அணுக

"JACK OF ALL TRADES BUT MASTER OF NONE" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எனக்கு சாலப் பொருந்தும் என்று நினைக்கிறேன். நலங்கெட புழுதியில் எறிந்த நல்லதோர் வீணை நான்.

டக்கால்டி என்றால் என்ன?
சென்னை வட்டார தமிழில் உருவான வார்த்தை இந்த டக்கால்டி. தமிழ்த் திரையுலக காமெடி மன்னன் அண்ணன் கவுண்டமணியால் மக்களிடம் பெரிதும் பரிச்சயம் பெற்ற வார்த்தை. இதற்கு நேர்மறையான தமிழ் அர்த்தம் யாதெனின் பொய், புரட்டு எனலாம். இதே பொருள் தரும் மற்ற சொலவடைகள் உதார்,கப்சா,பீலா,டகிலு,கீசூது,டபாய்த்தல் போன்றவை.

டக்கால்டி யார்?
நம்மில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு டக்கால்டி தான். ட்ராபிக் போலீசிடம் லஞ்சம் கொடுக்கும் போது, ஸ்கூல்,காலேஜுக்கு லேட்டாகப் போயி பஸ் லேட்டு என்று சொல்லும் போது, மனைவிக்கு தெரியாமல் குடித்துவிட்டு, மனைவியிடம் டாஸ்மாக்கில் தொலைப்பேசி அழைப்பில் பொய் சொல்லும் போது என இப்படி பட்டியல் நீளும்.ஆனால் அடுத்த கணமே அதை மறந்துவிட்டும், மன்னித்துவிட்டும் உத்தமனாக மாறிவிட்டு மீண்டும் இதே டக்கால்டி வேலையை நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படிப் பட்ட டக்கால்டிக்களில் ஒருவன் தான் நானும். நான் எழுதுவது சமூகத்தை திருத்துவதற்கோ, புரட்சியை ஏற்படுத்துவதற்கோ அல்ல. மனதில் தோன்றிய சில்லறை எண்ணங்களை பகிர்ந்து கொள்ள இந்த தளம்.

அணுக: dakkalti84@gmail.com