Apr 26, 2011

முதலை கண்ணீர்!!!

கரையோர முதலை ஒன்று
கவிதைக்கு ஏங்கியதே
கவி பாடும் முகிலினத்தின்
உறவுக்கு வாடியதே

விண்மீன்கள் புடைசூழ
மனதுக்குள் ஏங்கியே
விண் பார்த்து விண் பார்த்து
வெண்மதியை நோக்கியதே

கார்மேக கூட்டத்தில்
இருள்சூழ்ந்த பின்னிரவில்
நிலவைத்தான் நோக்கியே
அது கவிதை பாடியதே

நள்ளிரவு ஜாமத்தில்
இளங்காற்று தூது செல்ல
மேகம் தான் தூதை
நிலவிற்கு சொல்லியதே

நேரம் தான் செல்ல செல்ல
கதிரவன் தான் உதிக்கவே
வெண்ணிலவோ பயந்து
வானை விட்டு நீங்கியதே

நீங்கியது அறியாது
விண்மீனின் முகம் பார்த்து
மனசாலே துரும்பாகி
அழுததே அது-
முதலை கண்ணீர்!!!

No comments: