மாஞ்சா - 05/11/2011
(நூல் விடுராப்ல சில செய்திகள் கொண்ட இடுகை)
எப்படியோ இந்த வருட இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் முடித்து டெஸ்ட் போட்டிகளின் தர வரிசையிலும் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தோனியின் தலைமையில் இந்த வருடம் உலகக்கோப்பையை இந்திய வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நம்ம அணியில் எப்போதும் இருக்கும் ஒரே பிரச்சினை என்னவென்றால், அடித்தால் அனைவரும் அடித்து ஆடி இமாலய இலக்கை எதிர் அணிக்கு சவால் இடுவார்கள். இல்லையென்றால் சொற்ப ஓட்டங்களிலேயே அனைவரும் ஆட்டமிழந்து வெளிநடப்பு செய்வார்கள். இந்த நிலை தற்போது சற்று குறைந்திருந்தாலும் அவ்வப்போது ஏற்படுவது கவலை அளிக்கிறது.
நண்பர்கள் பலரும் இந்தியா- தென்னாப்பிரிக்க தொடரை கூட பார்க்காமல் ஆஷஸ் தொடரை கூர்ந்து பார்கிறார்கள். ஆஸ்திரேலியா அணியின் தோல்வியில் பலருக்கு மகிழ்ச்சி. வீழ்ச்சியின் விளிம்பில் சிக்கி கொண்ட ஆஸ்திரேலியா எனது பார்வையில் 90 களில் சரிவை சந்தித்த மேற்கு இந்திய அணியின் ஞாபகத்தை அளிக்கிறது. மறுபுறம் நியுஜியை வீழ்த்தி வங்கதேச அணி மற்றொரு இலங்கை அணி போல வளர்ச்சியடைந்து வருகிறது.
மந்திரப்புன்னகை, ஒச்சாயி, கவுரவர்கள் படங்களைப் பார்த்தேன். மந்திரப்புன்னகையும் ஒச்சாயியும் ஒரே கதைக் கரு கொண்ட படம் தான். என்ன ஒன்று கிராமத்து சப்ஜெக்ட் மற்றொன்று நகரத்து சப்ஜெக்ட். மந்திரப்புன்னகை வசனங்கள் பளிச்.
சஞ்சய் ராம் இயக்கத்தில் வெளிவந்த கவுரவர்கள் மேக்கிங்கில் தேறுகிறது. சத்யராஜ் நடிப்பு பிரமாதம். விக்னேஷும் முடிந்த வரை நடித்திருக்கிறார். தேவை இல்லாமல் செண்டிமெண்ட், காதல், துரோகம், தாகம் என்று காட்சிக்கு ஏற்றவாறு பல பின்னணி பாடல்களை கேட்கும் போது முதலில் பிடித்திருந்தாலும் அடிக்கடி வரும்போது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .எங்கள் ஊர் சேலத்தை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள். அநேகமாக சேலத்தை மையமாக வைத்து வெளிவந்த படங்களில் ஓடியது ரோசாப்பூ ரவிக்கைகாரி என்ற படம் மட்டும் தான் என்று நினைக்கிறேன்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் அளவுக்கு சுந்தர்.சியை யோசிக்க வைக்கும் படம் தான் நகரம் - மறுபக்கம். தலைநகரம் படத்தில் நடித்த பாதி பேர் இந்த படத்திலும். அனுயாவுக்காக பார்க்கலாம். பேசாம சுந்தர்.சி சார் மீண்டும் இயக்குனர் அவதாரமே எடுக்கலாம்.
வில்பர் சர்குணராஜ் என்பவர் யு ட்யூபில் கலக்கி கொண்டிருக்கிறார். யு ட்யூப் சென்று அவர் பெயரில் தேடுங்கள் பல சுவாரசியங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது. முதலில் அதை எல்லாம் பார்த்து எள்ளி நகைத்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க அவரின் தன்னம்பிக்கையை பாராட்ட தோன்றுகிறது.
கீழ் உள்ள புகைப்படம் சமீபத்திய சுற்று பயணத்தின் போது எடுத்தது. சில ஜிம்மிக்ஸ் எல்லாம் செய்து பார்த்ததில் எனக்கு இந்த படம் நன்றாக இருக்கிறது. பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்.
பாமரனின் எழுத்தில் "அகிம்சாமூர்த்தி அமெரிக்கா" என்ற புத்தகத்தை வாசித்தேன். பல நாடுகளில் கம்யுனிசத்தை காரணமாக காட்டி அமெரிக்கா சுரண்டியதை விலாவரியாக எழுதி இருக்கிறார். சிலி, லிபியா, இந்தோனேசியா,ஈக்வெடார்,உருகுவே போன்ற நாடுகளின் தலைவர்கள், மக்கள் அடைந்த துயரத்தை விளக்கி இருக்கிறார். நீங்களும் நேரம் கிடைத்தால் வாசியுங்கள்.
மாஞ்சா போடுவது இரண்டாவது முறை. முதலில் போட்ட மாஞ்சாவை
பார்க்க இங்கு சொடுக்குங்கள். மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன். பொறுமையுடன் படித்த அனைவருக்கும்
நன்றியும் , வணக்கமும்!!!
5 comments:
பதிவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...
தலைவரே...வரவேற்புக்கு நன்றி...நான் கொஞ்சம் பழைய ஆளு தான்...ரொம்ப நாள் கழித்து மீண்டும் இடுகையை இன்று பதிந்திருக்கிறேன்...
அப்படிங்களா... ரைட்டு விடுங்க... அடிக்கடி எழுதுங்க...
நான்தான் வேலைவெட்டி இல்லாம பின்னிரவில் பின்னூட்டம் போடுறேன்னு பார்த்தா நீங்களும் சலிக்காம பதில் போட்டிருக்கீங்க... ஆச்சர்யம் தான்...
அடிக்கடி எழுதறதுக்கு தான் முயன்று தோத்துடுறேன்..
உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பிரபாகரன்...
Post a Comment