Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Mar 6, 2012

டக்கால்டியும் குடிமகனும்!

வணக்கம் நண்பர்களே...

நம்ம சிங்கார சென்னையில் தான் தினம்தினம் எத்தனை கதைகள்....நம்மை சுற்றி பல அனுபவங்கள்...அப்படி ஒரு அனுபவம் (ங்கள் !! ) சில மணிநேரத்துக்கு முன் எனக்கு ஏற்பட்டவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாம் நமக்கு பிடித்த ஒரு பாடலை ரொம்ப நாள் கழித்து கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது எம்.எஸ்.வி யோ, இளையராஜாவோ, ரகுமானோ( நான் தமிழன் சமஸ்க்ருத எழுத்தை உபயோகிக்க மாட்டேன் (அய்யயோ சமஸ்க்ருத எனும் வார்த்தையில் 'ஸ்' எனும் எழுத்து வந்துவிட்டதே) (என்னாடா இது எஸ்.க்யு.எல் குயேரி மாதிரி மல்டிப்பில் ப்ராக்கேட்டோட போகுது ) ( எத்தனை பிராக்கெட் டா மெயின் வாய்சுக்கு போடுவ..கொய்யாலே)) !!!ஒ.கே எல்லாரும் ஆட்டையை கவனியுங்கள், நமக்கு பிடித்த பாடலை நெடு நாள் கழித்து கேட்கிறோம், கேட்ட பிறகும் அப்பாடல் நம் எண்ணத்தையும், மனசையும் விட்டு அகலாது, நம் மனதுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்கும், ஒளிந்தவாறே அப்பாடல் தாளம் தப்பாமல் கேட்டுக்கொண்டிருக்கும். அதைப்போலவே இந்த நிகழ்வும்.

இன்று அலுவலகத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை (வழக்கம் போலவே ஹி ஹி). ரொம்ப போர் அடிக்குதே என்று அலுவலகம் எதிரில் இருக்கும் டாஸ்மாக்குக்கு விசிட் அடித்தேன். (வாழ்க தமிழக அரசும், தமிழகமும்!!!) எப்போதும் போல ஒரு குவார்ட்டர் நெப்போலியன், மூணு வாட்டர் பாகெட், ஒரு கிளாஸ் துணையுடன் போதையை தலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த சமயம், ஒரு வயதான ஆள் சரக்குக்கு இரண்டு ரூபாய் குறைவாக வைத்திருந்த காரணத்தால் விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்து அதில் தான் போராடி வாங்கிய 65 ரூபாய் சரக்கு மூலம் வெற்றியை ருசித்துக் கொண்டிருந்தார். இப்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்ட ஜி.எஸ்.டி சாலை எதிர் ரோட்டிலே முக்தி நிலையை அடைந்த 'குடி'மகன் ஒருவன் வழியில் வரும் வாகனங்களை எல்லாம் வழிமறித்துக் கொண்டிருந்தான். ஏகப்பட்ட லாரிகளும், ஆட்டோக்களும், டூ-வீலர் பயணிகளும் அவனைத் திட்டியவாறே கடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதை கவனித்தவாறே நான் முக்தி நிலையை அடைய போராடிக்கொண்டிருந்தேன். பாதி முக்தியை அடைந்துவிட்டிருந்த நான், முழு முக்தியை அடைய குவார்ட்டரில் மிச்சம் இருந்த இன்னும் இரண்டு ரவுண்டுகளை முடிக்க ஆயுதமான போது, எனக்கு அருகே ஏற்கனவே குவார்ட்டருக்கு மேலே 90 அடித்த படி (அவர் வாங்கிய ஹாப் பாடில்லில் மீதி 90௦ தான் இருந்தது..ஹி ஹி) இருந்த ஒரு நபர், என்னைப் பார்த்து 'ப்ரதர் ஆர் யு வொர்கிங் இன் ****** கம்பெனி?' என்று பீட்டர் விட, நான் 'எஸ் சார்' என்றேன்.

"இப்பேர்ப்பட்ட கம்பெனியில் வேலை பார்க்கிறாய், நல்ல பாருக்கு போயி தண்ணி அடிக்க வேண்டியது தானே, இங்க ஏன் வந்தாய்?"
"இல்ல சார், பழகிடுச்சு, பாருக்கு போனா போதை தான் கெடைக்கும், அனுபவம் கெடைக்காது...நான் எப்பவும் அடிமட்ட மக்களோடவே இருக்க விரும்புறேன்"
"கிரேட்...நானும் அப்படி தான். காஞ்சிபுரம் கலெக்டரோட பி.எ நான், உனக்கு உன் கம்பெனியிலேயே ப்ரோமோஷன் வேணும்னாலும் கேளு இல்ல... வேற வேலையானாலும் சொல்லு நான் ஏற்பாடு பண்றேன். லைப்ல நெறையா நான் தப்பு பண்ணிருக்கேன், அதனால நெறைய இழந்துருக்கேன்"
"ரொம்ப தேங்க்ஸ் சார் எனக்கு நான் இப்ப பாக்குற வேலையே போதும், சிபாரிசு எல்லாம் எனக்குப் பிடிக்காது"
"ரொம்ப சுயமரியாதையோட பேசுறியே பா... ஐ லைக் இட்...இந்த மாதிரி இடத்துல உன்னை மாதிரி ஆளுங்கள மீட் பண்றது ரொம்ப கஷ்டம்...சரி வி.எஸ்.ஒ.பி கு அர்த்தம் தெரியுமா உனக்கு"
"வெரி ஸ்பெஷல் ஓல்டு பால்"
"யு ஆர் ராங் மை டியர் பிரெண்ட். இட்ஸ் வெரி ஸ்பெஷல் ஓல்டு பேல் அண்ட் நாட் பால். பேல் மீன்ஸ் தி கலர் ஆப் தி லிக்கர்"

இப்படி தொடர்ந்த உரையாடல், இறுதியில் "நான் இப்போ கூட ஒரு ஜாரியை செஞ்சுட்டு தான் வரேன். அவ என்ன ரொம்ப கம்பெல் பண்ணா, ஆனா நான் மெயின் மேட்டர்ல இறங்கல, வெறும் ஓரல் தான்...அவ என்னை கேவலமா பார்த்து சிரிச்சா..ஆனா என் பொண்டாட்டி தவிர நான் யாரையும் முழுசா அனுபவிக்க மாட்டேன்... நீ வரியா மறுபடியும் போலாம்"
"இல்ல சார், எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல"
"காசு நான் தரேன் யா...வா போலாம்"
"இல்ல சார்..சாரி...நான் கெளம்புறேன்"
"அட போடாங்....@#$%###$$%$"
"தேங்க்ஸ் சார்"

இதற்குள் முன் சொன்ன ட்ராபிக்கை மறித்த குடிமகன் இப்போது என் அருகில். என்னடா இன்னிக்கு ஒரே எழறையா இருக்கு என்று மனதுக்குள் நினைத்தபடி அவனை கடக்க நினைக்கையில், அவன் என்னிடம் 40௦ ரூபாயை கொடுத்து கட்டிங் கேட்டான். அப்போத்து தான் தெரிந்தது அவன் வட மாநிலத்தை சேர்ந்தவன் என்று. என்னிடம் இல்லை என்று இந்தியில் சொன்ன பின்னும் என்னை விடாமல் துரத்தி 90 கட்டிங் கேட்க, என் அருகில் இருந்த பள்ளிக்கூடம் முடிந்து வந்த இரு சிறுவர்கள் , எங்களைப் பார்த்து சிரிக்க, கோபத்தில் அவன் சிறுவர்களை அடிக்கப் போக, பொறுமை இழந்த நான் அவன் கன்னத்தில் நாலு அரை விட, மிரண்ட அவன் ஓட, நான் அவனை துரத்தி அடிக்க, ஏற்கனவே அவனது செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் சுற்றி வளைக்க அந்த ஏரியாவே களேபரமானது.

மக்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து அவனை குமுறி, அருகில் இருந்த போலீசிடம் ஒப்படைத்தது. நான் நடந்தவற்றை போலீசிடம் கூறி, விடை பெற்றேன். சுற்றி இருந்த பெருசுகள் சிலர், "இவனுங்களை எல்லாம் இப்படி தான் உடனே பிரட்டி எடுக்கணும். நாமளும் தான் இவ்ளோ நேரம் பாத்துக்கிட்டு இருந்தோம் ஆனா அந்த பையன் மிரட்டி அடக்கிட்டு அமைதியா போறான் பாருங்க" என்று சொல்வது என் காதில் விழுந்த போது வேட்டைப் பட நாசர்,மாதவன் கதாப்பாத்திரம் ஞாபகத்துக்கு வந்தது..

கடைசில என்னையும் (காமேடியனையும்) ஹீரோ ஆக்கிட்டாங்களே (முதல்வன பட க்ளைமாக்ஸ் போல படிக்கவும்)...!!!

சரி நான் கெளம்புறேன்... எங்கேயா? அடிச்ச மப்பு இந்த ரெண்டு பேர்னால அட்ரஸ் இல்லாம போயிடுச்சு இன்னொரு குவார்ட்டர் அடிக்க தான்...வர்ட்டா

Feb 27, 2012

'மாரியாத்தா' going somewhere climbed upon me!!! - கொலைவெறிப் பதிவு

வணக்கம் நண்பர்களே,


பதிவுலகம் பக்கமே சிறிது நாள் வராமல் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த என்னை, மீண்டும் ஒரு பதிவு போட வைத்த சம்பவம் இது.


இது கண்டிப்பாக ஆணாதிக்கம் சார்ந்த பதிவோ, பெண்ணியத்துக்கு எதிரானதோ இல்லை. மாற்றாக முழுக்க முழுக்க எனக்கு மட்டும் கடந்த மூன்று மாதங்களில் ஆறு முறை நேர்ந்த அனுபவம், விபத்து, கோபம், கடுப்பு ஏற்படுத்திய சம்பவங்களின் தொகுப்பே இந்த இடுகை. பெண்களை 'செக்சி' என்று அழைப்பதில் தவறில்லை என்று தேசிய மகளிர் குழு ஆணைய தலைவரே சொல்லிவிட்ட இந்நாளில் இதை பதிவிடுவது கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதையும் மீறி, "ஏன் இப்படி ஆணாதிக்க வெறி பிடித்து அலைகிறாய்" போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்குத் தெரியாது. பின்ன என்னங்க ஆணாதிக்கம் என்றால் என்னன்னு தெரிஞ்சா தானே நான் பதில் சொல்ல முடியும். வசூல்ராஜா படத்தில் கமல் சொல்லும் "கேள்வி என்னன்னு தெரிஞ்சா அதை வெச்சு பதில்னு ஏதாவது சொல்ல முடியும். எனக்கு தான் கேள்வியே தெரியாதே. நான் ராஜாராமன் இல்லை வெறும் டுபாக்கூர் ராமன்" வசனத்தை போல தான்.
சரி இப்போ மேட்டருக்கு போவோம். பாண்டி பஜார் கடைகளில் பேரம்பேசி வாங்கிய சுடிதார், அங்கேயே ஏதோவொரு பிளாட்பாரம் கடையில் அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கிய மாட்சிங் துப்பாட்டா, கம்மல், ஜிம்கி, நயன்தாரா கூலிங் கிளாஸ், காதில் ஐபாட் ஹெட் செட், இவற்றோடு அப்பன் காசிலோ, புருஷன் காசிலோ (அநேகமாக இன்ஸ்டால்மெண்டில்) வாங்கின ஸ்கூட்டியோ, ஆக்டிவாவோ. என்னாடா இதெல்லாம் என்று பாக்குறீங்களா? இதெல்லாம் தான் இன்றைய பாரதி கண்ட புதுமைப் பெண்களின் அங்கவஸ்திரங்கள்.
முழங்கை வரை தூசில் இருந்தும், சூரிய வெப்பத்திலிருந்தும் காப்பாற்றிக்கொள்ள க்ளவுஸ்,நயன்தாரா கண்ணாடி, முகத்தில் துப்பட்டாவை முகமூடி போல கட்டிக்கொண்டு,காதிலே ஹெட் செட்டிலே பாட்டு கேட்டுக்கொண்டு பல பேருக்கு சைலன்ட்டாக பாடைக்கட்டி கொண்டிருக்கிறார்கள் இந்த அழகான ராட்சசிகள்.

