Mar 6, 2012

டக்கால்டியும் குடிமகனும்!

வணக்கம் நண்பர்களே...

நம்ம சிங்கார சென்னையில் தான் தினம்தினம் எத்தனை கதைகள்....நம்மை சுற்றி பல அனுபவங்கள்...அப்படி ஒரு அனுபவம் (ங்கள் !! ) சில மணிநேரத்துக்கு முன் எனக்கு ஏற்பட்டவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாம் நமக்கு பிடித்த ஒரு பாடலை ரொம்ப நாள் கழித்து கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது எம்.எஸ்.வி யோ, இளையராஜாவோ, ரகுமானோ( நான் தமிழன் சமஸ்க்ருத எழுத்தை உபயோகிக்க மாட்டேன் (அய்யயோ சமஸ்க்ருத எனும் வார்த்தையில் 'ஸ்' எனும் எழுத்து வந்துவிட்டதே) (என்னாடா இது எஸ்.க்யு.எல் குயேரி மாதிரி மல்டிப்பில் ப்ராக்கேட்டோட போகுது ) ( எத்தனை பிராக்கெட் டா மெயின் வாய்சுக்கு போடுவ..கொய்யாலே)) !!!ஒ.கே எல்லாரும் ஆட்டையை கவனியுங்கள், நமக்கு பிடித்த பாடலை நெடு நாள் கழித்து கேட்கிறோம், கேட்ட பிறகும் அப்பாடல் நம் எண்ணத்தையும், மனசையும் விட்டு அகலாது, நம் மனதுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்கும், ஒளிந்தவாறே அப்பாடல் தாளம் தப்பாமல் கேட்டுக்கொண்டிருக்கும். அதைப்போலவே இந்த நிகழ்வும்.

இன்று அலுவலகத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை (வழக்கம் போலவே ஹி ஹி). ரொம்ப போர் அடிக்குதே என்று அலுவலகம் எதிரில் இருக்கும் டாஸ்மாக்குக்கு விசிட் அடித்தேன். (வாழ்க தமிழக அரசும், தமிழகமும்!!!) எப்போதும் போல ஒரு குவார்ட்டர் நெப்போலியன், மூணு வாட்டர் பாகெட், ஒரு கிளாஸ் துணையுடன் போதையை தலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த சமயம், ஒரு வயதான ஆள் சரக்குக்கு இரண்டு ரூபாய் குறைவாக வைத்திருந்த காரணத்தால் விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்து அதில் தான் போராடி வாங்கிய 65 ரூபாய் சரக்கு மூலம் வெற்றியை ருசித்துக் கொண்டிருந்தார். இப்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்ட ஜி.எஸ்.டி சாலை எதிர் ரோட்டிலே முக்தி நிலையை அடைந்த 'குடி'மகன் ஒருவன் வழியில் வரும் வாகனங்களை எல்லாம் வழிமறித்துக் கொண்டிருந்தான். ஏகப்பட்ட லாரிகளும், ஆட்டோக்களும், டூ-வீலர் பயணிகளும் அவனைத் திட்டியவாறே கடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதை கவனித்தவாறே நான் முக்தி நிலையை அடைய போராடிக்கொண்டிருந்தேன். பாதி முக்தியை அடைந்துவிட்டிருந்த நான், முழு முக்தியை அடைய குவார்ட்டரில் மிச்சம் இருந்த இன்னும் இரண்டு ரவுண்டுகளை முடிக்க ஆயுதமான போது, எனக்கு அருகே ஏற்கனவே குவார்ட்டருக்கு மேலே 90 அடித்த படி (அவர் வாங்கிய ஹாப் பாடில்லில் மீதி 90௦ தான் இருந்தது..ஹி ஹி) இருந்த ஒரு நபர், என்னைப் பார்த்து 'ப்ரதர் ஆர் யு வொர்கிங் இன் ****** கம்பெனி?' என்று பீட்டர் விட, நான் 'எஸ் சார்' என்றேன்.

"இப்பேர்ப்பட்ட கம்பெனியில் வேலை பார்க்கிறாய், நல்ல பாருக்கு போயி தண்ணி அடிக்க வேண்டியது தானே, இங்க ஏன் வந்தாய்?"
"இல்ல சார், பழகிடுச்சு, பாருக்கு போனா போதை தான் கெடைக்கும், அனுபவம் கெடைக்காது...நான் எப்பவும் அடிமட்ட மக்களோடவே இருக்க விரும்புறேன்"
"கிரேட்...நானும் அப்படி தான். காஞ்சிபுரம் கலெக்டரோட பி.எ நான், உனக்கு உன் கம்பெனியிலேயே ப்ரோமோஷன் வேணும்னாலும் கேளு இல்ல... வேற வேலையானாலும் சொல்லு நான் ஏற்பாடு பண்றேன். லைப்ல நெறையா நான் தப்பு பண்ணிருக்கேன், அதனால நெறைய இழந்துருக்கேன்"
"ரொம்ப தேங்க்ஸ் சார் எனக்கு நான் இப்ப பாக்குற வேலையே போதும், சிபாரிசு எல்லாம் எனக்குப் பிடிக்காது"
"ரொம்ப சுயமரியாதையோட பேசுறியே பா... ஐ லைக் இட்...இந்த மாதிரி இடத்துல உன்னை மாதிரி ஆளுங்கள மீட் பண்றது ரொம்ப கஷ்டம்...சரி வி.எஸ்.ஒ.பி கு அர்த்தம் தெரியுமா உனக்கு"
"வெரி ஸ்பெஷல் ஓல்டு பால்"
"யு ஆர் ராங் மை டியர் பிரெண்ட். இட்ஸ் வெரி ஸ்பெஷல் ஓல்டு பேல் அண்ட் நாட் பால். பேல் மீன்ஸ் தி கலர் ஆப் தி லிக்கர்"

