May 9, 2011

எங்கேயும் காதல்- ஒரு டக்கால்டி ரிப்போர்ட்

எங்கேயும் காதல்- ஒரு டக்கால்டி ரிப்போர்ட்

இந்த மாதிரி எவ்வளவு படம் வேண்டும் என்றாலும் எடுக்கலாம். ஜெயம் ரவி- ஹன்சிகா காதல் செய்கிறாகள். நாம் ஏற்கனவே பார்த்த குஷி, உன்னாலே உன்னாலே இன்னும் சில படங்கள் எல்லாம் கலந்து கட்டி அடித்து பிலிம் ரோலில் சுருட்டினால் அது தாங்க இந்த எங்கேயும் காதல்.

இந்த படத்தை பிடிச்சுருக்குனும் சொல்ல முடியல. செம ப்ளேடுனும் சொல்ல முடியல. ஏன்னா...

படத்தோட டைட்டில் கார்டு ஓடும் போது ஒரு பாட்டு போடுறாங்க. எல்லாரோட பேரும் ஓடுது. சீக்கிரம் படத்தை போடுங்கப்பா என்று நினைக்கும் போதே படத்தோட முதல் பாட்டு முதல் காட்சியிலேயே வருது. அதுலயும் இந்த படத்தோட இயக்குனரு, நம்ம இந்திய இறையாண்மை (அடச்சே! இப்ப எல்லாம் இந்திய என்று சொன்னாலே இறையாண்மை இலவச இணைப்பா கூடவே வந்துடுது ) இந்தியா மைக்கேல் ஜாக்சன் ஒரு தத்துவம் சொல்லுவாரு பாருங்க...அட அட அட...என்னது அது? ஆஹ்ங்.."பிரான்ஸ் காதலர்களின் சொர்க்க தேசம்..இங்க பாருங்க ரோட்டுலையும் காதல்...மாடிலையும் காதல்...பறவைங்களும் காதல் செய்யுது..சிலைங்க கூட காதல் செய்யுது" அப்படின்னு ஏதேதோ சொன்னாருங்க. என்னாடா நம்ம ஊருல சிலைங்க மீது பறவைங்களுக்கு காதல் வந்து சிலைங்க தலை மேல கக்கா போகும்னு தெரியும், இதென்னட புதுசா இருக்கு? எதோ புதுமையான படம் போல என்று நினைத்த உடனேயே ஒரு பாட்டு. அந்த பாட்டுல நம்ம ஜாக்சன் அங்கிள் ஆடுறாரு. இல்ல இல்ல நடந்து நடந்து நயன நடிகை நெனச்சு கூவுறாரு.


பாட்டுக்கு அப்புறம் வழக்கம் போல எஸ்.ஜே சூரியா பாணியில் ஹீரோ-ஹீரோயின் இன்ட்ரோ. ஹீரோ 'அன்பே வா' ஜே.பி போல பேரும் தொழிலதிபர். உல்லாச பயணமாக வருடம் ஒரு முறை பிரான்ஸ் வருவாரு, குஜால்டி பண்ணுவாரு, கலா ரசிகன் அப்படின்னு ஒரு பக்கம். (அப்போ நம்ம ஓட்ட வடை நாராயணன் பிரான்ஸ்ல வருஷம் முழுக்க குஜால்டி தான் பண்ணுறாரா?ஹி ஹி...) ஹீரோயின் மியூசிக் காலேஜில வயலின் படிக்குறா அப்படின்னு இன்னொரு பக்கம்.இப்பவே மேல்மூச்சு கீழ்மூச்சு எல்லாம் போச்சு.



நடுவுல அருமையான நடிகரான (உண்மையாலுமே அருமையான நடிகர் தானுங்க..நான் கலாய்க்கல) பிரகாஷ்ராஜ் அப்பப்போ வர்றாரு. இந்த படத்துல உங்களுக்கு கேரக்டர் இல்ல...வேணும்னா ஓசியில பிரான்சை சுத்தி பாருங்க என்று காமெடி வேற. (கொய்யால எவன் அப்பன் பணம்? கல்பாத்தி அகோரம்...அரோகரா அரோகரா!!!)