சரி இதெல்லாம் இப்போ உனக்கு எதுக்கு, அதான் ரோட்டிலே தினமும் இது மாதிரி எத்தனை பிகர்ஸ் நாங்க பாத்துட்டு இருக்கோம்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. பாஷா ரஜினி ஸ்டைல்ல சொல்லனும்னா "மேலே படிங்க". (மேலே என்றால் தொடர்ந்து படிக்கணும், ரவுசுக்குன்னே மீண்டும் முதல் வரியில் இருந்து படிக்க ஆரம்பிச்சிடாதீங்க)

நானும் இவ்வகை பெண்களை லுக்கு விடும் ஆசாமி தான் என்றாலும் சமீப காலமாக இப்படி யாரையாவது பார்த்தல் பத்திக்கிட்டு வருது. ஏன்னா...இப்படி தான் அன்னிக்கு ஒரு நாள்.....(நான் மேல இருக்குற விட்டத்தை பார்க்கிறேன்..கொசுவர்த்தி சுருள்...அட இன்னும் புரியலையா...பிளாஷ் பாகுங்க )

வேலூரில் இருக்கும் நண்பன் ஒருவனுக்கு உதவி செய்வதற்காக அவசரமாக சென்னையிலிருந்து கிளம்பினேன். வெள்ளிக்கிழமை ஆதலால், அனைத்து சாதாரண பேருந்துகளிலும் கூட்டம் வழிந்தோட, இறுதியில் பைக்கிலேயே செல்லலாம் என முடிவெடுத்து, செங்கல்பட்டிலிருந்து தாம்பரம்-பூந்தமல்லி பைபாஸ் வழியாக பூந்தமல்லி பிளை ஓவரை கடந்து, 'U' எடுத்து வேலூர்-பெங்களுரு புறவழிச்சாலை அடையும் போது என் பைக் சைலன்சருக்கு மிக அருகில் உரசியபடி நான் மேற்கூறிய பாவனைகளில் தோற்றம் கொண்ட ஒரு இளம்பெண் விடாது என்னை பின்தொடர்ந்து கொண்டும், அடிக்கடி ஹாரன் அடித்து கொண்டும் வந்து கொண்டிருந்தாள்.இதில் அவ்வப்போது ப்ளாஷ் பீம் லைட் வேறு அப்பெண் அடிக்க, அது என் சைட் மிறரில் பட்டு கண் கூசத் தொடங்கியது. கடுப்பில் நான் அந்த பெண்ணைப் பார்த்து கத்தியும் அது அவள் காதில் விழவில்லை. எதையும் கண்டுகொள்ளாது அவள் அப்பன் போட்ட ரோடு போல விரட்டுகிறாள். காரணம் ஐபாட் ஹெட் செட். உபயம் ஏதோவொரு எப்.எம்.


சென்னையில் பெய்த மழையின் உபயத்தால் எனக்கு இடது பக்கத்தில் சேரும் சகதியும் கொண்ட இரண்டடி பள்ளம். வலது பக்கம் ஒரு தனியார் அலுவலகப் பேருந்து. முன்னே ஒரு கார். எனக்கும் பேருந்துக்கும் இடையே உள்ள சிறு கேப்பில் அந்த பெண். இப்படியே சிறிது தூரம் பயணம் தொடர, எனக்கு முன்னே சென்ற கார் திடீரென்று ப்ரேக் போட, நானும் எனது வாகனத்தை நிறுத்த, என்னை ஒட்டி வந்த பேருந்தும் நிறுத்த, ஸ்கூட்டி ப்ரேக்கில் 'டிஸ்க் ப்ரேக்' இல்லாததால் என்னை பின்தொடர்ந்த அந்த பெண் எனது வண்டி சைலேன்சரில் வந்து மோதி நான் நிலைதடுமாறி சேற்றில் விழுந்து, ஹெல்மெட் சேற்றில் விழுந்து நனைந்து, பாக்கெட்டில் வைத்திருந்த எனது செல்போன் உடைந்து, மோதிய வேகத்தில் எனது வண்டியின் சைலேன்சரும், முன்னாள் உள்ள காரில் இடித்ததால் முன் சக்கர மட்கார்டும் காண நேரத்தில் உடைந்தது. மொத்தமாக இவற்றை எல்லாம் நான் சரி செய்ய 10 000 ரூபாய் காலியானது. பம்பரில் மோதி இடது காலிலே பலத்த அடி. 'பம்பர் ஹிட்டுன்னா இது தானா?" என்று விவேக் ஸ்டைல்ல மனதுக்குள்ளே கேட்டுகிட்டேன்.


