May 4, 2011

பாட்டெல்லாம் கேட்டுப்பார்

வணக்கம் நண்பர்களே!

இவ்வளவு நாளும் சீரியஸ், லொள்ளு, மொக்கை, மொக்கை கவிதை என்று பினாத்திக் கொண்டிருந்தேன். இன்றைய இடுகை எனக்கு புதியது.இன்றைய இடுகை என்னவென்றால் உங்களை எல்லாம் ஒரு பத்து நிமிடம் கவலைகளை மறந்து ரிலாக்சாக சொக்கவைக்கும் இரண்டு பாடல்களைப் பற்றி. அதுவும் நான் தேர்வு செய்த, இந்த இரு பாடல்களுக்குள் சில ஒற்றுமைகள் ஒளிந்திருப்பது தான் ஆச்சரியம்.



நாம் எவ்வளவோ திரைப்பாடல்களைக் கேட்டிருப்போம். கேட்கும் போது பிடித்திருந்தால் திரைப்படத்தில் கண்டு ரசித்து இருக்கிறோம். சிலநேரங்களில் மனதுக்குப் பிடித்த குறிப்பிட்ட பாடல்களைக் காணவே படத்துக்குப் போவதும் உண்டு. இப்படிப் பட்ட பாடல்களால் ஒரு வருடம் திரையரங்கில் ஓடி வரலாறு படைத்த படங்களும் உண்டு. அதே போல சில பாடல்கள் பிடிக்காமல் இருக்கையை விட்டு தம் அடிக்கப் போகும் ரசிகர்களால் திரையரங்கை விட்டு ஓடிய திரைப்படங்களும் உண்டு. ஆகவே ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரைப்பாடல்களையும் சார்ந்து இருக்கிறது. என்ன தான் பாடல் இல்லாமல் உலகப்படம் எடுக்க வேண்டும் என்று நாம் கூவிக் கொண்டிருப்பினும் பாடல்களே இல்லாத திரைப்படங்களை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.


ஆனால் நான் இன்று பகிரப் போகும் இரு பாடல்களும் ஒலித்தட்டில் மட்டுமே வெளிவந்து, ஒளிப்பதிவில் வெளிவராதவை. ஆம் சில நேரங்களில் நாம் மிகவும் கேட்டு ரசித்த பாடல்களை திரைப்படங்களில் ஒளிவடிவம் பெறாதபோது, "அடச்சே...படத்துல எவ்வளவோ மொக்கை சீன இருக்க, இந்த பாட்டை நீக்கிட்டானுங்களே!" என்று நினைப்பதுண்டு. நான் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், "இந்த பாடலை திரையில் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? எந்த சீக்வென்சில் இயக்குனர் இந்த பாடலை வைத்திருப்பார்? லொகேஷன் எப்படி இருந்திருக்கும்?" என காஸ்ட்யும் முதற்கொண்டு எனது மனத்திரையில் பாடலை கேட்கும் போதே ஒட்டி விடுவேன். இது எப்படி என்றால் புதுமனிதன் என்ற படத்தில் நடிகர் சத்யராஜ், தல கவுண்டமணியிடம் கூறுவது போல தான். "கருவாட்டை வறுத்து கையில கொடுக்க வேண்டாம். அப்படி தூரக்க வெச்சாலே போதும்...(கவுண்டர்- அதை நாய் கவ்விகிட்டு போய்டும்...தலையோட டைமிங்..ஹி ஹி) அதையே மோப்பம் புடிச்சுட்டு மூணு பாட்டிலை நொங்கிட மாட்டேன்" என்று சொல்வது போல தான்.

முதலில் இரண்டு பாடல்களுக்குள்ளும் உள்ள ஒற்றுமை என்னவென்று பார்ப்போம். இரண்டுமே ஒளிவடிவில் வெளிவராதவை. இரண்டுக்குமே இசை அமைத்தது எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள்.இரண்டுமே அருமையான மெலடி பாடல்கள். இதை எல்லாவற்றையும் விட அழகான வரிகள், அருமையான இசை. இந்த இடத்தில் நான் வித்யாசாகர் சாரை பற்றி குறிப்பிட கடமைப் பட்டிருக்கிறேன். எ.ஆர்.ரகுமானும் இவரும் சமகாலத்தவர்கள். இருவருமே மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் ஒரு சேர பணியாற்றியவர்கள். மெலடி பாடல்களின் மெட்டுக்களை அமைப்பதில் வித்யாசாகர் போல என்னை யாரும் இதுவரை கவரவில்லை (ரகுமான் உட்பட). எண்ணற்ற மெலடி பாடல்கள் இவரின் கைவண்ணத்தில் பெரிதும் கவனிக்காமல் வெளிவந்திருக்கின்றன.சரி இப்போ அந்த ரெண்டு பாடல்களையும் என்னவென்று பாப்போம்.

