அனைவருக்கும் வணக்கம்!
சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பதிவுலகத்துக்கு திரும்ப முடிந்தது. இத்தனை நாள் எங்கேயோ போயிருந்தவன் திரும்பவும் வந்துட்டாண்டா என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. என்ன பண்றது...நீங்க நான் பெனாத்துறதை எல்லாம் சகிச்சிகிட்டே தான் ஆகணும்.சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.
எனது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், தோழி அன்புடன் ஆனந்தி அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!!!
அன்று ஆங்கிலேயன் காலத்தில் வகுக்கப்பட்ட 'மெக்காலே' கல்விமுறையை, அவர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று வருடங்கள் ஆகியும் தொடர்ந்து வருவதால் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றிய ஒரு சிறு அலசல்.
நாளுக்கு நாள் கழிசடையாகி வரும் நம் இந்தியக்கல்வி முறை பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் தான் இந்த இடுகை. கல்வி என்பது என்ன? வெறும் வாக்கியத்தையும், எழுத்துக்களையும் மனனம் செய்து அதை தேர்வில் குமட்டி எடுப்பதா? சத்தியமாக இல்லவே இல்லை. கல்வி என்பது நாம் வாழும் சமூகத்துக்கும் ஒரு தனி மனிதனுக்கும் நன்றாக வாழ ஒரு சேர வசதி ஏற்படுத்திக் கொடுப்பது. "இது தான் எங்களுக்கு தெரியுமே, இப்ப என்ன கெட்டுப் போச்சு? நம்ம இளைஞர்கள் தான் பெரிய படிப்பெல்லாம் படித்து உலகம் முழுக்க கலக்கிக் கொண்டிருக்கிறார்களே, அப்புறம் என்ன?" என்று கேட்பவர்களுக்கு என் பதில் "இந்த இடுகையை முழுவதுமாக வாசிக்கவும் பிறகு யோசிக்கவும்" என்பதாகத் தான் இருக்கும்.
இந்த கல்வியின் சக்தியானது அபரிதமானது. அழியாத செல்வம் கல்வியே என்பது நமக்கு தெரியும். ஒரு கல்வி தான் ஏழையை பணக்காரனாக்குகிறது, ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு விடிவைக் கொடுக்கின்றது, உரிமையை மீட்டெடுக்க சொல்லிக் கொடுக்கின்றது,வர்ணாசிரமத்தை ஒழிக்கின்றது, இப்படி எத்தனையோ. ஆனால் இதே கல்வியால் நமக்கே தெரியாமல் ஒரு சமூக ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிக்கொண்டிருக்கோம் என்பதை எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறீர்கள்?!
பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பு சேரும் போதே இந்த ஏற்றத் தாழ்வுகள் உருவாகப்படுகின்றது. இரண்டு மாணவனில் ஒருவன் 450 மதிப்பெண்ணும் மற்றொருவன் 280 மதிப்பெண்ணும் பத்தாம் வகுப்பில் எடுத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ௪௫௦ மதிப்பெண் எடுத்த எந்த மாணவனும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் காமெர்ஸ் அல்லது வரலாறு அல்லது அக்ரி க்ரூப் எடுப்பதில்லை. பெற்றோராலும், இந்த சமூகத்தின் நிர்பந்தத்தினாலுமே அவன் அப்போது முதல் க்ரூப் எடுக்கிறான். சொந்த விருப்பு/வெறுப்பு என்பதே சமூக உட்கட்டமைப்புகளால் அவனுக்கு ஏற்படுகின்றன. கம்ப்யுட்டர் க்ரூப் எடுத்தால் இஞ்சினியராகி அமெரிக்க சென்று காசு பார்க்கலாம் என்ற எண்ணமே அவனிடம்.அவனிடம் உள்ள எளிதில் கிரகிக்கும் சக்தியை வைத்து கம்யுட்டர் பாடத்தை மனனம் செய்து கார்பரேட் நிறுவன கொத்தடிமை ஆவதே அவனது லட்சியம். இந்த மாணவனால் இந்திய நாட்டுக்கு என்ன பயன்?
