முஸ்கி:இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே! யாரையும் குறிப்பிடுவன அல்ல!
"ச்சே! இவ எல்லாம் ஒரு பொம்பளையா? அதை விட இவ ஒரு மனுஷியா முதல்ல? எப்படி இவளுங்களால மட்டும் இப்படி செய்ய முடியுது? இளிக்க இளிக்க பேசினாளே..அதெல்லாம் பொய்யா?நீ இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு கூட சொன்னாளே...அதென்னமோ தெரியல உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு டா என்றாளே?அதுவும் பொய்யா?"
இப்படி தனக்குளே புலம்பிக் கொண்டே சாலையை கவனிக்காமல் குறுக்கே நடந்த சதீஷின் பக்கவாட்டிலே திடீரென்று ப்ரேக் அடித்து நின்ற லாரி டிரைவரின் டெம்ப்ளேட் குரல் "டேய் ங்கோ.. வூட்ல சொல்லிட்டு வன்ட்டியா..நீ சாவறதுக்கு என் வண்டி தான் கெடைச்சுதா கஸ்மாலம்..பொறம்போக்கு..அடச்சீ நவுரு சாவுகிராக்கி" ஒலித்ததைக் கேட்டு நிஜ உலகத்துக்கு திரும்பியது.அப்போது தான் அவன் நடு ரோட்டில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். இருப்பினும் அவன் உடனே நகர எத்தனிக்க முடியாதவாறு அவளைப் பற்றிய எண்ணம் அவன் மனம் முழுதும் வியாபித்து இருந்தது.
லாரி டிரைவரின் அர்ச்சனையை கேட்டவுடன் அவனது நண்பனிடம் சதீஷ் அவளைக் காதலிப்பதாக முதலில் கூறியபோது, "என்னடா நீயும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா..ஓகே ஓகே என்னிக்காவது ஒரு நாள் பைத்தியம் புடிச்ச நிலையில் ரோட்டில நடக்கும் போது ப்ரேக் புடிக்காத லாரியில அடிபட போற பாரு" என்று அவனது நண்பன் கூறியது நினைவுக்கு வந்ததும் அவன் முகத்தில் ஒரு விரக்தி கலந்த புன்னகை.
இன்னும் நகராமல் எதைப் பற்றிய உணர்வும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த இவனைப் பார்த்த லாரி டிரைவர் கோபத்துடன் முறைத்தவாரே கீழே வந்து இவனை அடிக்க கை ஒங்க, "டேய் வாடா வா..அடிடா..சாவடி டா...நான் சாவுகிராக்கி தாண்டா... தைரியம் இருந்த என்னை சாவடி டா" என்று தனது சட்டை பட்டன்களை கழட்டி நெஞ்சு நிமிர்த்திய சதீஷை "சரியான லூசு டா..காலைலேயே நமக்குன்னு சிக்கிடரானுங்க" என்று அவனை தள்ளிவிட்டு லாரி டிரைவர் தன்னை அப்புறப் படுத்திக் கொண்டார்.
"இல்ல, நான் முட்டாளா?காதல் என் கண்ணை மறைச்சிடுச்சா? அப்படி அவக்கிட்ட எதைப் பார்த்து டா மயங்கின? கூடவே பழகிய நண்பர்களை எதிர்த்தாயே...அவளுக்காக உண்மையான நண்பர்களிடம் எரிந்து விழுந்தாயே..எவ்வளவோ சொல்லியும் அப்பன் ஆத்தாளிடம் முரண்டு பிடித்தாயே...எவ்ளோ திமிர்...எவ்ளோ ஆணவம்...உனக்கு இது தேவை தான்... இப்போ பாரு யாரு இருக்கா உனக்கு? பெத்தவங்க செத்துட்டா பொண்டாட்டி, குழந்தைன்னு வாழலாம்...கட்டின பொண்டாட்டியும் இப்படி ஒரு வருஷத்துக்கு முன்னாடியே வேறொருத்தன் கூட ஓடிப் போயிட்டான்னா என்ன மாதிரி ஆளுங்களோட கதி என்ன? வேறென்ன என் கதி தான்...எல்லாம் முடிஞ்சுடுச்சு...அதுவும் ரொம்ப சீக்கிரமாவே..."
கண்கள் கலங்க உதடுகள் சிரிக்க நடந்தபடியே சென்றவன் தன்னை மறந்து, இதையே நினைத்து நடக்கத் தொடங்கியவன் ஒரு நாள் ஓடியதை கூட உணரவில்லை. மெல்ல மெல்ல நடை தளர்ந்து, நா வறண்டு சாலையிலே மயங்கியபடியே சரிந்தான்...
