May 3, 2011

'சா'வைக் கொன்ற 'பா' - ஒ(சா)பாமா

வணக்கம் நண்பர்களே!

பின்லேடனுக்குப் பின்?!


பின்லேடன் சகாப்தம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. அவனது சாவு செய்தி கேட்டதிலிருந்தே அமெரிக்கவாசிகள் இனிப்பு கொடுத்து கொண்டாடியதாக செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. நாம் தான் நரகாசுரனை வதைத்த தினத்தில் தீபாவளி கொண்டாடுவோம் என்றால், "உங்களுக்கு நாங்க எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை" என்று வெள்ளைக்காரனும் ஆரம்பித்துவிட்டான்."கண்ணில் படும் அமெரிக்கர்களை எல்லாம் சுடு" என்ற கொள்கையுடன் செயல்பட்ட பின்லேடனின் மறைவுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் மிகவும் அசிங்கமானவை. அதைப் பற்றிய எனது சில கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன்.



அமெரிக்காவின் பாசிச மனநிலை மற்றும் உலகநாடுகளை ஏமாற்றி சுரண்டுதல்,யு.என்.ஒ வை தந்திரமாக சமாதானப்படுத்தி நல்ல விஷயத்துக்காக செய்கிறேன் பேர்வழி என்று தனது நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மற்ற உலக நாடுகளின் வளத்தை சுரண்டுவது போன்றவை நான் கூறி தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை. இருப்பினும் எப்படியெல்லாம் உலக நாடுகளுக்கு 'டேக்கா' கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்கனவே எனது முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டதைப்போல தோழர் பாமரனின் எழுத்தில் "அகிம்சாமூர்த்தி அமெரிக்கா" என்ற புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


பல நாடுகளில் கம்யுனிசத்தை எதிர்ப்பதாக காரணமாக காட்டி அமெரிக்கா சுரண்டியதை விலாவரியாக எழுதி இருக்கிறார். சிலி, லிபியா, இந்தோனேசியா,ஈக்வெடார்,உருகுவே போன்ற நாடுகளின் தலைவர்கள், மக்கள் அடைந்த துயரத்தை விளக்கி இருக்கிறார். நீங்களும் நேரம் கிடைத்தால் கண்டிப்பாக வாசியுங்கள்.


முன்பு சதாம் ஹுசைன்,தற்போது பின்லேடன். அடுத்த வருட அதிபர் தேர்தலுக்கு நல்லதொரு துருப்புச் சீட்டை உருவாக்கிகொண்டுவிட்டார் ஒபாமா. அமெரிக்காவிலும் தினமும் ஏறி வரும் பெட்ரோல்,டீஸல் விலையால் மிகப்பெரிய அதிருப்தியில் இருந்த மக்கள் பின்லேடன் மரணமடைந்த செய்தி கேட்டு உற்சாகம் அடைந்து உள்ளனர்.


ஆகமொத்தம் உலகம் முழுவதும் அரசியல்வாதிகளின் மனநிலை ஒன்றே தான்.அது வீரப்பனை கொன்ற ஜெ.ஜெ ஆகட்டும், சதாம் ஹுசைனை கொன்ற புஷ் ஆகட்டும், ஒசாமாவை கொன்ற ஒபாமா ஆகட்டும். எதோ ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்துக்காக போராடி இறந்த நபர்களின் சாவும் கிட்டத்தட்ட ஒரே போல தான் அரங்கேறியிருக்கின்றன.


அது தங்களின் இளமைக்காலத்தில் சிங்கம் போல கர்ஜித்து விட்டு,வயதான காலத்தில் தளர்ந்திருக்கும் போது பிடிபட்டு சாவது. இதற்கு பிரபாகரனும் விதிவிலக்கல்ல, வீரப்பனும் விதிவிலக்கல்ல, சதாம் ஹுசைனும், ஒசாமாவும் அப்படியே. என்றைக்குமே செத்த பாம்பை அடித்த வீரர்கள் தான் அரசியல்வாதிகள்.வின்னர் படத்தில் வடிவேலு சொல்லுற மாதிரி "அங்க என்ன போட்டு புரட்டி எடுத்தாங்க..அப்பா ஒரு பயபக்கியும் காணோம்...நாளைக்கு சாகப் போற கிழவியை போட்டுத் தள்ளுவியா?" என்பது போல தான்.






ஏற்கனவே அய்மான்-அல்-ஜவாஹிரி என்ற இன்னொரு தலைவன் அல்-கொய்தாவுக்கு தயாராகிவிட்டான்.நாட்டில் தீவிரவாதம் மட்டும் வெட்ட வெட்ட தழைத்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த புதுத் தலைவன் இன்னும் எத்தனைக் குரூரங்களை நடத்தப் போகிறானோ?


பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் நன்றி!

18 comments:

நிரூபன் said...

என்ன, பதிவை காப்பி பண்ண முடியாத படி, பூட்டு போட்டிருக்கீங்க சகோ.

நிரூபன் said...

அமெரிக்கா, ஆதிக்க வாதத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குவதோடு, தான் விரும்பும் நேரத்தில், யார் மீது, என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இத்தகைய சம்பவங்களே சான்று.

Anonymous said...

ஒசாமாவும் தீவிரவாதி அமெரிக்காவும் தீவிரவாதி. என்ன சிறு வேறுபாடு என்றால் அமெரிக்கா ஜனநாயக முலாம் பூசப்பட்ட தீவிரவாதி

Unknown said...

ஆகா... இதே போன்று எண்ண ஓட்டத்துடன் தான் நானும் பதிவெழுதியுள்ளேன்.. உங்கள் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது சகோ.

Unknown said...

//ஒசாமாவும் தீவிரவாதி அமெரிக்காவும் தீவிரவாதி. என்ன சிறு வேறுபாடு என்றால் அமெரிக்கா ஜனநாயக முலாம் பூசப்பட்ட தீவிரவாதி///



நல்ல பளிச் கருத்து இது..

Unknown said...

//பல ஆயிரம் பேரை கொன்றவர் என்ற போர்வையில் ஒசாமா கொல்லப்படுகிறார் என்றால், பல்வேறு நாடுகளில் தனது நாட்டாமை போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்கா கொல்லுவது மட்டும் நியாயமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.//

டக்கால்டி said...

வருகைக்கு நன்றி சகோ

டக்கால்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாரதி...

டக்கால்டி said...

ஒசாமாவும் தீவிரவாதி அமெரிக்காவும் தீவிரவாதி. என்ன சிறு வேறுபாடு என்றால் அமெரிக்கா ஜனநாயக முலாம் பூசப்பட்ட தீவிரவாதி//


கலக்கல் கந்தசாமி

Unknown said...

தீவிரவாதம் என்பதே ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக கொண்டதே அமெரிக்கா தானே!

செங்கோவி said...

நல்ல சிந்தனை டகால்ட்டி!

சக்தி கல்வி மையம் said...

சபாஷ் சரியான சவுக்கடி, சாட்டையடி பதிவு நண்பா?

சி.பி.செந்தில்குமார் said...

என்ன திடீர்னு சீரியஸ்?

அஞ்சா சிங்கம் said...

அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொல்வது தீவிரவாதம் என்று எடுத்து கொண்டால் ...
ஹிரோஷிமா நாகசாஹி யில் இறந்தவர்கள் எல்லாம் ராணுவ வீரர்களா ?
அரசாங்கத்தை எதிர்த்த கிளர்ச்சியாளர்களா ?
பின் அவர்களை ஏன் கொத்து கொத்தாக கொலை செய்ததாம் ?
உலகின் மிக பெரிய தீவிரவாத தாக்குதல் அதுதானே.................
உலகின் மிக பெரிய தீவிரவாத நாடும் அதுதானே ......................

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனி அமெரிக்காவுக்கு யாரும் எதிரி இல்லை அவர்களின் ஆதிக்கம் என்னும் ஒரு பூதம் இன்னும் பெரியதாக விஸ்வருபம் எடுக்கும்....

அமெரிக்காவின் ஆணவ்த்திற்கும் ஒரு முடிவு வரும்...

சென்னை பித்தன் said...

ஒசாமா ஒழிந்தது நல்லதுதான்;ஆனால் ’பெரியண்ணன்’ எந்த நாட்டிலும் எப்போது வேண்டுமென்றாலும் புகுந்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்
என்ற நிலைக்கு என்ன செய்ய?

Anonymous said...

சற்று முன் ஒபாமா சொன்ன வார்த்தைகள்: "ஒசாமா மறைவினால் இந்தியா-பாக் போர் வர வாய்ப்பு உண்டு". எப்படி கோத்து விடறான் பாருங்க. வஞ்சகம் பிடிச்சவன்.

பொன் மாலை பொழுது said...

//ஒசாமாவும் தீவிரவாதி அமெரிக்காவும் தீவிரவாதி. என்ன சிறு வேறுபாடு என்றால் அமெரிக்கா ஜனநாயக முலாம் பூசப்பட்ட தீவிரவாதி///

பாரத்....பாரதியின் வார்த்தைகள் ..... எளிமை! .... பிரமாதம்!!