ஒரு சிந்தனை... //
அஃதே அஃதே அஃதே அஃதே
அதுக்கு மீனிங் அஃதே அஃதே
சினிமாவிலையும் ஜனநாயகம் பேசுகிறார்கள். //
இல்லை சகா அதன் பேரு பணநாயகம்...தொழில் தந்திரம்
எங்கேய்யா போனீர் வலை வீசி தேடுறாங்க உங்களை....
அடுத்த நாள் காலை, "திருட்டு வி.சி.டி புழக்கத்தை தமிழக அரசு தனது சட்டக் கரங்களால் ஒடுக்கி விட்டது" என தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் பாராட்டு விழா நடத்தும் செய்தி 23 -செப்- 2050 அன்று ஒரு இதழில் வெளியாகியிருந்தது.//
நமீதா நடனம் நடக்கவில்லையோ.............
வலைவீசி தேடுறாங்களா? நான் என்ன கேப்டன் பேசுற தேர்தல் பிரச்சார பேச்சா? வார்த்தைகளை வலைவீசி தேடி மாற்றி ஒளிபரப்ப...
கொஞ்சம் வேலை அதிகம் சார்...ஆமா நீங்க இன்னும் பஹ்ரைன்லையே இருக்கீங்க போல...உங்க பங்களாதேஷ் நண்பர்களின் பழக்கம் உங்களுக்கு தொத்திக்கிச்சோ?
நமீதா நடனம் நடக்கவில்லையோ...//
நமீதா மேட்டர் எழுதுற ஸ்பெஷலிஸ்ட் நான் இல்லீங்கோ....சி.பி அண்ணன் பக்கம் இல்லேன்னா மாத்தியோசிக்கிறவரு கிட்ட கேளுங்கோ...
இந்தப் பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக திரைத்துறையினை நையாண்டி செய்திருக்கிறீர்கள். ரசித்தேன்..
இந்தப் பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக திரைத்துறையினை நையாண்டி செய்திருக்கிறீர்கள். ரசித்தேன்..//
நன்றி சகா...கதையா எழுதலாமுன்னு பார்த்தேன்...அது கடைசில இப்படி ரெண்டுங்கெட்டானா ஆயிடுச்சு...ஹி ஹி
நல்ல நக்கல்..ரொம்ப பிஸியாக இருப்பது போல் தெரிகிறது..வேலை வந்துவிட்டதா?
நல்ல நக்கல்..ரொம்ப பிஸியாக இருப்பது போல் தெரிகிறது..வேலை வந்துவிட்டதா?//
என்ன கொடுமை சார்...ஆபிசுல வேலை பார்க்க சொல்றாங்க...ஹி ஹி...நம் நண்பர்களின் இடுகைகளை முடிந்த அளவு படித்துக் கொண்டிருக்கிறேன்...பின்னூட்டம் போடா நேரம் இல்லை..அதற்கு அனைவரும் மன்னிக்கவும்...
தாங்கள் செவ்வாயிற்குச் சுற்றுலா சென்று வந்ததாக தகவல்கள் பரவுகிறதே, உண்மையா?
செவ்வாயா? இதுல டபிள் மீனிங் எதுவும் இல்லையே...
ஹா.......ஹா...........ஹா ............. அட்டகாசமான கற்பனை!! வாழ்த்துக்கள்::
நல்ல நடத்துரய்யா ஹிஹி!
தமிழ்மணம் இணைச்சாச்சு... உங்களைப்பற்றி ஒரு மேட்டர் கேள்விப்பட்டனே நிஜமா? ஹி ஹி
நண்பா எப்ப பதிவு போடரன்னு தெரியமாட்டேங்குது..ஒரு மெயில் பன்னலாம்ல..
கலக்கல் பதிவு..
மாப்ள பிஸியா இருந்தாலும் 2 நாளைக்கு ஒரு பதிவாவது போடுய்யா..
30.. ஐ வடை..
ஹா.......ஹா...........ஹா ............. அட்டகாசமான கற்பனை!! வாழ்த்துக்கள்:://
நன்றி ஓட்டவடை சார்
நல்ல நடத்துரய்யா ஹிஹி!//
விளக்கமா சொல்லுங்க பாஸ்...நம்ம மக்கள் "நானும் என் பி.ஏவும்" என்று எதையாச்சும் தலைப்பு வெச்சு பதிவு போட்டுட போறாங்க..ஹி ஹி
வாருங்கள், நண்பரே! உங்கள் கற்பனை வளம் சூப்பர். சில நாட்கள் கழித்து வந்தாலும், கலக்கீட்டீங்க.//
வணக்கம் சார்! இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே?
