Mar 26, 2011

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியுமா...?



இது நம்ம பன்னீஸ் போட்ட லேட்டஸ்ட் இடுகைக்கு எதிர் இடுகை...
ஏன்னா நாங்களும் ரவுடிங்க தான்...எங்களுதும் பரட்டை தான் நாங்களும் கலைச்சுக்குவோம்...அப்புறம் வாரிக்குவோம் அப்படின்னு அவருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுறதுக்கே இந்த இடுகை...




எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் பன்னீஸ் சொல்ற மாதிரி டாகுடர் ஸ்ரீநிவாசன் இல்லை...அந்த பட்டத்தை தட்டி செல்லவோ அல்லது அவருக்கு நிகராக போட்டி போடவோ இன்னொரு சூப்பர் ஸ்டார் இருக்காருன்னு சொல்ல விரும்பிக்கொள்கிறேன்...

யோவ் பார்ட்னர்...நீ எம்.ஜி ஆர் னா நான் நேரு...நீ பிரதம மந்திரினா நான் ஒபாமா...எப்பூடி?ஹி ஹி...இப்போது பன்னீஸ் இடுகைல இருந்த அதே வரிகள்...ஆனால் சூப்பர் ஸ்டார் அவரு இல்ல...

அடுத்த முதல்வர் யார் என்று பதிவுலகம் முழுதும் தேர்தல் ஜன்னி கண்டு இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம். தேர்தல் நேரத்தில் இது அவசியமா என்று எதிரிகள் சிலர் கேட்கலாம். நமது சூப்பர் ஸ்டார்களுக்கே முதல்வர்களாகும் தகுதி இருப்பதனாலும், நாம் காலம் காலமாய் எதிர்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ஒருவர் தமிழ்த்திரை வானில் இப்போது அவதரித்து இருப்பதாலும், தேர்தல் பரபரப்பில் அவர் யார் என்று நம் பதிவர்களுக்குத் தெரியாமலே போய் விடக் கூடிய அபாயம் இருப்பதாலும்தான் அவசர அவசரமாக இப்படி ஒரு பதிவு.

தமிழ்நாட்டில் எப்போதும் ஒரு சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினி என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பது தமிழகத்தின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அடுத்த தலைமுறை நடிகர்கள் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீர்மானிக்க முடியாத நிலை தொடர்வது சினிமா ரசிகர்களுக்கு தீராத கவலையாக இருந்து வருகிறது.

இன்னிலை தொடர்வது சினிமாவுக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. மேலும் சிபி போன்ற சினிமா விமர்சகர்களுக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று அடையாளம் காட்டுவது நமது தார்மீகக் கடமை என எண்ணுகிறோம். கடமை என்று வந்துவிட்டால் நாம் புலியாக மாறி விடுவோம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா...?

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைய இன்றும் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்டவனாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என உங்களுக்கு அடையாளம் காட்டும் எனது நீண்ட நெடிய பயணத்தை தொடங்குகிறேன்.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற உடன், நடிகர்கள் அஜீத்-விஜய் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் இருவரும், விடாது தொடரும் தொடர்தோல்விகளால் பொறிகலங்கி இருப்பது சற்றே யோசிக்க வைகிறது. சிம்பு, தனுஷ், சூர்யா, விக்ரம், ஜீவா, பரத் அனைவரும் அஜீத்-விஜய்க்கு கிழேதான் என்பதால் அவர்கள் அனைவரும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இடம் பெறும் தகுதியை இழக்கிறார்கள். அப்படியானால் யார்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்? தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற யாருமே இல்லையா?