சுதாரித்து எழுவதற்குள், அந்த புண்ணியவதி இன்னொருவன் தாலி அறுக்க எஸ்கேப்ப்ப்ப்ப்....

இதே நான் அந்த பெண்ணை இடித்திருந்தால் நம்ம மக்கள் என்னை டின் கட்டி இருப்பார்கள்.ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள்ஸ் எனக்கு உதவி செய்யவும்ம் முன்வரவில்லை, அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரிக்கவும் இல்லை.


இவங்க தான் இப்படினா போக்குவரத்து போலீஸ் இதுக்கும் மேல. பொதுவா இவங்க நடந்துக்குற மூணு விதமான அணுகுமுறைகளை பாப்போம்.


சினாரியோ 1 : தனியா ஒரு ஆண் (40 வயதுக்கும் குறைந்த) பைக்கில் சென்றால் அவனிடம் லைசென்ஸ், ஆர்.சி புக் செக் பண்றது, வாயை ஊதுன்னு சொல்றது, முக்கியமா ஹெல்மெட்டுக்கு பிடிக்கறது.


சினாரியோ 2 :அதே ஒரு 40 வயதுக்கு குறைந்த ஆண் மனைவியோடு ஹெல்மெட் இல்லாமல் பல அக்கப்போருகள் செய்து எந்த விதியும் பின்பற்றாமல் தாரளமாக செல்லலாம். அதுவும் புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜோடியாக வண்டியில சுத்துறவங்க பாதி பேருக்கு ட்ராபிக் சிக்னலே கண்ணுக்குத் தெரியாது.


சினாரியோ 3 : பெண்கள் (அனைத்து வயதினருக்கும், குழந்தைகளை தவிர்த்து) மற்றும் சீனியர் சிட்டிசன் எனப்படும் மூத்த 'குடி'மகன்கள். இந்த இரு வகையில் அடங்குவோர் நம் தமிழகத்தில் எதைப் பற்றியும் கவலைப் படவே தேவை இல்லை. லைசென்ஸ் வேண்டாம், ஆர்.சி புக் வேண்டாம், ஹெல்மெட் வேண்டாம்.


என்ன செய்ய, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக இருக்கிறதாம்!! மீண்டும் சந்திப்போம்.



டிஸ்கி: என்னோட ஆறு முகத்துல (ஆறு சம்பவங்கள்ள) ஒரு முகம் தான் காட்டி இருக்கேன். மிச்ச முகம் வேண்டாம். நான் ஆல்ரெடி நொந்துட்டேன்!

Mar 21, 2011

டக்கால்டி டங்குவாரு அறுந்த கதை..


வணக்கம் நண்பர்களே...என் தளம் மாயமான தகவல் அறிந்திருப்பீர்கள். அப்படி ஆனால் என்னென்ன செய்யலாம் என்பதை விளக்கும் முயற்சியே இந்த இடுகை. வருமுன் காப்பதே சாலச் சிறந்தது என்ற பழமொழிக்கேற்ப அனைவரும் இன்றே நான் கூறப் போகும் கூகிள் 2 ஸ்டெப் வெரிபிகேஷனை செய்து கொள்ளவும்.பிறகு யார் உங்கள் தளத்தை வேறொரு ஐ.பி அட்ரஸில் இருந்து ஓபன் செய்ய முயற்சித்தாலும் நீங்களே வேறொரு ஐ.பி யில் இருந்து முயற்சித்தாலும் ஓபன் செய்யும் முன் ஒரு சங்கேத எண்ணை நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு அனுப்பி வைத்துவிடும்.அது தெரிந்தால் தான் மற்றொரு நபரால் பிறகு உங்கள் தளத்தை ஹாக் செய்ய முடியும்.


முதலில் உங்கள் ஜி-மெயில் அக்கவுண்டை ஓபன் செய்து கொள்ளுங்கள்.படத்தில் உள்ளவாறு டீடைல்ஸ் என்ற சுட்டியை அமுக்குங்கள்.





அடுத்த திரையில் எந்த ஐ.பி இலிருந்து நீங்கள் உங்கள் கூகிள் அக்கவுண்டை ஓபன் செய்தீர்கள் என்ற தகவல்களை காண்பிக்கும். இதை வைத்தே வேறு யாரேனும் உள்நுழைய முயற்சித்தார்களா என்று கண்டுபிடித்து விடலாம். ActiveWhois என்ற மென்பொருள் உதவியுடன் ஐ.பி அட்ரசின் டொமைன் உணர் யார் என்று நான் கண்டு பிடித்து விட்டேன். சென்னை சேர்ந்த ஒரு பக்கி என் தளத்தை ஹாக் செய்ய முயற்சித்து இருக்கின்றது.அதற்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.மேலதிக தகவல்களுக்கு http://www.johnru.com/active-whois/ செல்லவும்.


அதில் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது signout all other sessions என்ற பட்டனை சொடுக்குவது தான். யாரேனும் அந்த கணப் பொழுதில் உங்கள் அக்கவுண்டை பயன்படுத்திக் கொண்டிருப்பினும் இதனால் அவர்களை வெளியேற்ற செய்ய முடியும். பின் உடனடியாக உங்கள் அக்கவுண்டின் பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள்.




பிறகு படத்தில் உள்ளவாறு அக்கவுன்ட் செட்டிங்க்ஸ் செல்லுங்கள். அதில் கீழுள்ள படத்தில் ஹை லைட் செய்தது போல செக்யூரிட்டி ஆப்ஷன்சில் உள்ள ௨ ஸ்டெப் வெரிபிகேஷன் என்ற சுட்டியை கிளிக்கவும்.பிறகு கீழ் உள்ள படங்களில் காட்டியது போல தொடரவும்.







