Jul 28, 2011

பவர் ஸ்டாரின் அடுத்தடுத்த படைப்புகள்

 வணக்கம் நண்பர்களே,

நம்ம பவர் ஸ்டார் டாகுடறு அடுத்தடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்ற லிஸ்ட் உங்களுக்காக. இப்போவே உடல் அளவாலும், மனதளவாலும் முன்னேற்பாடக தயாராகிக் கொள்ளுங்கள்.





அண்ணன் விக் இல்லாம எவ்வளவு தெகிரியமா போஸ் கொடுத்துருக்காரு பாருங்க. அது சரி அவருக்கென்ன கவலை, அதைப் பார்க்கிற நாம தானே கவலைப்படணும். யோவ்!!! பார்ட்னர் பன்னிக்குட்டி இந்த மொத்த இடுகையும் உனக்கே சமர்ப்பயாமி!!!














யாரு சார் அந்த ஹீரோயினி தேவிகலா? அந்த பொண்ணோட சகிப்புத்தன்மை மற்றும் தைரியத்துக்காக எதாச்சும் ஒரு அவார்டு கொடுங்கப்பூ... அவ்வவ்வ்வ்வ்....





நம்ம டாகுடறு ஒரு விஷயத்துல மட்டும் ரொம்ப தெளிவா இருக்காருங்க. 'சுரங்கப்பாதை'ல யுவராணி, 'தேசிய நெடுஞ்சாலை'ல சங்கவி. ஒ.கே ஒ.கே. அட நான் அந்த சமாசாரத்தை சொல்லலைங்க. இந்த ரெண்டு ஹீரோயினி கூட ஆரம்ப காலத்துல நடிச்சு நம்ம டாகுடறு மாதிரியே பெரிய ஹீரோ ஆனா இன்னொரு டாகுடறு இருக்காரு. என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா?





இந்திரசேனா படத்துக்கு தான் ஐ ஆம் வெயிடிங். பிகாஸ் டூ லெஜெண்ட்ஸ் ஆர் அக்டிங் டுகெதர் யு நோ. ஆமாங்க நம்ம "18 வயசு புயலே' படப்புகழ் தமிழரசன் மற்றும் லத்திகா புகழ் 'டாகுடறு' இவுங்க ரெண்டு பேத்தையும் தான் சொல்றேன். எல்லாம் சரி அது யாருங்க இயக்குனர்? பேரை பார்த்தீங்களா? பன்ச் பரத் ஆம்... ஐயோ ஐயோ... அதெப்படி அண்ணனோட எல்லா படத்துக்கும் ஒரே இயக்குனர் இருக்காரு. அண்ணனோட கலை அற்பணிப்பை பார்த்து மிரண்டிருப்பாரோ?


இதெல்லாம் நம்ம அண்ணன் டாகுடறு சீனிவாசரை (ர்ர்ர்ர் ர்ர்ர்ர்...மரியாதை...நான் ர்ர்ர்அ வுடுலீங்க) பற்றி இணையத்தில் குவிந்த கமெண்ட்ஸ்.
























































































ஆக மொத்தம் இன்றைய தேதியில கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் 'பயங்கர' பிசியான ஒரே நடிகர் நம்ம அண்ணன் தான்.


இன்னிக்கு இந்த அளவுக்கு கொடுமை போதும்னு நினைக்கிறேன். மீண்டும் இதே போல எழவு கொட்ட வருகிறேன். ஹி ஹி...