இப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று தெரியாமலே போய் விடுமோ என்று ரசிகர்கள் எல்லாம் அல்லும் பகலும் துயரத்தில் தோய்ந்து, தோய்ந்து வருந்திக் கொண்டிருந்த காலத்தில்தான் வானில் விடிவெள்ளி உதிப்பது போல தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் உதயமாகி அனைவரையும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். தமிழகத்திற்கு நோபல், ஆஸ்கார் என்று பரிசுகளை அள்ளித்தரக் கூடிய அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு என்றாலும் அவர் அதை விரும்புவதில்லை என்பதால் இன்னும் கொடுக்கப்படவில்லை என்று விபரம் அறிந்தவர்கள் பலரும் அறிவார்கள்.

டாஸ்மாக்கில் இந்த வருடம் வருமானம் பலமடங்கு அதிகரித்திருப்பதற்கு சாம் ஆன்டர்சனின் சூறாவளி நடனமே காரணம் என்று புள்ளி விபரங்களைப் பார்த்தவ்ர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மேலும் இந்த வருட கலைமாமணி லிஸ்ட்டில் ஆன்டர்சனின் பெயர் இருந்ததாகவும், ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்வாரோ மாட்டோரோ என்ற அச்சத்தில் கடைசி நேரத்தில் அவர் பெயர் அந்த லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

தமிழக மக்கள் அனைவரும் எப்பேர்ப்பட்ட நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார், இனி அவர்தான் நம் சூப்பர் ஸ்டார் என இறுமாந்திருந்த நேரத்தில் புயலென கிளம்பி தமிழகத்தின் அத்தனை தியேட்டர்களையும் துவம்சம் செய்து அதிரடியாய் நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் ஒரு நடிகர்...

அவரது மயிர்க்கூச்செறியும் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.....


தைரியம் இருந்தா வீடியோவையும் பார்த்துக்கோங்க...இறுதியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிகறேங்க...இவரோட தன்னம்பிக்கை எனக்கு பிடிச்சுருக்கு.






பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!

59 comments:

சி.பி.செந்தில்குமார் said...

போட்றா முத வெட்டை

Unknown said...

எத்தன சூப்பரு ஸ்தாருய்யா தாங்க முடியல!

டக்கால்டி said...

வெட்டா? மின் வெட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

>>
பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!

நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்.. ஏன்பா வம்புக்கு இழுக்கறீங்க.?

டக்கால்டி said...

நான் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கேன்.. ஏன்பா வம்புக்கு இழுக்கறீங்க.?//

சிவ பூஜைல கரடி வுடலாம்னு தான் தல

Unknown said...

யோவ் டக்கால்டி நீ இன்னா என் பதிவுக்கு வர்ற போறே தோனி கணக்கா பதில் சொல்லு !

டக்கால்டி said...

விக்கி உலகம்
March 26, 2011 10:37 PM
எத்தன சூப்பரு ஸ்தாருய்யா தாங்க முடியல!//

யோவ் அடுத்து நீ சூப்பர் ஸ்டார் ஆகிடலாம்னு மனப்பால் குடிக்காத

டக்கால்டி said...

யோவ் டக்கால்டி நீ இன்னா என் பதிவுக்கு வர்ற போறே தோனி கணக்கா பதில் சொல்லு !//

யோவ் உன் ப்ளாக் ஹாக் பண்ணலாம்னு தான் ஹி ஹி

Unknown said...

சிபி நீர் எப்பவும் சக்தியோடதானே இருப்ப ஹிஹி!

டக்கால்டி said...

சிபி நீர் எப்பவும் சக்தியோடதானே இருப்ப ஹிஹி!//


அப்போ சிபி மனசுல சக்தியா? எஸ்.எம்.எஸ்..ஹ்ம்ம்..இன்னொரு சூப்பர் ஸ்டார் ரெடி...
மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்

Unknown said...

நானே யாருக்காவது நல்ல ரேட்டுக்கு வித்துடலாம்னு நெனசிட்டுஇருக்கேன் ஹிஹி!

டக்கால்டி said...

