மனிதனில் தான் எத்தனை ரகம். குணம் வாரியாக பார்த்தோமே ஆனால் நல்லவன், கெட்டவன், துரோகி, எதிரி, ஏமாளி, புத்திசாலி, சாமர்த்தியசாலி, அறிவாளி, வோக்காலி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பணம் வாரியாக பார்த்தோமே ஆனால் ஏழை, பணக்காரன், ஓரளவு வசதி படைத்தவன், பரம்பரை பணக்காரன் என்று அடுக்கலாம். செய்யும் தொழிலில் கூட எத்தனை வகைகள்?
சொந்த பந்தங்களில் மாமன், மைத்துனன், அப்பன், அம்மை, தம்பி, தங்கை என்றும், பாலினத்தில் ஆண், பெண் மற்றும் திருநங்கை என்றும் எவ்வளவு எவ்வளவு?
சரி இவன் இப்ப எதுக்கு கரடி கக்கூஸ் போன மாதிரி காட்டு கத்தல் கத்திகிட்டு இருக்கான் என்று தான யோசிக்கிறீங்க? விஷயத்துக்கு வரேன். மனுஷன் ஏன் இவ்ளோ வகைகளில் இருக்கான் என்று வேலையத்த வேலையாய் யோசித்த போது என் மனதில் உதித்தவை இந்த இடுகையாக.
தீவிரவாதி, பயங்கரவாதி என்கிறார்களே அவர்களை ஏன் அப்படி சொல்கிறார்கள்? ஒருவேளை ஒரு மனிதன் தன் சமூகத்துக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொதித்தெழுந்து மற்றொரு இன மனிதர்களை அழிக்க தொடங்கியதன் காரணமாக பயங்கரவாதியாகிறானோ? அப்போ இரு குழுக்களுக்கு ஒருவரைப் பொறுத்தவரை மற்றொருவர் பயங்கரவாதியா? அப்போது பணமும், ஆதிக்கமும் நிறைந்த வர்க்கம் சந்தர்ப்பவாதிகள் என்று அழைக்கப்படாமல் நல்லவர்கள் முகமூடி அணிந்து கொள்கிறார்களா? இப்படி விடை தெரியா பல கேள்விகள்.
இங்கன அமெரிக்காவில் ஏன் முக்காவாசி பேரு ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கு லேபில் சுத்தின மாதிரியும், கருப்பர்கள் என்று அநேகமாக எல்லோராலும் அழைக்கப்படும் (நான் கூட அப்படி அழைத்திருக்கிறேன்.இப்படி அழைக்கிறேன் என்று உண்மையை ஒத்துக்கொள்ள எனக்கு பயமில்லை. ஆனால் வெட்கப்படுகிறேன். இங்கே நீக்ரோஸ் என்று சொன்னால் ரேசியல் டிஷ்க்ரிமினஷன் என்று உள்ளே தள்ளி விடுவார்களாம் ) ஓகே. எங்கேயோ போயிகிட்டு இருக்கு. மறுபடியும் விஷயத்துக்கு வருவோம். கருப்பர்கள் என்று அனேகரால் அழைக்கப்படுகிற மக்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள். நமக்கு நான்கு தலைமுறை முன்னிருந்த மனிதர்களைப் போல தோற்றத்தில் இருக்கிறார்கள்? மெக்சிகன் வாசிகள் எப்படி சற்று அச்சு அசலாக நம் இந்தியர் போலவே இருக்கிறார்கள்? அவர்களது உணவுப் பழக்கமும் எப்படி நமது பாணியிலே ஏறக்குறைய அமைந்து இருக்கிறது? இவ்வாறு போய்க் கொண்டிருந்தது என் சிந்தனை.
இந்தக் கட்டுரையின் நோக்கமே ஒரு மனித எதனால் தரம் பிரிக்கப் படுகிறான்? தன் பிறப்பினாலா? சுற்று வட்டாரத்தினால் ஏற்படும் பழக்கவழக்கங்களா? இல்லை மூதாதையினரின் ஜீன் என்று சொல்லப் படும் க்ரோமொசோமிநாளா? சந்தர்ப்ப சூழ்நிலையிநாளா?
எனக்கு ஒண்ணுமே புரியலீங்க...உங்களுக்கு எதாச்சும் புரியுதுங்களா? இறுதியாக ஒரு கவிதை...
அவன் பார்வையில்
நானாக நான் இல்லையாம்
-கூறுகிறான் என் நண்பன்
நானாக நான் இருக்க
முயற்சியை தொடங்கிய
மறுகணமே என் சுயத்தை
இழக்க சொன்னான் நண்பன்!
பின் எனக்காக
விட்டுக் கொடுத்ததில்
தன் சுயத்தை இழந்துவிட்டான் அவன்.
என்ன செய்தால்
என்னை நம்புவான் அவன்?
என் நட்பின் அளவை
வெளிக் காட்டிக்கொள்ள
ஏனோ இப்போதெல்லாம்
என் மனம் விரும்பவது இல்லை...
எப்படியோ நான் குழம்புனதொடு இல்லாம உங்களை எல்லாம் குழப்பிட்ட சந்தோஷத்துல விடை பெறுகிறேன். பொறுமையுடன் படித்த அனைவருக்கும் என் நன்றியும் வணக்கமும்.
4 comments:
சுயத்தை இழந்தால் இப்படித்தான் கவிதை வருமோ?
இது கவிதை இல்லீங்கோ...புலம்பல்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க செந்தில்...
" எனக்கு ஒண்ணுமே புரியலீங்க...உங்களுக்கு எதாச்சும் புரியுதுங்களா?"
எங்களுக்கும் ஒண்ணுமே புரியல பாஸ்! இந்த தெருக்காரன் அடுத்த தெருக்காரன்கிட்ட பேச மாட்டேங்கிறான்! இதெல்லாம் எதுக்கு? நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க!
@Maathiyosi : வருகைக்கு நன்றி நண்பா
Post a Comment