Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Jun 10, 2011

ஒரு குவார்ட்டருக்காகவா இவ்ளோ கலாட்டா?

வணக்கம் நண்பர்களே !!!



மொக்கைத் தனமா இடுகை எழுதி ரொம்ப நாள் ஆயிட்டதால..(அட யாருப்பா அது அங்க "இவன் எழுதுற எல்லாமே மொக்கையா தான் இருக்கு, இதுல மொக்கைனு சொல்லி ஒரு இடுகையா?என்ன வாழ்கைடா இது ?!" என்று கல் எடுக்குறது) இன்னைக்கு கொஞ்சம் மொக்கை போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். (ஆமா இவரு பெரிய ஐ.நா சபை லீடரு முடிவு பண்ணிட்டாரு..ப்ளாகை ஒப்பன் பண்ணி வெச்சுட்டு ஓட்டுப் பிச்சை எடுக்கப்போவுது இதுக்கு லவுட்ட பாரு)





இன்னைக்கு எதைப் பற்றிய மொக்கைனா, ஒரு கற்பனை கலந்த மொக்கை. உலகத்தில பெட்ரோல் உற்பத்தி குறைந்து வருவதையும், அதனால் விலைவாசி உயர்வதையும், இன்னபிற பிரச்சினைகளையும் ஒவ்வொரு இந்தியனும் அறிவான். அதே போல உலகில் மது உற்பத்தி (பொண்ணு பேரு இல்லீங்க..மது என்றால் சாராயம்,சரக்கு, சோமபானம், உற்சாகபானம்..ஹி ஹி!!!) குறைந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை (ஆமா இவரு பெரிய அணு விஞ்ஞானி...விளைவுகள் பத்தி விலாவரியா விளக்க வந்துட்டாரு...அணு விஞ்ஞானிகளே விளைவுகளைப் பத்தி கவலைப்படறது இல்ல...இவரு புத்தி சொல்றாராம்... )மையமாகக் கொண்ட கற்பனை கலாட்டாக்கள் உங்கள் பார்வைக்கு. இதில் தல கவுண்டரின் மைன்ட் வாய்சும் கூடவே அடைப்புக் குறிக்குள்...(யப்பா இவன் தமிழ் இம்சை தாங்க முடில டா சாமி...இதுக்கு பேதியே பரவால்லடா யம்மா...)



(1) மாப்பிள்ளை வீட்டு வரதட்சணை சீதனமாக தங்கத்துக்கு பதில் மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்கேற்ப மது புட்டிகளின் எண்ணிக்கை வாங்கப்படும். இல்லையென்றால் கன்னிப்பெண்கள் கன்னியாகவே காத்திருக்க வேண்டியது தான். பாரத மாதவே எம் தாய்க்குலங்களை காப்பாற்று...(டேய் டேய் டேய்..இந்த ஜிகினா வேலையெல்லாம் என்கிட்டே வுடாதடி... முதல்ல ஊர்ல இருக்குற குளங்களை எல்லாம் ஒழுங்கா தூர் வாருங்கடா..தாய்க்குலங்களை அப்புறம் காப்பாத்திக்கலாம்...அது என்னா எவனுக்கு சமூக அக்கறை வந்தாலும் தாய்க்குலமே தந்தைக்குலமேன்னு இறங்கிடுறீங்க...படுவா பிச்சு புடுவேன்..)



(2) மதுபான தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு திருமண சம்பந்தம் முடிக்க பெண்ணைப் பெற்றோர் போட்டி போடுவார்கள்.மாப்பிள்ளை டாஸ்மாக்ல வேலை பாக்குறாரு என்பது இன்றைய ஐ.டியில வேலை பாக்குறாரு என்பது போல ஒரு மிகப்பெரிய கவுரவ அந்தஸ்தாக கருதப்படும். (நல்ல குடும்பம்...ஏர்ல பூட்டுன எருமை மாதிரி... குட் பாதர்...குட் மாதர்...குட் பொண்ணு... இவனுங்க எல்லாம் வொஸ்ட்டு மா...கடன் வாங்கி கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அப்புறம் வயசான காலத்துல பொலம்பியே மண்டையப் போட்டுடுவானுங்க...அட ஊருக்குள்ள இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா..குவார்ட்டர் பாட்டிலை ப்ளாக்ல விக்குறவன் எல்லாம் தொழிலதிபர் ஆயிடுரானுங்க)



(3) "பத்து வருஷத்துக்கு முன்னாடி நம்ம நாட்டோட அந்நிய செலாவணி வெறும் 2000 கோடி ரூபாய்..ஆனா இப்போ 8 லட்சம் கோடி ரூபா..திஸ் இஸ் ஆல் பிகாஸ் ஆப் டாஸ்மாக்" என்று பெருமை பீத்திக்கொள்வார்கள் மதுபானம் சம்பந்தமான துறையில் வேலையில் இருப்போர்...(அடேய் அடி அடேடி..இப்படியே நீ பேசிகிட்டு இருந்த வாயில வறட்டி கொளுத்தி போட்டுருவேன்..டேய் இங்க வாடா...அடச்சே போடா..போடா டேய் போடடா...)