நானே யாருக்காவது நல்ல ரேட்டுக்கு வித்துடலாம்னு நெனசிட்டுஇருக்கேன் ஹிஹி!//

செம் ப்ளட்...இந்த ப்ளாக்கை வெச்சுகிட்டு ஒரே குஷ்டமப்பா..

Unknown said...

வீட்ல இன்னைக்கு சிபிய ஓட விட்டுட்டு இருக்காங்களாம் hot news ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

இந்த ஆளுக்கு என்னை வம்புக்கு இழுக்கலைன்னா தூக்கம் வராது

டக்கால்டி said...

வீட்ல இன்னைக்கு சிபிய ஓட விட்டுட்டு இருக்காங்களாம் hot news ஹிஹி//

ஏன்? கேவலப்படுத்திய பிகர்கள் வீட்டுக்கு வந்து கம்ப்லைன்ட்டும் பண்ணிடுச்சுங்களா?

டக்கால்டி said...

இந்த ஆளுக்கு என்னை வம்புக்கு இழுக்கலைன்னா தூக்கம் வராது//

புல் அடிச்சும் போதை இல்லை...
குவார்ட்டர் அடிச்சும் கிக் இல்லை..
ப்ளாக் ஓபன் பண்ணியும் ஹிட்ஸ் இல்லை...
எல்லாத்துக்கும் திட்டனும் தோனுச்சுன்னா
வேற யாரு வருவா?
அண்ணன் சிபி யை விட்டா?

Unknown said...

சரி அந்த பிகர கைய புடிச்சி இழுத்தியா சொல்லு சிபி

டக்கால்டி said...

சரி அந்த பிகர கைய புடிச்சி இழுத்தியா சொல்லு சிபி//

யோவ் பி.எ பெருமாள்...உன் மேட்டரை முதல்ல சொல்லு...

Unknown said...

இப்போ ஸ்டைலு காலப்புடிச்சி இருக்கறதா ஹிஹி!

Unknown said...

யோவ் நான் தான் குலுக்கல் முறையில தேர்ந்தெடுக்க உங்களுக்கெல்லாம் போட்டோ போட்டு வச்சேன்ல.......பன்னிக்குட்டி தவிர யாருமே பதில் சொல்லல!

டக்கால்டி said...

யோவ் நான் தான் குலுக்கல் முறையில தேர்ந்தெடுக்க உங்களுக்கெல்லாம் போட்டோ போட்டு வச்சேன்ல.......பன்னிக்குட்டி தவிர யாருமே பதில் சொல்லல!//

நான் என்ன உன்னைய மாதிரி மன்மத குஞ்சா? போட்டோ பார்த்தவுடனே கண்டுபிடிக்கறதுக்கு

Unknown said...

அடப்பாவி இதுக்காக 2 மாசம் சர்வீஸ் விட்டா கண்டுபுடிக்கறது!

டக்கால்டி said...

அடப்பாவி இதுக்காக 2 மாசம் சர்வீஸ் விட்டா கண்டுபுடிக்கறது!//

யோவ் நான் கூட நீ எதார்த்தமா நமீதாவுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு வியட்னாம் சாள்ஸ் விடுரான்னு நெனச்சேன் ...
ஆனா அந்த இடுகையோட எதோ ஒரு இடுக்குல தான் உன் பி.எ இருக்குறது எனக்கு தெரியாம போச்சு...

டக்கால்டி said...

சரி...சார் யாரு சார் அந்த பிகரு?

டக்கால்டி said...

மொத வெட்டை போட்ட ஆளோட வூட்ல மின்வெட்டு போல..ஹி ஹி..
சும்மா அய்யாவ பத்தி கமென்ட் அடிச்சா இது தான்...

Unknown said...

please give your gmail id

டக்கால்டி said...

dakkalti84@gmail.com

Unknown said...

any time you can talk to me

தமிழ் 007 said...

சூப்பர் ஸ்டார் போட்டோ தெளிவா இருக்கிற மாதிரி ஏதும் கிடைக்கலையா நண்பா!

சக்தி கல்வி மையம் said...