உங்கள் மொபைலுக்கு சங்கேத குறியீடு எண் அனுப்பப்படும்.அது ஒவ்வொரு முறையும் மாறும். எனவே உங்கள் சரியான உபயோகத்தில் உள்ள கைபேசி எண்ணை கொடுங்கள்.பேக் அப் மொபைல் எண்ணாக உங்களுடைய மற்றொரு மொபைல் எண்ணையோ அல்லது உங்கள் நம்பத்தகுந்த நபர்களின் எண்ணையோ கொடுக்கலாம்.




இடையில் பேக் அப் கோட்கள் வரும். அவை பத்து பத்திலக்க எண்கள்.அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலே படத்தில் எனது பேக் அப் கோட்களை மறைப்பதற்காக அழித்து இருக்கிறேன். இறுதியாக turn on வெரிபிகேஷன் என்ற பட்டனை கிளிக்கவும்.வந்தே மாதரம் சசி அவர்கள் ஏற்கனவே இதைப் பற்றி பதிவிட்டு இருக்கிறார். அவரது இடுகைக்கான சுட்டி இதோ.








அவ்ளோ தான் இனிமேல் யார் உங்கள் அக்கவுண்டை யூஸ் பண்ண முயன்றாலும் உங்கள் மொபைல் போனுக்கு குறியீடு எண் கொண்ட அலேர்ட் வந்து விடும்.


I can't find my blog on the Web, where is it?, இது தான் எனக்கு வந்த எரர் மெஸ்சேஜ். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவர் கூறி இருக்கிறார்.தவறாமல் படித்து பாருங்கள் கண்டிப்பாக பயன்படும்.இவர் கூறிய முறைகளை பின்பற்றி எனது கருத்துகளை ரிக்வெஸ்ட் ஆக கூகிளுக்கு அனுப்பி வைத்தேன்.24 மணி நேரத்தில் என் தளம் திரும்ப கிடைத்து விட்டது.


மேலும் நமது இடுகைகளில் ஸ்பாம் கமெண்டின் மூலம் நமது தளத்தை ஹாக் செய்யலாம். எனவே அனைவரும் கமென்ட் மாடரேஷன் வைத்துக் கொள்ளவும்.

ஒரு பலான வெப் சைட்டின் இணைய முகவரியை உங்கள் இடுகையில் அனானி கமெண்ட்டாக நான் போட்டு விட்டு கூகிளிடம் உங்கள் தளத்தை பற்றி முறையிடலாம்.ஸ்பாம் கமென்ட் இருப்பின் உங்கள் தளமும் ஸ்பாம் என கொள்ளப் படும்.கூகிள் ஸ்பாம் தளத்தை அழித்து விட அவர்களுக்கு உரிமை உண்டு.


மேலதிக தகவலுக்கு கூகிளில் "how to report a spam blog " என்று தேடி பாருங்கள்...அல்லது ஆங்கில எழுத்துக்களின் மேல் சொடுக்குங்கள்.பல உண்மைகள் விளங்கும்.இவை அனைத்தும் இந்த அனுபவத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டவை.

இறுதியாக முக்கியமாக ஒவ்வொரு இடுகை இட்ட பின்பும் உங்கள் தளத்தின் HTML/XML/CSS கோடை எச்போர்ட் செய்து வைத்துக் கொள்ளவும்.

Nov 20, 2010

விபத்தும்,மன நிலைமையும்…

உங்களுக்கு தெரிஞ்சவங்க லிஸ்ட்ல கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி யாராவது அக்சிடேன்ட்ல அடிபட்டு ரத்தக்களரியோட கிடந்துருக்காங்களா சார்?கல்யாணம்னதும் எதோ என்னோட கல்யாணம் என்று அவசரப்பட்டு நினைச்சிடாதீங்க. நமக்கு தான் இன்னும் அந்த மாதிரி விஷயம் எதுவும் நடக்கலையே. நடக்குமா என்பதும் சந்தேகமாகவே இருக்கு?


ஆமா! கல்யாணம் என் கூட பிறந்த அண்ணனுக்கு. கூட பிறந்தா எப்படி அண்ணனாகும். நீங்க ட்வின்சா? என்றெல்லாம் கடிக்க கூடாது.

ரெண்டு வாரம் முன்னாடி ஒழுங்கா வழக்கம் போல ரூம்ல தண்ணிய போட்டு படுக்காம கொழுப்பெடுத்து போயி சரக்கடிக்காம வெளியில சாப்பிட கிளம்பினேன் சார். தோசை சாப்பிட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் அன்பே சிவம் ரேஞ்சுக்கு இல்லனாலும் சுமாரான அளவுக்கு விபத்து நடந்துடுச்சு.

இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்குமே! விபத்துக்கு காரணம் நாய். ஆமாங்க நம்புங்க தெரு நாயே தான். இத்தனைக்கும் பார்த்துகிட்டே தான் வண்டியை செலுத்தினேன். அது கிட்ட நெருங்கும் போது சராலென முன் சக்கரத்துக்குள்ள பாஞ்சிடுச்சு. நாய் மேல வண்டி ஏறி பின் பறந்து நானும் பறந்து சிமென்ட் ரோட்டில் உருண்டு விழுந்து மூன்று சுற்று முடிக்கையில் நாய் எஸ்கேப் ஆகி ஒரு மூலையில் நின்று “இவன் இன்னுமா உயிரோட இருக்கான்?” என்ற தொனியில் பார்த்து எரிகிற புண்ணில் எண்ணையை ஊற்றியது. இரண்டு கையிலும் பலத்த காயம். சில்லறை காயம் இல்லை. ஆயிரம் ருபாய் நோட்டு காயம். இடத்து காலில் ஒரு ஆயிரம் ருபாய் நோட்டு, கை விரல்கள், உள்ளங்கை, பின் கை பகுதி என பலத்த சேதம். எங்கும் ரத்தம் எதிலும் ரத்தம். அனைத்தும் சிராய்ப்பு காயமே என்றாலும் எரிச்சலோடு சேர்ந்த வலி அதுவும் அக்னி நட்சத்திரத்தில்!