(4) மதுபானத் துறை என்ற புதிய அரசியல்துறை உருவாக்கப்படும். அந்த துறையைப் பெறுவதற்கு மந்திரிகள் மத்தியல் பலத்த போட்டி நிலவும். பொதுப்பணித்துறையை யாரும் சீண்ட மாட்டார்கள். (அரசியல்னாலே இதெல்லாம் இருக்கறது தான..ஆயிரம் என்குயரீஸ்..ஆயிரம் என்கேஜ்மென்ட்... )



(5) திரைப்படங்களில் மதுபானம் அருந்தும் காட்சிகள் குறையும்...இல்லையெனில் பெரிய பட்ஜெட் படத்தில் மட்டும் குடிக்கும் காட்சிகள் இடம்பெறும். மெகா பட்ஜெட் படங்களில் கதாநாயகன் மதுபானம் நிரம்பிய ஸ்விம்மிங் பூலில் குளிப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.லோ பட்ஜெட் படம் எடுப்போரெல்லாம் செட் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டியது தான். சரக்குக்கு பதிலாக வெறும் தண்ணீரையோ இல்லை குளிர்பானங்களையோ குடிப்பது போல காட்சி வைத்து ஒப்பேற்றலாம்.(அடங்கொன்னியா இப்பவே இவனுங்க தொல்லை தாங்க முடில...சுதிய ஏத்துறேங்கறானுங்க அப்புறம் சுதிய   இறக்கனும்கிறானுங்க...இதுல இது வேறயா? கண்ண கட்டுதுடா சாமி )



(6) மதுவுக்காக நாட்டில் கொலை,கொள்ளை,அடிதடி போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். பெரும் பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை ஏலம் எடுத்து வாங்கி செல்வார்கள்.(அஹ்ஹான் நான் என்ன இளிச்சவாயனா...இந்த மாதிரி எந்த படுவா பண்ணினாலும் மூஞ்ச அப்படியே செவுத்துல வெச்சு தரதரதரன்னு தேச்சு புடுவேன்...அப்புறம் குடிக்கறதுக்கு வாய் இருக்காது...மொழுக்கட்டினு தான் சுத்தணும்)



(7) "இன்றைய விஸ்கி மற்றும் பிராண்டி நிலவரங்களை காணலாம்" என்று வணிகச் செய்திகளில் விலை நிலவரங்கள் இடம்பெறும். ஏறுதா இறங்குதா என்று வாயைப் பிளந்துகொண்டு மதுபான பங்குகளில் முதலீடு செய்த கூட்டம் பார்த்துக்கொண்டு இருக்கும். (ஆமா..ஒலக நடப்ப தெரிஞ்சிக்கிட்டாராம்... )



(8) உலகக்கோப்பைக்கு பதிலாக குவார்ட்டர் பாட்டிலை மையமாக வைத்து அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். போட்டியில் வென்று குவார்ட்டர் பாட்டிலை எப்படியாக கைப்பற்றுவோமென்று அணித் தலைவர் தெரிவிப்பார். (டேய்..சிலம்புக்கு ஒரு கண்ணகி...கம்புக்கு இந்த காளிங்கன்..படுவா சுத்துனன்னு வையி...)



(9) எல்லாவற்றிற்கும் மேலாக எந்த நாட்டில் மது உற்பத்தி அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டுக்கு தீவிரவாத முத்திரை குத்தி அமெரிக்கா போர் தொடுக்கும்.(ஆக பாட்டியும்,பேரனும் இருநூறு ரூவா கதவுக்கு தான் ப்ளான் போட்டிருக்கீங்க...அடத் த்த்தூ)



(10) இறுதியாக அக்கால தமிழ்த் திருவள்ளுவர்கள் பலர் "புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?" என்பதெல்லாம் பழமொழி, "மாது இருக்க மது எதற்கு?" என்பது புதுமொழி என்று இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பார்கள். (இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா திருப்புகழையே பாடிகிட்டு இருப்பீங்க..அவனவன் கம்ப்யூட்டர்ல பல்லு வெளக்கிட்டு இருக்கான்..நீங்க இன்னும் திருப்புகழையே பாடிகிட்டு திரியுங்க)



என்ன மக்களே?இதுக்கே கண்ண கட்டுதா? எனக்கும் தான். இதே போல உங்களுக்கு தெரிஞ்ச,நீங்க யோசிச்ச இந்த மாதிரி விஷயங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்க. பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி.மீண்டும் சந்திப்போம்!!!

Apr 5, 2011

தந்தீ.....ஈஈஈஈஈஈ...ரா!