"மகனே! எழுந்திரு, கண்விழிப்பாயாக" என்ற குரல், அவன் முகத்தில் பீய்ச்சப்பட்ட சில்லென்ற தண்ணீரை உணர்ந்தவுடன் கேட்டதைக் கண்டு விழித்து பார்க்கும் போது அவனது செல்போன், பணம் அனைத்தும் பறிபோனதை உணர்ந்தான். பொண்டாட்டியே போயிட்டா இது இருந்தா என்ன போனா என்ன?வெறும் பணம் தான..என்று முனகினான்.
பிறகு தான் இவனை எழுப்பியது வட இந்தியாவில் உள்ள ஒரு பிரபல சாமியார் என்பது அவனுக்கு தெரியவந்தது. இவனும் அவரைப் பற்றி பல நல்ல விஷயங்களை கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தான் அவரை முதன் முதலில் பார்க்கிறான்.
"என்ன ஆயிற்று? ஏன் இப்படி கிடக்கிறாய்?" என்று வினவிய சாமியிடம் தன் கதையை அழுதுக் கொண்டே கூறினான் சதீஷ்.
"எதுவுமே புடிக்கல சாமி. வேடிக்கையை பார்த்தீங்களா? அவளை காதலிக்கும் போது எனக்கு சாப்பிட புடிக்கல..இப்ப அவ என்னை விட்டு ஓடினதுக்கு அப்புறமும் சாப்பிட பிடிக்கல...சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு போல..நேரம் காலம் இரவு பகல் எல்லாம் எனக்கு ஒன்னாவே தெரியுது." என்றான்.
"கவலைப் படாதே மகனே. அவரவர் செய்த பாவத்துக்கு அவரவர் தண்டனையை அடைந்தே தீர வேண்டும். நீ ஆடிய ஆணவ ஆட்டத்தை உனக்கு உணர வைக்க இறைவன் இப்படி செய்து இருக்கலாம். என் மீது நம்பிக்கை இருந்தால் என்னுடன் வா.உன்னை சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு தேவை இப்போது மன அமைதி. அது இறைவனை பிரார்த்திப்பதன் மூலம் நீ அடைவாய்.மெல்ல மெல்ல இறைவனிடம் உன்னைக் கொண்டு சேர்ப்பாய்." என்றார்.
காலங்கள் உருண்டோடியது. சாமியின் மானசீக சிஷ்யனாக ஆகிவிட்டான் சதீஷ். இல்லை சாமியின் மானசீக சிஷ்யனாக ஆகிவிட்டார் ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்தம். ஆம் சதீஷ் என்ற பெயர் அவன் வாழ்ந்த சமூகத்தில் அழிக்கப் பட்டு ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. அவனுக்கு தெரிந்த நண்பர்கள் அனைவரும் பொண்டாட்டி ஓடிப் போனா துக்கத்துல பைத்தியமா சுத்திட்டு இருந்தவன் தற்கொலை செய்து கொண்டதாக பரப்பப்பட்ட வதந்தியை உண்மையாக்கினார்கள். காலப் போக்கில் அவனை மறந்தே போனார்கள்.
குருவிடம் நல்ல பேர் வாங்கியதோடு மட்டும் இல்லாமல் மக்களிடமும் நல்ல அபிப்ராயத்தை கொண்டிருந்தார் சச்சிதானந்தம். கணக்கு வழக்கிலும், சொந்த வாழ்விலும் அப்பழுக்கற்ற மனிதனாக வாழ்ந்த அவருக்கு வட இந்திய மக்களிடம் ஏகோபித்த பேரும் புகழும் நம்பிக்கையும் அதிகரித்து இருந்தது.
தான் முக்தியடைய போவதாக தனது குரு தன்னிடம் கூறியதை அடுத்து அவருக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தை நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப் பட்டது. உண்மையிலுமே அதற்கு தகுதியானவராக அவர் இருந்தார்.எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம். பல பேர் பிரச்சினைகளுக்கு ஆன்மீக வழியில் தீர்வு என்று ஒரு நடமாடும் தெய்வமாக மக்கள் முன் உருவாகிவிட்டார் சச்சிதானந்தர்.அப்போது தான் யாருமே எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.
ஆம் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு தனது 34 ஆவது வயதில் ஒரு ஆன்மீக கூட்டத்தில் ஒரு வடக்கிந்திய ஆணுடன் தன்னிடம் ஆசி வாங்க வந்த ஒரு பெண் தன்ன ஏமாற்றிவிட்டு ஓடிய அவரின் கடந்த கால மனைவி என்று அடையாளம் கண்டுகொண்டார்.
