மாங்கு மாங்கென்று மிதித்தும் சைக்கிள் மிகவும் மெதுவாக செல்வது போல ஓர் உணர்வு ஷ்யாமுக்கு. "இப்பவே பத்து நிமிஷம் லேட்டு! இனி நான் எக்ஸாம் ஹால் உள்ள நுழையறதுக்குள்ளே இருபது நிமிடம் லேட் ஆயிடுமே!எல்லாம் அவனால தான்..ச்சே!!" என்று எண்ணியவாறு சைக்கிள் பெடலை இன்னும் வேகமாக அழுத்தத் தொடங்கினான்.
வேர்த்து விறுவிறுக்க பள்ளியை அடைந்தபோது நேரம் சரியாக 2 :20. "எவன் தான் இந்த எக்சாம் எல்லாம் மதியானம் வைக்கலாம்ன்னு ஐடியா கொடுத்தானோ?அவன் மட்டும் என் கைல கெடைச்சான்...மவனே சாவடிச்சுடுவேன்." மனதிற்குள் முனுமுனுத்துக்கொண்டே சைக்கிளை ஸ்டாண்டில் போட்டுவிட்டு தேர்வு அறையை நோக்கி ஓடினான் ஷ்யாம்.
ஷ்யாமைப் பற்றி சொல்லவேண்டுமே ஆனால் அவன் படிக்கும் வகுப்பிலேயே அவன் தான் முதல் மாணவன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.கடைசி பெஞ்சில் அமர்வதால் அவன் படிக்காமல் கோட் அடிக்கும் ரகமும் கிடையாது. எப்போதும் நன்கு படிப்பான் ஆனால் அவனுக்கு கிடைப்பதோ நாலு அல்லது ஐந்தாம் ரேங்க் தான். தமிழ் பாடம் என்றால் ஷ்யாமுக்கு உயிர். தமிழிலில் மட்டும் எப்போதும் இவன் தான் முதல் மார்க். தமிழ் பாடத்தில் இவனை அடிச்சுக்க அந்த பள்ளியிலே ஆள் இல்லை என்ற அளவுக்கு இருந்தது.அவனது கையெழுத்தும் தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் அச்சு கோர்த்தது போல இருக்கும். அவன் தேர்வு எழுதும் முறையும் அருமையாக இருக்கும்.
எப்போதுமே நம்ம பள்ளி வாத்தியாருங்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கும். ஒருத்தன் மூணு நாலு தடவை முதல் ரேங்க் எடுத்து அவங்க சொல்றதை அமைதியா கேட்டுட்டு எதிர்த்து பேசாம இருந்தாலே போதும், காலத்துக்கும் அந்த மாணவன் தான் முதல் ரேங்க் எடுப்பான்.
ஷ்யாம் நன்றாக படிப்பவன் என்றாலும் வாத்தியார்களுக்கு கூழை கும்பிடு போட மாட்டான். ட்யூஷனுக்கு போகும் அளவு வீட்டுல வசதியும் இல்லை. அதனால வாத்தியாருங்களுக்கும் அவனுக்கும் பெரிய பனிப்போரும் கிடையாது, நல்ல பேரும் கிடையாது.
ஒருமுறை இப்படி தான் தமிழ் அய்யா பாடம் நடத்திட்டு இருக்கும் போது, "அமைச்சர் தம்பிதுரை 22 கோடி ரூபாய் ஊழல் பண்ணிட்டாராம். யாருக்குமே இன்னும் தெரியாது.நாடு நாசமா போயிட்டு இருக்கு..." என்றார்.வகுப்பே அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க இவன் மட்டும் எழுந்து, "அய்யா எனக்கு ஒரு சந்தேகம். யாருக்குமே அவரு ஊழல் பண்ணது தெரிலைனா உங்களுக்கு மட்டும் எப்படிங்க அய்யா தெரிஞ்சது?" என்று அவன் கேட்ட கேள்விக்கு வகுப்பே சிரிக்க, தமிழ் அய்யாவோ 'வேதம் புதிது' பாலுத் தேவர் கணக்காக தனது கன்னத்தை திருப்பிக் கொண்டது வேறு விஷயம். இது போல இன்னும் பல குதர்க்கமான கேள்விகள் கேட்டு தன் குறும்புத் தனத்தையும், அதிமேதாவித் தனத்தையும் காண்பிக்க துடிக்கும் மாணவன் தான் ஷ்யாம்.
