தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் காட்டுத்தனமாக சுட்டுக்கொல்லப் படுவதை கண்டித்து நம் தமிழ் பதிவுலகமே வெகுண்டு எழுந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் தான். வசூல் ராஜா படத்துல தரை துடைக்கும் புண்ணியகோடி கேரக்டரிடம் கமல் சொல்லும் டைலாக் தான் ஞாபகம் வருது.
" இந்த மாதிரி எல்லாம் பாராட்ட பெரிய மனுஷங்களுக்கு நேரம் கெடைக்காது. நமக்கு நாமே தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிக்கணும்"
ஒ.கே சுயபுராணம் இதோட போதும் நிறுத்திக்குவோம். இப்போ பேக் டு தி டாபிக்.
மனுஷன்னா கொஞ்சமாச்சும் ஈவு ஈரவெங்காயம், இரக்கம் இஞ்சித்தழை, மானம் மாரியாத்தா, சூடு சூலாயுதம், வெக்கம் வேலாயுதம் எல்லாம் இருக்கணும். இதுல வேடிக்கையை பாருங்க சுட்டு தள்ளுற அந்த டப்பா தலையனுங்களுக்கு நான் முதல்ல சொன்ன ரெண்டு குவாளிபிகேசன்ஸ் சுத்தமா இல்லை. சுடுபட்டு செத்த நாட்டை சேர்ந்த நமக்கு நான் சொன்ன நாலாவது மேட்டர் இல்லை. நம்ம நாட்டோட ஆபிசர்களுங்களுக்கு நான் மேலே சொன்ன எந்த விஷயமும் சுத்தமா கிடையாது. ஏதோ இப்போ தான் கொஞ்சம் சூடு சொரணை வந்து பதிவெல்லாம் போட்டுட்டு இருக்கோம். எனக்கு முன்னே இதைப் பத்தி இடுகையாக போட எண்ணம் இருந்தது. ஆனால் என்னங்க பிரயோஜனம்?
இப்படி இருந்தும் அண்ணன் ஜாக்கி சேகர் மட்டும் பல பதிவுகளில் இதைப் பற்றி கொதித்து கூவிக் கொண்டிருந்தார். நான் உள்பட நாமெல்லாம் கண்டன பின்னூட்டங்கள் போடுவதோடு நிறுத்திக் கொண்டோம். ஒரு கை ஓசை தராது என்ற என் எண்ணத்துக்கு தன பீச்சாங்கையால் என் கன்னத்தை அறைந்து ஒரு கை ஓசை தரும் என்று உணர்த்திய அண்ணன் ஜாக்கிக்கு என் நன்றிகள் மற்றும் வணக்கங்கள்.
இப்போ மேட்டர் என்னானா கீழே கொடுக்கப் பட்டுள்ள சுட்டியை சொடுக்கி உங்கள் கண்டனத்தை பதிவு செய்து கையொப்பம் இடுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள். நீங்கள் சொடுக்க வேண்டிய சுட்டி:
http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html
ஒரு லட்சம் கையெழுத்து தேவைப்படுகிற நிலையில் நான்காயிரத்தை கூட இன்னும் எட்டவில்லை. எனவே தயவு கூர்ந்து ஒரு பத்து நிமிடம் இதற்காக செலவு செய்து பல்லாயிரக் கணக்கான மீனவ நண்பர்களுக்கு உதவுங்கள். நல்ல விஷயத்துக்காக எத்தனை மீள் பதிவாக வேண்டும் நான் இதே இடுகையை என் தளத்தில் போட தயார். இந்த விஷயத்துக்காக பதிவு எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
இறுதியாக, என் மனதில் தோன்றியவை:
இதுவும் கடந்து போகும் என
இனியும் இருந்தோமேயானால்
கடற்கரையோரம் தோன்றும் ஓர்
மிதக்கும் சுடுகாடு.
மறந்து விடாதீர் மக்களே
மீண்டும்
சிம்மாசனம் ஏறி
சிங்கலத்தவனுக்கு ஜால்ரா போட
இலவச இடுகாடு என
இனி ஒரு அறிக்கை வரும்
தேர்தல் வாக்குறுதியாக!!!
பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி!!!
7 comments:
உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி... எதிர்ப்புத்தீ பரவட்டும்...
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...
வெறும் கூவுவதால் இந்தப்பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் அணில் போல நம் முயற்சி சிறு மாற்றத்தை கொண்டுவந்தாலே போதும்.
ஒருவேளை உண்மையென்றால், அன்று ராமருக்காக கல் சுமந்த அணில் போல தான் நம் நிலைமையும்... அதே பகுதியில் ஒரு பாலம் அமைப்போம். சண்டைக்காக அல்லாமல் சமாதானத்துக்காக அது இருக்க வேண்டும் என்பது என் ஆசை... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே
//மீண்டும்
சிம்மாசனம் ஏறி
சிங்கலத்தவனுக்கு ஜால்ரா போட
இலவச இடுகாடு என
இனி ஒரு அறிக்கை வரும்
தேர்தல் வாக்குறுதியாக!!!
மனம் விட்டு ரசித்தேன் நண்பரே... நீங்கள் சொல்லுவது நாளை உண்மை ஆனாலும் ஆகும்
உணர்வுகளின் சங்கமம்.நல்லெண்ணதோடு இட்ட இடுகை நிச்சயம் நல்லது நடக்கவேண்டுவோம்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ராஜா மற்றும் மலிக்கா ...
Post a Comment