"என்ன மச்சி ஊருக்கா? கலக்குற டா..ஊருக்கு போயி என்னடா பண்ண போற...நீ எப்ப வருவன்னு யாருக்கும் பாசம் எல்லாம் கெடையாது...நீ என்ன வாங்கிட்டு வருவன்னு தான் எல்லாரும் இருப்பாங்க...விட்டத்துக்கு மேலே சோத்தைப் போட்டா ஆயிரம் காக்கா மச்சி...எப்ப தான் நீங்க எல்லாம் திருந்தப் போறீங்களோ? தவுசண்ட் பெரியார் வந்தாலும் கஷ்டம் டா " என்ற படி அறையில் நுழைந்தான் ராம்.
"ஆமா மச்சி! போன தடவை ஊருக்கு போயிருந்தேன்ல..அப்ப ஒரு பொண்ணு செட் ஆகிடுச்சு....ஆனா நிச்சயம் பண்ணல. நடக்காதுன்னு தான் நானும் நெனச்சேன். ஆனா பொண்ணுக்கும் என்னை பிடிச்சுடுச்சாம்! இனிமே தான் நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாமே! மூணு வாரத்துக்குள்ள முடிச்சாகணும்.என்ன நடக்கப் போகுதோ?" கவலையுடன் முடித்தான் ரகு.
"கவலைப் படாத மச்சி! ஆண்டவன்னு ஒருத்தன்...ஹ்ம்ம்...ஆண்டவனை விடு... உன் நல்ல மனசுக்கு கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும் மச்சி. ஆனா நான்சென்ஸ் நீ இந்த விஷயத்த எப்படிடா எங்க கிட்ட மறைக்கலாம்? டேய் எல்லாருக்கும் பொது மாத்து போடா ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு... அடிபொலி பொட்டிக்கடிக!!!" என்று ராம் சொன்னவுடன் போர்வையைப் போத்தி அடிதடியுடன் அமர்க்களம் ஆரம்பித்தது.
"மாப்ள! உன்னை விட நாங்க எல்லாம் சந்தோஷமா இருக்கோம் டா. நம்ம ரூம்ல உனக்கு தான் பர்ஸ்ட் கல்யாணம் ஆகப்போகுது..கொண்டாடியே ஆகணும்..வால் மார்ட்ல வாங்குன பீர் கேச ஓபன் பண்ணிடலாம் ..." என்றான் ராம்.
"டேய் தண்ணி வண்டி.. எப்படி இருந்தாலும் டெய்லி குடிச்சிட்டு தான் இருக்க...உனக்கு இன்னிக்கு ஒரு சாக்கு கெடைச்சுடுச்சு...நீ நடத்து" என்றனர் ராமின் அறைவாசிகள்.
"அட யாருப்பா காந்தியும், ஜீசசும் பேசற மாதிரி தெரியுது...டேய் தகப்பன்களா...டெய்லி குடிச்சாலும் சரக்கு தான்...வாரத்துக்கு ஒருக்கா குடிச்சாலும் சரக்கு தான்...முடிஞ்சா நீங்களும் குடிங்க...இல்ல மூடிட்டு போங்க டா...நான் ஆரம்பிக்கிறேன்" என்று கணக்கை தொடங்கினான் ராம்.
ரெண்டு பாட்டில் பீர் முடிந்த நிலையில் மார்ல்பரோ தம் பற்றவைக்க பால்கனி வந்தான் ராம். தம் பற்றி ஒரு இழு இழுத்தவுடன் காதை கிழிக்கும் படி சத்தத்துடன் அவன் வீட்டுக்கு மேலே ஒரு விமானம் பறந்து சென்றது.அதையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தவனைக் கண்ட ரகு,
"என்ன மாப்ள? ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடுச்சு போல...ப்ளேனையே வெறிச்சு பாக்குற?எதோ விட்டம் காக்கா என்றெல்லாம் பழமொழி பேசுன? ரெண்டு பீர் போட்டவுடனே ஆளே மாறிட்ட?"
"நம்மால என்ன மச்சி பண்ண முடியும்? அன்னா ஹசாரே ஆக இருந்தாலும் அனுஷ்காவா இருந்தாலும் நம்மால பேஸ் புக்லயும், வெப் சைட்டுளையும் லைக் பட்டனையும், வோட் பட்டனையும் தான் க்ளிக் பண்ண முடியும். நமக்கு வோட்டுரிமை கூட கிடையாது...ப்ளாக்ல தான் மேதாவித் தனமா நம்மால் பிதற்ற முடியும்..நாமெல்லாம் ஏட்டு சுரைக்காய்...சூழ்நிலை சந்தர்ப்பவாதிகள் மாப்ள... ஆமா மச்சி...எவனுக்கு தான் சொந்த ஊருக்கு போகணும்னு ஆசை இருக்காது. சூழ்நிலை மச்சி...அமெரிக்காவுல இருந்து நம்மூரு போக 1800 டாலர் ஆகுது. அடிக்கடி போய்ட்டு வர பணம் இருந்தாலும், அதை சேர்த்து வெச்சா தங்கச்சி கல்யாணத்தை இன்னும் சிறப்பா செய்யலாம்ல...அப்பன் ஆத்தாளுக்கு சொந்தமா வீடு கட்டணும்...அதுக்கு எதோ வகைல இந்த ஒரு லட்சம் யூஸ் ஆகும்ல..."
