"லோகத்துல ஜலத்துக்கு பயங்கர பஞ்சமாம்டி பட்டு...அக்னி வெயில் வேற மனுஷாள பாடாப் படுத்தறது" வியர்வையில் நனைந்திருந்த சட்டையை கழற்றி பட்டு மாமியிடம் கொடுத்தவாறே பேசினார் சேஷு மாமா.
"என்னண்ணா உளர்றேல்? நம்ம ஆத்துலயும், ஊர் ஆத்துலயும் தான் ஜலம் பேஷா ஓடுறதே... நீங்க என்னடான்னா இப்படி சொல்றேள்!"
'அடியே பட்டு...மறுபடியும் நீ ஒரு அசமஞ்சம் தான் ப்ரூப் பண்ணிட்டேடி...நோக்கு எப்போ பார்த்தாலும் தின்றது இல்ல தூங்குறது பத்தி தான் நினைப்பு ...அதையும் மீறினா சீரியல்...அதை தாண்டி லோகத்துல நடக்குறது எதுவும் உனக்கு தெரியாது..அஷடு..அஷடு..."
"ஒளராதேள்...என்கிட்ட சிண்டு முடியலைன்னா உங்களுக்கு பொறுக்காதே...விஷயத்தை ஷத்த தெளிவாதான் சொல்லுங்கோளேன்"
"பொறுடி..என்ன எங்க பேச விடுற?ஆத்துக்கு வந்ததுல இருந்து நீயே தான் பேசிண்டு இருக்காய்...சரி நான் சொல்ல வந்தது வேற ஜலம்டி பட்டு"
"ஐயையே! என்னண்ணா வரவர அசிங்கமா பேசறேள்.."
"அடியே அஷடு...உன் பேரு பட்டுன்னு சரியாத்தான் உன் தோப்பனார் வெச்சுருக்கார். நான் விஷயத்தை சொல்லி முடிக்கறதுக்குள்ளேயே 'பட்டு பட்டுன்னு' குறுக்க பேசுறாய் நீ"
"நான் ஜலம்னு சொன்னது சாராயம்டி...போன ஆட்சியில எதிர்க்கட்சிகாரங்க எல்லாத்தையும் ஜெயில்ல புடிச்சு போட்டு கதிகலங்க வெச்சாளே...எல்லாமே அதனால தான்..."
"என்னண்ணா மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறாப்லன்னா நீங்க சொல்றது இருக்கு"
"ஆமாண்டி பட்டு..பத்து வருஷம் முன்னாடி இப்போ இருக்குறவா ஆட்சில இருந்தப்ப கூட சாராய சப்ளை எதிர்க்கட்சி குடோன்ல இருந்து தான் வந்தது. ஆனா போன ஆட்சில அந்த நன்றியை மறந்து சில நல்லத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆரம்பித்தது என்பதற்காகவே கிடப்பில் போட்டுட்டாள். அதன் விளைவு இப்போ தமிழ்நாடு முழுக்க சாராய சப்ளை தனது குடும்ப வாரிசான மணிமொழியின் மகனுக்கு கொடுத்துட்டா... ஏற்கனவே சப்ளை செய்து வந்த 'ருசி'யின் சாராய ஆலைகள் அனைத்துக்கும் சீல் வெச்சுட்டா."
"ஒஹ் அப்படியா செய்தி..."
"ஷத்த இருடி... இன்னும் இருக்கு சேதி...என்னதான் மணிமொழி மகன்கிட்ட பொறுப்பை கொடுத்தாலும் குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியவில்லையாம்...போன ஆட்சியில் மின்வெட்டுத்துறை அமைச்சர் இருந்தமாதிரி இந்த முறை மது ஒழிப்புத் துறை அமைச்சர் என்று எதிர்கட்சிகள் காய்ச்சு காய்ச்சுகின்றனவாம்."
"இவா எல்லாம் என்னைக்குதாண்ணா திருந்துவா?"
" அதில்லடி பட்டு இப்போ எல்லாம் பிறந்த குழந்தைக்கு கூட பாலுக்கு பதில் பிராந்திதான் தேவைப்படுது. உற்பத்தி அதிகப்படுத்த இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமுன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி குடிக்கறவா இருக்குற வரைக்கும் இவாளும் ஏமாத்தின்டே தாண்டி இருப்பா..சரி நேக்கு வேலைக்கு நாழியாறது...நான் புறப்படறேன்" என்று பட்டு மாமியிடம் விடைபெற்றார் சேஷு மாமா.
8 comments:
வடை எனக்க
குடிக்கிறவங்க இருக்கும் வரை குடியை தடுத்து நிறுத்த முடியாது . அருமை
ரைட்டு...கலக்கலா இருக்கு மாப்ள வார்த்தைகள் ஹிஹி!
ஹிஹி பயபுள்ளை பயந்திரிச்சு..ஓப்பினா சொன்னால் மைனஸ் ஒட்டு கன்பெர்ம்டி!!!ஹிஹி
இந்தப்பதிவுல இருந்து எனக்கு என்ன உண்மை தெரியுதுன்னா அண்ணன் கிட்டே லேட்டஸ்ட்டா மாட்ன ஃபிகர் பிராமின்
அவங்களா திருந்தினாதான் உண்டு..
ஐயர் பாசையில் ஜமாய்க்கிறீன்களே பாஸ்
///குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியவில்லையாம்.../// "குடி மக்கள் "எந்த காலத்தில தான் திருப்தி அடஞ்சிருக்கிரார்கள் ...))
சகோ, சூரியன் எப். எம் சென்னை 93.5 இல் மாலை ஆறு மணிக்கு, இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னாடி கேட்ட உரையாடலை அதே வட்டார மொழி வழக்கோடு படிப்பதாய் உணர்கிறேன்.
ஒன்லி ஒன் டிபரன்ஸ்.
இந்தப் பதிவில் விடயங்களும் காலங்களும் மாத்திரம் வேறுபடுகின்றன.
Post a Comment