உருளும் பொழுது என்னை தடுத்து நிறுத்திய ஒருவர் மட்டும் என்னிடம் நலம் விசாரிக்க, கூடியிருந்த நால்வர் நாயை கல்லால் அடித்த படி துரத்திக் கொண்டிருந்தார்கள். “அட நாயை அடிக்கிற நாய்களா முதல்ல எனக்கொரு உதவி பண்ணுங்கடா” என்று நினைக்கையிலேயே ஒருவர் “சார் இந்த நாய்னால தினமும் ரெண்டு பேராவது விழுறாங்க. சனியன் இத அடிச்சே கொல்லனும் சார்” என்று வெறிபிடித்து துரத்தஆரம்பித்தார்.

எனக்கும் வெறி இருந்தாலும் அப்போது என்னால் ஒன்னும் செய்ய முடியலீங்க. சமாளித்து எழுந்து நின்றவுடன் கையிலும் காலிலும் ரத்தம் கொட்டத் தொடங்கியது. எனக்கு உண்மையாலுமே அன்றிரவு டவுசர் கிழிந்து விட்டது. இருட்டில் உடனேயே அது தெரிய வில்லை. ஹாஸ்பிடல் சென்றவுடன் தான் டவுசர் தாறுமாறாக கிழிந்து தொங்கிகொண்டிருப்பது தெரிந்தது. நல்ல வேலை ஜட்டி போட்டிருந்தேன். இல்லை என்றால் இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் கப்பலேறியிருக்கும்.

சென்னையில் உதவும் மனப்பான்மையுடன் சில பேரா என்று வியக்கும் அளவுக்கு எனக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தி பின் ஒரு வேனில் என்னை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டலில் விட்டனர். எனது டெபிட் கார்டு மற்றும் லைசென்ஸ் மட்டும் தான் என்னிடம் இருந்தது. பாக்கெட்டில் வைத்திருந்த முன்னூற்று சொச்ச ரூபாய் எங்கே விழுந்தது என்று தெரியவில்லை.


முதலுதவி செய்து கொண்ட பின் சிகிச்சை கட்டணம் நானூறை என்னை கொண்டு சேர்த்த நண்பர் கட்டினார். பின் அவருக்கு திரும்பும் வழியில் திருப்பி செலுத்தி வண்டியை மீண்டும் நானே சமாளித்து ஒட்டிக்கொண்டு ரூம் வந்து சேர்ந்த போது மணி 11 . பிறகு தான் வீட்டுக்கே தகவல் சொன்னேன். விழுந்ததில் கைபேசி நொறுங்கியிருந்தது. டிஸ்ப்ளே காலி. குத்து மதிப்பாக வீட்டு எண்ணை அடித்ததில் சரியாக இணைப்புகிடைத்தது.

இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவ்வளவு வலி. எப்போது தூங்கினேன் என்று எனக்கு நினைவில்லை.பின்னர் அடுத்த நாள் காலையில் 5 மணிக்கெல்லாம் மீண்டும் ஹாஸ்பிடல் சென்று கட்டு போட சொன்னால் மறுத்தார்கள். கட்டு போட்டால் காயம் சீக்கிரம் ஆறாது என்றார்கள். அவர்களிடம் நான் பஸ்சில் ஊருக்கு போவதால் தேவைபடுகிறது. சென்றவுடன் நீக்கி விடுவேன் என்று விளக்கிய பிறகு கட்டு போடப் பட்டது. வலியுடனும் குருட்டு தைரியம் மற்றும் வலிமையுடனும் புறப்பட்டேன் ஊருக்கு.பேருந்தில், சாலையில் என எங்கும் எண்ணை நோக்கி விசித்திர பார்வைகள். வழி நெடுகிலும் என்ன என்று கேட்பவர்களுக்கு விளக்கங்கள் என என்னை எரிச்சலடைய செய்த முதல் நாள் அது. வீட்டுக்கு சென்றால் கல்யாண அமளி துமளிகள். நிம்மதியாக உறங்க வழியே இல்லை. சரியாக கவனிக்க ஆள் இல்லை. விரக்தியின் உச்சம் சூழ்ந்த தருணங்கள். அனைவரின் மீதும் கோபம். வலி.

இதன் நடுவே திருமணத்துக்கு மீண்டும் மாயவரம் பயணம். மண்டபமே கலையாக இருக்க நான் மட்டும் பத்து நாளாக குளிக்காத அழுக்கு தேகம், தாடி சகிதமாய் ஒரு ஷார்ட்ஸ் மற்றும் பனியனுடன். இதன் நடுவே வந்து போகும் இஷ்டமித்திர பந்துகளின் விசாரிப்புகளுக்கு விளக்கவுரை. சுமார் 700 பேர் கிட்ட எப்படி விழுந்தேன்? எதனால விழுந்தேன்? சொல்ற கடுப்பு இருக்கு பாருங்க அதை அனுபவிச்சா தான் தெரியும்.


இதனால் நான் கத்துகிட்ட பாடம்:

இந்த உலகத்துல ஒருவன் தன்னை ஒழுங்காக முதல்ல பார்த்துகலைனா ரொம்ப கஷ்டம். எவனும் உதவி பண்ணுவான் நினைக்கவே கூடாது. நம்ம உடம்பை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். இல்லைனா என் நிலைமை தான்.