நடுவுல நடுவுல குய்யோமுய்யோனு நிறைய பாட்டு. ஹீரோ ஹீரோயினை கடுப்பேத்த, பதிலுக்கு ஹீரோயின் ஹீரோவை கடுப்பேத்த, இவர்களுக்கு நடுவில் நண்பனான ராஜுசுந்தரம் காமெடியனாக (உன்னாலே உன்னாலே படத்துல பார்த்த அதே மாதிரி கேரக்டர் ராஜுசுந்தரத்துக்கு) ஒருவழியா படம் ஓடுது.


நடுவுல ஒரு பைட்டு வேணுமில்ல அதுக்கு பழைய புளித்துப் போன ஒரு சீக்வென்ஸ். நாடு ராத்திரி குட்டைப் பாவாடை அணிந்த ஹீரோயின் ரோமியோக்களிடம் மாட்டிக்கொள்ள ஹீரோ காப்பாற்றுகிறார்.


இப்படி பார்த்து பார்த்து இந்த காதல் காவியத்தை செதுக்கி இருக்கிறார் நம்ம இயக்குனரு. (இவரை பேசாம நடிக்கவே சொல்லுங்கப்பா..சுந்தர்.சி நடிச்சு கொல்லுறார்..இவரு படம் இயக்கி கொல்லுறார்...)


படத்துல எனக்கு பிடிச்ச சில விஷயங்கள் என்னன்னா...


(1) 'நெஞ்சில் நெஞ்சில்' என்ற பாடல்.இந்த பாட்டும் ஜே ஜே ல வர உன்னை நான் லோகேஷன்ல அமைந்திருப்பது வேற மேட்டரு...


(2)படம் மொத்தம் ரெண்டு மணி நேரம் தான் ஓடுது. பாட்டு வரும் போதெல்லாம் தம் அடிக்க போயிட்டா ஒன்றரை மணி நேரம் தான் படமே...ஹை ஜாலி...


(ஹன்சிகா புடிக்கும்னு நான் சொல்வேன்னு எதிர்பார்த்தீங்க இல்ல..ஹி ஹி...)


எனவே, 'என்கிட்டே நிறைய பணம் இருக்கு, போர் அடிக்குது, என் ஆளை/பொண்டாட்டியை படத்துக்கு கூட்டிட்டு போயே ஆகணும்' என்போர் படத்துக்கு போங்க...
ஒலக சினிமா சினிமா பாக்குறவுங்க அப்பீட் ஆயிடுங்க...என்ன மாதிரி ஏமாந்த சோணகிரி ஆளுங்க படத்துக்கு போகாம எஸ்கேப் ஆயிடுங்க...


பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் நன்றி...படத்தை பொறுமையுடன் பார்ப்பதை தவிர்க்க இதை பொறுமையுடன் வாசித்தவர்களுக்கு..படத்தையும் பார்த்து இந்த இடுகையும் பொறுமையுடன் படிப்பவர்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை...ஹி ஹி...ஹி ஹி...வர்ட்டா...


படங்கள் உதவி- கூகிள் இமேஜஸ்..நன்றி..ஹி ஹி...

26 comments:

Sivakumar said...

I AM ESCAPE!!

டக்கால்டி said...

I AM ESCAPE!!//

Me Espaca...(In actor Mayilsamy style..He He...)

காங்கேயம் P.நந்தகுமார் said...

அப்ப படம் ஊத்திக்குமா? ஊத்திக்காதா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

மெய்யாலுமே குப்பையா?அப்பாதப்பிச்சேன்டாநன்றி டக்கால்டி!

test said...

போங்க பாஸ்! பிரபுதேவா திரும்ப நடிச்சா தாங்க முடியுமா? டைரக்ஷன்னா ஒக்கே எதோ ரெண்டு வருஷத்துக்கு ஒருதரம் நம்மை கொல்லுவார். ஆனா சுந்தர்.சி கண்டிப்பா திரும்ப இயக்குனராகணும்! முடியல! :-)

சக்தி கல்வி மையம் said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பப் பொறுமை ...