இருபது நிமிடம் தாமதமாக தேர்வு அறை உள்ளே நுழைந்த ஷ்யாம் அனைத்து மாணவர்களும் வேகவேகமாக மனப்பாடம் செய்ததை எழுத்துக்களாக்கி கொண்டிருப்பதை பார்த்தான்.அவனுக்கு பிடித்த தமிழ்த் தேர்வு வேறு. தமிழ் இரண்டாம் தாள் தேர்வு அது. கட்டுரை அது இது என்று நிறைய கதை எழுத வேண்டிய அவசியம் இருக்கும். நம்மாளோ இருபது நிமிடம் லேட்டு. பேந்த பேந்த முழித்துக் கொண்டு வாசலில் நின்றான்.
அறை உள்ளே இருந்து இவனைப் பார்த்த ஆசிரியர், "வாங்க சார். இப்போ தான் எக்சாமுக்கு வர டைம்மா? எங்க போயி ஊரு சுத்திட்டு நிதானமா வரீங்க...உனக்கு எல்லாம் திமிரு டா..தமிழ் பேப்பர் தான எப்படியும் இஞ்சினியரிங் அல்லது மெடிக்கல் என்ட்ரன்ஸ்சுக்கு தேவைப்படாது. அதானே..போ போ போயி உள்ள உக்காந்து என்னத்தையோ எழுதி தொலை.அட்லீஸ்ட் பாஸ் பண்ற வழிய பாரு.அப்போ தான் ஆர்ட்ஸ் காலேஜ்ல கூட சேர முடியும்." என்றார்.
"இந்தாளு வேற இருக்கிற பிரச்சினைல இன்னும் கடுப்பேத்திக்கிட்டு...எக்ஸாம் முடியட்டும்.அவனுக்கு இருக்கு.எல்லாம் அவனால தான்.ச்சே! " மனசுக்குள்ளே பேசிக்கொண்டபடி அவரிடமிருந்து வினாத்தாள் வாங்கிக் கொண்டு தன் இருக்கையை நோக்கி சென்றான்.
இவன் வருகையை எதிர்பார்த்து இவனை சுற்றி அமரும் நான்கு பேர் காத்துக்கொண்டிருந்தார்கள்.எப்போதும் இவன் எழுதுவதில் பாதியாவது அவர்களும் எழுதி விடுவார்கள்.அப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அவர்களுக்குள். எப்படி விடைகளைக் கொண்ட கேள்வித் தாள் கைமாறும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
தேர்வு நேரம் முடிந்தது.இரண்டாம் வார்னிங் பெல்லும் அடிக்கப் பட்டது.இவன் மட்டும் அதிவேகமாக, பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்க, அந்த அறை கண்காணித்த ஆசிரியர், "போதும் டா..நூலைக் கட்டு..பேப்பரை கொடு." என்றார்.
"சார் சார்...இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு சார்..இருங்க சார்...முடிஞ்சா அளவுக்கு எழுதிடுறேன்.ப்ளீஸ் சர் வெய்ட் பண்ணுங்க" என்றான்.
"இவ்ளோ அறிவிருக்குறவன் சீக்கிரமா வந்திருக்கணும் பா...லேட்டா வந்துட்டு கடைசி வரைக்கும் எழுதினா முழுசா எழுதிட முடியுமா? என்ன எழுதினாலும் கழுத தேற போறது இல்ல.அப்புறம் எதுக்கு டா இப்படி கஷ்டப்படுற..என்னையும் கஷ்டப்படுத்துற...பேப்பரை கொடு டா" வெடுக்கென்று பேப்பரை அவனிடமிருந்து புடுங்கிக் கொண்டார்.
வாத்தியாரை முறைத்துக் கொண்டே சலிப்புடன் வெளியே வந்த ஷ்யாமிடம் அவனது நண்பர்கள்,
"ஏண்டா லேட்டு? என்ன டா சோகமா இருக்க?"