சில சுவாரசியங்கள்:

மெடிக்கல் பாரம் பில் பண்ணும் போது எனக்கு வயது 32 என்று என்னை கேட்காமல் போட்டுவிட்டார்கள். பின்னர் அவ்வளவு வலியிலும் சொல்லி அதை 26 என்று மாற்றியது.

எப்ப விழுந்தீங்க என்ற கேள்விக்கு இப்ப தான் சுட சுட விழுந்தேன் இங்க வந்திருக்கேன் என்று எம்.ஆர். ராதா சார் பாணியில நக்கல் அடிச்சது.

நான் ஊருக்கு போகும் போது மீண்டும் ஒரு நாய் பஸ்சுக்கு குறுக்கே பாய்ந்து பின்னங்கால் ஒடிந்த நிலையில் கதறி விழுந்தது.

என்ன செய்தும் ஆறாத புண் மூன்று நாள் 5 மணி நேர கேப் விட்டு விட்டு 90 கட்டிங் அடித்த பின் சீக்கிரம் ஆறியது.

ஒவ்வொருவரும் காரணம் கேட்க நான் விளக்க அவர்கள் தனது சொந்த கதையை கூற சுமார் 200 சிறுகதைகளை படித்த திருப்தி.

இது போல இந்த இரண்டு வாரத்தில் அனைத்துமே சுவாரசியங்கள். இப்போது தான் கைகளில் புண் ஆரியிருக்கிறது. தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில் தடவி வருகிறேன். காலில் புண்ணும் வீக்கமும் முற்றிலும் குணமாக வில்லை. இன்னும் ஒரு வாரம் ஆகும் போலிருக்கிறது.


மீண்டும் வருகிறேன்… விரைவில் மீண்டு வருகிறேன்.

Mar 12, 2010

கதவை திறக்க முடியவில்லை

நேற்று இரவு வழக்கம்போல அலுவலகப் பணிகளை(?!) முடித்துவிட்டு , எட்டு மணி அளவில் எனது பைக்கை எடுத்து எனது ரூமை நோக்கிப் புறப்பட்டேன். பதினைந்து நிமிடப் பயணம். எனது அறையின் கீழே உள்ள பார்கிங் லாட்டில் பைக்கை நிறுத்தி விட்டு, எனது அன்றாட செயல்களாகவே மாறிவிட்ட குவார்ட்டர் மற்றும் சைட் டிஷ்களை வாங்க டாஸ்மாக் நோக்கி விரைந்தேன். நேரம் மணி 8 :25 . 

நான் எதிர்பார்க்கும் நெப்போலியன் வழக்கம் போல ஸ்டாக் தீர்ந்து விட்ட நிலையில், வேறொரு பெயர் தெரியா சரக்கு வாங்கியாகிவிட்டது. பரிச்சயப்பட்ட நாயர் கடையில் சைட் டிஷ்களான இரண்டு வாழைப் பழம், கடலை பர்பி, நாலு பில்ட்டர் சிகரெட், ஒரு

பாக்கெட் மிக்சர் வாங்கிக் கொண்டேன். அண்ணாச்சி கடையில் ஏழு பரோட்டாவும், ஒரு ஆம்லெட்டும் வாங்கிய பிறகு ரூம் நோக்கி நடந்தேன்.

கதவை நெருங்கும் போது நம் உள்மனம் சாவியை எடு என்று கட்டளையிட்ட போது தான் நான் சாவியை எங்கேயோ தொலைத்த விஷயம் உணர முடிந்தது.வழக்கமாக அறை சாவியை தனியாகவே வைத்து இருப்பேன். அனால் அன்று  காலையில் தான் ஒன்றாக இருக்கட்டுமே என்று பைக் சாவி செயினில் இதையும் கோர்த்தது ஞாபகத்துக்கு வந்தது.

என்ன நடந்திருக்கும் என்று என்னால்  யூகிக்க முடிந்தது. பைக் ஓட்டும் போது ஏற்பட்ட அதிர்வில் கீ செயினில் இருந்து எனது அறை சாவி எங்கோ கழண்டு விழுந்து இருக்கிறது. அதை தேடுவது என்பது  சாத்தியம்  இல்லை என்று புத்திக்கு உரைத்ததால் பூட்டை உடைக்கும் முயற்ச்சியில் ஈடுபடலானேன்.

இதற்கு முன்னர் என் அண்ணன் என்னுடன் தங்கியிருந்த போது சாவியை தொலைத்து விட்டான். அப்போது அவனிடம் "ஒரு சாவியை கூட உன்னால பத்திரமா மெயின்டேன்  பண்ண முடியல இந்த லட்சணத்துல உனக்கு பொண்ணு வேற பாக்குறாங்க!" என்று நான் எள்ளி நகையாடியது நினைவுக்கு வந்தது.

பூட்டை உற்றுப் பார்த்தேன். இன்றைக்கு அது சற்று பெரியதாகவே தெரிந்தது. என்னைப் பார்த்து ஏளனம் செய்வது போல தெரிந்தது. வந்த கடுப்பில் கல்லை தேடினேன். கிடைக்காததால் கீழே ஓடினேன். நல்ல கருங்கல்லாக தேர்ந்தெடுத்து கதவை நோக்கி விரைந்தேன்.

ஆத்திரத்துடன் பூட்டின் மேல் எனது முழு பலமும் கொண்டு கல்லினால் அடித்தேன். பூட்டு நசுங்கியதே தவிர உடைவது மாதிரி தெரியவில்லை. எதிர் அறை நண்பர் ஒருவர் அவர் பங்குக்கு சிறிது நேரம் அடித்தார். வேலைக்கு ஆகவில்லை. கம்பியை வைத்து பூட்டை உடைக்கலாம் என்று அவர் ஐடியா கொடுக்க கம்பியை தேடி அலைந்து அது கிடைக்காததால் மீண்டும் கல்லை வைத்து எனது போராட்டம் தொடங்கியது.