MANO நாஞ்சில் மனோ said...

இதுக்குதான் டக்கால்டி'ன்னு பேரே வச்சிகிட்டீராக்கும் ம்ஹும்...

MANO நாஞ்சில் மனோ said...

ரெண்டு மூணு குட்டிங்க போட்டோ போட்டுருந்தா நல்லா இருந்துருக்கும்னு தோணுது...

MANO நாஞ்சில் மனோ said...

பொறுமையா படத்தை பார்த்தீராக்கும் ஹி ஹி ஹி ஹி...

Anonymous said...

மொக்கை படம் பாஸ் இதிலும் பார்க்க வானம் எவ்வளவோ மேல்

பொன் மாலை பொழுது said...

//ரெண்டு மூணு குட்டிங்க போட்டோ போட்டிருந்தா நல்ள்ளயிருக்குமுன்னு தோணுது//

-------நாஞ்சில் மனோ.

உங்களுகெல்லாம் சுத்தமா சீவி வுட்டு அனுபியிருக்கணும். தப்பு பண்ணிட்டாங்க வூட்ல. இருடீ ..................ஊருக்கு வருவில்ல?

டக்கால்டி said...

@ tamil444news-Yes! you escaped from the mokkai in my view

டக்கால்டி said...

@Ji-

Prabhudeva is a good actor boss. I agree Sundar C matter.

டக்கால்டி said...

இதுக்குதான் டக்கால்டி'ன்னு பேரே வச்சிகிட்டீராக்கும் ம்ஹும்...//

He He

டக்கால்டி said...

ரெண்டு மூணு குட்டிங்க போட்டோ போட்டுருந்தா நல்லா இருந்துருக்கும்னு தோணுது...//

No gaja gaja posters in my blog...Because I am following and respecting tamil culture..He He...

டக்கால்டி said...

பொறுமையா படத்தை பார்த்தீராக்கும் ஹி ஹி ஹி ஹி...//

Kaduppugalai kilappaatheenganne

டக்கால்டி said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்பப் பொறுமை ...//

Nandri Nanba

டக்கால்டி said...

மொக்கை படம் பாஸ் இதிலும் பார்க்க வானம் எவ்வளவோ மேல்//

Yes Boss

டக்கால்டி said...

உங்களுகெல்லாம் சுத்தமா சீவி வுட்டு அனுபியிருக்கணும். தப்பு பண்ணிட்டாங்க வூட்ல. இருடீ ..................ஊருக்கு வருவில்ல?//

Enna oru villa thanam

rajamelaiyur said...

Nan intervel la vanthuden. 50 rs waste

செங்கோவி said...

எங்க ஹன்சியைப் பிடிக்காத டகால்ட்டியை எனக்குப் பிடிக்கலை..பிடிக்கலை!

Unknown said...

மீ நோ ஹை படா நை ஹை!

சி.பி.செந்தில்குமார் said...

டகால்டி ஒரு இடத்துல கூட ஹன்சிகாவை வர்ணீக்காததால் ரசனை கெட்ட ஆளோட சங்காத்தம் வைக்ககூடாது என்ற விதியின் படி டகால்டியை டைவர்ஸ் செய்கிறேன் ஹி ஹி

நிரூபன் said...

படம் பார்ப்பதா/ வேண்டாமா என்பதை உங்கள் விமர்சனமே விடையாய் சொல்கிறது.
ஐயாம் எஸ்கேப்....
நீங்கள் கூறும் குஷி, உன்னாலே உன்னாலே எல்லாம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது, ஆதலால் இயக்குனர் ரீமேக் ஆகவும் ரீ என்ரி ஆகவும் தர முயற்சி செய்திருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சக்தி கல்வி மையம் said...

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
நேரம் இருந்தால் பார்க்கவும்..


என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

Prabu Krishna said...

ஆகா விமர்சனமே பயமுறுத்துகிறதே.