May 27, 2011

என்னமோ போடா மாதவா

வணக்கம் நண்பர்களே!



"கொண்டை இருக்குறவ அள்ளி முடிஞ்சுக்குறா..உனக்கென்ன?"
"பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான்..உனக்கென்ன?"
"வேலை செஞ்சு வெள்ளாம பார்த்தது வெள்ளையப்பன்..அதை தெனாவட்டா படுத்துட்டு திங்கறவன் திண்ணையப்பன்...நமக்கென்ன?"
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறேன்..உனக்கென்ன?"

 
இந்த மேற்கோள்கள் எல்லாம் எதுக்கு சொல்றேன்னா, இதெல்லாம் சமீப காலமாக நான் அதிகம் கேட்கிற வார்த்தைகளை உள்ளடக்கிய பழமொழி என்று என்றோ சில சந்தர்ப்பவாதிகள் சொல்லி வைத்துவிட்டு போனவை.
ஆமாங்க, கொஞ்சம் யோசிச்சு பாருங்க...நம்மில் எத்தனை பேர் உண்மையாலுமே சமூக அக்கறையுடன் வாழ்ந்து வருகிறோம்? "நான் நல்லபடியா டிகிரி படிச்சேன், வேலைக்கு போறேன்...கை நிறைய சம்பாதிக்கிறேன்..நல்ல அந்தஸ்துடன் வாழ்கிறேன்..அதில் உனக்கென்ன?" என்ற இந்த வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? கேள்வியை உங்களிடம் வைத்துவிட்டேன்.
எம்.ஏ தமிழ், எம்.ஏ வரலாறு கூட டிகிரி தான். பிச்சைக்காரன் கூட கைநிறைய சம்பாதிக்கிறான். சில அரசியல்வாதிகள் கூட பல அல்பத்தனங்கள் செய்து அந்தஸ்துடன் வாழ்கின்றனர்.இதை சொன்னால் "பொறாமையில் பொங்குகிறான்,குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" என்ற பதில் கேட்டு சலித்துவிட்டது எனக்கு.

"அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா
இளைத்தவன் புசிச்சிருந்தா இந்த மண்ணு தாங்காதப்பா"



கல்வி என்பதையே நாம் காசு பார்க்கும் ஒரு இயந்திரமாக எண்ணிவிட்டோம். இன்னிக்கு எது படிச்ச நல்ல சம்பளம் கிடைக்கும் என்று தான் அனைவருமே யோசிக்கின்றோமே தவிர எதை படித்தால் நாமும் முன்னேறுவோம் நம்ம நாடும் முன்னேறும் என்பதைப் பற்றி யாரும் யோசிப்பதுகூட இல்லை. விளைவு! கண்கொத்திப் பாம்பாக நம்மிடம் காசு புடுங்கும் ஏராளமான கல்வி நிலையங்கள் புற்றீசல் போல.லட்சம் லட்சமாக பணம் கொட்டிப் படித்துவிட்டு அதை வட்டியும் முதலுமாக சேர்த்து திரும்பப் பெரும் நோக்கில் வாழ்க்கை ஓட்டம்.இதில் யாருக்கும் நமது சமூகத்தைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ யோசிக்க ஒரு வினாடி கூட செலவழிக்க நேரமில்லை. எப்படியாவது குறுக்கு வழியில் சென்றாவது பணம் சம்பாதித்து விட துடிக்கிறோம். இந்த இடத்தில்,

"கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி எய்கிறாள்
வீணையை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா முறையா ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா
முறையா ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா?
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே "
 
என்ற பாடலின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றது.கற்ற கல்வி பணம் ஈட்டிக் கொடுக்கும் இயந்திரம் அல்ல. மாறாக தனி மனிதனுக்கும், அவனது சமூகத்துக்கும் பயன்பட வைக்கும் கேடயம்.


தன் பிள்ளை தன் பெண்டு தன் வாழ்க்கை என்று வாழும் நாம் என்று தான் திருந்தப் போகிறோம். நமக்கென்று ஒரு பிரச்சினை வந்தால் தான் போர்க்கொடி தூக்குகிறோம். குய்யோ முய்யோ என்று ஒப்பாரி வைக்கிறோம். இதே தானோ அல்லது தன் குடும்பமோ அல்லாத சக மனுஷனுக்கு என்றால் நாம் ஏன் கண்டுகொள்வதில்லை? பணம் மட்டும் சக மனுஷனை சந்தோஷப் படுத்திவிட முடியாது. ஒரு சராசரி நேசம், அன்பு காட்டினால் போதுமென்று எங்கேயோ படித்த ஞாபகம். அதைக் கூட வெளிப்படுத்த தயங்குவது ஏன்?
"காலம் கலிகாலம் ஆகிப்போச்சு டா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப் போச்சு டா
ஆம்பளையே இல்லாம குழந்த பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடத்துது
டப்பு மட்டும் வெச்சிருந்தா போதும்
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்
பொய் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
இதைப் பார்க்க பார்க்க மனுஷன் கொண்ட பக்தி குறையுது
இத தீர்க்க வந்த சாமிகூட ஆத்தில் கரையுது "

