டாஸ்மாக்கில் சரக்கை
ஊற்றிக் கொடுத்தபின்
கொடுத்த கடனை
கேட்டேன் என் நண்பனிடம்
காலைல வாங்கிக்கோடா
என்கிறான்...
குடிகாரன் பேச்சு!
இன்னைக்கு ரொம்ப
ஸ்மார்ட்டா இருக்கீங்க போங்க...
போத்தீஸ் புடவை கடையில்,
ஏங்க இந்த பட்டுபுடவை
எனக்கு நல்லாருக்குமில்ல?
என்னிடம் என் மனைவி...
எனக்குன்னு இந்த வீட்ல
என்ன பொழுதுபோக்கு இருக்கு?
இந்த மனுஷனை கட்டிகிட்டதிலிருந்து..
வந்ததும் சரியில்ல வாய்ச்சதும் சரியில்ல
அரைமணி நேர சீரியல் பார்க்கவிடாத
மகனிடம் அம்மா...
தல உங்க எழுத்து சூப்பரு!
பின்னீட்டீங்க...பிச்சிட்டீங்க...
அருமை...
வழக்கம் போல கலக்கல்...
பின்னூட்டம் திரும்பப் பெற
பெரும் முயற்சியில்
பதிவர்கள்...
யார் தான் என்போல்
ஏமாந்த சோணகிரி?
பாடலை பார்த்துட்டீங்களா? அதை அப்படியே பதிவுலகத்துக்கு ஏற்ற மாதிரி மாத்தி நீங்களே பாடிக்கோங்க...
"கிட்டுமணி போல ஒரு மக்குமணி யாருமில்லை" அது அப்போ. இப்போ டக்கால்டி போல ஒரு மக்குமணி யாருமில்லை...
மீண்டும் பினாத்த வருவேன். பொறுமையுடன் படித்து பார்த்த அனைவருக்கும் நன்றி...
19 comments:
நகைச்சுவையான கவிதை! ரசித்தேன்!
he he he....super
ஏய்... வார்த்தை விளையாடியிருக்கப்பா...
பாடலா...நான் கூட கவிதையோன்னு பயந்துட்டேன்!
உங்கள பார்த்தா ஏமாந்த சோணகிரி மாதிரி தெரியலயே.
புடவைக்கடை பக்கம் போனதே தப்பு.. வெளிய நின்னு காச மட்டும் குடுத்து உள்ள அனுப்பிச்சு இருக்கணும்..
ஏமாந்த சோணகிரி நீங்க தான்... டவுட்டே இல்லை..
கழுதைக்கு வாக்கபட்டா உதைக்கு அஞ்சினால் முடியுமா .......
டகால்டி பக்கம் வந்தால் சும்மா போக முடியுமா??
>>தல உங்க எழுத்து சூப்பரு!
பின்னீட்டீங்க...பிச்சிட்டீங்க...
அருமை...
வழக்கம் போல கலக்கல்...
பின்னூட்டம் திரும்பப் பெற
பெரும் முயற்சியில்
பதிவர்கள்...
என்னைத்தானே நக்கல் அடிச்சீங்க?
>>யார் தான் என்போல் ஏமாந்த சோணகிரி?
யாம் (யாமும் கூட ) இருக்க பயம் ஏன்?
வருகைக்கு நன்றி எல்.கே,மாணவன், கருண், செங்கோவி, தமிழ் உதயம்,சமக்கொடாங்கி, மாணிக்கம்,இறுதியாக பதிவுலக சூப்பர் ஸ்டார் சிபி...
என்னைத்தானே நக்கல் அடிச்சீங்க?//
அப்படி எல்லாம் இல்லீங்கோ
கழுதைக்கு வாக்கபட்டா உதைக்கு அஞ்சினால் முடியுமா .......
டகால்டி பக்கம் வந்தால் சும்மா போக முடியுமா?//
இதுக்கு ஸ்ட்ரைட்டா டக்கால்டி ஒரு கழுதைன்னு சொல்ல்லிருக்கலாம் பாஸ்...
புடவைக்கடை பக்கம் போனதே தப்பு.. வெளிய நின்னு காச மட்டும் குடுத்து உள்ள அனுப்பிச்சு இருக்கணும்..
ஏமாந்த சோணகிரி நீங்க தான்... டவுட்டே இல்லை..//
என்ன சார் பண்றது பொடவை விக்குற பொண்ணை பார்த்து சபலத்துல உள்ள போயி மாட்டிக்கிற கோஷ்டியை சேர்ந்தவன் நான்...
உங்கள பார்த்தா ஏமாந்த சோணகிரி மாதிரி தெரியலயே//
எப்படித் தான் கண்டுபிடிக்கறாங்களோ?
ஏய்... வார்த்தை விளையாடியிருக்கப்பா..//
அது கபடியா கில்லியாங்கண்ணா?
சபாஷ் டா ,....................
ஏமாந்த சோணகிரி ஏமாறச் சொன்னது நானோ
கம்பன் ஏமாந்தான் என்று கமல் சொல்லியிருக்கிறார்...கம்பனே ஏமாந்தால் நாமெல்லாம் ஏமாந்தால் தப்பில்லை...இப்படிக்கு இன்னொரு சோணகிரி
வணக்கம் நண்பர்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
FOOD
March 7, 2011 8:38 AM
ஏங்க இந்த பட்டுபுடவை
எனக்கு நல்லாருக்குமில்ல?
என்னிடம் என் மனைவி...//
கேட்டது மனைவியல்லவா?-பணம்
கொடுப்பது உங்கள் கடமையல்லவா?// nanbarey eppadi erukeenga...
Post a Comment