Jun 10, 2011

ஒரு குவார்ட்டருக்காகவா இவ்ளோ கலாட்டா?

வணக்கம் நண்பர்களே !!!



மொக்கைத் தனமா இடுகை எழுதி ரொம்ப நாள் ஆயிட்டதால..(அட யாருப்பா அது அங்க "இவன் எழுதுற எல்லாமே மொக்கையா தான் இருக்கு, இதுல மொக்கைனு சொல்லி ஒரு இடுகையா?என்ன வாழ்கைடா இது ?!" என்று கல் எடுக்குறது) இன்னைக்கு கொஞ்சம் மொக்கை போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். (ஆமா இவரு பெரிய ஐ.நா சபை லீடரு முடிவு பண்ணிட்டாரு..ப்ளாகை ஒப்பன் பண்ணி வெச்சுட்டு ஓட்டுப் பிச்சை எடுக்கப்போவுது இதுக்கு லவுட்ட பாரு)





இன்னைக்கு எதைப் பற்றிய மொக்கைனா, ஒரு கற்பனை கலந்த மொக்கை. உலகத்தில பெட்ரோல் உற்பத்தி குறைந்து வருவதையும், அதனால் விலைவாசி உயர்வதையும், இன்னபிற பிரச்சினைகளையும் ஒவ்வொரு இந்தியனும் அறிவான். அதே போல உலகில் மது உற்பத்தி (பொண்ணு பேரு இல்லீங்க..மது என்றால் சாராயம்,சரக்கு, சோமபானம், உற்சாகபானம்..ஹி ஹி!!!) குறைந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை (ஆமா இவரு பெரிய அணு விஞ்ஞானி...விளைவுகள் பத்தி விலாவரியா விளக்க வந்துட்டாரு...அணு விஞ்ஞானிகளே விளைவுகளைப் பத்தி கவலைப்படறது இல்ல...இவரு புத்தி சொல்றாராம்... )மையமாகக் கொண்ட கற்பனை கலாட்டாக்கள் உங்கள் பார்வைக்கு. இதில் தல கவுண்டரின் மைன்ட் வாய்சும் கூடவே அடைப்புக் குறிக்குள்...(யப்பா இவன் தமிழ் இம்சை தாங்க முடில டா சாமி...இதுக்கு பேதியே பரவால்லடா யம்மா...)



(1) மாப்பிள்ளை வீட்டு வரதட்சணை சீதனமாக தங்கத்துக்கு பதில் மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்கேற்ப மது புட்டிகளின் எண்ணிக்கை வாங்கப்படும். இல்லையென்றால் கன்னிப்பெண்கள் கன்னியாகவே காத்திருக்க வேண்டியது தான். பாரத மாதவே எம் தாய்க்குலங்களை காப்பாற்று...(டேய் டேய் டேய்..இந்த ஜிகினா வேலையெல்லாம் என்கிட்டே வுடாதடி... முதல்ல ஊர்ல இருக்குற குளங்களை எல்லாம் ஒழுங்கா தூர் வாருங்கடா..தாய்க்குலங்களை அப்புறம் காப்பாத்திக்கலாம்...அது என்னா எவனுக்கு சமூக அக்கறை வந்தாலும் தாய்க்குலமே தந்தைக்குலமேன்னு இறங்கிடுறீங்க...படுவா பிச்சு புடுவேன்..)



(2) மதுபான தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு திருமண சம்பந்தம் முடிக்க பெண்ணைப் பெற்றோர் போட்டி போடுவார்கள்.மாப்பிள்ளை டாஸ்மாக்ல வேலை பாக்குறாரு என்பது இன்றைய ஐ.டியில வேலை பாக்குறாரு என்பது போல ஒரு மிகப்பெரிய கவுரவ அந்தஸ்தாக கருதப்படும். (நல்ல குடும்பம்...ஏர்ல பூட்டுன எருமை மாதிரி... குட் பாதர்...குட் மாதர்...குட் பொண்ணு... இவனுங்க எல்லாம் வொஸ்ட்டு மா...கடன் வாங்கி கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அப்புறம் வயசான காலத்துல பொலம்பியே மண்டையப் போட்டுடுவானுங்க...அட ஊருக்குள்ள இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா..குவார்ட்டர் பாட்டிலை ப்ளாக்ல விக்குறவன் எல்லாம் தொழிலதிபர் ஆயிடுரானுங்க)



(3) "பத்து வருஷத்துக்கு முன்னாடி நம்ம நாட்டோட அந்நிய செலாவணி வெறும் 2000 கோடி ரூபாய்..ஆனா இப்போ 8 லட்சம் கோடி ரூபா..திஸ் இஸ் ஆல் பிகாஸ் ஆப் டாஸ்மாக்" என்று பெருமை பீத்திக்கொள்வார்கள் மதுபானம் சம்பந்தமான துறையில் வேலையில் இருப்போர்...(அடேய் அடி அடேடி..இப்படியே நீ பேசிகிட்டு இருந்த வாயில வறட்டி கொளுத்தி போட்டுருவேன்..டேய் இங்க வாடா...அடச்சே போடா..போடா டேய் போடடா...)