நன்றி: Popcorn India Website


Jul 27, 2011

தித்திக்கும் இளமை - ஒரு டக்கால்டி ரிப்போர்ட்

வணக்கம் நண்பர்களே!!! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? இன்றைய இடுகை தித்திக்கும் இளமை என்ற ஒரு உலக மகா காவியம் பற்றி. 'உனக்கு தான் படம் பிடிக்கலைல அப்புறம் எதுக்கு அதைப் பற்றி கேவலமாக எழுதி ஒரு இடுகையை ஒப்பேற்றுகிறாய்' எனும் நண்பர்களுக்கு எனது பதில் 'பிடிக்காத படம் மொக்கை படம் என்று எதுவுமே கிடையாது. படம் எடுக்கும் விதத்தில் எவ்வாறு கோட்டை விடுகிறார்கள் என்பதில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது. பலருக்கு இம்மாதிரி லோ-பட்ஜெட் மொக்கை படங்கள் தெரியாமலே போகலாம். இதனால் இப்படங்களில் சொல்லப்படும் சில நல்ல விஷயங்கள் மக்களிடம் சேராமல் போகின்றது. எதோ ராமருக்கு உதவிய அணில் கணக்காக என்னால் முடிந்த சிறு முயற்சியாக சில லோ-பட்ஜெட் படங்களைப் பற்றி எழுதி வருகிறேன்.' அந்த வரிசையில் இந்த இடுகையில் நாம் பார்க்கப் போகும் படம் தான் 'தித்திக்கும் இளமை'.

படம் பேரை கேட்டுட்டு அண்ணன் சி.பி கணக்கில் குஜால் ஆகுவோர் ஏமாற்றம் அடைவீர்கள். இந்த படம் பேரு துள்ளுவதோ இளமை இல்லை 'தித்திக்கும் இளமை'. அநேகமாக இந்த படம் 5 வருடங்கள் முன்னாலேயே தயாரிக்கப்பட்டு 'நிதி' யின் விதியால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆட்சி மாற்றத்திற்குப் பின் அலுத்துப் போயி வெளியிட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர்.

நடிகர்கள்- தினேஷ், அல்தாரா, நிஷா, தலைவாசல் விஜய், மன்சூர் அலிகான், செந்தில், நிழல்கள் ரவி, சந்தானபாரதி, அஜய் ரத்னம், விஜய் கிருஷ்ணராஜ், பயில்வான் ரங்கநாதன், பாத்திமா பாபு, லக்ஷா

இயக்கம் - சந்திர மோகன்
தயாரிப்பு - எஸ்.சுப்பிரமணியம்
இசை - கே.மனிஷ்

படத்தின் துவக்கத்திலேயே பாதி காட்சிகளை ஊகித்துவிட முடியும். பால்காரர் காமெடியன் செந்தில்-சி.ஆர் சரஸ்வதி தம்பதியின் மகன், ஐயர் ஆத்து சந்தானபாரதியின் மகன், பணக்கார நிழல்கள் ரவியின் மகள், மலம் அள்ளும் "ஸ்டிக் இல்ல ஸ்டிக் மாதிரி" புகழ் நடிகரின் மகன் என ஒரு இளமைப் பட்டாளத்தின் வாலிபக் கூத்து எப்படி அவர்களுக்கு ஆபத்தாக முடிகின்றது என்று சொல்லும் படம்.

வழக்கம் போலவே தன் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர், அவர்களை ஏமாற்றி, தானும் ஏமாறுவது தெரியாமல் ஊர் சுற்றும் அவர்களின் பிள்ளைகள், அவர்கள் வாலிப வயதில் செய்கின்ற அநியாய தவறுகளுக்கு எப்படி யாரால் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதே கதை.

