வணக்கம் நண்பர்களே!!!
என்னுடைய தளத்தை பல முயற்சிகளுக்கு பிறகு புதுப்பித்து திருப்த்தியடைந்துள்ளேன். பல்வேறு தேடுதல்கள், பல டெம்ப்ளேட்டுகள் மாற்றி இறுதியில் என் சிறு அறிவுக்கு எட்டியதை பயன்படுத்தி இந்த டெம்ப்ளேட்டை மாற்றியமைத்து தளத்தை வடிவமைத்துளேன். இனி என் தளத்தின் டெம்ப்ளேட்டை மாற்றும் எண்ணம் தற்போது இல்லை. படிப்பதில் ஏதேனும் சிரமமோ, அசவுகரியாமா இருந்தால் அவசியம் உங்கள் கருத்தினை கூறவும்.
சரி...மாஞ்சவின் மூன்றாவது பகுதி போகலாமா?
சுயபுராணம்:
இப்போதுதான் நான் வசிக்கும் இடத்தில் பனிபொழிவு நின்றிருக்கிறது. ஏற்கனவே பொழிந்த பனியினால் உண்டான பனிக்கட்டிகள் உருகி சாலைகள் இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றது. ஒவ்வொரு வருடமும் இந்த பனி பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு இது தான் முதல் அனுபவம். பனிப்பொழிவால் சாலைகளில் பனிக்கட்டிகள் உண்டாகி உருகும்போது ஏற்படும் வழவழப்புத்தன்மையால் வழுக்கி விழும் அபாயம் இருக்கிறது. மகிழுந்து மற்றும் பேருந்து ஓட்டுவதும் சிரமும். டையர் பிரிக்ஷன் இருக்காது. திடீரென்று ப்ரேக் அடித்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு விளக்கத் தேவை இல்லை. பனிப்பொழிவின் பொது நான் எடுத்த புகைப்படங்களை சென்ற இடுகைகளில் வெளியிட்டிருந்தேன்.
கிரிக்கெட்:
இந்தியா - தென்னாப்ரிக்க ஒருநாள் போட்டிகள் சுவாரசியாமான கட்டத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், விறுவிறுப்பான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கவை வீழ்த்தியது பலருக்கு மேட்ச் பிக்சிங் சந்தேகத்தை கிளறியிருக்கிறது. இந்திய அணி தோற்றால் திட்டுவதும், இவ்வாறு வெற்றி பெற்றால் சந்தேகப் படுவதும் தோனிக்கு செம லக்குடா என்பதும் வாடிக்கையாகிவிட்டது. மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இப்போதெல்லாம் நமது அணியின் தன்னம்பிக்கை வெகுவாக உயர்ந்துவருவதை கடந்த இரண்டு போட்டிகள் உணர்த்தும். முன்பெல்லாம் சச்சின் அவுட் ஆனாலே நமது தோல்வி என்பது ஏறக்குறைய உறுதியாகிவிடும். பல பேர் டி.வியை அனைத்து விட்டு வேறு வேலை செய்ய கிளம்பிவிடுவார்கள்.
சௌரவ் தலைமையில் அந்த கூற்றினை உடைப்பது போல அவ்வப்போது நமது அணி வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ்-கைப் ஜோடி அடித்து ஆடி வெற்றி பெற்று தந்த நாட்வெஸ்ட் தொடர் தான் இதற்கு துவக்கம். ஆனால் இப்போது இன்னும் மெருகேறியிருக்கிறது. ஹர்பஜன், சாகிர் போன்றோரின் பங்களிப்பு நம் அணியின் தன்னம்பிக்கை உயர்ந்து வருவதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இறுதிவரை போராடும் குணமும், விடாமுயற்சியையும் இப்போது தான் நம் இந்திய அணி கற்றுக் கொண்டிருக்கிறது. ஜிம்பாப்வே அணி தோல்வியின் விளிம்பில் இருப்பினும் பீல்டிங்கில் காட்டும் தீவிரம் என்னை பல நேரம் வியப்படைய செய்திருக்கிறது.
இருப்பினும் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று உறுதியாக சொல்லும் அளவுக்கு நமது அணி இன்னும் பலம்பெறவில்லை என்பது நிதர்சனம்.