மற்றொரு பக்கம் 250 மார்க் எடுத்த மாணவன் கம்ப்யுட்டர் மேல் அதீத ஈடுபாடு, புதிதாக அதில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பினும் செகண்ட் க்ரூப் அல்லது தேர்ட் க்ரூப் எடுக்க நிர்பந்திக்கப் படுகிறான்.ஆக இங்கேயே ஏற்றத் தாழ்வுகள் உருவாகிவிட்டது.
அப்படியே செகண்ட் க்ரூப் அல்லது தேர்ட் க்ரூப் எடுத்து படிக்கும் மாணவனுக்கு அந்த துறையிலேயே வேலை கிடைக்கிறதா அல்லது குறைந்த பட்சம் கல்லூரியிலாவது இடம் கிடைக்கிறதா என்றால் இல்லை. ஆம் எனது நெருங்கிய நண்பன் ஒருவன் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பன்னிரண்டாம் வகுப்பில் அக்ரி க்ரூப் தேர்வு செய்தான், தேர்வு செய்ய வைத்தார்கள் என்பதே உண்மை. பின்பு விவசாயத்திலும், விவசயாதுக்கான அறிவியல் முறைகளும் அவனை ஈர்த்தன. எப்படியாவது வேளாண் கல்லூரியில் சேர்ந்துவிடுவது என்று லட்சியத்துடன் படித்தான்.பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்தான். ஆனால் அவனுக்கு வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அங்கும் பணமே ஜெயித்தது. பிறகு சம்பதமே இல்லாமல் கலைக்கல்லூரியில் பி.எ ஆங்கிலம் பயின்றான். பின்னர் கல்லூரியில் ஆசிரியாராக வேலைப் பார்த்துக்கொண்டே எம்.எ, எம்.பில் என்று இப்போது பி.எச்.டியும் முடித்துவிட்டான். இன்றும் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் அவன் மாணவர்களிடம் எடுத்து சொல்லி, மாணவர்களை அவர்களின் போக்கில் விட்டு சிறந்த முறையில் கல்வி போதித்து வருகிறான்.
இப்போது சொல்லுங்கள் என் நண்பன் செய்த பிழை என்ன? சமூகத்தால் திரும்ப திரும்ப விரட்டி அடிக்கப் பட்டும் கிடைத்த துறையில் சிறந்து விளங்கும் அவன் திறமையில் எனக்கு சந்தேகமே இல்லை.
ஒரு மாணவன் தான் விரும்பிய பாடத்தைப் படிக்க மதிப்பெண்ணோ, சாதி இட ஒதுக்கீடோ, இல்லை பணமோ குறுக்கே நிற்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றது என்று சிந்தித்துப் பார்த்தோமா?
அரசின் ஜாதி ஒதுக்கீடுக்கான கல்வி இடங்களில் எவ்வளவு இடங்கள் உண்மையிலுமே கஷ்டப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்று கூறப்படுபவர்களுக்கு சென்று சேர்கின்றது. என்னைக் கேட்டால் ஜாதி அடிப்படையில் கல்விக்கான இடங்களை ஒதுக்குவதை விட, ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை வைத்து கல்வி சலுகைகளை வழங்குவதே இன்றைய காலத்தில் சரியாக இருக்கும். ஏனெனில் அனைத்து பிரிவிலுமே வசதியானவர்களும் இருக்கிறார்கள், ஏழ்மையானவர்களும் இருக்கிறார்கள். சலுகை என்பது இல்லாதவர்களுக்கு போக வேண்டுமா இல்லை இருப்பவர்களுக்கே மீண்டும் போய் சேர வேண்டுமா?
"இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்"
என்ற பாடல் தான் ஞாபகத்துக்கு வருகின்றது.