வந்தேன்..வந்தேன்...

டக்கால்டி said...

வாங்க வாத்தியாரே...

டக்கால்டி said...

சூப்பர் ஸ்டார் போட்டோ தெளிவா இருக்கிற மாதிரி ஏதும் கிடைக்கலையா நண்பா!//

கெடைக்கலையே பா...நான் என்ன செய்வேன் ...எங்க போவேன்...

Ram said...

உள்ள வர்றதுக்குள்ள எத்தனை பேர் தான்யா கமண்ட்ட போடுவீங்க..

எனக்கு வடை பிடிக்காததால் இனிமே எனக்கு பஜ்ஜி கேக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்..

முதல்ல வர்ற முடியாததால் நான் எப்ப வந்தாலும் பஜ்ஜி கேப்பேன்.. நீங்க கொடுக்கணும்..

அப்பரம் உங்க பதிவு..

//போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் டீ...ராஜேந்தர் //

அவரு இன்னும் சூப்பர் ஸ்டார் ஆகலையா.??? ஆமாம் அவரு பொண்ண பத்தி என்ன நினைக்கிறீங்க.???

//சாம் ஆண்டர்சன் அவர்கள் தமிழ்த் திரைவானில் //

கொங்கங்க கொங்கங்க.. கர்ர்ர்ர்ர்ர

//பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. //

ஸ்டில்ல பாத்தா ஒண்ணும் அந்த மாதிரி தெரியலையே.!! அப்பரம் எப்படி சிபி பாத்திருப்பார்.???

தமிழ் உதயம் said...

விக்கி உலகம் said...:


எத்தன சூப்பரு ஸ்தாருய்யா தாங்க முடியல! ///


என்னாலாயும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ithukku per thaan " DAKAALDIYAA? "

haaaaaa...... super thala......!

Prabu M said...

//சூப்பர் ஸ்டார் போட்டோ தெளிவா இருக்கிற மாதிரி ஏதும் கிடைக்கலையா நண்பா! //

இது வேறயா?? இந்தக் க்ளாரிட்டியில் பாத்ததுக்கே ஊருக்குள்ள நாலு மாடு செத்துப்போயிருக்கு மூணு பேரு வாசன் ஐ கேர்ல அட்மிட் ஆகியிருக்காங்க..... இதுல ஹை டெஃப்னிஷன் பிக்சர் எல்லாம் போட்டா கொலகேஸூ ஆகிடும் பாஸ்.... :)

டக்கால்டி நண்பா...... குழந்தைகள், பெண்கள், இருதய நோயாளிகளுக்கு எந்த முன்னெச்சரிக்கையும் போடாமல் இவ்வளவு கொடூரமான படங்களை நீங்கள் வெளியிட்டிருப்பதைக் கண்டிக்கிறேன்.... :))

MANO நாஞ்சில் மனோ said...

//ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன், வெறும் கைகளைக் கொண்டு ஆதவனை மறைத்துவிட முடியாது...!//

யாப்பே...............

MANO நாஞ்சில் மனோ said...

உருப்ப்படுமாய்யா ஊரு உலகம்....

MANO நாஞ்சில் மனோ said...

மொத்த தமிழ்நாட்டையும் தற்கொலைக்கு தூண்டுராங்களே....

நிரூபன் said...

யோவ் பார்ட்னர்...நீ எம்.ஜி ஆர் னா நான் நேரு...நீ பிரதம மந்திரினா நான் ஒபாமா...எப்பூடி?ஹி ஹி...இப்போது பன்னீஸ் இடுகைல இருந்த அதே வரிகள்...ஆனால் சூப்பர் ஸ்டார் அவரு இல்ல...//

சகோ வணக்கம், இதன் பெயர் தான் எதிர்ப்பதிவோ?
நடக்கட்டும், நடக்கட்டும், இந்த வசனத்தை எங்கையோ அரசியல் பிரச்சார பதிவிலை கேட்ட மாதிரி இருக்கிறதே?