வி.எ.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவில் வாசலில் கூட்டம் ஏகத்துக்கு கூடியிருந்தது. பின்னே மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அகிலஉலக அசத்தல் நாயகனின் அடுத்த படமாச்சே! படபூஜைக்கு பல முக்கிய தலைகள் பங்கேற்க வந்திருந்தனர்.தவிர கமெர்ஷியலுக்கு பெயர் போன பிரபல இயக்குனர் வேற. பெரிய பட்ஜெட் படம்- அகில உலக ஸ்டார் விமலகாந்த் - உலக அழகி பட்டம் வென்ற ஜில் ஜில் ரமாமணி ஹீரோயின் - ஆஸ்கார் விருதைப் பெற்ற கமானின் இசை- ரன் பிக்சர்சின் விளம்பர உக்தி, தாராள சக்தி. அதனால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது.



அய்யர் மந்திரம் சொல்ல, அகிலஉலக ஸ்டாரும், ஜில்லும் நெருங்கி உரசியபடி நின்று கொண்டிருந்தவாறே கற்பூர தீபத்தை எடுத்து தத்தம் கண்களில் ஒற்றிக் கொள்ள, படத்தின் தயாரிப்பாளர் அகிலஉலகத்துக்கு மலர்மாலையை பொன்மாலையாக அணிவிக்க அந்த இடமே கோலாகல களேபரங்களில் திளைத்திருந்தது.



பரபரப்பை மேலும் தீவிரமாக்கி காசு பார்க்கும் முயற்சியில் மீடியாக்கள் வேறு. இந்த பூஜையின் ஒட்டுமொத்த ஓளிபரப்பு உரிமை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரன் பிக்சர்சின் தொலைக்காட்சியான ரன் டி.வி க்கு கொடுக்கப்பட, என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற ஒருபுறம் மற்ற தொலைக்காட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்க, பிணகரன் செய்தித் தாளுக்கு மட்டும் ஸ்டில்களை கொடுக்குமாறு பி.ஆர்.ஒ அகில உலகத்துக்கு கட்டளையிட மற்ற பத்திரிக்கை நிருபர்களும் கொதிக்கத் தொடங்கினார்கள்.



இதைத் தொடர்ந்து ரன் டி.விக்கு படத்தின் இயக்குனர் பங்கர் அளித்த பேட்டியில், "இது வரைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத விஷயங்கள் படத்தில் இருக்கும். அகில உலக ஸ்டாரை இவ்ளோ இளமையாய் அழகாய் அவரது ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். ஷூட்டிங் இதுவரைக்கும் யாருமே போகாத லொகேஷனில் தான் இடம்பெறும். மொத்தத்தில் தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனவே அனைவரும் திருட்டு வி.சி.டி யில் இந்த படத்தை பார்க்காதீர்கள்.தியேட்டரில் போய் பாருங்க..நன்றி வணக்கம்!" என்று முடித்தார்.



பூஜை முடிந்ததும் ஜில்லும், அகில உலகமும் ஒரே காரில் ஏற கார் உண்மையான பூஜையை நிறைவேற்ற நோக்கிப் புறப்பட்டது.

இயக்குனர் பங்கர் தனது பங்காளிகளுடன் இப்போது பாட்டிலுடன் பாண்டிச்சேரியில். "யோவ்! இப்போ இருக்குறவன் மட்டும் இல்லாம புதுசா வர்றவன் கூட எல்லா ஹாலிவுட்,உலக படத்துல வர நல்ல சீன்களை எல்லாம் சுட்டுடுரானுங்க. இப்போ நான் என்னய்யா பண்றது. கதைக்கு எங்க போவேன். தவுளத்தா தமிழ் சினிமாவின் புதிய முயற்சி..அது இதுன்னு பேசிட்டேன். ஏதாவது யோசனை சொல்லுங்கப்பா" என்று தனது பங்காளிகளிடம் புலம்பினார் பங்கர்.



"சார்! எனக்கு தெரிஞ்ச சி.டி கடை ஒன்னு இருக்கு. ஒனர் என் பிரெண்டு தான். ஒ.கே ன்னா இப்போவே போயி பல பேரு பார்க்காத நல்ல நல்ல உலக படங்களையும், அப்படியே நம்ம போதைக்கு ஊறுகாயாக சில கில்மா படங்களையும் அள்ளிட்டு வந்துடுறேன்.நம்ம போதைக்கு மட்டுமில்லாம, நம்ம படத்துக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு இந்த கில்மா படங்கள் உதவும் சார்." என்றார் பங்கரின் பங்காளிகளில் ஒரு புத்திசாலி பங்காளி.