ஆனால் அவளால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. முகம் முழுதும் தாடி, நீண்ட தலை முடி என்று ஒரு சாமியாருக்கே உரிய அவரை எளிதில் கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை தான்.
இவ்வளவு நாளாக அடங்கியிருந்த சச்சிதானந்தரின் மனதில் உள்ள மிருகம் மீண்டும் ஆடத் தொடங்கியது. அவளைப் பார்த்த நாளிலிருந்தே அவரின் நிம்மதி பறிபோய் இருப்பதாய் அவர் உணர்ந்திருந்தார். அந்த வேளையில் தான் அதே பெண் அவரை காண வந்திருந்தாள்.
"குருஜி! நமோஷ்கார்!"
"வா குழந்தாய்! உட்கார்! உனக்கு என்ன பிரச்சினை? என் அழுகிறாய்?"
"குருஜி!அது வந்து..."
"தயங்காமல் கூறுவாய்! என்னிடம் வந்துவிட்டாய் உன் பாவங்கள் அனைத்தும் நீங்கும் நாள் நெருங்கிவிட்டது"
"ஆமாம் சாமி! கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன் நான் என் கணவருக்கு செய்த துரோகம் இப்போது என்னை வாட்டி வதைக்கிறது"
"என்ன பாவம் செய்தாய்?"
"நான் என் கணவரை ஏமாற்றிவிட்டு பணத்துக்காகவும், வசதியான வாழ்க்கை வாழ ஆசைப் பட்டு இவருடன் ஓடி வந்து விட்டேன். வந்த சில நாட்களுக்கு அப்புறம் தான் புரிந்தது .இப்போது உள்ள என் கணவரால் வசதி தான் செய்து தரமுடியும். சுகம் தர முடியாது என்பதை!ஊரில் அனைவரும் என்னை குழந்தை பாக்கியம் இல்லாதவள் என்று சொல்கிறார்கள்"
"கண் கலங்காதே! நீ செய்த பாவத்தின் பலனை அனுபவித்து விட்டாய்! நீ வரும் பவுர்ணமி அன்று உன் வீடு அருகில் உள்ள அம்மன் கோவில் கிணற்றில் குளித்துவிட்டு அந்த ஈரப் புடவை அணிந்து இங்கே வா! நல்லது நடக்கும்!"
"சரிங்க குருஜி! அப்படியே செய்கிறேன்!"
பவுர்ணமி பூஜை நடந்த மறுநாள் காலையில் இந்தியா முழுவதும் செய்தி சேனல்களில் "பிரபல சாமியார் பாலியல் வழக்கில் கைது" என்ற ப்ளாஷ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
தனது ஆசிரம பூஜை அறையில் உள்ள ஆளுயர சாமி படங்களில் தெரிந்த பிம்பத்தில்
கையில் விலங்குடன் உள்ளே நுழையும் போலீசாரை கண்ட அவர் மனதில் தனது குருஜி கூறிய "கவலைப் படாதே மகனே. அவரவர் செய்த பாவத்துக்கு அவரவர் தண்டனையை அடைந்தே தீர வேண்டும். நீ ஆடிய ஆணவ ஆட்டத்தை உனக்கு உணர வைக்க இறைவன் இப்படி செய்து இருக்கலாம். என் மீது நம்பிக்கை இருந்தால் என்னுடன் வா.உன்னை சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு தேவை இப்போது மன அமைதி. அது இறைவனை பிரார்த்திப்பதன் மூலம் நீ அடைவாய்.மெல்ல மெல்ல இறைவனிடம் உன்னைக் கொண்டு சேர்ப்பாய்!" வார்த்தை ஒலித்தது.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் "பிரபல சாமியார் தற்கொலை" என்று அனைத்து சேனல்களிலும் செய்திகள் மாறியது.
23 comments:
வடை..பிரசாதம்..ரஞ்சிதா எனக்கே!...படிச்சுட்டு வர்றேன்.
சோக்காக்கீது மச்சி..!
ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த சாமி மெய்யாலுமே கோச்சுக்கபோறார் மாமே!!
ஒரு குறுநாவலாக எழுதும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இக்கதையில் உள்ளது நண்பரே...அருமை!
அப்போது தான் அவன் நாடு ரோட்டில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். இருப்பினும் அவன் உடனே நகர எத்தனிக்க முடியாதவாறு அவளைப் பற்றிய எண்ணம் அவன் மனம் முழுதும் வியாபித்து இருந்தது.//
ஆஹா ஆரம்பமே அசத்தல்.