இதில் ஒரே அறையில் வசித்து, 'என் புருஷனும் கச்சேரிக்கு போகிறான்' என்ற கதையை கல்லூரிக்கு செல்லும் மூன்று நண்பர்கள் மற்றும் அவர்களுடன் கல்லூரியில் படிக்கும் நாயகி ஆகியோரே கதையின் மையக் கதாப்பாத்திரங்கள். யாரையோ தேடி வந்து, வீடு தேடி அலைந்து பின்னர் இந்த மூன்று நண்பர்களின் அறைகளில் தங்கும் வைப் பேச முடியாத கேரக்டரில் ஒருவர். அவர் தான் படத்தின் உண்மையான ஹீரோ. மூன்று நண்பர்களில் ஒருவன் பால்காரராக வரும் செந்தில்-சி.ஆர்.சரஸ்வதி தம்பதியின் மகன்.மற்றொருவர் மலம் அள்ளும் 'ஸ்டிக் இல்ல ஸ்டிக் மாதிரி' வசன புகழ் நடிகரின் மகன். இன்னொருவன் ஆச்சார ப்ராமண குடும்பத்தில் பிறந்த சந்தானபாரதியின் மகன். ஆனால் வழக்கம் போல கூடப் படிக்கும் நாயகி மட்டும் செல்வச் சீமான் நிழல்கல் ரவியின் மகள்.இவர்கள் அனைவரும் கல்லூரி காலத்துக்கே உரிய இளமைத் துள்ளலில் இருக்க, இவர்களின் பெற்றோர் இவர்களை கஷ்டப்பட்டு படிக்க வைப்பதை மறந்து, அறையில் இருக்கும் அந்த மூன்று நண்பர்களும் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் ஊதாரியாக சுற்றுவதோடு மட்டும் இல்லாமல், வீட்டில் பெற்றோரை ஏமாற்றி காசு பிடுங்கி, மது,மாது என்று சுற்றுகிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலேயே சந்தானபாரதியிடம் அவர் மனைவி,' ஏன்னா இன்னிக்கு அவனுக்கு பிறந்தநாள், நாம பகவான் கிட்ட வேண்டியபடியே விரதம் இருப்பனோல்யோ?' என கேட்க, 'போடி அவன் என் பையன்டி..அதெல்லாம் கரெக்டா இருப்பான்..நீ போட்டு குழப்பிக்காதே' என்று சந்தானபாரதி சொன்னவுடனேயே கட் பண்ணி ஒப்பன் பண்ண நம்ம ஹீரோ அங்கே தண்ணி அடிக்கும் காட்சி வருகிறது. அதுவும் ஒரு காட்சியில் கையில் காசு இல்லை என்று ஒருவன் சொல்ல இன்னொருவன், 'நம்ம மெஸ்ல வேலை பார்க்குறவன் இந்த நம்பரை கொடுத்தான். நீ நேரா அந்த வீட்டுக்கு போ, மெஸ் பேர சொல்லு...அந்த வீட்டு ஆன்ட்டி உன்னை உள்ளே கூப்பிடுவாங்க..போயி வேலைய முடிச்சுடு' என்பான். 'கரும்பு தின்ன கூலி வேறயா மச்சி' என்று அவனும் அதே போல செல்ல, ஒரு ஆன்ட்டியுடன் உடனே ஒரு சீன் பாட்டு.

அதுக்கப்புறம் வழக்கம் போல கல்லூரி சுற்றுலா செல்கின்றனர். அங்கே ஆளுக்கொரு பிகரை உஷார் பண்ணுகின்றனர். பிறகு ஒவ்வொருவரு ஜோடிக்கும் இடையே நடக்கும் காமக் காட்சிகள். ஹீரோயின் கற்பம் தரிக்கிறாள். டாக்டரிடம் சென்று யதார்த்தமாக கற்பத்தை கலைக்க சொல்கிறாள்.

ஊதாரிகளைப் பற்றி சொல்லும் இப்படி போகிற ஊதாறிக் கதையில், இந்த மூன்று பேரும் அனுபவிக்கும் சுகம் போதாமல் அந்த மெஸ்ஸில் வேலை பார்ப்பவன் திருடும் செல் போன்களை வாங்கி அதில் ஏதேனும் பெண்கள் படம் இருந்தால் அதை மார்பிங் செய்து ஆபாச படங்களாக நெட்டில் ஏற்றி சமூகத்துக்கு சேவை செய்ய, இதில் இவர்கள் ரூமில் வந்து தாங்கும் வாய் பேச முடியாத நபரின் தங்கை படமும் அவ்வாறு வர, மனமுடைந்த தங்கை தீ வைத்து தற்கொலை செய்துவிட, அவர்களை பழிவாங்க வருபவர் தான் அந்த வாய் பேச முடியாதவர். பலர் போல மிமிக்ரி செய்யும் தனது தங்கைக்கு நிச்சயம் செய்தவரின் உதவியுடன் திட்டம் போட்டு ஒவ்வொருவரையும் எரித்துக் கொலை செய்கிறார். இறுதியில் போலீசில் சரணடைந்து, சிட்டிசன் பட ரேஞ்சில் கோர்ட் காட்சிகள் வர, சமூகத்துக்கு செல்போனால் ஏற்படும் சில அபாயங்களை கருத்து சொல்கிறார். அதையும் மீறி நீதிமன்றம் தண்டனையை வழங்க தானும் அங்கேயே தற்கொலை செய்து தன் தங்கை சென்ற இடத்துக்கே போய்விடுகிறார்.