முதல் பாடல்:மௌனமே பார்வையாய்
இடம்பெற்ற படம்:அன்பே சிவம்
இசை:வித்யாசாகர்
பாடியவர்கள்:எஸ்.பி.பி, சந்திரயி



மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னில்லே உன்னையே சுவாசிக்கின்றோம்
இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும், துள்ளும், கண்ணம்மா
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா...

ஜனனம் தந்தாள் சலனம் தந்தாள்
காதல் மொழியில்
மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம்
உந்தன் தரவில்
என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க்க சேர்க்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஒரு செய்தி அடி நீ என்பதென் பாதி
இனி நான் என்பதும் மீதி தேதி சொல்லம்மா
மௌனம் பார்வையாய்...
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்

இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடித்ததும் கனவு வரும்
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்
உணர்விலே கரைந்ததும் கலை வளரும்
மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன?
விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன?
என்றும் வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க்க சேர்க்க வரும் காலங்கள்
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஒரு மெல்லினத்தை வல்லினமும் கை சேர
உன் காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேசு

மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம்
புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னில்லே உன்னையே சுவாசிக்கின்றோம்
இது உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும், துள்ளும், கண்ணம்மா
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாணமே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா...

வரிக்கு வரி என்னவொரு வார்த்தைப் பிரயோகம்?அதுவும் எஸ்.பி.பி சார் குரல் நாளுக்கு நாள் இளமை அடைந்து வருகின்றது என்ற கூற்றுக்கு இந்த பாடல் ஒரு சான்று. "ஜனனம் தந்தாள்" என்ற வரியில் ஒலிக்கும் அவரின் குரல் மனதை மயக்கும். அதே போல பாடலின் இடையில் 'மௌனமே பார்வையாய்' என்று சிணுங்கும் பெண் குரல்..யப்பா! இந்த பாடலுக்கு நேரம் காலம் எதுவும் தேவை இல்லை. இந்த பாடலை அக்னிநட்சத்திரத்தின் போது அடிக்கும் மொட்டை வெயிலில் நின்று வெறித்தனமாக கேட்டிருக்கிறேன்.எப்பேர்பட்ட கோபமான மனநிலையும் சாந்தப் படுத்திவிடும் இந்த பாடல். காதலிப்பவர்களுக்கும், கல்யானமானவர்களுக்கும் இந்த பாடல் ஒரு வரப்ரசாதம் தானே?

இந்த பாடலை எழுதியது யார் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இரண்டாம் பாடல்: பனிக்காற்றே பனிக்காற்றே

இடம்பெற்ற படம்: ரன்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
பாடியவர்கள்: பாலராம், சாதனா சர்கம்

"ஆஅஹ் -ஆஅஹ் -அஹ -ஆஅஹ் ")


ஆண் : பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா  பரவசமா ?

பெண்: பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா பரவசமா ?

ஆண் : சத்தம் இல்லா தீபாவளியை
நெஞ்சே  கொண்டாடு

பெண் : முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே திண்டாடு

ஆண் : உயிரால் உயிரை அன்பே நீ மூடு
பனிக்காற்றே பனிக்காற்றே

பெண் : பரவசமா  பரவசமா ?


ஆண் : நான் வாழும் வீடு
ஆள் இல்லா தீவு
யாருக்கும் அனுமதி கிடையாது

பெண் : ஒ -ஒ -ஒ வழி மாறி யாரும்


வந்தாலும் வரலாம்
வீட்டுக்கு முகவரி கூடாது


ஆண் : நான் தேடும் முகமானாய்
நான் வாங்கும் மூச்சானாய்


பெண் : உயிரோடு உயிரானாய்
நான் எல்லாம் நீயானாய்


ஆண் : எதை இழந்தாலும் இழப்பேன்
உன்னை மட்டும் நீங்க மறுப்பேன்


பெண் : ஏனோ என் நெஞ்சம் நிறைந்திருக்கு


ஆண் : பனிக்காற்றே பனிக்காற்றே
பரவசமா  பரவசமா ?




பெண் : ஒ தூக்கங்கள் உனது
கனவெல்லாம் எனது
தூக்கத்தை தள்ளி போடாதே


ஆண் : பாதைகள் உனது
பாதங்கள் எனது
பயணத்தை தள்ளி போடாதே


பெண் : நீ நினைத்தால்  மறு கணமே
உன்னருகே நான் இருப்பேன்


ஆண் : உன் வழியில் கால் மிதியா
மேகங்களை நான் விரிப்பேன் ,


பெண் : இருவருமே தூங்கி விடலாம்
சில ஜென்மம் தாண்டி எழலாம்


ஆண் : கனவெல்லாம் மீண்டும் சிந்திப்போம்


பெண் : பனிக்காற்றே பனிக்காற்றே


ஆண் : பரவசமா , பரவசமா ?