இப்படியே பாடலாசிரியர், கேமராமென், ஸ்டன்ட் மாஸ்டர் என ஒவ்வொருவரும் தத்தம் திறமையை சி.டிக்கள் மூலம் சொந்தமாக யோசித்து எல்லாம் கலந்த பிச்சைக்காரனின் தட்டைப் போல படம் சுவையாக வந்திருப்பதைக் கண்டு தங்கள் உழைப்பில் புல்லரித்துப் போய் இருந்தனர்.படமும் வெளியானது. ப்ரோமோ காட்சிகளில் அனைவரும் படத்தைப் பாராட்ட, மீண்டும் படக்குழுவினர் "இப்படி கஷ்டப்பட்டு நாங்கள் உழைத்து எடுத்த இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்க...திருட்டு வி.சி.டியில் பார்க்காதீங்க. எங்க உழைப்பை சுரண்டி யாரோ பிழைக்கறாங்க." என்று ஒரே விஷயத்தை பலவாறு பேசிக்கொண்டிருந்தார்கள்.



படம் அனைத்து நகர பிரதான திரையரங்குகளிலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 10000 பிரிண்ட்டுகள் போடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை தட்டி சென்றது. பாலபிஷேகம், பீர் அபிஷேகம் என தியேட்டர்கள் அமர்க்களப்பட 5000 , 10000 என முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி ரசிகர்கள் கண்டு களித்தனர். ஒரு வாரத்துக்கு ஊரெங்கும் இதே பேச்சு தான்.ஐந்து நிமிட இடைவெளியில் "தந்தீ.....ஈஈஈஈஈஈ...ரா!" என்று படத்தின் விளம்பரம் ரன் டி.வியில். முன்பு பூஜை போடும் போது தங்களுக்கு ஸ்டில் மற்றும் செய்தி தராததை மனதில் கொண்டு மற்ற சில பத்திரிக்கைகள் படத்தைப் பார்த்து "குப்பை. இந்த காட்சி அந்த படத்தில் வந்தது. அந்த காட்சி இந்த உலகப் படத்தில் ஏற்கனவே டோகோமோ சுசுகி எடுத்துவிட்டார்" என்றெல்லாம் விமர்சனம் எழுதிய கிழித்துக் கொண்டிருக்க... ரன் டிவி மட்டும் இந்த படத்தின் வெற்றிகரமான 50 நாளை 30 வது நாளிலேயே கொண்டாடிக் கொண்டிருந்தது. ரசிகர்கள் போதையில் திளைத்திருக்க, நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பணத்தில் திளைத்திருக்க, வயிற்றெரிச்சலில் இருந்த ஏனைய பத்திரிக்கைகள் இந்த படம் பல படங்களில் தழுவல் என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தது. பட விமர்சனம் எழுதிய விமர்சகர் பர்மா பஜாரில் அடுத்த பட விமர்சனம் எழுத அது தொடர்பான சி.டிக்களை வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தார்.



அடுத்த நாள் காலை, "திருட்டு வி.சி.டி புழக்கத்தை தமிழக அரசு தனது சட்டக் கரங்களால் ஒடுக்கி விட்டது" என தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் பாராட்டு விழா நடத்தும் செய்தி 23 -செப்- 2050 அன்று ஒரு இதழில் வெளியாகியிருந்தது.

Mar 26, 2011

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...?



இது நம்ம பன்னீஸ் போட்ட லேட்டஸ்ட் இடுகைக்கு எதிர் இடுகை...
ஏன்னா நாங்களும் ரவுடிங்க தான்...எங்களுதும் பரட்டை தான் நாங்களும் கலைச்சுக்குவோம்...அப்புறம் வாரிக்குவோம் அப்படின்னு அவருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுறதுக்கே இந்த இடுகை...




எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் பன்னீஸ் சொல்ற மாதிரி டாகுடர் ஸ்ரீநிவாசன் இல்லை...அந்த பட்டத்தை தட்டி செல்லவோ அல்லது அவருக்கு நிகராக போட்டி போடவோ இன்னொரு சூப்பர் ஸ்டார் இருக்காருன்னு சொல்ல விரும்பிக்கொள்கிறேன்...

யோவ் பார்ட்னர்...நீ எம்.ஜி ஆர் னா நான் நேரு...நீ பிரதம மந்திரினா நான் ஒபாமா...எப்பூடி?ஹி ஹி...இப்போது பன்னீஸ் இடுகைல இருந்த அதே வரிகள்...ஆனால் சூப்பர் ஸ்டார் அவரு இல்ல...

அடுத்த முதல்வர் யார் என்று பதிவுலகம் முழுதும் தேர்தல் ஜன்னி கண்டு இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம். தேர்தல் நேரத்தில் இது அவசியமா என்று எதிரிகள் சிலர் கேட்கலாம். நமது சூப்பர் ஸ்டார்களுக்கே முதல்வர்களாகும் தகுதி இருப்பதனாலும், நாம் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ஒருவர் தமிழ்த்திரை வானில் இப்போது அவதரித்து இருப்பதாலும், தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு.

தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினி என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பது தமிழகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அடுத்த தலைமுறை நடிகர்கள் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீர்மானிக்க முடியாத நிலை தொடர்வது சினிமா ரசிகர்களுக்கு தீராத கவலையாக இருந்து வருகிறது.