இப்போதாவது தனது குடும்பத்துக்கென்று வாழ்ந்து வருகிறோம். இன்னும் சில வருடங்களில் அதுவும் ஒழிந்து தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதுமென்ற சிந்தனையில் ஒருவரை ஒருவர் அடித்து நர மாமிசம் உண்ணும் நிலையை நினைத்தால் இரண்டு பெக் எக்ஸ்ட்ரா அடித்து கண்ணைக் கட்டுகிறது.


பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் நன்றி! மீண்டும் சந்திப்போம்!


பட உதவிக்கு நன்றி: கூகிள் இமேஜஸ்.




டிஸ்கி: நானும் இன்னும் சமூகத்துக்காக ஒரு ஆணியும் புடுங்கலை. ஆனா கண்டிப்பா புடுங்குவேன்.
என்ற பாட்டை நம்மால் ரசிக்க மட்டுமே முடியும். இது கூட கர்நாடக சங்கீதம் சமூகத்தில் ஒரு சாராருக்கு மட்டுமே உரித்தானது என்று உரிமை கொண்டாடுவது போல தான்.

25 comments:

Anonymous said...

///டிஸ்கி: நானும் இன்னும் சமூகத்துக்காக ஒரு ஆணியும் புடுங்கலை. ஆனா கண்டிப்பா புடுங்குவேன்./ நானும் அப்பிடி தானுங்க ...)

MANO நாஞ்சில் மனோ said...

அய்யோ அய்யோ வடை போச்சே போச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

டிஸ்கி சூப்பர், எலேய் மக்கா நீயும் திரிந்திட்டியோ அவ்வ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

புடுங்கு ராசா நல்லா புடுங்கு....!!

டக்கால்டி said...

டிஸ்கி சூப்பர், எலேய் மக்கா நீயும் திரிந்திட்டியோ அவ்வ்வ்வ்வ்...//

திருந்தறதா? என்ன தப்பு செஞ்சேன் திருந்தறதுக்கு?

டக்கால்டி said...

புடுங்கு ராசா நல்லா புடுங்கு....!!//

என்னண்ணே கேட்ட வார்த்தையெல்லாம் பேசுறீங்க...ஒரு சபை நாகரீகம் வேணாம்....ஹி ஹி
யப்பா பதிவுலக காவலர்களே நோட் திஸ் பெர்சன்...

டக்கால்டி said...

கந்தசாமி. said...
///டிஸ்கி: நானும் இன்னும் சமூகத்துக்காக ஒரு ஆணியும் புடுங்கலை. ஆனா கண்டிப்பா புடுங்குவேன்./ நானும் அப்பிடி தானுங்க ...)

சந்தோஷமுங்க

நிரூபன் said...

"கொண்டை இருக்குறவ அள்ளி முடிஞ்சுக்குறா..உனக்கென்ன?"
"பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான்..உனக்கென்ன?"
"வேலை செஞ்சு வெள்ளாம பார்த்தது வெள்ளையப்பன்..அதை தெனாவட்டா படுத்துட்டு திங்கறவன் திண்ணையப்பன்...நமக்கென்ன?"
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறேன்..உனக்கென்ன?"//

அடப் பாவி மனுசா,
எல்லா மனிதருகளுமே சந்தர்ப்பவாதி என்பதை அருமையான தாளலயப் பாடல் மூலம் சொல்லுறீங்களே!
அப்போ நீங்க..

நிரூபன் said...

"அடுத்தவன் வயித்துக்குள்ள உன் உணவு இல்லையப்பா
இளைத்தவன் புசிச்சிருந்தா இந்த மண்ணு தாங்காதப்பா"//

தத்துவ வித்தகரே!
தமிழின் சொத்தே!
நீ வாழ்க!

டக்கால்டி said...

அடப் பாவி மனுசா,
எல்லா மனிதருகளுமே சந்தர்ப்பவாதி என்பதை அருமையான தாளலயப் பாடல் மூலம் சொல்லுறீங்களே!
அப்போ நீங்க..//

Plz read diski

டக்கால்டி said...

தத்துவ வித்தகரே!
தமிழின் சொத்தே!
நீ வாழ்க!//


வாழ்க வாழ்க!!!

நிரூபன் said...

மனிதன், பிறக்கும் போது தங்கியிருப்பவனாகப் பிறக்கிறான். வளர்ந்ததும் தன்னில் மற்றையவரைத் தங்கி வாழ வைப்பதற்காய் உழைக்கிறான், இறுதியில் தன்னக்கென்று ஏதும் இல்லாதவனாய் இறந்து போகிறான்.