"என்னடா நீயும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா..ஓகே ஓகே என்னிக்காவது ஒரு நாள் பைத்தியம் புடிச்ச நிலையில் ரோட்டில நடக்கும் போது ப்ரேக் புடிக்காத லாரியில அடிபட போற பாரு" என்று அவனது நண்பன் கூறியது நினைவுக்கு வந்ததும் அவன் முகத்தில் ஒரு விரக்தி கலந்த புன்னகை//
மாப்பு......சகோ, டக்கால்டி, தமிழக மண் வாசனையை சென்னைத் தமிழை கதையில் கொண்டு வந்து, கலகலப்பூட்டியிருக்கிறீர்கள்.
"மகனே! எழுந்திரு, கண்விழிப்பாயாக" என்ற குரல், அவன் முகத்தில் பீய்ச்சப்பட்ட சில்லென்ற தண்ணீரை உணர்ந்தவுடன் கேட்டதைக் கண்டு விழித்து பார்க்கும் போது அவனது செல்போன், பணம் அனைத்தும் பறிபோனதை உணர்ந்தான். பொண்டாட்டியே போயிட்டா இது இருந்தா என்ன போனா என்ன?//
என்ன ஒரு தத்துவம்.
டக்கால்டி, இந்தக் கதையினை ஒரு வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியுள்ளீர்கள். அதிவும் கதையின் முதற் பாதியில் சாமியாராகும் சதீஷ் இரண்டாம் பாகத்தில் எதிர்பார்ப்பைப் கூட்டுகிறார். பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்கும் போது சாமியார் மனதில் காமத் தீப்பொறி......அஃதே அஃதே..
ரசித்தேன், சிரித்தேன், நகைச்சுவைகளைக் குறைத்து, ஆன்மிகத் தத்துவத்தினூடக இன்றைய இறையியலின் பெயரால் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
கதை கலக்கல்.
குரோதம்,எம்முள் ஒளிந்திருக்கும் மனிதர்களின் இயல்பான உருவம்!
வருகைக்கு நன்றி செங்கோவி, வசந்த் மற்றும் சகா
எங்கள் தானைத்தலைவர் நல்ல நேரம் சதீஷை அவமானப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கரேன்.. ஹா ஹா
எங்கள் தானைத்தலைவர் நல்ல நேரம் சதீஷை அவமானப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கரேன்.. ஹா ஹா//
இது வேறயா? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...
பத்த வெச்சுட்டியே பரட்டை
சாரிப்பா மாமியின் லீலைன்னு தவறா படிச்சிட்டேன் ஹிஹி!
எளிமையான தழிழ்,. அருமையான நடை... கதை சூப்பரு...
கதையின் கரு அருமை...
கதையின் கரு அருமை. நல்ல கதை.
கரு நல்ல ஒன்று. ஆனால் திடீர் என்று முடிந்து விட்டது போல தோன்றுகிறது.
அருமையானகதை!யதார்த்தம்!
எனக்கு என்னமோ ரெண்டு மூணு சம்பவங்கள் கலந்த கலவையாக இருக்கு இந்த கதை...
"பிரபல சாமியார் தற்கொலை".....................//////////
அப்போ அந்த படத்துல இருக்கிற சாமியும் தற்கொலை செய்வாரோ ?
சாலையை கவனிக்காமல் குறுக்கே நடந்த சதீஷின் பக்கவாட்டிலே திடீரென்று ப்ரேக் அடித்து நின்ற லாரி டிரைவரின் டெம்ப்ளேட் குரல் "//
யோவ் ரெண்டு பதிவுக்கு கமெண்ட் போடல..அதுக்காக இப்படியா பழிவாங்கிறது?
கதை நல்லாருக்கு
நித்தியானந்தா படம் சூப்பர் ரஞ்சிதா படம் கிடைக்கலையாக்கும்
இன்னமும் சாமியார்கள் அலை ஓயலியா?
/////"கவலைப் படாதே மகனே. அவரவர் செய்த பாவத்துக்கு அவரவர் தண்டனையை அடைந்தே தீர வேண்டும். நீ ஆடிய ஆணவ ஆட்டத்தை உனக்கு உணர வைக்க இறைவன் இப்படி செய்து இருக்கலாம்/////
அட அருமைங்க அனால் அதுக்கேன் நித்தியானந்த படம்... அவரு தான் கடவுளை விட மக்களை வென்றிட்டாரே..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
Post a Comment