இன்னிலை தொடர்வது சினிமாவுக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. மேலும் சிபி போன்ற சினிமா விமர்சகர்களுக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அடையாளம் காட்டுவது நமது தார்மீகக் கடமை என எண்ணுகிறோம். கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...?

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற உடன், நடிகர்கள் அஜீத்-விஜய் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இருவரும், விடாது தொடரும் தொடர்தோல்விகளால் பொறிகலங்கி இருப்பது சற்றே யோசிக்க வைகிறது. சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம், ஜீவா, பரத் அனைவரும் அஜீத்-விஜய்க்கு கிழேதான் என்பதால் அவர்கள் அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இடம் பெறும் தகுதியை இழக்கிறார்கள். அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா?

இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியாமலே போய் விடுமோ என்று ரசிகர்கள் எல்லாம் அல்லும் பகலும் துயரத்தில் தோய்ந்து, தோய்ந்து வருந்திக் கொண்டிருந்த காலத்தில்தான் வானில் விடிவெள்ளி உதிப்பது போல தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். தமிழகத்திற்கு நோபல், ஆஸ்கார் என்று பரிசுகளை அள்ளித்தரக் கூடிய அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு என்றாலும் அவர் அதை விரும்புவதில்லை என்பதால் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் பலரும் அறிவார்கள்.

டாஸ்மாக்கில் இந்த வருடம் வருமானம் பலமடங்கு அதிகரித்திருப்பதற்கு சாம் ஆன்டர்சனின் சூறாவளி நடனமே காரணம் என்று புள்ளி விபரங்களைப் பார்த்தவ்ர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மேலும் இந்த வருட கலைமாமணி லிஸ்ட்டில் ஆன்டர்சனின் பெயர் இருந்ததாகவும், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரோ மாட்டோரோ என்ற அச்சத்தில் கடைசி நேரத்தில் அவர் பெயர் அந்த லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

தமிழக மக்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார், இனி அவர்தான் நம் சூப்பர் ஸ்டார் என இறுமாந்திருந்த நேரத்தில் புயலென கிளம்பி தமிழகத்தின் அத்தனை தியேட்டர்களையும் துவம்சம் செய்து அதிரடியாய் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் ஒரு நடிகர்...

அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.....


தைரியம் இருந்தா வீடியோவையும் பார்த்துக்கோங்க...இறுதியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிகறேங்க...இவரோட தன்னம்பிக்கை எனக்கு பிடிச்சுருக்கு.






பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!

Mar 18, 2011

ஸ்டார் கவிதை (அப்படின்னு அவங்களே சொல்லிக்குவாங்க)

இது ஸ்டார் ஹைக்கூ...நம்ம தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் ஹைக்கூ எழுதினால் எப்படி இருக்குமுன்னு ஒரு சிறிய கற்பனை.இது முழுக்க முழுக்க ஜாலிக்காகவே எழுதப் பட்டது. படிச்சுட்டு சீரியஸ் ஆனா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல. படிச்சுட்டு புரியலைன்னு விளக்கம் கேட்டாலும் கம்பெனி பொறுப்பில்லை...ஹி ஹி...


முதலில் கேப்டன் விஜயகாந்த்:


ஊத்திக் கொடுக்கும் வரை உறவு

ஹ்ம்ம்.. நான்
அங்கிட்டு போனேனா 41
ஹ்ம்ம்..இங்கிட்டு போனேனா 100க்கு மேலே
எங்க போனாலும்
தெய்வமும் நீங்களும்
தான் என் கூட்டணி
ஹ்ம்ம்..வர்ட்டா ஹ்ம்ம்...


டாகுடறு விஜய்:


மாமிச உடம்பு மனுஷனுங்ண்ணா



ண்ணா..
அஹ் வணக்கமுங்ண்ணா
அஹ் காந்திங்ண்ணா
அஹ் எம்ஜியாருங்ண்ணா
அஹ் ஜெயலலிதாங்ண்ணா
அஹ் விஜயகாந்துங்ண்ணா
இப்போ நானுங்ண்ணா
ஹி ஹி...
வரட்டும்மாங்ண்ணா


அலட்டல் நாயகன் அஜீத்:


அது



ஏலே
தனியா முளைச்ச காட்டுமரம்லே
நெறைய பேஸ்டேன் பாஸ்
விழாவுக்கு வர சொல்லி
வற்புறுத்துறாங்க அய்யா
கான்பிடேன்ஸ் பாஸ்
கான்பிடேன்ஸ்
அது!!!


சூப்பர் ஸ்டாரு :


கண்ணா...ஹா ஹா ஹா


கடமை செய் பலனை (பழனி) எதிர்பார்
அரோகரா அரோகரா
யானை இல்ல குதிரை
இப்போ ஒரு குட்டி கதை சொல்றேன்
'இப்போ ஒரு குட்டி கதை '
கதையா
அதான் சொல்லிட்டேன்ல
ஹா ஹா ஹா
வர்ட்டா கண்ணா...