"அப்புறம் ஏண்டா அப்படி வெறிச்சு பாத்துட்டு நிக்குற? மனசுல ஊருக்குப் போகணும் தோனிச்னுன்னா கெளம்பி உடனே போயிடனும் டா..குழப்பிக்கக் கூடாது"
"நான் குழம்பலை டா...நான் இப்போ ஊருக்குப் போனாலும், இப்ப தாண்டா போன அதுக்குள்ள வந்துட்ட! தங்கச்சி கல்யாணம் இருக்கு பா..உன் பெரியப்பா பையன் சூரி இல்ல அவன் பெங்களூர்ல சொந்தமா வீடு வாங்கிட்டாண்டா..இப்படி தான் பேசுவாங்களே தவிர, நீ நல்லா இருக்கியா பா..பிரயாணம் நல்லா இருந்துச்சான்னு எல்லாம் நம்ம அப்பன் ஆத்தாளே கேக்க மாட்டாங்க மச்சி...இதெல்லாம் மிடில் கிளாஸ்ல பொறந்தவனுக்கு தான் தெரியும்...அத விடு" என்ற ராமின் கண்களில் சிறு துளி எட்டிப் பார்க்க,
"மாப்ள உனக்கு போதை ஏறிடுச்சு டா..நீ சாப்ட்டு போயி படு...தேவை இல்லாம குழப்பிக்காத..." என்று சமாளித்தான் ரகு...
"இல்ல மச்சி..நான் ஏன் தெரியுமா அந்த பிளேனை அப்படி பார்த்தேன்? என்னை மாதிரி மனநிலமைல இருக்குற அட்லீஸ்ட் ஒருத்தன் சந்தோஷமா எல்லாக் கடமையும் முடிச்சுட்டு திருப்தியா அதுல போயிட்டு இருப்பான்ல...அவனை நெனைச்சுட்டே அப்படியே சந்தோஷமா அவனுக்காக எனக்கே தெரியாமல் நம்மை ஆடிப் படிக்கிற ஒரு சக்திகிட்ட வேண்டிகிட்டு இருந்தேன். அதுக்குள்ளே நீ வந்துட்ட..." என்று தம்மை அணைத்து விட்டு அடுத்த பீர் பாட்டிலை ஓபன் பண்ணினான் ராம்.
"அப்புறம் ஏண்டா முன்னாடி காகா கதை எல்லாம் சொல்லிட்டு திரிஞ்ச?"
"என்ன மாப்ள பண்றது? நமக்குள்ளேயே ஒரு வெறுப்பை உண்டு பண்ணிக்கிட்டா தான் அந்த எண்ணத்தை கொஞ்சமாவது ஒத்திப் போட முடியுது. அதான்..." என்றான் ராம்.
அடுத்த நாள் காலை அலுவலகத்தில், "என்ன மாப்ள உன் ரூம் மேட் ரகுவுக்கு கல்யாணமாமே?! ஊருக்குப் போறான் போல..." என்றான் அவனுடன் பணிபுரியும் விஜய்.
"அவனெல்லாம் ஊருக்கு போயி என்னடா பண்ண போறான்? அவன் எப்ப வருவன்னு யாருக்கும் பாசம் எல்லாம் கெடையாது...அவன் என்ன வாங்கிட்டு வருவான்னு தான் எல்லாரும் இருப்பாங்க...விட்டத்துக்கு மேலே சோத்தைப் போட்டா ஆயிரம் காக்கா மச்சி...எப்ப தான் இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் திருந்தப் போறீங்களோ? தவுசண்ட் பெரியார் வந்தாலும் கஷ்டம் டா " என்றபடி குடித்து முடித்த மார்ல்பரோ சிகரெட்டை கீழே போட்டு வெறியுடன் தன் காலால் நசுக்கியபடி தனது இருக்கையை நோக்கி விரைந்தான்.
"சரியான சைக்கோ டா...இவன்கிட்ட போயி கேட்டேன் பாரு? " என்று ராமை மனதுக்குள் திட்டியபடி அவன் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.
23 comments:
ஃஃஃஃமாப்ள உனக்கு போதை ஏறிடுச்சு டா.ஃஃஃஃஃ
அப்படியா லெக்சன் கேட்க முழுத் தகுதியும் வந்திடுச்சு.... ஆளை அனுப்புங்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது
வந்துட்டேன்.. படிச்சுட்டு வரேன்..
வெளிநாட்டு வாழ் மக்களின் வலி, வேதனைகள் கண்ணீரை வரவைக்கின்றன..
