வணக்கம் நண்பர்களே...என் தளம் மாயமான தகவல் அறிந்திருப்பீர்கள். அப்படி ஆனால் என்னென்ன செய்யலாம் என்பதை விளக்கும் முயற்சியே இந்த இடுகை. வருமுன் காப்பதே சாலச் சிறந்தது என்ற பழமொழிக்கேற்ப அனைவரும் இன்றே நான் கூறப் போகும் கூகிள் 2 ஸ்டெப் வெரிபிகேஷனை செய்து கொள்ளவும்.பிறகு யார் உங்கள் தளத்தை வேறொரு ஐ.பி அட்ரஸில் இருந்து ஓபன் செய்ய முயற்சித்தாலும் நீங்களே வேறொரு ஐ.பி யில் இருந்து முயற்சித்தாலும் ஓபன் செய்யும் முன் ஒரு சங்கேத எண்ணை நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு அனுப்பி வைத்துவிடும்.அது தெரிந்தால் தான் மற்றொரு நபரால் பிறகு உங்கள் தளத்தை ஹாக் செய்ய முடியும்.
முதலில் உங்கள் ஜி-மெயில் அக்கவுண்டை ஓபன் செய்து கொள்ளுங்கள்.படத்தில் உள்ளவாறு டீடைல்ஸ் என்ற சுட்டியை அமுக்குங்கள்.
அடுத்த திரையில் எந்த ஐ.பி இலிருந்து நீங்கள் உங்கள் கூகிள் அக்கவுண்டை ஓபன் செய்தீர்கள் என்ற தகவல்களை காண்பிக்கும். இதை வைத்தே வேறு யாரேனும் உள்நுழைய முயற்சித்தார்களா என்று கண்டுபிடித்து விடலாம். ActiveWhois என்ற மென்பொருள் உதவியுடன் ஐ.பி அட்ரசின் டொமைன் உணர் யார் என்று நான் கண்டு பிடித்து விட்டேன். சென்னை சேர்ந்த ஒரு பக்கி என் தளத்தை ஹாக் செய்ய முயற்சித்து இருக்கின்றது.அதற்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.மேலதிக தகவல்களுக்கு http://www.johnru.com/active-whois/ செல்லவும்.
அதில் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது signout all other sessions என்ற பட்டனை சொடுக்குவது தான். யாரேனும் அந்த கணப் பொழுதில் உங்கள் அக்கவுண்டை பயன்படுத்திக் கொண்டிருப்பினும் இதனால் அவர்களை வெளியேற்ற செய்ய முடியும். பின் உடனடியாக உங்கள் அக்கவுண்டின் பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள்.
பிறகு படத்தில் உள்ளவாறு அக்கவுன்ட் செட்டிங்க்ஸ் செல்லுங்கள். அதில் கீழுள்ள படத்தில் ஹை லைட் செய்தது போல செக்யூரிட்டி ஆப்ஷன்சில் உள்ள ௨ ஸ்டெப் வெரிபிகேஷன் என்ற சுட்டியை கிளிக்கவும்.பிறகு கீழ் உள்ள படங்களில் காட்டியது போல தொடரவும்.
உங்கள் மொபைலுக்கு சங்கேத குறியீடு எண் அனுப்பப்படும்.அது ஒவ்வொரு முறையும் மாறும். எனவே உங்கள் சரியான உபயோகத்தில் உள்ள கைபேசி எண்ணை கொடுங்கள்.பேக் அப் மொபைல் எண்ணாக உங்களுடைய மற்றொரு மொபைல் எண்ணையோ அல்லது உங்கள் நம்பத்தகுந்த நபர்களின் எண்ணையோ கொடுக்கலாம்.
இடையில் பேக் அப் கோட்கள் வரும். அவை பத்து பத்திலக்க எண்கள்.அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலே படத்தில் எனது பேக் அப் கோட்களை மறைப்பதற்காக அழித்து இருக்கிறேன். இறுதியாக turn on வெரிபிகேஷன் என்ற பட்டனை கிளிக்கவும்.வந்தே மாதரம் சசி அவர்கள் ஏற்கனவே இதைப் பற்றி பதிவிட்டு இருக்கிறார். அவரது இடுகைக்கான சுட்டி இதோ.