விரலு நடிகரு:


ஆஹ் விரலு ஆஹ் விசிலு


எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா
எங்கப்பா எனக்கு திரைல நடிக்க
கத்துக் கொடுத்து இருக்காரு
வாழ்க்கைல நடிக்க சொல்லித் தரலை
(உருப்படியா ஆகமொத்தம் எதுவும் சொல்லித் தரல)
எவன்டி உன்ன பெத்தான்
மொட்டை மதன் இல்லை மன்மதன்
இந்த நடிப்பு மட்டும்
திரையிலும் வாழ்க்கையிலும்!


பெருங்கரடி:

டண்டணக்கா ஹே டணக்குணக்கா!

ஹவ் டூ யு சே
ஐ ஆம் நாட் எ க்ரவுட் புல்லர்
மானமுள்ள தமிழன்
டப்பு டிப்பி டாப்பு டிப்பி
டுப்பு டப்பு டூப்பு டாப்பு
இது தான் என் மெட்டு
அதுக்கேத்த பல பாட்டு
யு ஆர் ப்ரம் விச் டெலிவிஷன்?


காமெடியன் செந்தில்:



அண்ணே நீங்க அறிவுக் கொழுந்துண்ணே


அண்ணே
இதுல எப்புடிண்ணே விளக்கெரியும்
அதானே இது
அஹாண்ணே
எனக்கு அமேரிக்கவில சூட்டிங் இருக்குது
அதனால் தான் சொல்கிறேன்
காத்தவராயனுக்கு ஓட்டுப் போடுங்கள்
புலிக்குட்டி ப்ரதர் பூனைக்குட்டி
ஹரே ஒஹ் சாம்போ!


குழப்ப நாயகன் கமலஹாசன்:



ஆஹ் ஆஆஅஹ் ஆஆஹ்!!



வணக்கம்
டாவுக்கு கண்ணு டொக்கு
சொத்தைப் பல்லுக்கு
சொத்தையே பிரிக்கிறதா
உன் உள்பாடி சைஸ் என்ன?
கடவுள் இருந்தா நல்லா
இருக்கும்னு சொல்றேன்
நல்லவனா கெட்டவனா?
கடவுள் பாதி மிருகம் பாதி
கண்ணுக்குட்டி அம்மா
செத்து போச்சு கண்ணுக்குட்டி
ஏற்றத் துணியும் அணி சேர்த்துக்கணுமா?
அன்பே சிவம்!
அடியேன் ராமானுஜதாசன்
இல்லை கமலஹாசன்!


தலைவரு கவுண்டமணி:



அடங்கொன்னியா!


இதுக்கு பேரு தான் மேண்டில்
இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு
ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்ங்கறது
யூரின் வரட்டும் வரட்டும்
துன்பத்திலும் இன்பம்
கொசு தொல்லை தாங்க முடியல டா
தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைடா
நான் பால்காரன்
நர்ஸ் இல்லடா பர்சு..பர்சு...
டிப்பன் பாக்ஸ் தலையா
கரிச்சட்டி தலையா
கோமுட்டி தலையா
பிசாசு தலையா
அட போங்கடா
சொறி புடிச்ச மொண்ணை நாய்ங்களா...
காத்து ரெண்டுலயும் குய்ன்ன்னு கேக்குது
ஐயோ சிரிக்கிறா டா சிரிக்கிறா
ஐ ஆம் கிரேட் தி மிஸ்டேக்
டன் தி மிஸ்டேக்!!!


இனி ஸ்டார்ட் ம்யூசிக்..எனக்கு அர்ச்சனை ஆரம்பியுங்க...

Feb 13, 2011

ஒரு ஜாலி கற்பனை

வணக்கம் நண்பர்களே...


இது ஒரு ஜாலி கற்பனை...

உலகக்கோப்பை ஜுரம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் நமது மக்களுக்கு ராசாவின் ஊழலோ, நித்தியானந்தாவின் வழக்கு நிலையோ, மற்ற நிகழ்வுகளோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகும் செய்திகளாக முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது...தேர்தல் வரும் சமயத்தில் உலகக்கோப்பையும் வந்து நமது மக்களின் மறதிக்கு நல்ல தீனி போட்டுவிடும்...நாளிதழ்களின் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்க,கீழ்கண்ட அறிவிப்புகள் கூட வரலாம். யார் கண்டது?



முஸ்கி: உலகக்கோப்பையை இந்திய வென்று விடுகின்றது. அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள மர்மத்தை ஜெட்டி-லீக்ஸ் நிறுவனம் வெளியிட, நாடெங்கும் தொற்றிக் கொள்கிறது பரபரப்பு.