அரசின் சலுகைகளை பயன்படுத்தி குடும்பத்தின் ஒரு தலைமுறை நல்ல நிலைமைக்கு வந்துவிட்டாலும் கூட திரும்ப திரும்ப ஜாதியின் பெயரால் அதே சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்தும் குறுகிய மனப்பான்மை என்று ஒழியும். நம்மால் நமது குழந்தைகளை படிக்க வைக்க முடியும் அதற்கான வசதியிருக்கிறது என்று தெரிந்தும் அதை உண்மையிலே கஷ்டப்படும் அவர் பிரிவை சார்ந்த இன்னொருவரின் குழந்தைக்கு விட்டுத் தர மனம் ஏன் மறுக்கின்றது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இருக்கிறதா நம்மிடம்.
நமது நாட்டுக்கு இன்னொரு அச்சுறுத்தப் போகும் விஷயம் உணவுப் பற்றாக்குறை. இப்போது போதிய அளவு உணவு இருப்பினும் கூட அதை சேமித்து வைக்கும் கிடங்கு இல்லாததால்தான் விலைவாசி ஏற்றம் ஏற்படுகின்றது.
அனைவருமே பணம் சம்பாதிக்கும் நோக்குடன் கம்ப்யூட்டரையும், மேனேஜ்மேன்ட்டையும் படித்து வெளிநாடு சென்றுவிட்டால், நம் நாட்டுக்கு யார் தான் சேவை செய்யப்போகிறோம்? ராணுவத்துக்கு கூட அப்போது ஆள் இல்லாத நிலை ஏற்படும். 2020 இல் வல்லரசு ஆனாலும் கூட, இருக்கும் விவாசாயிகள் பஞ்சத்தில் சாவதாலும், விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகளாலும், விவசாயம் செய்ய இளைய சமூகம் முன் வராததாலும் உணவுக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தி இன்றைய அமெரிக்காவைப் போல டின்களில் அடைக்கப்பட்ட,பதப்படுத்தப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி உணவுகளை உண்டு வாழும் அவலம் என்பது மட்டும் நிச்சயம்.
நாமாக முன் வராத பட்சத்தில், வீட்டுக்கொரு ஆண்மகன் விவசாயத்திலோ அல்லது ராணுவத்திலோ கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
10 comments:
அருமையான அலசல் நண்பரே.!! நானும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.. இட ஓதுக்கீடு, பண பற்றாக்குறை மற்றும் இந்திய கல்வி முறையால் நான் உயிராக நினைத்த மெரைன் துறையை இழக்க நேரிட்டது.. அப்பா அம்மாவின் வற்புறுத்தலால் எனது இரண்டாவது சாய்ஸாக இருந்த தொல்பொருள் துறையும் போனது.. கம்ப்யூட்டர் படிப்பை எடுத்தேன்.. இப்போ எனக்கு பிடித்த வேலையில் இருக்கிறேன்.. இருந்தும் கூடிய விரைவில் இந்த வேலையையும் விட்டுபுட்டு ஒரு கம்ப்யூட்டர் கம்பேனியில் அடிமாடாக போக போறேன்..
உண்மையாக மற்றும் தற்காலத்திற்கு ஏற்ற செய்தி...
தீர்வுகள் தான் எப்போது என்று தெரியவில்லை...
//நாமாக முன் வராத பட்சத்தில், வீட்டுக்கொரு ஆண்மகன் விவசாயத்திலோ அல்லது ராணுவத்திலோ கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.//
ராணுவம் சரி!ஆனால் விளை நிலங்கள் சுருங்கிக்கொண்டே வரும் இந்நாளில்,வீட்டொக்கொருவர் விவசாயத்துக்கு வந்தால்,நிலம் கிடைக்காது போலிருக்கிறதே!அதற்கான சட்டம் முதலில் தயாராக வேண்டும்!
மிக ந்ல்ல பதிவு நண்பரே!