பெண் : சத்தம் இல்லா தீபாவளியை
நெஞ்சே கொண்டாடு


ஆண் : முத்தம் என்னும் சூறாவளியில்
மூச்சே  திண்டாடு


பெண் : உயிரால் உயிரை அன்பே நீ மூடு


ஆண் : பனிக்காற்றே பனிக்காற்றே


பெண் : பரவசமா பரவசமா ?


இந்த பாடலுக்கு அதிகம் விளக்கம் தேவையில்லை என்று எனக்கு தெரியும். எனக்கு பிடித்த நேரம் என்றால் அது கதிரவனின் கீற்று வெளிவருவதற்கு முன் உள்ள அதிகாலை நேரமும், கதிரவன் கீற்று மறைந்த பிறகு மங்கிய வெளிச்சத்துடன் கூடிய அந்தி மாலையும் தான்.இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த வேளையில் உங்கள் காதலியையோ, மனைவியையோ நினைத்தபடி இந்த பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள் இல்லையேல் மனைவியுடனோ, காதலியுடனோ கேட்டுப் பாருங்கள்.




அப்புறம் என்ன? நான் வந்த வேலை முடிஞ்சுடுச்சு. என்னது இந்த பாடல் திரையில் எப்படி இருக்கும்னு நான் எப்படி கற்பனை பண்ணேன்னு தெரிஞ்சுக்கனுமா? சாரி பாஸ்..


"எனது கற்பனை விற்பனைக்கு அல்ல"...


பொறுமையுடன் படித்த,ரசித்த அனைவருக்கும் நன்றி!

28 comments:

நிரூபன் said...

இவ்வளவு நாளும் சீரியஸ், லொள்ளு, மொக்கை, மொக்கை கவிதை என்று பினாத்திக் கொண்டிருந்தேன். //

வணக்கம் சகோ,
விமர்சனம் எனும் முகமூடிக்கு பயந்து, தாங்கள் திருந்திவிட்டதாக இருக்கிறதே...அவ்.....

நிரூபன் said...

நாம் எவ்வளவோ திரைப்பாடல்களைக் கேட்டிருப்போம். கேட்கும் போது பிடித்திருந்தால் திரைப்படத்தில் கண்டு ரசித்து இருக்கிறோம். சிலநேரங்களில் மனதுக்குப் பிடித்த குறிப்பிட்ட பாடல்களைக் காணவே படத்துக்குப் போவதும் உண்டு.//

ஆமா, சகோ, அந்தக் காலத்தில் பாடல்களுக்காகவே நாம தியேட்டருக்குப் போயிருக்கிறோம்,
உ+ம் சின்னத் தம்பி, பொன்னுமணி...
இந்த மாதிரி பாடல்கள் ஒரு காலத்தில் எங்களையெல்லாம் கட்டிப் போட்டிருந்தன.

நிரூபன் said...

யாரோ சூனியம் வைச்சிருக்காங்க என்று நினைக்கிறேன். கூகிள் குரோமில் தங்கள் தளம் ஓப்பின் ஆகமாட்டேங்குது சகோ.

நிரூபன் said...

இந்த பாடல். காதலிப்பவர்களுக்கும், கல்யானமானவர்களுக்கும் இந்த பாடல் ஒரு வரப்ரசாதம் தானே?//

அஃதே...அஃதே...

அப்ப கட்டப் பிரம்மச்சாரிகளுக்கு..

நிரூபன் said...

சகோ காப்பி, பேஸ்ட் பண்ண முடியாதபடி தாங்கள் பூட்டு போட்டு வைத்தாலும், உடைச்சிடுவம் இல்ல.

நிரூபன் said...

இந்த பாடலை எழுதியது யார் என்று எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.//

தெரியலையே சகோ...

நிரூபன் said...

இரண்டு பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை-

இதயத்தை வருடி, இதமான கனவுகளைத் தந்து,
எம்மையெல்லாம் தூங்க வைக்கும் திறன் இருக்கிறது.

சரி தானே சகோ.

நிரூபன் said...

"எனது கற்பனை விற்பனைக்கு அல்ல"..//

இது யாருக்கோ குத்துவது மாதிரி இருக்கு சகோ.

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

சக்தி கல்வி மையம் said...

நிரூபன் said...

