Jan 6, 2011

சாப்ட்வேர் சுந்தரம் (பாகம் 1)...

சாப்ட்வேர் சுந்தரம் (பாகம் 1)...


புது முறையில் ஏதாவது செய்யலாம் என்று தோன்றியதில் கதையும் இல்லாமல், கட்டுரையாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாய் வந்திருக்கு. படிக்கறது உங்க தலைவிதி.


ஷ்யாம்- கௌதம் மேனன் படத்தில் சொல்வது போல, ஒரு மெக்கானிகல் இஞ்சினியரிங் பட்டதாரி. படிப்பை முடித்த கையோடு வேலைக்கு தேடி அலைந்ததில் வட இந்தியாவில் ஒரு பணியில் சேர்ந்தான். சுமாரான சம்பளம். வழக்கம் போலவே ஏழ்மையின் பிடியில் உள்ள குடும்பம். வயசான அப்பா, வயதுக்கு வந்த தங்கை, சீக்கான அப்பா என சோகமும்,வறுமையும் புரையோடும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். இது தான் நம்ம கதையின் நாகனின் முன்னுரை.



இப்போ உங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பமா இருக்குமே? என்னடா கௌதம் மேனன் ஸ்டைல்ல ஆரம்பிச்சுட்டு, சேரனின் தவமாய் தவமிருந்து ரேஞ்சுக்கு போகுதே என்று.எனக்கும் அதே குழப்பம் தான். கொஞ்சம் பொறுங்க கதை முடிவில நான் என்ன பினாத்தி இருக்கேன்னு
நீங்களே புரிஞ்சுக்குவீங்க.நம்ம இப்போ மீண்டும் கதைக்கு போகலாம்.



படிச்சு முடிச்சு சம்பாதிக்கும் ஆசையில் உற்சாகமாக தான் இவனும் கிளம்பி சென்றான்.ஆறு மாத காலம் உருண்டோடியிருக்கும்.ஆனால் இவன் வாங்கும் சம்பளம் இவனது செலவுக்கே பத்தவில்லை. எனவே வீட்டில் இருந்தும் அதிருப்தி குரல் ஒலிக்கவே, அந்த வேலையை விட்டுவிட்டு தாய் மண்ணாம் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு திரும்பினான். முக்கால் வாசி நடுத்தர மற்றும் வசதி குறைந்த தமிழ் குடும்ப புதல்வர்கள் சென்னை தெருக்களிலும் சாலைகளிலும் வேலை தேடி அலையும் தருணங்கள் இவனுக்கும் வைத்தது. ஆனால் இவன் மீண்டும் சம்பளம், மானம் மாரியாத்தா, சூடு சூலாயுதம், வெக்கம் வேலாயுதம் என்று எதுவும் பார்க்காமல் 3000 ருபாய் பணியில் வந்த ஒரு வாரத்திலேயே சேர்ந்தான். பின்னே வயிற்று பிழைப்புக்கு காசு வேண்டுமே.



இப்படி அவன் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் போது தான் அவனது அறைவாசி அவனிடம் "நீ பேசாம சாப்ட்வேர்ல ட்ரை பண்ணலாமே?" என்று கொளுத்தி போட்டார்.



இப்போ பார்த்தீங்களா? மீண்டும் கௌதம் பட பாணிக்கே கதை போகுது. ஹீரோ சாப்ட்வேர்ல வேலைக்கு சேரப்போறான்.



மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் ஒரே குமட்டல் கம்ப்யுட்டர் சைன்ஸ் மாணவர்களும், அவர்கள் செய்யும் அலப்பரைகளும் தான். இவன் மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர் என்பது போல எந்த தருணத்திலும் நாம் சாப்ட்வேர்ல மட்டும் வேலைல சேர்ந்துட கூடாது என்பது இவன் மற்றும் இவனது நண்பர்களின் வேதவாக்கு.



ஆனால் காலம் தான் புரியாத புதிர் ஆச்சே. வீட்டின் நிதி நெருக்கடி அதிகரித்துக்கொண்டே போக, வேறு வழியின்றி சாப்ட்வேர் இன்டர்வியு அட்டென்ட் செய்வது என முடிவெடுத்தான். எழுத்து தேர்வு, எச்.ஆர் என இரண்டே சுற்று. எளிதில் தெரிவித்தான் என்று சொல்லமுடியாது. ஆனால் கஷ்டப்படவும் இல்லை. முதல் சாப்ட்வேர் இன்டர்வியு... வேலையும் கிடைத்துவிட்டது.



இனி நம் வாழ்வில் வசந்த காலம் தான் என்பவனுக்கு நடக்க இருக்கும் அதிர்ச்சி, நிகழப்போகும் மாற்றங்கள் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

தொடரும்..

4 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.........

டக்கால்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Philosophy Prabhakaran said...

என்ன சொல்லப் போகிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது... நானும் வாழ்க்கையில் அப்படி ஒரு கட்டத்தில் தான் இருக்கிறேன்...

டக்கால்டி said...

வாங்க பிரபாகரன்...
எப்படி முடிப்பதுன்னு உண்மையிலேயே எனக்கு தெரியலீங்க... எப்படியும் இன்னும் 3 பாகம் போகும்னு நினைக்கிறேன்.