Jul 28, 2012

வர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்

வணக்கம் நண்பர்களே!

சமீப காலமாக தலைமறைவு வாழ்க்கையில் லயித்த நான் திடீரென்று இப்போது எழுத முன் வரும் காரணம் நல்ல விஷயம் நாலு பேரை சென்றைய வேண்டும் என்ற உந்துதல் தான். என்னுடைய சில பதிவை ஏற்கனவே படித்தவர்களுக்கு, "என்னடா இவன் எப்போ பார்த்தாலும் புலம்பறான்"ன்னு கண்டிப்பாக ஒரு சலிப்பு இருக்கும். இன்னும் புலம்புவதற்கு நான் சலிக்காவிட்டாலும் மற்றவர்களை ஏன் சலிப்படைய செய்ய வேண்டும் என்ற அதே சலிப்பு எனக்கு. ஆனால் இன்று ஒரு மிக நல்ல திரைப்படத்தைப் பற்றி எழுதியே தீர வேண்டும் என்று முடிவோடு களம் இறங்கி இருக்கிறேன். ( அவ்வளவு சீக்கிரத்தில் உங்களை எல்லாம் விட மாட்டேன்... ஹி ஹி )

வர்ணம் - இது தாங்க நான் சொல்ல வந்த படம். ப்ளஸ் டூ படிக்கும் டீன் ஏஜ் நாயகன்... அவன் செய்யும் வால் தனத்தால் தனது பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட அவனது தாய் மாமன் ஊருக்கு அங்குள்ள மற்றொரு பள்ளியில் படிக்க அனுப்பி வைக்கப் படுகிறான் அவனது அம்மாவால். தாய் மாமன் நடிகர் சம்பத். இவர்கள் உயர் குடியினர். அந்த ஊரில் தனது தாய் மாமன் மிகப் பெரிய நாட்டாமையாக இருப்பதைப் பார்த்து ஹீரோவுக்கு பெருமை. மாமனைப் போலவே தானும் ஆக வேண்டும் என்று நினைக்கிறான். அதே ஊரில் வசிக்கும் பிற்படுத்தப் பட்டோரின் நிலைமை முதல் காட்சியிலேயே கடையில் அலுமினிய தம்ப்ளரில் டீ வாங்கும் போதே உணர்த்தப் படுகிறது.


தனது வர்க்கத்தைப் பற்றி பெருமையாகப் பேசும், நடக்கும் ஹீரோ, தன மாமனைப் பார்த்து பெருமை கொள்ளும் அவன் எப்படி? எதனால் அவனது மாமனையே எதிர்க்கிறான்? சரி தான்... அதே பள்ளியில் படிக்கும் தங்கம் என்ற பிற்படுத்தப் பட்டோர் இனத்தை சேர்ந்த பெண்ணை முதலில் வெறுத்தாலும் பின்பு அவளது அன்பினால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறான்.

இதற்கிடையில் ஹீரோவின் டீச்சராக வரும் "அழகி" புகழ் மோனிகா, சம்பத்தின் நண்பனின் தங்கை. சம்பத் மோனிகாவை அடைய அவரை மணம் செய்யத் துடிக்கிறார். ஆனால் மோனிகாவோ சம்பத்தின் டிரைவராக வரும் கேரக்டரை லவ்வுகிறார். அந்த டிரைவர் பிற்படுத்தப்பட்டோர் இனம் என்று அந்த ஊர்க்காரர்களால் சொல்லப்படும் வகுப்பை சேர்ந்தவர். பிளஸ் டூ படிக்கும் ஹீரோவின் தந்தையை கொன்றவராக காண்பிக்கப்படுகிறவர். அந்த பிரச்சினை காரணமாக தனது பெயரை அன்வர் என்று மாற்றிக் கொண்டு சம்பத்திடம் டிரைவராக வேலை செய்கிறார்.