"இல்ல டா! ஒழுங்காவே எழுதல. ரெண்டு பத்து மார்க்கு கேள்வி எழுதல. அதுக்குள்ள டைம் முடிஞ்சுடிச்சி...இந்த வாத்தியாரு வேற பேப்பரை புடுங்கிட்டான்."
"அட விடுறா...முன்னாடியே வந்து நாங்களும் தான் உக்காந்துட்டு இருந்தோம்..ஒண்ணுமே எழுத முடியலை...பதில் தெரியலை.நீ வந்ததுக்கு அப்புறம் அறை மணி நேரம் கழிச்சு தான் நான் எழுதவே ஆரம்பிச்சேன். எனக்கு நூறு மார்க்கு தான் வரும். நானெல்லாம் சந்தோஷமா இல்ல.."
"அது இல்லைடா...தமிழ் எனக்கு ரொம்ப புடிச்ச சப்ஜெக்டு. எப்படியும் அட்லீஸ்ட் டிஸ்ட்ரிக்ட்ல முதலா வந்துடனும்ன்னு நெனச்சேன்...இப்போ அது முடியாது...ச்சே"
"ஏன்டா லேட்டு? பஸ்ஸை விட்டுட்டியா?"
"டேய்..அவன் இப்ப சைக்கிள்ல வரான் டா"
"ஒஹ் அப்போ சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சா?"
"இல்ல டா..எல்லாம் அவனால தாண்டா..."
"யாரு டா?"
"அவன் தாண்டா நம்ம நரேஷ் இருக்கான்ல..ஸ்டடி லீவ்ல படிக்கும் போது, மதியானம் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற "ஸ்ரீ பவன்" ஹோட்டலுக்கு போயி அன்லிமிட்டட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டுவோம். ருசி நாக்குல ஒட்டிகிச்சு.அதான் இன்னிக்கும் நான் மெய் மறந்து சாப்பிட்டுட்டே எக்ஸாம் வர மறந்துட்டேன். எல்லாம் அவனால தாண்டா..."
"அடப் பாவி...நீ எல்லாம் மனுஷனாடா? ஒருவார்த்தை என்கிட்டே சொன்னியா டா? சொல்லி இருந்தா நானும் இன்னிக்கு உன்கூட சாப்பிட வந்திருப்பேன்ல...துரோகி.." என்ற நண்பனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றான் ஷ்யாம்.
"ஏண்டா லேட்டு? என்ன டா சோகமா இருக்க?"
"இல்ல டா! ஒழுங்காவே எழுதல. ரெண்டு பத்து மார்க்கு கேள்வி எழுதல. அதுக்குள்ள டைம் முடிஞ்சுடிச்சி...இந்த வாத்தியாரு வேற பேப்பரை புடுங்கிட்டான்."
"அட விடுறா...முன்னாடியே வந்து நாங்களும் தான் உக்காந்துட்டு இருந்தோம்..ஒண்ணுமே எழுத முடியலை...பதில் தெரியலை.நீ வந்ததுக்கு அப்புறம் அறை மணி நேரம் கழிச்சு தான் நான் எழுதவே ஆரம்பிச்சேன். எனக்கு நூறு மார்க்கு தான் வரும். நானெல்லாம் சந்தோஷமா இல்ல.."
"அது இல்லைடா...தமிழ் எனக்கு ரொம்ப புடிச்ச சப்ஜெக்டு. எப்படியும் அட்லீஸ்ட் டிஸ்ட்ரிக்ட்ல முதலா வந்துடனும்ன்னு நெனச்சேன்...இப்போ அது முடியாது...ச்சே"
"ஏன்டா லேட்டு? பஸ்ஸை விட்டுட்டியா?"
"டேய்..அவன் இப்ப சைக்கிள்ல வரான் டா"
"ஒஹ் அப்போ சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சா?"
"இல்ல டா..எல்லாம் அவனால தாண்டா..."
"யாரு டா?"
"அவன் தாண்டா நம்ம நரேஷ் இருக்கான்ல..ஸ்டடி லீவ்ல படிக்கும் போது, மதியானம் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற "ஸ்ரீ பவன்" ஹோட்டலுக்கு போயி அன்லிமிட்டட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டுவோம். ருசி நாக்குல ஒட்டிகிச்சு.அதான் இன்னிக்கும் நான் மெய் மறந்து சாப்பிட்டுட்டே எக்ஸாம் வர மறந்துட்டேன். எல்லாம் அவனால தாண்டா..."
"அடப் பாவி...நீ எல்லாம் மனுஷனாடா? ஒருவார்த்தை என்கிட்டே சொன்னியா டா? சொல்லி இருந்தா நானும் இன்னிக்கு உன்கூட சாப்பிட வந்திருப்பேன்ல...துரோகி.." என்ற நண்பனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றான் ஷ்யாம்.
39 comments:
இது சொந்தக் கதை தானே..இப்பவும் ஃபுல்மீல்ஸ் தானா?
முதல் கமெண்ட் நானா? அப்போ வடை + ஃபுல் மீல்ஸ் எனக்கா?
தமிழ்மணத்தைக் காணோமே...நல்ல கதையை ஊக்குவிப்போம்னா முடியலியே..
கதைல வர்ற ஷ்யாம் கேரக்டர் நிஜ வாழ்வில் நான் கண்ட பல கேரக்டர்களின் கோர்வை...
மத்தபடி நாம என்னைக்குமே புல் மீல்ஸ் பார்ட்டி தான்..ஹி ஹி
தமிழ்மணத்துல இன்னும் அக்கவுண்டே ஒப்பன் பண்ணலீங்க தல...ஹி ஹி...இந்த நாலே போதும்ன்னு விட்டுட்டேன்...
வடை, பாயசம் என அனைத்தும் உங்களுக்கே...
இப்போ தான் உங்க கடைக்கு வந்தேன்...உங்க கடைல புதுசா எதையும் இன்னிக்கு காணோம்...
அண்ணே கதை சுப்பர் ரொம்ப நல்ல இருக்கு
//அதனால வாத்தியாருங்களுக்கும் அவனுக்கும் பெரிய பனிப்போரும் கிடையாது, நல்ல பேரும் கிடையாது. //
எனக்குப்பிடித்த வரிகள்.
வேர்த்து விறுவிறுக்க பள்ளியை அடைந்தபோது நேரம் சரியாக 2 :20. "எவன் தான் இந்த எக்சாம் எல்லாம் மதியானம் வைக்கலாம்ன்னு ஐடியா கொடுத்தானோ?அவன் மட்டும் என் கைல கெடைச்சான்...மவனே சாவடிச்சுடுவேன்." மனதிற்குள் முனுமுனுத்துக்கொண்டே சைக்கிளை ஸ்டாண்டில் போட்டுவிட்டு தேர்வு அறையை நோக்கி ஓடினான் ஷ்யாம்.//
வணக்கம் சகோ, ஷியாமிற்கு டக்கால்டி என்றொரு மறு பெயரும் இருப்பதாக கேள்வி. உண்மையா?
கதையின் ஆரம்பத்தை மென்மையாக நகர்த்துகிறீர்கள்.
எப்போதுமே நம்ம பள்ளி வாத்தியாருங்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கும். ஒருத்தன் மூணு நாலு தடவை முதல் ரேங்க் எடுத்து அவங்க சொல்றதை அமைதியா கேட்டுட்டு எதிர்த்து பேசாம இருந்தாலே போதும், காலத்துக்கும் அந்த மாணவன் தான் முதல் ரேங்க் எடுப்பான்.//
இந்த வாத்தியார்களின் யதார்த்தத்தை நன்றாக உணர்ந்திருக்கிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமார் மற்றும் Mahan.Thamesh
இவன் வருகையை எதிர்பார்த்து இவனை சுற்றி அமரும் நான்கு பேர் காத்துக்கொண்டிருந்தார்கள்.எப்போதும் இவன் எழுதுவதில் பாதியாவது அவர்களும் எழுதி விடுவார்கள்.அப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அவர்களுக்குள். எப்படி விடைகளைக் கொண்ட கேள்வித் தாள் கைமாறும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.//
ஈயடிச்சான் கொப்பி சுற்று வட்டத்தையும் கதையிலை கடிக்கிறீங்க, என்ன பெரிய மனசு உங்களுக்கு:))
வாங்க சகா...ஷ்யாம் உள்ளே டக்கால்டியும் கொஞ்சம் இருக்கிறான். ஆனால் டக்கால்டி மட்டுமே இல்லை...இன்னும் சில மனிதர்களின் குணாதிசயங்களும் இருக்கிறது
நான் தானே கூகுள் டோக்கிலை அட் பண்ணினேன். ஏன் என் Request ஐ அக்செப்ட் பண்ணலை? do not release this comment bro. this is only for you.
நான் தானே கூகுள் டோக்கிலை அட் பண்ணினேன். ஏன் என் Request ஐ அக்செப்ட் பண்ணலை?//
அப்படியா...தாமதத்துக்கு மன்னிக்கவும்..இப்பவே ஆட் பண்ணிவிடுகிறேன்
do not release this comment bro. this is only for you.//
நம்ம தளத்துல திட்டுனா கூட வெளியிடப்படும் சகா...
ஒருமுறை இப்படி தான் தமிழ் அய்யா பாடம் நடத்திட்டு இருக்கும் போது, "அமைச்சர் தம்பிதுரை 22 கோடி ரூபாய் ஊழல் பண்ணிட்டாராம். யாருக்குமே இன்னும் தெரியாது.நாடு நாசமா போயிட்டு இருக்கு..." என்றார்.வகுப்பே அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க இவன் மட்டும் எழுந்து, "அய்யா எனக்கு ஒரு சந்தேகம். யாருக்குமே அவரு ஊழல் பண்ணது தெரிலைனா உங்களுக்கு மட்டும் எப்படிங்க அய்யா தெரிஞ்சது?"//
ஒரு சில மாணவர்கள் ஆசிரியருக்கே பாடம் எடுத்து விடுவார்கள். அட ஆசிரியருக்கும் ஊழலிலை பங்கிருக்குதோ,
சகா உங்கள் ரிக்வேச்ட்டை அக்செப்ட் பண்ணிட்டேன்...மகிழ்ச்சியா...
நான் எனது மெயில் பாக்சை ஒப்பன் செய்யவே இல்லை...அதனால் தான் உடனடியாக அக்செப்ட் செய்யவில்லை...
"அட விடுறா...முன்னாடியே வந்து நாங்களும் தான் உக்காந்துட்டு இருந்தோம்..ஒண்ணுமே எழுத முடியலை...பதில் தெரியலை.நீ வந்ததுக்கு அப்புறம் அறை மணி நேரம் கழிச்சு தான் நான் எழுதவே ஆரம்பிச்சேன். எனக்கு நூறு மார்க்கு தான் வரும். நானெல்லாம் சந்தோஷமா இல்ல.."//
கேள்விக்கு விடை சொல்லிக் கொடுக்கிறவனை விட எப்போதுமே பார்த்தடிக்கிறவன் தான் முன்னுக்கு வந்திருக்கிறான். உதாராணமாக பல வருடங்களுக்கு முன்னர், ஆங்கிலப் பாடப் பரீட்சையின் போது எனக்குத் தெரிந்த ஒரு சில விடைகளை வைத்துக் மற்ற நண்பர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் என்னிடம் கேட்டு முழித்து, ,முழிந்த்து எழுதினவங்களுக்குத் தான் நிறைய மார்க்ஸ் வந்திச்சு. நமக்கெல்லாம் அவங்களை விட கம்மியாத் தான் வந்திச்சு. பார்த்தெழுதினாலும் நம்மாளுங்க அப்பிடியே எழுத மாட்டாங்க,
விடை சரியா என்று புறூப் பண்ணித் தான் எழுதுவாங்க.
பார்த்தெழுதினாலும் நம்மாளுங்க அப்பிடியே எழுத மாட்டாங்க,
விடை சரியா என்று புறூப் பண்ணித் தான் எழுதுவாங்க.//
மிகச் சரி
"அவன் தாண்டா நம்ம நரேஷ் இருக்கான்ல..ஸ்டடி லீவ்ல படிக்கும் போது, மதியானம் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற "ஸ்ரீ பவன்" ஹோட்டலுக்கு போயி அன்லிமிட்டட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டுவோம். ருசி நாக்குல ஒட்டிகிச்சு.அதான் இன்னிக்கும் நான் மெய் மறந்து சாப்பிட்டுட்டே எக்ஸாம் வர மறந்துட்டேன். எல்லாம் அவனால தாண்டா..."
"அடப் பாவி...நீ எல்லாம் மனுஷனாடா? ஒருவார்த்தை என்கிட்டே சொன்னியா டா? சொல்லி இருந்தா நானும் இன்னிக்கு உன்கூட சாப்பிட வந்திருப்பேன்ல...துரோகி.." என்ற நண்பனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விக்கித்து நின்றான் ஷ்யாம்.//
ஒரு சிறுகதைக்குரிய அத்தனை அம்சங்களும் இக் கதையில் தெட்டத் தெளிவாகத் தெரிந்தாலும், நம்ம சகோதரம் கடைசியிலை ஒரு எதிர்பாராத முடிவைக் கதைக்கு வழங்கி கதையின் போக்கை கவிழ்த்து விட்டார்.
மிகுந்த எதிர்பார்ப்போடும், சஸ்பென்ஸோடும் எழுதப்பட்ட கதையெனும் நம்பிக்கையில் படித்து வரும் போது, இறுதிப் பகுதியில்,
கதையின் முடிவு உணவினைச் சாப்பிடுகையில் மெய் மறந்து எக்ஸாமைத் தவற விட்ட ஷியாமின் நிகழ்வால் திசை மாறி விடுகிறது. சுவையான உணவிற்காக எக்ஸாமைத் தவற விட்ட கதாநாயகனாக ஷியாமை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதையில் நகைச்சுவை உணர்வு அதிகமாக இல்லாது, எழுதப்பட்டாலும் இறுதிப் பகுதி மீது கொஞ்சம் கரிசனை செலுத்தியிருப்பின் கதை இன்னமும் நன்றாக வந்திருக்கும்.
வாழ்த்துக்கள் டக்கால்டி.
ஷியாம் எனும் கதா பாத்திரம் வாயிலாக, தன் சொந்தக் கதையை, சோகக் கதையாக வெளியிட்ட அண்ணன் டக்கால்டி வாழ்க!..........டக்கால்டி வாழ்க!
கதையின் முடிவு உணவினைச் சாப்பிடுகையில் மெய் மறந்து எக்ஸாமைத் தவற விட்ட ஷியாமின் நிகழ்வால் திசை மாறி விடுகிறது. சுவையான உணவிற்காக எக்ஸாமைத் தவற விட்ட கதாநாயகனாக ஷியாமை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கதையில் நகைச்சுவை உணர்வு அதிகமாக இல்லாது, எழுதப்பட்டாலும் இறுதிப் பகுதி மீது கொஞ்சம் கரிசனை செலுத்தியிருப்பின் கதை இன்னமும் நன்றாக வந்திருக்கும். //
கருத்துக்களுக்கு நன்றி..அடுத்த கதையாவது உருப்படியா எழுதுறேன் சகா..ஹி ஹி
சகோதரம், டக்கால்டி என்பதன் விளக்கம் அல்லது அர்த்தம் என்ன?
ஷியாம் எனும் கதா பாத்திரம் வாயிலாக, தன் சொந்தக் கதையை, சோகக் கதையாக வெளியிட்ட அண்ணன் டக்கால்டி வாழ்க!..........டக்கால்டி வாழ்க!//
சொந்தக் கதை தான் ஆனா என்னுடையது மட்டும் இல்லீங்கோ
வாழ்க கோஷம் வேணாமுங்கோ...கூச்சமா இருக்கு..பயமாவும் இருக்கு...எப்ப கவுத்துடுவீங்களோன்னு...
உங்களின் கதையினூடாக எங்களின் கடந்த காலங்களை, பாடசாலை நாட்களை மீட்டிப் பார்த்த மகிழ்ச்சி.