இவ்வளவு நாளும் சீரியஸ், லொள்ளு, மொக்கை, மொக்கை கவிதை என்று பினாத்திக் கொண்டிருந்தேன். //

வணக்கம் சகோ,
விமர்சனம் எனும் முகமூடிக்கு பயந்து, தாங்கள் திருந்திவிட்டதாக இருக்கிறதே...அவ்.....///// நண்பா இதுக்கெல்லாம் ... என்ன சொல்ல.. உன் விருப்பம் அவ்வளவு தான்..

Anonymous said...

புது முயற்சி...பனிக்காற்றே பாடல் நான் கேட்டதில்லை..ஆனால் வரிகள் அருமை

Anonymous said...

இவ்வளவு நாளும் சீரியஸ், லொள்ளு, மொக்கை, மொக்கை கவிதை என்று பினாத்திக் கொண்டிருந்தேன்///
ஆமா இனி காவியம் மட்டும்தான் ஹிஹி

Unknown said...

ரைட்டு அண்ணே!

MANO நாஞ்சில் மனோ said...

என்ன டக்கால்டி, ரூட்டு மாறுது....

MANO நாஞ்சில் மனோ said...

பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஒய்....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
ரைட்டு அண்ணே!///


என்ன ரைட்டு...? அவரு என்ன பைக்லையா போயிட்டு இருக்காரு...?

Prabu Krishna said...

பாட்டு கேட்டு இருக்கேன் ஆனா படத்துல இல்லைனு இப்போதான் தெரியுது. நல்ல பாட்டுகள்

Prabu Krishna said...

மௌனமே பார்வையாய்-- பா.விஜய்
"பனிக்காற்றே" தெரியவில்லை

சென்னை பித்தன் said...

கேட்டுப் பாத்தாச்சு!நல்லாத்தான் இருக்கு!

டக்கால்டி said...

Thanks for the comments friends...
If you all like this i shall continue...Just for a change i put this post...No Blog politics behind...He He...

செங்கோவி said...

நல்லா இருக்கு டகால்ட்டி..இதையும் ஒரு கை பாருங்க!

செங்கோவி said...

தளபதியிலும் ‘புத்தம் புது பூ’ பாடலும் நல்லா இருக்கும்..படத்தில் இல்லை!

டக்கால்டி said...

@ Sengovi- To be honest i thought of writing that too...But due to the length of the post i left it. Will do that soon.Some more songs are also there

விமர்சனம் said...

பதிவர்கள் தங்களது சொந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியம். காப்பி பேஸ்ட் செய்வதற்கு அந்த குறிப்பிட்ட தளத்திற்கு இணைப்பு கொடுத்து பதிவின் சொந்தகாரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தால் என்ன? யாரோ திறமையை திருடி தங்கள் பதிவுலக ராஜாக்கள் என்ற பட்டத்தை சூடி ஊரை ஏன் ஏமாற்ற வேண்டும்?
இவர்களால் பல தரமான பதிவர்கள் எழுதுவதை நிறுத்தியதோடு, திருட்டு பதிவர்களின் (உம் வேடந்தாங்கல் கருண்) போன்றோர் மீது துப்பிய எச்சில் அனைவரின் மீது விழுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

திருட்டுப்பதிவிலும், காப்பி பேஸ்ட் பதிவிலும் தமிழ்மணத்தில் ஓட்டி வாங்கி சிறந்த பதிவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் சிறுபுத்திக்காரர்களைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். இதை செய்யாதவர்கள் இதை செய்தவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டாம்.காரணம், இந்த அசிங்கமான கலாச்சாரத்தில் அழியப்போகப்போவது எல்லோரும் தான்.

இதை ஏணியாக வைத்து மேலே ஏற வாய்ப்புகள் உள்ள போது அந்த மாதிரியான பதிவர்களை குறுக்கு வழியில் கிழே தள்ளினால் உண்மையான திறமை வாய்ந்தவர்களின் எப்படி முன்னேறு வார்கள்?

காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு இது தான் பொழைப்பு என்றால் திறமைசாலிகளுக்கு வழி விடுவது தானே உத்தமம்!
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதனால் யாரும் வக்காலது வாங்கி மேலும் மேலும் காப்பி பேஸ்ட் திருட்டு பதிவர்களை ஊக்குவிக்க வேண்டாம்

Sathish said...

all songs are good as we know it already.. but your review more good than songs.. keep it up.. good work

டக்கால்டி said...

@ Vimarsanam- Thanks for your comments. Again I ll try. But please dont force anyone to do what you are thinking.

Mahan.Thamesh said...

பாடல்கள் அருமை

பொன் மாலை பொழுது said...

என்னா மேன், ஆளையே காணோம்? நானும் இந்தபக்கம் வர லேட்டாயிடுச்சி