இப்படி தொடர்ந்த உரையாடல், இறுதியில் "நான் இப்போ கூட ஒரு ஜாரியை செஞ்சுட்டு தான் வரேன். அவ என்ன ரொம்ப கம்பெல் பண்ணா, ஆனா நான் மெயின் மேட்டர்ல இறங்கல, வெறும் ஓரல் தான்...அவ என்னை கேவலமா பார்த்து சிரிச்சா..ஆனா என் பொண்டாட்டி தவிர நான் யாரையும் முழுசா அனுபவிக்க மாட்டேன்... நீ வரியா மறுபடியும் போலாம்"
"இல்ல சார், எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல"
"காசு நான் தரேன் யா...வா போலாம்"
"இல்ல சார்..சாரி...நான் கெளம்புறேன்"
"அட போடாங்....@#$%###$$%$"
"தேங்க்ஸ் சார்"

இதற்குள் முன் சொன்ன ட்ராபிக்கை மறித்த குடிமகன் இப்போது என் அருகில். என்னடா இன்னிக்கு ஒரே எழறையா இருக்கு என்று மனதுக்குள் நினைத்தபடி அவனை கடக்க நினைக்கையில், அவன் என்னிடம் 40௦ ரூபாயை கொடுத்து கட்டிங் கேட்டான். அப்போத்து தான் தெரிந்தது அவன் வட மாநிலத்தை சேர்ந்தவன் என்று. என்னிடம் இல்லை என்று இந்தியில் சொன்ன பின்னும் என்னை விடாமல் துரத்தி 90 கட்டிங் கேட்க, என் அருகில் இருந்த பள்ளிக்கூடம் முடிந்து வந்த இரு சிறுவர்கள் , எங்களைப் பார்த்து சிரிக்க, கோபத்தில் அவன் சிறுவர்களை அடிக்கப் போக, பொறுமை இழந்த நான் அவன் கன்னத்தில் நாலு அரை விட, மிரண்ட அவன் ஓட, நான் அவனை துரத்தி அடிக்க, ஏற்கனவே அவனது செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் சுற்றி வளைக்க அந்த ஏரியாவே களேபரமானது.

மக்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து அவனை குமுறி, அருகில் இருந்த போலீசிடம் ஒப்படைத்தது. நான் நடந்தவற்றை போலீசிடம் கூறி, விடை பெற்றேன். சுற்றி இருந்த பெருசுகள் சிலர், "இவனுங்களை எல்லாம் இப்படி தான் உடனே பிரட்டி எடுக்கணும். நாமளும் தான் இவ்ளோ நேரம் பாத்துக்கிட்டு இருந்தோம் ஆனா அந்த பையன் மிரட்டி அடக்கிட்டு அமைதியா போறான் பாருங்க" என்று சொல்வது என் காதில் விழுந்த போது வேட்டைப் பட நாசர்,மாதவன் கதாப்பாத்திரம் ஞாபகத்துக்கு வந்தது..

கடைசில என்னையும் (காமேடியனையும்) ஹீரோ ஆக்கிட்டாங்களே (முதல்வன பட க்ளைமாக்ஸ் போல படிக்கவும்)...!!!

சரி நான் கெளம்புறேன்... எங்கேயா? அடிச்ச மப்பு இந்த ரெண்டு பேர்னால அட்ரஸ் இல்லாம போயிடுச்சு இன்னொரு குவார்ட்டர் அடிக்க தான்...வர்ட்டா

3 comments:

கோவை நேரம் said...

வர..வர இப்போ எல்லாரும் ஹிந்தி காரங்க மேல செம காண்டுல இருக்காங்க போல....

Unknown said...

பய புள்ள கடைசில என்னையும் டெரர் ஆக்கிட்டானே பாவி - இப்படிக்கு டகால்டி மனசாட்சி ஹிஹி!

Yoga.S. said...

இருங்க நானும் வரேன்!எங்கயா?இந்தப் பொலம்பலப் படிச்சு போட்ட சரக்கு எறங்கிடுச்சியா!!!!!!