அவ்ளோ தான் இனிமேல் யார் உங்கள் அக்கவுண்டை யூஸ் பண்ண முயன்றாலும் உங்கள் மொபைல் போனுக்கு குறியீடு எண் கொண்ட அலேர்ட் வந்து விடும்.
I can't find my blog on the Web, where is it?, இது தான் எனக்கு வந்த எரர் மெஸ்சேஜ். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவர் கூறி இருக்கிறார்.தவறாமல் படித்து பாருங்கள் கண்டிப்பாக பயன்படும்.இவர் கூறிய முறைகளை பின்பற்றி எனது கருத்துகளை ரிக்வெஸ்ட் ஆக கூகிளுக்கு அனுப்பி வைத்தேன்.24 மணி நேரத்தில் என் தளம் திரும்ப கிடைத்து விட்டது.
மேலும் நமது இடுகைகளில் ஸ்பாம் கமெண்டின் மூலம் நமது தளத்தை ஹாக் செய்யலாம். எனவே அனைவரும் கமென்ட் மாடரேஷன் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பலான வெப் சைட்டின் இணைய முகவரியை உங்கள் இடுகையில் அனானி கமெண்ட்டாக நான் போட்டு விட்டு கூகிளிடம் உங்கள் தளத்தை பற்றி முறையிடலாம்.ஸ்பாம் கமென்ட் இருப்பின் உங்கள் தளமும் ஸ்பாம் என கொள்ளப் படும்.கூகிள் ஸ்பாம் தளத்தை அழித்து விட அவர்களுக்கு உரிமை உண்டு.
மேலதிக தகவலுக்கு கூகிளில் "how to report a spam blog " என்று தேடி பாருங்கள்...அல்லது ஆங்கில எழுத்துக்களின் மேல் சொடுக்குங்கள்.பல உண்மைகள் விளங்கும்.இவை அனைத்தும் இந்த அனுபவத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டவை.
இறுதியாக முக்கியமாக ஒவ்வொரு இடுகை இட்ட பின்பும் உங்கள் தளத்தின் HTML/XML/CSS கோடை எச்போர்ட் செய்து வைத்துக் கொள்ளவும்.











30 comments:
டன்...டனா...டன்...
சூப்பர் மேட்டரு....
ரொம்ப நன்றி...
thanks for your information
வருகைக்கு நன்றி தமிழ் 007 ...
நீங்களும் உங்க ப்ளாக்கை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்...
உபயோகமான தகவலுக்கு நன்றி டகால்ட்டி!
@SEngovi
வருகைக்கு நன்றி தல...
நீங்களும் உஷாரா இருந்துக்கோங்க அப்பு...
இல்லைனா சொருகிடுவாங்க ஆப்பு
அடடே கவித கவித
சகோதரம், வணக்கம் நலமா? உங்களின் தொழில்நுட்ப ஆலோசனைகள் எம்மைப் போன்ற வலைப் பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு சின்னச் சந்தேகம். உங்களின் மின்னஞ்சல் முகவரி தெரிந்த நபர்களால் தானே உங்கள் தளத்தை ஹாக் பண்ண முடியும்? உங்களின் புறோபைலில் உங்கள் மெயில் ஐடி இல்லாத போது எப்படி இந்த பக்கியால் உங்கள் தளத்தை ஹாக் செய்ய முடியும்? உங்களுக்கு மிகவும் தெரிந்த நபர்களிடம் தானே உங்கள் மின்னஞ்சல் முகவரி இருக்கும். இதை வைத்தே குற்றவாளியைப் பிடிக்கலாம் தானே?
மாப்ள வந்திருக்கேன்... படிச்சுட்டு வரேன்..
ஆகா... பயனுள்ள தகவல்கள்...
நீங்கள் சொன்னவற்றை இப்போதே முயற்சிக்கிறேன்..
நான் கமென்ட் மாடுரேஷன் வெச்சிருந்தேன்.. சிலர் வேண்டாம் என்றவுடன் எடுத்துவிட்டேன்..மறுபடியும் வெச்சிகிடவா?