" இந்திய ஜனநாயகத்தை சீர் குலைக்க, மக்களின் மறதியை தேர்தல் நேரத்தில் அதிகப்படுத்த, இந்திய அணி வெற்றி பெற அணி வீரர்களுக்கு தொடர் முழுதும் ஆளுக்கொரு குவார்ட்டரும், மேட்டரும் செய்து கொடுத்துள்ளது குருணாநிதியின் மைனாரிட்டி கு.மு.க அரசு.இதனைக் கண்டு தமிழகமே சொல்லொண்ணா துயரப் படுகிறது." - எதிர் கட்சி தலைவி பே குற்றச்சாட்டு...



"என் மீது அந்த அம்மையார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, ஒட்டு மொத்த தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் இழிவுபடுத்தப் படும் வகையில் அமைந்துள்ளதை கண்டு, நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். குற்றம் சுமத்தப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட முடியாது. என் பாசத்துக்குரிய தம்பியாம் சானி, என்னைப் போலவே தானும் தலைமை இடத்தில் மிகுந்த சிரத்தைகளுக்கு இடையில் (கையாலாகாத நிலையில் ஒரு டம்மி பீஸ்) வழிநடத்தி வருவதாக சொன்னார். ஆம் என்னை என் மக்களாகிய நீங்கள் என்னை கடலிலே தூக்கி வீசி, நான் கட்டுமரமாக மிதந்து தடுமாறுவதைப் பார்த்து அவரே தான் அணியிலுள்ள துடுப்பு ஆட்ட வீரர்களைக் கொண்டு என்னை காப்பாற்றினார். அதற்கு கைம்மாறு கருதும் பொருட்டாக அவருக்கும் அணி வீரர்களுக்கும் நான் வழங்கிய சலுகைகளை திரித்து கூறி வருகின்றார் அந்த அம்மையார்.இப்படி தான் கற்புக்கரசியாம் , சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை எரித்த கண்ணகி, கோவலனிடம்..." என்று கூறும் போதே அவரது எழுதுகோலின் மை தீர்ந்து விடுகின்றது.



"என்னைப் பார்த்து குடிகாரன் என்று சொன்ன பே, இப்போது கொலைஞரையும் அது சம்பந்தமாக தொடர்புபடுத்தி அறிக்கை விட்டிருக்கிறார் மக்களே. ஜிம்.ஜியாரின் அடுத்த உண்மையான வாரிசான நான் உங்களிடம் ஒன்றே ஒன்று தான் கேட்கிறேன் மக்களே...ஒரே ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள், கேப்டனாகிய நான் உலகக்கோப்பையை உங்கள் வீட்டுக்கே வரவழைக்கிறேன்." - சு.மு.தி.க தலைவர் கேப்டன் குஜயகாந்த் கொதிப்பு.



"சானி மதுபான, மங்கை கேளிக்கைகளில் ஈடுபட்டு நமது இளைஞர் சமுதாயத்தை பாழ்படுத்தி வருகிறார். இப்படியே போனால் என் தொண்டர்கள் உலகக்கோப்பை நடக்கும் மைதானத்துக்குள் புகுந்து இந்திய வீரர்கள் விளையாடும் போது அவர்களது மட்டைகளையும், பந்துகளையும் கபளீகரம் செய்ய தயங்கமாட்டார்கள். " - பா.ம.க ராமதாஸ் எச்சரிக்கை.



"குடித்தால் என்ன?உலகக்கோப்பை வாங்கினோமா இல்லையாங்கறது தான் கேள்வியே? ஜப்பானில் டாகேஷி கிட்டானோ,மிட்சுபிஷி ஹிடாச்சி கூட தான் குடிக்கிறாரு...நம்ம ஆளுங்களுக்கு உலக லெவெல்ல குடிக்க தெரியல...இன்னமும் கம்மா கரைல உக்காந்துகிட்டு கள்ள சாராயமும், கள்ளுமே குடிச்சுட்டு இருக்காங்க.... சொல்ல போனால் நந்தலாலா என்னுடைய கதை தான்..நான் மப்போட தான் அந்த படத்தையே எடுத்தேன். அந்த திமிரு தான் என்னை இன்னிக்கு ரோட்டுக்கு கொண்டு வந்துடுச்சு..." வருங்கால ஒலக சினிமா மேடையில் கிஷ்கின்.



"என்னுடைய புத்தகத்தை சரோஜாதேவி புத்தகம் என்று சொன்ன கிஷ்கின் ஒரு மனநோயாளி. மனதில் நினைத்த பெண்ணை வைத்து மைதுனம் செய்துவிட்டு பிறகு நான் தான் அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தகப்பன் என்பார். என்னைப் போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் கேரளாவில் இருந்தால் இந்நேரம் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். தமிழ் நாட்டில் எதிர்பார்ப்பது என் தப்பு தான். இருப்பினும் எனது படைப்புகள் வெளிவர உங்களால் முடிந்த பண உதவியை நான் வைத்திருக்கும் டாஸ்மாக் அக்கவுன்ட்டில் கட்டி விடுங்கள். இப்போது இந்திய வீரர்கள் மேல் சுமத்தப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கும் இப்படி தான் சம்பந்தமே இல்லாமல் உளறி இருக்கிறார்." - எழுத்தாளர் பாரு தனது தளத்திலிருந்து.