இப்போது மணி ஒன்பதை நெருங்கிவிட்டிருந்தது. இன்னும் கால் மணி நேரம் கடத்தினால் அனைத்து கடையும் மூடி விடுவார்கள் என்பதால் நான் வாங்கிய சரக்கு மற்றும் உணவு பொட்டலங்களை எனது ஹெல்மேட்டிலே வைத்து விட்டு, ஹார்ட்வேர் கடை நோக்கி விரைந்தேன். பூட்டும் தருவாயில் இருந்த ஒரு கடையில் ஆக்ஷா ப்ளேடு ஒன்றை வாங்கிக்கொண்டு நம்பிக்கையுடன் மீண்டும் என் அறை நோக்கி விரைந்தேன்.

ஆக்ஸா ப்ளேடை கொண்டு எனது பூட்டு அறுப்பு போராட்டம் தொடங்கியது. அறை மணி நேர கடின உழைப்பில் ஆக்ஸா ப்ளேடு சூடாகி உடைந்து விட்டது. பூட்டின் கொண்டியை முக்கால் வாசி அறுத்திருந்தேன். கைப்பிடி இல்லாத ப்ளேடு என்பதால் வலது கை ஆட்காட்டி விரலில் சதை பேர்ந்திருந்தது.

மீண்டும் என்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள, கீழே உள்ள நாயர் கடைக்கு சென்று, ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி குடித்து விட்டு பில்ட்டரை பற்ற வைத்தேன். நேரம் சரியாக பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கு மேலும் தனியாக போராடினால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து என் அறைக்கு பக்கத்து பில்டிங்கில் உள்ள ஒரு சிறிய லேத்து பட்டறையில் உள்ளவர்களிடம் எனது நிலையை விளக்கினேன்.

உடனே அவர்களில் ஒருவர் சற்று பெரிய ஆக்ஸா ப்ளேடு மற்றும் ஒரு இரும்பு தடியுடன் என் அறைக்கு வந்தார்.
ஏற்கனவே நான் முக்கால்வாசி அருத்திருப்பதை பார்த்த அவர், இரும்பு தடியை கொண்டு ஓங்கி அடித்தால் எளிதில் உடைத்து விடலாம் என்றார். ஆனால் அவருடைய கணக்கு பொய்த்தது. சுமார் முப்பது அடி வாங்கியும் கூட பூட்டு பல்லை காட்டிக் கொண்டு ஸ்ட்ராங்காக இருந்தது.

நித்தியானந்தர் படத்தை எடுத்தவரை கூப்பிடுங்கப்பா அவர் தான் எந்த கதவா இருந்தாலும் ஈசியா திறந்திடுவார் என்று எனது பக்கத்துக்கு அறை நண்பர் கமென்ட் அடிக்க அனைவரும் சிரித்தனர். என்னுடன் வந்த லேத் நண்பர் இன்னொரு ஆளை அழைத்து வந்தார். அவர் ஆக்ஸா ப்ளேடை வைத்து சுமார் முக்கால் மணி நேரம் அறுத்தெடுத்தார். அவருக்கு உதவியாக இன்னொரு அறை நண்பர் டார்ச் லைட் கொண்டு வெளிச்சம் கொடுத்தார்.

நானும் சளைக்காமல் பார்த்து கொண்டே இருந்தேன். கிட்டத் தட்ட முடித்து விட்ட நிலையில் மீண்டும் இரும்பு தடி கொண்டு அடிக்க, பூட்டு உடைய வில்லை. மீண்டும் சில நிமிடங்கள் ஆக்ஸா ப்ளேடு அறுப்பு பின் இரும்பு அடி என தொடர் போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக பூட்டு உடை பட்டது.ஒவ்வொரு இரும்பு அடியின் போதும் என் அண்ணன் என்னைஅடிப்பது போல இருந்தது.

இருந்த கடுப்பில் மற்றும் லட்சியத்தை அடைந்த திளைப்பிலும், மூன்று மணி நேரமாக என்னை ஏக்கத்துடன் இல்லை நான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சரக்கு பாட்டிலை  ராவாக அடித்து விட்டு படுத்தேன்.
அப்போது யோசித்த போது தான் தெரிந்தது. எனக்கு உதவிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலத்தார். லேத் நண்பர்கள் ராஜஸ்தானையும், டார்ச் பிடித்தவர் கேரளாவையும், கூட நின்று சிற்சில உதவிகள் புரிந்தவர்கள் முறையே ஆந்திர மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். லேத் நண்பர்களுக்கு பணம் கொடுக்க நான் முயன்ற போது, "போங்க சார், போய் தூங்குங்க" என்றனர்.

என்னிடம் சிறு எதிர்பார்ப்பும் கொள்ளாமல் அவர்கள் எனக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்தது. இத்தனைக்கும் அவர்கள் அனைவரிடமும் நான் சரியாக பழகியது கூட இல்லை. அன்று தான் ஒருவருக்கொருவர் பேசியே இருப்போம்.

ஆம் இந்தியா.. நம் திருநாடு வேற்றுமையிலும் ஒற்றுமை கொண்டது தான். அதற்கு இந்த சிறு உதாரணமே போதும். வீட்டுக்குள் ஒற்றுமை இருந்தால், தெருவுக்குள்ளும், ஊருக்குள்ளும், நாட்டுக்குள்ளும் ஒற்றுமை நிச்சயம் இருக்கும்.
ஜெய் ஹிந்த்!