Govt is not responsible. Autonomy is granted to many big colleges in TN and the criteria for selection are their own. If more students want to join a particular course, naturally there should be some sort of filtering, shouldn’t be ? So, they use marks and percentile to filter. The colleges can’t fix the filtering criteria based on profiles of the candidates as the candidates coming from higher secondary schools wont have such profiles to marvel at. They are fresh guys, aren’t they? Still, in places like Delhi, they look for profiles too, i.e your extra curriculars like sports and debates etc. and if they are attractive, you get direct entry regardless of your higher secondary scores.
If parents want to push their children towards a particular course, neither the govt nor the colleges are to be held responsible. Parents always want comfortable jobs with handsome salaries to their children. Will they send their children to army? Is army paying corporate salaries to their soldiers and officers? No.
Reservations in educational institutions have become redundant. Engineering colleges in TN go with seats unfilled even if the colleges are ready to take candidates with low marks and with minimum tuitions fees. More and more medical college’s are being opened. Soon, the same will happen to medical education also.
Why didn’t u complain about mgment quota by which also your friend can’t get seats as the cost of each seat ranges from 25 L? Aren’t such quote preventing meritorious students from getting seats? Why aren’t you complaining ?
Computer education in colleges are now cheap. If you pay more, you get a good or reputed instn; for less, less ones.
Money, not reservations, parental instinct to preserve their children, not Macaulay system of English education - are responsible for the system you are up against.
Macaulay system did not ask you to memorise and regurgitate in exam halls. That is your imagination. The essential point of the system is English medium and Western thoughts to be imparted to Indian students through that medium. According to me, western thoughts and values encourage independent thinking, whereas your Tamil values crush young minds and terrorise them if they dare to think independently!
If you don’t want Macaulay system, the alternative is to teach Indian thoughts in your language Tamil to lionise and follow ammaa – ayyaa kalaachaaram ?
I am afraid you have written this blogpost w/o considering the above points.
///western thoughts and values encourage independent thinking, whereas your Tamil values crush young minds and terrorise them if they dare to think independently!//
---------------------------SIMMAKKAL Said.
I fully agreed with Mr. Simmakkal's views. Teaching or learning Tamil Value means producing a lots of stooges and slaves those who are going to appeasing the rulers like in the olden days the poets and
the scholars parsing the king for nothing to get money and other materials in real life. Tamil valves or Indian values can produces petty minded slaves,
//உண்மையிலே கஷ்டப்படும் அவர் பிரிவை சார்ந்த இன்னொருவரின் குழந்தைக்கு விட்டுத் தர மனம் ஏன் மறுக்கின்றது? // நல்ல கேள்வி டகால்ட்டி..வீட்டில் LCD டிவி இருந்தாலும், அரசின் இலவச தொலைக்காட்சியைக் கூட வேண்டாம் என்று சொல்லாத நன்மக்கள் நிறைந்தது நம் தேசம்!
Mr.Simmakkal thanks for your visit and sharing your thoughts.Yeah for sure Macaulay want thought these things at the timw when he frames the education system. This is not against the Macaulay and I clearly indicated the practical difficulties that i faced and seen during my career growth.
So often we are changing Mobiles, Cars, Computers etc as per the trend. Then Why cant we change the education system which is not suiting to the current trend?
Ofcourse I forgot to mention about the management seats.I thought of mentioning it but missed it.
வருகை புரிந்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி
நல்ல அலசல் நண்பா..
ஒரு குடும்பத்தோட பொருளாதார நிலையை கணிச்சு சீட்டு ஒதுக்கனும்னு நீங்க சொல்லியிருக்கறது செம பாயிண்ட்..
ஏன்யா மாப்ள இந்த அளவுக்கு நல்ல பதிவ போட்டுபுட்டு எனக்கு ஏன் சொல்லல ராஸ்கல்.......பதிவு நல்லா இருக்குய்யா!
Post a Comment