நாமும் கிட்டத்தட்ட பட முடிவில் நடைபிணமாகிறோம். போலீசாக மன்சூர் அலிகான். பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார். அதுவும் ரவுடிகளிடம் அவர் பேசும் பாடி லாங்குவேஜ் சூப்பர். தலைவாசல் விஜய் என்ற ஒரு நல்ல நடிகர் ஒரு மொக்கை கானா பாட்டுக்கு மட்டும் முமைத்கான் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார். மேலும் வக்கீலாக வரும் பாத்திமா பாபு, மற்றும் நாயகியின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி ஆகியோர் வரும்போது மட்டும் திரைப்படம் பார்க்கின்ற உணர்வு வருகின்றது.மற்ற நேரங்களில் எதோ மெகா சீரியல் போல இருக்கிறது. வாழ்க்கைல ரொம்ப போர் அடிக்குது, எல்லா படமும் பார்த்துட்டேன், என்ன பண்றதுன்னு தெரியலைன்னு சொல்றவங்க இந்த படத்தை பாருங்க. வெகு விரைவில் இதே போல இன்னொரு படத்துடன் வருகிறேன். நன்றி!

Jul 21, 2011

கார்ப்ரெட் கறவைமாடுகள்


வணக்கம் நண்பர்களே!!!

நீண்ட நாளைக்குப் பின் உங்களை அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். வேலைப் பளு காரணத்தால் பலரது தளங்களுக்கு அடிக்கடி வர இயலவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து வருகிறேன். பின்னூட்டம் இட நேரமில்லை. அதற்கு அடியேனை மன்னிக்கவும். நெல்லை பதிவர் சந்திப்பு மிக அருமையாக நடந்து முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இதை மிகச்சிறப்பாக நடத்திய ஆபிசர் அண்ணனுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த பதிவுலக நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளும்,வணக்கங்களும், நன்றியும். (குற்றாலத்தில் குரங்கு கடி வாங்கிய அண்ணன் சி.பிக்கு எனது சிறப்பு வாழ்த்துகள். கூட்டிச் சென்ற அண்ணன் மனோவுக்கு எனது பாராட்டுக்கள்..ஹி ஹி) .
 
இன்றைய இடுகை சற்று சீரியசும், செண்டிமெண்டும் கலந்த இடுகைங்க. எனவே இதை வாசிக்க பொறுமை இல்லாதவங்க தயவு செய்து இதோட எஸ்கேப் ஆகிடுங்க. இன்றைய இடுகையின் தலைப்பு "கார்ப்ரெட் கறவைமாடுகள் ". சுமார் இருபது வருடம் முன்னர், கல்யாண சந்தையில் கவர்ன்மென்ட் மாப்பிளைகள் ஏகபோக விற்பனைக்கு பெண்வீட்டாரால் வாங்கப்பட்டனர். அடுத்த பத்து வருடத்தில் வங்கி பணியாளர்களும், ஆசிரியர் மாப்பிளைகளும் திருமணச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தினர். மாறிவரும் காலப்போக்கில்,அதிவேகமாக இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியதிலிருந்து, கம்ப்யுட்டர் இஞ்சினியார்களும், அமெரிக்கா மாப்பிளைகளும் சிறிது காலம் ஹிட் லிஸ்ட்டில் இருந்தனர். செப்டம்பர் ௨௧ இரட்டை கோபுர தாக்குதல், உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் வேலை இழப்பு போன்றவற்றால் அவர்களும் சோடை போக ஆரம்பித்த இந்த கால கட்டத்தில், கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு கணிப்பொறி பொறியாளன் படும் அவஸ்த்தைகளை நான் நேரில் கண்ட சில சம்பவங்களை வைத்து எழுதுகிறேன். அதைப் பற்றிய ஒரு சிறு அலசல்.பார்ப்போமா?