(4) மதுபானத் துறை என்ற புதிய அரசியல்துறை உருவாக்கப்படும். அந்த துறையைப் பெறுவதற்கு மந்திரிகள் மத்தியல் பலத்த போட்டி நிலவும். பொதுப்பணித்துறையை யாரும் சீண்ட மாட்டார்கள். (அரசியல்னாலே இதெல்லாம் இருக்கறது தான..ஆயிரம் என்குயரீஸ்..ஆயிரம் என்கேஜ்மென்ட்... )



(5) திரைப்படங்களில் மதுபானம் அருந்தும் காட்சிகள் குறையும்...இல்லையெனில் பெரிய பட்ஜெட் படத்தில் மட்டும் குடிக்கும் காட்சிகள் இடம்பெறும். மெகா பட்ஜெட் படங்களில் கதாநாயகன் மதுபானம் நிரம்பிய ஸ்விம்மிங் பூலில் குளிப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.லோ பட்ஜெட் படம் எடுப்போரெல்லாம் செட் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டியது தான். சரக்குக்கு பதிலாக வெறும் தண்ணீரையோ இல்லை குளிர்பானங்களையோ குடிப்பது போல காட்சி வைத்து ஒப்பேற்றலாம்.(அடங்கொன்னியா இப்பவே இவனுங்க தொல்லை தாங்க முடில...சுதிய ஏத்துறேங்கறானுங்க அப்புறம் சுதிய   இறக்கனும்கிறானுங்க...இதுல இது வேறயா? கண்ண கட்டுதுடா சாமி )



(6) மதுவுக்காக நாட்டில் கொலை,கொள்ளை,அடிதடி போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். பெரும் பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை ஏலம் எடுத்து வாங்கி செல்வார்கள்.(அஹ்ஹான் நான் என்ன இளிச்சவாயனா...இந்த மாதிரி எந்த படுவா பண்ணினாலும் மூஞ்ச அப்படியே செவுத்துல வெச்சு தரதரதரன்னு தேச்சு புடுவேன்...அப்புறம் குடிக்கறதுக்கு வாய் இருக்காது...மொழுக்கட்டினு தான் சுத்தணும்)



(7) "இன்றைய விஸ்கி மற்றும் பிராண்டி நிலவரங்களை காணலாம்" என்று வணிகச் செய்திகளில் விலை நிலவரங்கள் இடம்பெறும். ஏறுதா இறங்குதா என்று வாயைப் பிளந்துகொண்டு மதுபான பங்குகளில் முதலீடு செய்த கூட்டம் பார்த்துக்கொண்டு இருக்கும். (ஆமா..ஒலக நடப்ப தெரிஞ்சிக்கிட்டாராம்... )



(8) உலகக்கோப்பைக்கு பதிலாக குவார்ட்டர் பாட்டிலை மையமாக வைத்து அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். போட்டியில் வென்று குவார்ட்டர் பாட்டிலை எப்படியாக கைப்பற்றுவோமென்று அணித் தலைவர் தெரிவிப்பார். (டேய்..சிலம்புக்கு ஒரு கண்ணகி...கம்புக்கு இந்த காளிங்கன்..படுவா சுத்துனன்னு வையி...)



(9) எல்லாவற்றிற்கும் மேலாக எந்த நாட்டில் மது உற்பத்தி அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டுக்கு தீவிரவாத முத்திரை குத்தி அமெரிக்கா போர் தொடுக்கும்.(ஆக பாட்டியும்,பேரனும் இருநூறு ரூவா கதவுக்கு தான் ப்ளான் போட்டிருக்கீங்க...அடத் த்த்தூ)



(10) இறுதியாக அக்கால தமிழ்த் திருவள்ளுவர்கள் பலர் "புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?" என்பதெல்லாம் பழமொழி, "மாது இருக்க மது எதற்கு?" என்பது புதுமொழி என்று இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பார்கள். (இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா திருப்புகழையே பாடிகிட்டு இருப்பீங்க..அவனவன் கம்ப்யூட்டர்ல பல்லு வெளக்கிட்டு இருக்கான்..நீங்க இன்னும் திருப்புகழையே பாடிகிட்டு திரியுங்க)



என்ன மக்களே?இதுக்கே கண்ண கட்டுதா? எனக்கும் தான். இதே போல உங்களுக்கு தெரிஞ்ச,நீங்க யோசிச்ச இந்த மாதிரி விஷயங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்க. பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி.மீண்டும் சந்திப்போம்!!!

13 comments:

Yoga.s.FR said...

எனக்கு மொத குவாட்டர்!(குவாட்டர் கட்டிங்கின்னு படமே வந்திச்சே?)

டக்கால்டி said...

வாங்கய்யா வாங்க...

தினேஷ்குமார் said...

எனக்கு குவாட்டர் எல்லாம் பத்தாது ... ரெண்டு புல் சொல்லுங்கப்பு அப்புடியே இந்த மட்ட ஊறுகாய் சொல்லுங்க ... இதோ வர்றேன்

சக்தி கல்வி மையம் said...

அண்ணே வணக்கம்னே..

Unknown said...

பாருங்கய்யா இந்த புள்ளைக்குள்ள எவ்ளோ விஷயங்கள் ஒளிஞ்சி கெடக்குது ஹிஹி!

rajamelaiyur said...

Super comedy . . .

rajamelaiyur said...

Its not a half . . Its a full

Unknown said...

மவனே கையில சிக்கினா...

Unknown said...

என்ன பயலுக கமெண்ட்டு போட சொன்னா வணக்கம் சொல்றாங்க ??

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi

Yoga.s.FR said...

///மைந்தன் சிவா says:
June 11, 2011 9:29 AM

என்ன பயலுக கமெண்ட்டு போட சொன்னா வணக்கம் சொல்றாங்க ??///
மப்பு ஏறினா அப்புடித்தான்,மாப்பிள!

செங்கோவி said...

யோவ், ஃபுல் மப்புல எழுதினீரா?

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.