நிரூபன் said...

அடுத்த முதல்வர் யார் என்று பதிவுலகம் முழுதும் தேர்தல் ஜன்னி கண்டு இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற முக்கியமான தேடுதல் வேட்டையில் இறங்கினோம்.//

எத்தினை பேரய்யா இறங்கினீங்க.
என்ன நீராடப் பொய்கையிலை இறங்கினீங்களா - இல்லை
குளிக்க குளத்தினுள் இறங்கினீர்களா,
மனசை ஆற்ற ஆற்றினுள் இறங்கினீங்களா?

அரசியலில் தேடுதலிலை கூட்டமா இறங்கினதா சொல்லுறீங்களோ?
யாரு நீங்க, பன்னிக் குட்டி, சேட்டைக்காரன், இந்த மூன்று பேரு சேர்ந்து வாக்கெடுப்பு நடத்திப் போட்டு, ஒரு டக்கால்டி றீலு விடுறீங்க..

நிரூபன் said...

இந்த வாக்கெடுப்பை நாங்கள் புறக்கணிக்கிறோம், காரணம்- பதிவுலகில் டக்கால்டி பன்னிக் குட்டியையும், சேட்டைக்காரனையும் மட்டுமே வாக்கெடுப்பிற்கு அழைத்து லஞ்சம் கொடுத்து கள்ள வாக்குகள் போட்டு விட்டு, பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததாக வதந்திகள் பரப்புகிறார்:)))
அவ்...........ஹா...ஹா..

நிரூபன் said...

அடுத்த தலைமுறை நடிகர்கள் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவர்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தீர்மானிக்க முடியாத நிலை தொடர்வது சினிமா ரசிகர்களுக்கு தீராத கவலையாக இருந்து வருகிறது.//

மாப்பு, சகோ- அவனவன் முதல் படத்திலை வரும் போதே ஓவர் பில்டெப்போடை- உக்சா...உக்சா.....ஊ.........உக்சா எனும் மியூஸிக் போட்டு, நான் தான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு என்று தனக்குத் தானே பட்டத்தைப் போட்டுக் கொண்டு வாறான். பல வருடங்கள் ஆகியும் அந்த லிட்டில் வளர்ந்து பெரியாளாகவில்லையே, ஏன் சகோ?

நிரூபன் said...

செத்துப் போனவன் படத்திற்கு மாலை போடுறது மாதிரி ஒரு கண்ணீரஞ்சலி படத்தைப் போட்டு விட்டு, கிண்டி என்று ஒரு ஸ்டைல் வேறை..
இதனைப் பார்த்தா, சுப்பஸ்டாரே சுருக்குக் கயிற்றுடன் கிளம்பிடுவார்:)))
முதல் படம் ரகளை.

நிரூபன் said...

மவனே சகோதரம், பிச்சுப் புடுவன், பிச்சு, பன்னிக் குட்டி ஒரு பதிவைப் போட்டு உசிரை வாங்கி, வயிறு குலுங்க வைச்சது போதாது என்று, இப்ப நீங்க வேறை
அதை Copy அண்ட் past வேறை...
சாமியோ சிரிப்பை அடக்க முடியலை..

தைரியம் இருந்தால் வீடியோவை பார்க்கிறதா:))

வீடியோ போட்டோவே Print Screen Short இலை இருக்கும் போது, வீடியோவை எங்க போயி பார்க்கிறது.

இரண்டாவது படத்திலை அந்த அக்காவிற்கு பக்கத்திலை நிற்கும் ஆள் தான் டக்கால்டியா?

இந்தப் பதிவிற்கு ஏற்கனவே பன்னிக் குட்டியின் பதிவில் கும்மியதால் விமர்சனங்களை நிறுத்தும் படி எமது தணிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது(அப்பாடா இவனுட்டை இருந்து தப்பியாச்சு என்று நினைப்பியளே)

இது ஆப்பு!