உண்மையில் எல்லா மனித மனங்களுக்குள்ளும் எங்கோ ஓர் மூலையில் சுய நலத் தன்மை ஒளிந்தே உள்ளது சகோ.

டக்கால்டி said...

மனிதன், பிறக்கும் போது தங்கியிருப்பவனாகப் பிறக்கிறான். வளர்ந்ததும் தன்னில் மற்றையவரைத் தங்கி வாழ வைப்பதற்காய் உழைக்கிறான், இறுதியில் தன்னக்கென்று ஏதும் இல்லாதவனாய் இறந்து போகிறான்.

உண்மையில் எல்லா மனித மனங்களுக்குள்ளும் எங்கோ ஓர் மூலையில் சுய நலத் தன்மை ஒளிந்தே உள்ளது சகோ.//

Nalla sonneenga

நிரூபன் said...

உண்மையான அன்பு என்பது, எல்லோரிடத்திலும் பிரதியுபகாரம் அற்று இருக்கிறது என்று கூற முடியாது. ஒருவர் மற்றையவரிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத் தான் அன்பு செலுத்துகிறார். ஆகவே மனித மனங்களில் பிறருக்காப் பலர் வாழ்ந்தாலும், அவர்களின் மனங்களினை எல்லோராலும் ஆராயவோ அல்லது எடை போடவோ முடியாது.

சமூகத்திற்காக வாழுகின்ற நிலமையினை விட,
இன்றைய காலத்தில் குடும்பம், திருமண பந்தம் என்று ஓர் நிலமை உருவாகையில் அவரவர் தமது குடும்பங்களுக்காக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அதனையும் தாண்டிச் சமூகத்திற்கு வாழ ஒருவன் நினைக்கையில் அவன் முன்னே நிற்கும் முதல் பிரச்சினை பணம்.
காரணம் அவனது குடும்பத்தை, பிள்ளைகளைப் பார்க்கப் பணம் தேவை.
அதே போல சமூகத்திற்காக வாழ்கையில் சமூகத்தின் மீதான வேலைத்திட்டங்களுக்கு, செயற்பாடுகளுக்குப் பணம் தேவை.

இப்போ சொல்லுங்க சகோ.
எப்போ நீங்க ஆணி புடுங்கப் போறீங்க.

டக்கால்டி said...

இப்போ சொல்லுங்க சகோ.
எப்போ நீங்க ஆணி புடுங்கப் போறீங்க.//

Thanks god I am still single. I will do it soon.

Unknown said...

மாப்ள....ஒன்னு சொல்லிக்கறேன்..
எங்க இருந்தாலும் சமூகத்துக்கு உன் சேவையை செய்ய முடியும்.......முடியாதுன்னு நெனச்சிருந்தா இந்த பணிக்கு நீ வந்திருக்க முடியாது....நீ இப்போ சொல்றியே......
குடும்பங்கறது...
அதுக்கான முதல் உன் கடமையை முடி......நாட்டுப்பணிஉனக்காக காத்திருக்கு.......அப்போ குடும்பத்த நினைக்காதே.........இது என் தாழ்மையான கருத்து!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேவையான ஆணிகளை பிடுங்க என் வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணம் 7

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் நல்லாத்தானே இருந்தாரு.. திடீர்னு சமூக அக்கறை எல்லாம் வர காரணம் என்ன? ஏதோ ப்ளூ க்ராஸ் ஃபிகரை லவ் பண்றாரோ? #டவுட்டு

செங்கோவி said...

ஆதங்கத்தை அள்ளிக் கொட்டி இருக்கீங்களே.

Prabu Krishna said...

//அண்ணன் நல்லாத்தானே இருந்தாரு.. திடீர்னு சமூக அக்கறை எல்லாம் வர காரணம் என்ன? ஏதோ ப்ளூ க்ராஸ் ஃபிகரை லவ் பண்றாரோ? #டவுட்டு//

நானும் வழிமொழிகிறேன். ஹி ஹி ஹி.

ஆனாலும் நல்லது பண்ணுவோம். நம்ம பாக்கெட்ல இருந்து. சரியா ??

Unknown said...

யோவ் தலைப்பை இப்படி போட்டு ஏன் இறந்து போன கோபாலை ஞாபகப்படுத்துறீங்க

Unknown said...

உங்க சமூக அக்கறையை அழகாக வெளிப்படுத்தியிருக்கீங்க...

என்னுடைய கருத்து... மக்கள் கல்வியை காசு சம்பாதிக்கப் படிக்கனும்னு நினைக்கறதுக்கு முன்பிருந்தே கல்வி நிறுவனங்கள் காசு புடுங்கிட்டுதான் இருந்தன..

சக்தி கல்வி மையம் said...

நான் ரொம்பஆஆஆஆஆஆஆஆஆ லேட்டு..

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக் லே அவுட் மாத்தீட்டீங்க போல? ட்ரீட்? ஹி ஹி