வாங்க வாத்தியாரே..
வாங்க நண்பர் ம.தி.சுதா
உண்மைதான் நண்பா என்ன பண்றது எல்லோருக்கும் "பயலுங்க வெளி வூருல ரொம்ப சந்தோசமா இருக்கறதா நெனப்பு"!
விக்கி உலகம் said...:
April 8, 2011 10:38 PM
உண்மைதான் நண்பா என்ன பண்றது எல்லோருக்கும் "பயலுங்க வெளி வூருல ரொம்ப சந்தோசமா இருக்கறதா நெனப்பு"!
naattaamai solliittaaru
அதாங்க உண்மை வலிக்குது. வெளி நாட்டில் ரொம்ப வசதியுடன் சந்தோஷமா
இருப்பதாகத்தான் இங்குள்ளவர்கள் கோட்டை கட்டுராங்க.
நானும் வந்திருக்கிறேன்...
உள்ளே வரலாமா...
நம்ம வாழ்க்கையே இப்பிடித்தான் மக்கா....ஃபீல் பண்ண வச்சிட்டீங்களே....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி.பி சார், மனோ சார், விக்கி மாப்ள,லக்ஷ்மி அம்மா மற்றும் கவிதை வீதி சவுந்தர்
அழுத்தமாக நம் வலியைச் சொல்லியுள்ளீர்கள்..வாழ்த்துகள்!
விட்டத்துக்கு மேலே சோத்தைப் போட்டா ஆயிரம் காக்கா மச்சி...//
என்னதான் இருந்தாலும் உங்கள் வருகையை நம்பி இருக்கும் உள்ளங்களை இப்படி ஒப்பிடுவது ரொம்ப ஓவரு.
"நம்மால என்ன மச்சி பண்ண முடியும்? அன்னா ஹசாரே ஆக இருந்தாலும் அனுஷ்காவா இருந்தாலும் நம்மால பேஸ் புக்லயும், வெப் சைட்டுளையும் லைக் பட்டனையும், வோட் பட்டனையும் தான் க்ளிக் பண்ண முடியும்//
சகோ.........யதார்த்தத்தை அப்பூடியே பசக் என்று சொல்லிப்புட்டீக.
அதை சேர்த்து வெச்சா தங்கச்சி கல்யாணத்தை இன்னும் சிறப்பா செய்யலாம்ல...அப்பன் ஆத்தாளுக்கு சொந்தமா வீடு கட்டணும்...அதுக்கு எதோ வகைல இந்த ஒரு லட்சம் யூஸ் ஆகும்ல..."//
ஆரம்பத்தில் நகைச்சுவையுடன் நகரும் திருப்பு முனை இவ் இடத்தில் ஆரம்பிக்கிறது.
"மாப்ள உனக்கு போதை ஏறிடுச்சு டா..நீ சாப்ட்டு போயி படு...தேவை இல்லாம குழப்பிக்காத..." என்று சமாளித்தான் ரகு...//
அடப் பாவிப் பசங்களா....நெசமான பீலிங்ஸை..போதை என்று சொல்லி சமாளிச்சிட்டீங்களே..)))))))))));-
இன்றைய இளைஞர்களின் குடும்பப் பொறுப்பின் பின்னணியை அழகாகப் படமாக்கியுள்ளீர்கள்.
தங்கச்சி கலியாண விடயம் கதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்து, கதைக்கு இன்னும் வலுச் சேர்க்கிறது சகோ..
கதையின் முதற்பாதி நையாண்டிகளையும், இளசுகளின் இரவு வாழ்க்கையினையும் சொல்லுகிறது.
பிற்பாதி வாழ்க்கையில் உள்ள பொறுப்புக்களையும் யதார்த்தத்தையும் சொல்லுகிறது.
வெளிநாட்டில் பணிபுரியும் மக்களின் நிலைமையை தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.. உள்ளூரிலேயே நல்ல வருமானம் கிடைத்தால் நமக்கேன் இந்த நிலை..எப்போது நமது நிலை மாறும் என்று தெரியவில்லை..
தொடர்ந்து எதையோ எதிர்பார்க்கும் வார்த்தைகளை கேட்டால் அரவணைத்து பேசும் உள்ளம் கூட எதையோ எதிர்பார்ப்பதாய் தான் தோன்றும். அதை கதையில் வெளிபடுத்தி இருக்கும் விதம் மிகவும் அருமை.
அடுத்த பதிவு எப்போது வரும் சகோ, தேர்தல் முடிவுகளுக்காக வெயிட்டிங்கா..
கதையோட்டத்துல ரொம்ப வலி தெரியுது.. நல்லாயிருந்தது நண்பா கதை..
தண்ணி வண்டி நண்பர்கள் அரட்டை சூப்பர்..
100% true sir.Athuvum poi saenthavudan, eppa kilambarannu kaepanga paarunga....... valikithuppa.
Post a Comment