உங்களிடமு தனித் திறமைகள், மற்றவர்களை கலாய்க்கும் நகைச்சுவைகள் நிறைய இருக்கிறது, டக்கால்டி, வெகு விரைவில் பதிவுலகையே, உங்களின் டக்கால்டி பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் அதிரடிப் பதிவு ஒன்றினைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.(அதுக்காக என்னைப் பற்றி திட்டி எழுதுறேல்ல)

குறையொன்றுமில்லை. said...

இங்க என்ன நடக்குது?ஆளாளுக்கு சூப்பர்ஸ்டாரு புராணம் அவுத்துவிடுரீங்க.
படிக்கிரவங்களுக்கு ஏதானும் புரியனுமா வேண்டாமா?

Unknown said...

haa haa haa.. ரைட்டு.. அடுத்த சூப்பர் ஸ்டாரை அடையாளம் காட்டிய டக்கால்டி அவர்களுக்கு நன்றி.. :-)

செங்கோவி said...

அப்படியே அடுத்த செல்லச் சீமாட்டி யார் என்றும் பதிவு போடவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி பார்ட்னர் கொஞ்சம் லேட்டாயிடுச்சு...................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கருமம்டா இது...தலையப் பாரு காறீத்துப்புன மாதிரி... இதுக்கு எங்க பவர்ஸ்டாரே எவ்வளவோ பரவால்ல..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் படத்தையும் சிபி பாத்துட்டாரா? பார்ப்போம் இதுக்காவது விமர்சனம் எழுதுறாரான்னு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பார்ட்னர் உங்க சூப்பர் ஸ்டாரு எதுக்கு ரொம்ப பழைய ஹீரோயினோட நிக்கிறாரு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////////டக்கால்டி said...:
March 26, 2011 11:02 PM
அடப்பாவி இதுக்காக 2 மாசம் சர்வீஸ் விட்டா கண்டுபுடிக்கறது!//

யோவ் நான் கூட நீ எதார்த்தமா நமீதாவுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு வியட்னாம் சாள்ஸ் விடுரான்னு நெனச்சேன் ...
ஆனா அந்த இடுகையோட எதோ ஒரு இடுக்குல தான் உன் பி.எ இருக்குறது எனக்கு தெரியாம போச்சு...///////////

ங்கொக்காமக்கா பிகர் மேட்டர் ஈமெயில்லேயே டீல் பண்ணிக்கிறீங்களா? பிச்சிபுடுவேன் பிச்சி படுவாக்களா... !

Guna said...

ATHAANA... APPADIYE ANTHA HEROINE PERAYUM KONJAM PODUNGA BOSS

சரியில்ல....... said...

உம்... நான் என்னத்த கமெண்டு போடப்போறேன்... (இந்த பதிவுல இருக்குற போட்டோக்களை பாத்த பின்னாடி எதையும் தாங்கும் இதயம் ஆகிட்டேன்..)
தன்னம்பிக்கையை வளர்க்கும் தங்களின் சேவை தொடரட்டும்... ஹிஹிஹி...

Sivakumar said...

//பிரபலபதிவர் சிபி இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டார் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர் ஏன் இன்னும் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியவில்லை!/

அவரை 'கிண்டி' விளையாடுவதில் ஒரு மகிழ்ச்சியா உங்களுக்கு??? ஹீரோ அடி வயிற்றை கலக்குற மாதிரி முடிய வச்சிருக்காரே...அடங்கப்பா...முடியல..

சக்தி கல்வி மையம் said...

எங்கைய்யா போனீரு ஆளைக்கானோம்?

நிரூபன் said...

பார்ட்னர், ரொம்ப நாளா ஆளைக் காண முடியலை?
சகோ எப்படி நலமா?
வெளியூர் பயணமா? வாழ்த்துக்கள்!

rajamelaiyur said...

Epa super star vadivel than. . .