சகோதரம், டக்கால்டி என்பதன் விளக்கம் அல்லது அர்த்தம் என்ன?//
டக்கால்டி தெரியாதா?
என்ன பாஸ் நீங்க...அப்போ உங்களுக்கு தமிழ் தெரியலைன்னு அர்த்தம்...
டக்கால்டின்னா உதார்
உதாருன்னா கப்சா
கப்சான்னா டகிலு
டகிளுன்னா கீசூது
கீசூதுன்னா பொய்...
இப்ப சொல்லுங்க டக்கால்டின்னா என்ன?
உங்களின் கதையினூடாக எங்களின் கடந்த காலங்களை, பாடசாலை நாட்களை மீட்டிப் பார்த்த மகிழ்ச்சி.//
எனக்கும் மகிழ்ச்சியே...
நாமெல்லாம் ஏத்தி விட்டிட்டு கழிக்கிற ஆட்களில்லைங்கோ.//
தெரியும் பாஸ்...சும்மா தமாசுக்கு சொன்னேன்...ஆனா கோஷம் வேணாமுங்க..ஐ ஆம் பாவம்
Delete Comment From: டக்கால்டி
நிரூபன் said...
டக்கால்டி
March 23, 2011 6:55 PM
ஷியாம் எனும் கதா பாத்திரம் வாயிலாக, தன் சொந்தக் கதையை, சோகக் கதையாக வெளியிட்ட அண்ணன் டக்கால்டி வாழ்க!..........டக்கால்டி வாழ்க!//
சொந்தக் கதை தான் ஆனா என்னுடையது மட்டும் இல்லீங்கோ
வாழ்க கோஷம் வேணாமுங்கோ...கூச்சமா இருக்கு..பயமாவும் இருக்கு...எப்ப கவுத்துடுவீங்களோன்னு...//
நாமெல்லாம் ஏத்தி விட்டிட்டு, கவுத்து விடுற ஆட்களில்லைங்கோ.
டக்கால்டி
March 23, 2011 6:57 PM
சகோதரம், டக்கால்டி என்பதன் விளக்கம் அல்லது அர்த்தம் என்ன?//
டக்கால்டி தெரியாதா?
என்ன பாஸ் நீங்க...அப்போ உங்களுக்கு தமிழ் தெரியலைன்னு அர்த்தம்...
டக்கால்டின்னா உதார்
உதாருன்னா கப்சா
கப்சான்னா டகிலு
டகிளுன்னா கீசூது
கீசூதுன்னா பொய்...
இப்ப சொல்லுங்க டக்கால்டின்னா என்ன//
டக்கால்டின்னா,
பம்மாத்து, றீலு, சுத்துமாத்து... அதே அதே........
டக்கால்டின்னா,
பம்மாத்து, றீலு, சுத்துமாத்து... அதே அதே........//
அதே அதே
மாப்ள வெறும் புல் மீல்ஸ் மட்டும்தானா!
ஆமா மாப்ள..'புல்' மீல்சு..ஹி ஹி
எல்லாரும் சாப்பாட்டு ராமன்கள்.
கடை அட்ரஸ் சொல்லுங்க எனக்கும் நாலு எக்ஸாம் இருக்கு.
பரீட்சை நேரத்துலகூட சாப்பாட்டு நினைவுதானா? அப்பரம் பாஸா, பெயிலா?
ஹேய் ரெண்டு ஒட்டகம் பிரியாணி பார்சல்.....
நல்லா கதை விடறீரே.. ஹா ஹா
வருகைக்கு நன்றி பலே பிரபு, லக்ஷ்மி அம்மா, சிபி, தமிழ் உதயம்,மனோ
அடப் பாவி...நீ எல்லாம் மனுஷனாடா? ஒருவார்த்தை என்கிட்டே சொன்னியா டா? சொல்லி இருந்தா நானும் இன்னிக்கு உன்கூட சாப்பிட வந்திருப்பேன்ல...துரோகி.."
இதுல ஹீரோ வே .......அவன் ப்ரெண்ட்ஸ் தான் மச்சி .......
எடுத்துக்காட்டு மு ப நாக் ஜாக் யுனிவர்சிட்டி
Post a Comment