"யே பாரத் மே...இந்திய இறையாண்மை கெட்டுவிட்டது ஹை..மெய்ன் பஹூத் பீல் கர்த்தா ஹூம்..." போங்கிரஸ் தலைவர் போணியாகாத வாந்தி குமுறல்...



"என்னை கோழையாக வாழ வைக்கும் என் உயிரும் மேலான இளிச்சவாய ரசிக தெய்வங்களுக்கு, பை த பை... ஆண்டவன் இருக்கான்..மக்கள் பாத்துட்டு இருக்காங்க...மக்கள் இப்போ தெளிவா இருக்காங்க...அவங்களை யாராலும் ஏமாத்த முடியாது..." கல்தான் படபிடிப்பில் கஜினிகாந்த்.



"இந்திய இறையாண்மை கெட்டுவிட்டதுனு சொல்றாங்க...இந்திய இறையான்மைனா என்ன என்றே நமக்கு தெரியாது. பத்து வருஷம் முன்னாடி சபைல மொச்சை கொட்டை தின்னுட்டு பாம் போட மாட்டாங்க..மீறி போட்டா எல்லாரும் சிரிப்பாங்க...ஆனா இப்போ எல்லாம் டாஸ்மாக்ல குடிச்சுட்டு அவிச்ச கடலையும்,முட்டையும் சைட் டிச்ஷா

தின்னுட்டு ரோட்டுல,வீட்டுல,நாட்டுலன்னு பாம் எக்கச்சக்கமா போடுறாங்க...அதை விட்டுட்டு பாகிஸ்தான்ல இருந்து ஒருத்தன் வந்து பாம்பேல பாம் போட்டா அது நமக்கு வெறும் நியூஸ் தான்...ஏன்னா பாம் போட்டது பாம்பேயில..இங்க இல்ல..இதுக்கெல்லாம் முடிவு கட்டனும்ன்னு தான் நான் அடுத்த படத்துல 550 வேஷத்துல பாம் போடுருவனா நடிச்சு ஆஸ்க்கார் கண்டிப்பா வாங்கிடுவேன்." - குமலகூசன்...

"முன்னாடி கும்.ஜியார், அப்புறம் பெயில் லலிதா, இப்போ நான்..." காமெடி நடிகர் குஜய் வீணாப்போனவிகடனில் அவரது குணம் திறக்கிறார்...



"எல்லா நிகழ்ச்சிக்கும் என்னை கட்டாயப் படுத்தி வர சொல்லி பின் குவார்ட்டர் ஊற்றிக் கொடுத்து மேடையில் வம்பிழுக்க சொல்லி என்னை வற்புறுத்துறாங்க அய்யா..அதுக்கு நீங்க தான் எதாச்சும் வழி பண்ணனும்...சரக்குக்கு ஊறுகாய் கூட கொடுக்க மாட்டேன்கிறாங்க...நீ தான் ஊறுகாய் போயி பேசுடான்னு சொல்லுறாங்க..."- வேஷக்

கொலைஞன்னுக்கு வேரறுக்கும் விழாவில் பேசிய மஜீத்தின் தைரியம்.


"இலங்கையிலே அங்கே என் தமிழன் மடிந்து கொண்டிருக்கிறான். இங்கே நமக்கு கிரிக்கெட் தேவைப்படுகிறது...அங்கே சிந்தப்படும் ரத்தம்,கண்ணீர்,சளி,எச்சில் எவ்வளவு தெரியுமா? மானங்கெட்டு போய்க்கொண்டிருக்கிறோம்." - கூமான் கூவல்...

இறுதியாக மிஸ்டர் பொதுஜனம்..

"யே அருக்காணி அக்கா..விதையகாரியன் சின்னத்துக்கு ஒட்டு போட்டா 5000 ரூவா தாராங்களாம். போட்டுட்டு வந்துருவோம் வாக்கா.. "

இறுதியாக பதிவுலகில்...



குஜையை எப்படி டா சொல்லலாம் சோமாறி...

மஜீத்தை பத்தி எழுத உனக்கு என்னடா அருகதை இருக்கு...

கஜினியை பத்தி எழுதுருயே...உனக்கு ஹிட்ஸ் வேணும்னா கேளு பிச்சை போடுறோம்...

குமலகூசன் ஒரு பெரிய அறிவு ஜீவி...அவரைப் பத்தி எழுதுறதுக்கு நீ பேசாம உடம்பை வித்து பொழைக்கலாம்...

போடாங்...#^@^#&*#^*(.. சு@#$னி


அடுத்த ஐந்து வருஷம் கழித்து மீண்டும் இவை தொடரும்...அறிக்கை விடும் சில பேர்கள் மாறி இருக்கலாம்.