சினிமா:
சிறுத்தை என்ற ஒரு மசாலா படம் பாதி பார்த்ததில் என் மண்டையில் இருக்கும் மசாலா காலியாகிவிட்டது. காமெடி என்ற பேரில் கார்த்தி செய்யும் வேலைகள் செம புளிப்பு. சந்தானம் ஓகே. தெலுங்கை அப்படியே தமிழ் படுத்த முயன்றதன் விளைவு இது. தமன்னாவின் இடுப்பு க்ளோஸ்-அப் காட்சிகள் ஜொள் ரகம். பாதி படம் பார்க்கும் போதே என் மனதில் இருந்த கேள்வி - சிறுத்தை கொட்டை எடுத்ததா? எடுக்காததா? பதில்: எடுத்ததுதான்.
அழகன் என்ற பாலச்சந்தரின் படம் முழுதாக பார்கவில்லை. எனவே அந்த படத்தை எப்படியாவது பார்த்துவிடுவது என்று பார்த்தேன். பல சுவாரசியங்கள் படத்தில். உதாரணம் - செல் போன் வரும் காலம் முன்னரே காதலிப்போர் நேரம் காலம் மறந்து தொலைப்பேசியில் உரையாடுவது. தூர்தர்ஷன் சேனலில் வரும் தீம் மியூசிக் போன்றவை. படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தில் சிலர் (சுஜிதா மற்றும் ராபர்ட்) இப்போது நட்சத்திரமாக உள்ளனர். பானுப்ரியாவின் அழகு அம்சம். மதுபாலாவை இந்த கால ஜெனீலியா நடிக்கும் கேரக்டர்கள் போல நடிக்க வைத்திருக்கிறார்.
இதே போல ராம்கி, கவ்தமி நடித்த "ஆத்மா " படமும் பார்த்துவிட எண்ணியபோது, எந்த சைட்டிலும் தரவிறக்கம் செய்ய இயலவில்லை. ஆத்மா என்ற தமிழ் மொழி மாற்றம் செய்த ஒரு மொக்கை இந்தி படம் தான் கிடைக்கிறது. யாரேனும் சரியான லிங்க் -ஐ கண்டுபிடித்தால் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
புத்தகம்:
தற்போது சுஜாதாவின் "தோரணத்து மாவிலைகள்" என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். இதில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவைகள் கட்டுரை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. இதன் முன்னுரையே சுஜாதாவின் பாணியில் உள்ளது. அது உங்களுக்காக:
"கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம். கட்டுரைகளில் தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் தெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளைவிட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்குக் காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் தான்.
அவர்கள் 'நடத்திய' என்பதற்கு 'நடாத்திய' என்றும், 'சிறந்த' என்பதற்கு பதில் 'விழுமிய' என்றும். 'கலந்த' என்பதற்கு 'பொருளிய' என்றும் எழுதுவார்கள். இதனாலேயே தமிழ் மக்கள் கட்டுரை என்றாலே பயந்து பொய் ஆங்காங்கே ஒதுங்கிக் கொள்கிறார்கள்."
இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் அவ்வாறு இருக்காது என சுஜாதா உத்தரவாதம் அளிக்கிறார்.
புத்தக விவரம்:
தோரணத்து மாவிலைகள் - சுஜாதா
விசா பப்ளிகேஷன்ஸ்
விலை - 75 /- ரூபாய்
சென்ற மாஞ்சாவைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். மீண்டும் வருகிறேன். பொறுமையாக வாசித்த அனைவருக்கும் மிக்க நன்றி!!!

6 comments:
இது பிளாக்கர் டெம்ப்ளேட்டா அல்லது மூன்றாம் தரப்பினுடயதா...?
அழகன் படம் பற்றிய கருத்துக்கள் அருமை... நான் பலமுறை பார்த்திருக்கிறேன்...
வாங்க பிரபாகரன்! இது பைனல் சென்ஸ் எனும் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து சிறு மாற்றங்களை புகுத்திய டெம்ப்ளேட்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஓகே ரைட்டு
இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன்! இன்னிக்கு மாஞ்சா நல்ல இருந்திச்சு! ஆமா சார் நீங்க எந்த ஊரு? ஸ்னோ போட்டோ எல்லாம் கலக்கல்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாத்தியோசி மற்றும் விக்கி உலகம்.
வோட்டளித்த அனைவருக்கும் நன்றி... தளத்தை தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்...
Post a Comment