தமிழ்மணம் இணைச்சாச்சு... உங்களைப்பற்றி ஒரு மேட்டர் கேள்விப்பட்டனே நிஜமா? ஹி ஹி//
தமிழ்மணத்துல இணைச்சதுக்கு நன்றி தல...அப்படியே காவிரி-கங்கை ஆறுகளை இணைக்க முயற்சிக்கவும்...ஹி ஹி
என்னை பத்தி ஒரு மேட்டர் தான் கேள்விப் பட்டீங்களா? அப்போ பல மேட்டர் பல மேட்டர் இன்னும் இன்னும் கேள்விப் படலை...அதுவே போதும்.
நண்பா எப்ப பதிவு போடரன்னு தெரியமாட்டேங்குது..ஒரு மெயில் பன்னலாம்ல..மாப்ள பிஸியா இருந்தாலும் 2 நாளைக்கு ஒரு பதிவாவது போடுய்யா..//
வருகைக்கு நன்றி வாத்தியாரே...இப்பிடியே நக்கல் அடிச்சுட்டு இருந்தா போர் அடிசுடும்ல..அதான் கொஞ்சம் கேப் விட்டு உங்களை எல்லாம் கடுப்பேத்திட்டு இருக்கேன்...பதிவு போட்டவுடன் மெயில் அனுப்புவது பற்றி பொதுக்குழுவுடன் கலந்தாலோசித்து விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்...ஹி ஹி
கக்கு அண்ணா சொன்னதையே வழி மொழிகிறேன்...ரொம்ப ப ப ப ப ப ப லேட் ஆ ஆ ஆ ன பதிவு...ஹீ...ஹீ...ஆனால் கற்பனை மற்றும் நிறைய உள்குத்துக்கள் படிக்க சுவை...அடுத்து ராணா சே..சா....கா னா னா..னா பத்தியாவது சீக்கிரம் எழுதிருங்க பாஸ்...என் பையன் பெரியவன் ஆகி பதிவை படிக்கிற மாதிரி நாள் ஆக்கிடாதிங்க....:)))))
//பட விமர்சனம் எழுதிய விமர்சகர் பர்மா பஜாரில் அடுத்த பட விமர்சனம் எழுத அது தொடர்பான சி.டிக்களை வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தார்.//
கலக்கல்!
கற்பனை அருமை.
//ஷூட்டிங் இதுவரைக்கும் யாருமே போகாத லொகேஷனில் தான் இடம்பெறும். //
இமயமலை உச்சியா??
//கொஞ்சம் வேலை அதிகம் சார்...ஆமா நீங்க இன்னும் பஹ்ரைன்லையே இருக்கீங்க போல...உங்க பங்களாதேஷ் நண்பர்களின் பழக்கம் உங்களுக்கு தொத்திக்கிச்சோ?//
பிச்சிபுடுவேன் பிச்சி.....
கிளம்ப ஏற்பாடு நடந்துட்டு இருக்குய்யா....
அய்யர் மந்திரம் சொல்ல, அகிலஉலக ஸ்டாரும், ஜில்லும் நெருங்கி உரசியபடி நின்று கொண்டிருந்தவாறே கற்பூர தீபத்தை எடுத்து தத்தம் கண்களில் ஒற்றிக் கொள்ள, //கலக்குறீங்கய்யா
கலக்கலான கற்பனை
என்ன பார்ட்னர் மீள்பதிவா? இருந்தாலும் நல்லாத்தான்யா இருக்கு........!
மீள்பதிவு எல்லாம் இல்லை பார்ட்னர்...சரக்கு புதுசு தான்..
கலக்கலான கற்பனை //
நன்றி சார்
இமயமலை உச்சியா?? //
அண்டார்டிகாவுல
...என் பையன் பெரியவன் ஆகி பதிவை படிக்கிற மாதிரி நாள் ஆக்கிடாதிங்க....:)))))//
உங்க ஊரு என்ன கொயம்புத்தூருங்களா?
வருகைக்கு நன்றி சென்னைப் பித்தன் அய்யா
கிளம்ப ஏற்பாடு நடந்துட்டு இருக்குய்யா.... //
சீக்கிரம் கிளம்புங்க..பஹ்ரைன்ல காத்தே அடிக்கலையாம்
Post a Comment