Apr 26, 2011

தெய்வம் அன்றே கொல்லும்!

குறுக்கே போகும்
பூனையைத் திட்டிக்கொண்டே
தெருவில் நடந்தேன்…
ஐயோ!

ஒத்தை பிராமணன்
வர்றான்
‘ உள்ளே வந்து
சித்த நாழி இருந்து
தண்ணி குடிச்சுட்டு போடா ‘
என்றாள் எதிர் வீட்டு மாமி
அவள் பையனிடம்…
தெய்வம் அன்றே கொன்றது
என் மூட நம்பிக்கைகளை!

No comments: