நமது காதல்
நமக்கு ஆக்கிவிட்டு போன
ரணங்கள் பல…
அவை என்றும்
ஏன் இன்றும்
இப்போதும் கூட
உன் நினைவுகளாய்…
கடற்கரை ஈர மணலில்
கால் சுவடுகளை
பார்க்கும்போது…
வெற்றியயை கொண்டாட
கிரிக்கெட் ஸ்டெம்ப்
உருவும் போது…
சாலையில் உள்ள
காலி டப்பாவை
பயணத்தின் போது
வண்டி சக்கரத்தில்
விளையாட்டாய்
நசுக்கும் போது…
அம்மாவுக்கு உதவியாக
இடியாப்பம் மாவு
பிழியும் போது
மனதும் பிழியப்படுகின்றது
உன் நினைவுகளால்…
இப்பொழுது சொல்
நீ ஆக்கிவிட்டு சென்றது
ரணங்கள் தானே?
ஒரு வேலை
இந்த காயங்களை ஆற்றவோ
தோன்றுகின்றன
உன் நினைவலைகள்?
No comments:
Post a Comment