இதற்கிடையில், "தென்மேற்குப் பருவக் காற்று" படத்தில் ஹீரோவாக நடித்தவர், பிளஸ்-டூ ஹீரோவின் காதலியான தங்கத்தின் அண்ணன். அதாவது மச்சான். சம்பத்திடம் தனது நிலத்தில் விளையும் காபிக் கொட்டைகளை விற்பவர். பின்தங்கிய வகுப்பில் மெத்தப் படித்தவர் அவர் அந்த ஊரில். தனது வீட்டில் கஷ்டம் என்று ஒருமுறை சம்பத்திடம் விளைச்சலுக்கு அதிக மகசூல் கேட்கையில் இருவருக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. இடையில் சம்பத்தின் நண்பர் ஒருவர் (அமெரிக்க -ரிடர்ன்) லாபத்திற்காக அங்குள்ள குறுநில விவசாயிகளை கைக்குள் போட்டுக்கொள்ள அதிக பணம் தர ஒத்துக்கொள்ள, "தென்மேற்கு" ஹீரோ அவரிடம் காபிக்கொட்டைகளை விற்கிறார். இதனால் கடுப்படையும் சம்பத் அவரை குண்டாங்கட்டாக தூக்கிக் கொண்டு வந்து மிரட்டி அடித்து அவர் வாயில் மலத்தை ஊற்றும் காட்சி அதன்பிறகு "தென்மேற்கு" நாயகன் ஆற்றில் வாயை கொப்பளித்து கொப்பளித்து வாந்தி எடுத்து குமுறி அலறுவது நெஞ்சை அறுக்கிறது.. அதை பார்க்கும் நம் பிளஸ்-டூ ஹீரோ சாதிக் கொடுமையை உணர்கிறான். தங்கத்துடன் ஏற்பட்ட காதலும் கூட சேர்ந்து கொள்ள மனிதன் ஆகிறான்.

ஆனால் சம்பத்தோ, கடன் திருப்பி தர இயலாத பிற்படுத்தப் பட்டோர் சமூகத்தை சேர்ந்த பெண்களை, சிறுமிகளை கபளீகரம் செய்யக் கூடிய ஆள். கணக்கை கணக்கு பண்ணி முடித்துக் கொள்பவர். ஒரு நாள் தங்கமும் அந்த நிலைக்குத் தள்ளப் பட, ஹீரோ தன மாமனைப் பார்த்து முற்றிலும் கடுப்பகிறான். ஏற்கனவே ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கோயிலில் முனி நடமாடுவதாக யாரும் போக பயப்படும் கோவிலில், பிளஸ்-டூ ஹீரோ செல்ல,,அங்கு அவனது டீச்சர் மோனிகாவும், தனது மாமாவின் டிரைவரும் பலான நிலையில் இருப்பதை பார்த்துவிடுகிறான். கூடவே தனது அப்பனைக் கொன்றவன் அந்த டிரைவர் தான் எனத் தெரிய, சம்பத்துடன் நிச்சயம் ஆன மோனிகாவும்- அது பிடிக்காமல் அவரின் காதலரான டிரைவருடன் எஸ்கேப் ஆகும் தருணத்தில் டிரைவரைப் பிடித்து சரமாரியாக அடித்து, அதே மலைக் கோவிலில் கட்டி வைத்து விட்டு, தனது மாமனான சம்பத்துக்கு தகவல் சொல்லிவிடுகிறான்.

இதைக் கேட்டு கொதிப்படைந்து இருவரையும் கொல்ல வரும் சம்பத், இடையில் பிளஸ் டூ நாயகனின் நிலை என்ன, மோனிகா- டிரைவர் ஜோடி என்ன ஆனது? வெண்திரையிலோ, திருட்டு வீ.சி.டியிலோ முடிவைக் காண்க...


ஒரு சாதியப் பிரச்சினைய மையமாக வைத்து அம்சமாக திரைக் கதை அமைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் எஸ்.எம் ராஜு. உறுத்தாத ஒளிப்பதிவும் இசையும். எடிட்டிங் பக்கா. இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் பாஸ். அவ்ளோ தான் சொல்வேன். மற்றபடி இப்பதிவில் உயர் சாதி, பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லியதற்காக என்னை மன்னிக்கவும். எனக்கு எப்படி எழுதுவது என்ற வார்த்தை பிரயோகம் அவசரத்துக்கு தோணவில்லை.

மீண்டு(ம்) வருகிறேன்! நன்றி வணக்கம்...

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்.

நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

ஹே டக்கால்டி ரிட்டர்ன்ஸ்.....

MANO நாஞ்சில் மனோ said...

புலம்புங்கய்யா புலம்புங்க....நாங்களும் கூட சேர்ந்தே புலம்புறோம் வாங்க....

சாதாரணமானவள் said...

//ஒரு மிக நல்ல திரைப்படத்தைப் பற்றி எழுதியே தீர வேண்டும் என்று முடிவோடு களம் இறங்கி இருக்கிறேன்.//
இவ்ளோ தூரம் கேரண்டி குடுக்கறீங்களே... நம்பலாமா?