வெச்சுகுறது தான் நண்பா சேப்டி
சகோதரம், வணக்கம் நலமா? உங்களின் தொழில்நுட்ப ஆலோசனைகள் எம்மைப் போன்ற வலைப் பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு சின்னச் சந்தேகம். உங்களின் மின்னஞ்சல் முகவரி தெரிந்த நபர்களால் தானே உங்கள் தளத்தை ஹாக் பண்ண முடியும்? உங்களின் புறோபைலில் உங்கள் மெயில் ஐடி இல்லாத போது எப்படி இந்த பக்கியால் உங்கள் தளத்தை ஹாக் செய்ய முடியும்? உங்களுக்கு மிகவும் தெரிந்த நபர்களிடம் தானே உங்கள் மின்னஞ்சல் முகவரி இருக்கும். இதை வைத்தே குற்றவாளியைப் பிடிக்கலாம் தானே?//
அதே அதே...அதுவும் ஒரு க்ளூ தான் நான் சொல்ல மறந்துட்டேன்...நீங்க கரெக்டா புடிச்சிட்டீங்க நண்பா
தலைவன்ல சேர்ந்து ஓட்டு போட்டுட்டேன்..
வந்துட்டேன். வாசிச்சுட்டு வருகிறேன்.//
ஒ.கே
தலைவன்ல சேர்ந்து ஓட்டு போட்டுட்டேன்..//
நன்றி...கமென்ட் மாடரேஷன் வைத்துக் கொள்ளுங்க நண்பா..அது தான் சேப்டி
தலைவன்ல சேர்ந்து ஓட்டு போட்டுட்டேன்..//
நன்றி...கமென்ட் மாடரேஷன் வைத்துக் கொள்ளுங்க நண்பா..அது தான் சேப்டி
---- ok..ok..நண்பா...
யோசிக்காமல் தகுந்த தள பாதுகாப்பு முறைகளை செய்து கொள்ளுங்கள்.
அடேங்கப்பா.. இத்தனை விஷயம் இருக்கா?ம் ம்
பலருக்கு பயன்படும் உபயோகமான பதிவு. தேங்க்ஸ் நண்பரே!
நல்ல பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்
பிளாக்கை மீட்டதற்கு பாராட்டுக்கள்..
நல்ல பயனுள்ள பதிவு. அனுபவ ஆராய்ச்சி அற்புதம். மற்றவர்களுக்கு மிகவும் பயன்படும் .
விளக்க படங்கள் தெளிவாக தெரியவில்லை. இயன்றால் ....
வீட்டிலுள்ள பொருளத்தான்(பிளாக்கில் உள்ள பதிவுகள்) திருடிட்டிடுந்தாங்க, இப்ப வீட்டையே திருட ஆரம்பிச்சிட்டானுகளா......, என்னா வளர்ச்சி..
என்னயா போட்ட கமெண்ட்ட்ஸ காணோம், இது ஓபன் கிரவுண்ட் இல்லியா!!!!!!!!!!!
கலக்கிட்டீங்க பார்ட்னர்.......
பகிர்வுக்கு நன்றி நண்பா ஆனா எனக்கு Google sms வரல என்ன பண்றது தெரியல!
ரொம்ப பயனுள்ள தகவல்கள். அனைவருக்குமே பயன்படும். கமெண்ட் மாடரெஷ்சன் வச்சா மத்தவங்க அதை எடுத்துடுங்க கஷ்டமா இருக்குங்கராங்களே?
ரஹீம் கஸாலி - வருகைக்கு நன்றி
பாரதி - பாரதி நீங்கள் சொன்னதுக்கு பிறகு பட அளவை பெரிது படுத்திட்டேன்...நன்றி...
நன்றி சிவகுமார்
Jey - ஒப்பன் க்ரவுண்ட இப்போ தான் மூடினேன்...கொசு தொல்லைங்க அதிகமா ஆயிடுச்சு அதுனால தான் நண்பரே...எனக்கு டிஸ்டர்பன்ஸ் புடிக்காது..எல்லாமே டன்னா இருக்கணும்...
பன்னிக்குட்டி ராம்சாமி - நன்றி பார்ட்னர்...
விக்கி உலகம் - எஸ்.எம்.எஸ் கண்டிப்பா வரும் நண்பா..பி.எ நம்பரை கொடுக்காமல் சரியான நம்பரை கொடுக்கவும்...ஹி ஹி
Lakshmi - வருகைக்கு நன்றிங்க அம்மா...நன்றி...கமென்ட் மாடரேஷன் வைத்துக் கொள்ளுங்க அது தான் சேப்டி
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
Post a Comment