குறிப்பாக இந்த இடுகையை "அவனுக்கென்ன பா அவன் புள்ளை சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்த்து மாசாமாசம் ஆயிரக்கணக்குல சம்பளம் வாங்குறான்" என்று புழுங்குபவர்களுக்கும், "சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்குற இல்ல, அப்போ உங்களுக்கு எல்லாம் காசுக்கு பஞ்சமே இல்ல" என்று டூ-வீலரை மடக்கி பணம் பறிக்கும் ட்ராபிக் போலீசுக்கும், "எல்லாம் நெறைய பணம் சம்பாதிக்கிறோம் என்ற திமிரு" என்று அறிவுரையை அள்ளி வழங்கும் நல்ல உள்ளங்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.


சாப்ட்வேர் கம்பெனியில் வேலை என்றவுடன் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் மாட மாளிகையில் ஒளிரும் கண்ணாடி பிம்பத்தின் வெளிச்சம் மட்டுமே தெரிவதால் அதில் உள்ளே மண்டையைக் குடைந்து பாடுபட்டு பணிபுரியும் மனிதர்களின் அவலங்கள் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை தெரியப்படுத்துவதன் நோக்கமே இந்த பதிவு. எல்லோரும் படிக்கிறோம், அனைவரும் பெரும்பாலும் ஒரே துறையை தேர்ந்தெடுத்து படிப்பது கிடையாது. குடும்ப சூழ்நிலையும், பொருளாதாரமும் இதற்கு காரணமாகின்றன. இன்னும் வெகு சிலர் பத்தாம் வகுப்பு கூட முடிப்பது இல்லை. இருப்பினும் ஒவ்வொருவனும் தனது ஜீவாதராத்திற்காக எதோ ஒரு வேளையில் ஒட்டிக்கொள்கிறோம். ஆக இங்கு சம்பளம் மட்டுமே மாறுபடுகிறது. செய்கிற வேலை என்பது எதோ ஒரு வகையில் கடினம் தான் அல்லவா?

இன்றைய தேதியில் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு படித்து வந்தவர்களே. வெகு சிலரே சில்வர் ஸ்பூன் பீடிங்கில் வளர்ந்து பாக்கெட் மணிக்காக வேலையில் சேர்பவர்கள். அதுவும் ஒன்றிரண்டு வருடம் தான் அவர்கள் ஒரு நிறுவனத்தில் இருப்பார்கள். அதன் பின் மேல்படிப்புக்கோ, இல்லை தனது குடும்ப தொழிலை எடுத்து நடத்தவோ கிளம்பி விடுவார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் இவர்களுடன் பழகும் பல நடுத்தர இளைஞர்களும் மேற்கத்திய ஆதிக்கத்தில் மாறி வரும் கலாசாரத்தின் சிற்றின்பத்தை அனுபவிக்க நகரம் முழுதும் அலைபவர்கள். இவர்கள் மட்டுமே சமூகத்தின் கண்ணுக்கு தெரியும்.
ஆனால் தன் குடும்பத்துக்காக தனது இளமையை அடகு வைத்து மனதை அடக்கி இயந்திரத் தனமாக வாழும் பெரும்பாலான இளைஞர்களும் இதே கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது நான் சொல்லப் போவது ஒரு உண்மை சம்பவம். ஒரு ஞாயிற்றுகிழமை அன்று ப்ரொடக்ஷன் ரிலீசுக்காக பணிபுரிய சென்ற பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பிரதான சாலையிலிருந்து அலுவலகம் இரண்டு கிலோ மீட்டர் உள்ளே இருக்கிறது. அதுவும் சென்னையின் புறநகர் பகுதியில். கேட்கவா வேண்டும்? ஆட்டோவுக்காக காத்திருந்த வடஇந்திய பெண்ணை ஏற்றிக் கொண்ட ஒரு ஆட்டோ, ஆட்டோ டிரைவரின் இன்னும் சில மூன்று நண்பர்களையும் ஏற்றிக்கொண்ட பின் பாதை மாறி அருகிலிருக்கும் ஒரு புதருக்கு செல்கிறது. கூட்டத்தில் ஒருவன் அப்பெண்ணின் வாயைப் பொத்திக்கொள்ள, இன்னொருவன் கத்தியை காட்டி பயமுறுத்த, உயிருக்கு பயந்த அப்பெண் "என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள், என்னை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறியதை தொடர்ந்து நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை அனுபவித்துவிட்டு அவளிடமிருந்த பணம் மற்றும் நகையையும் பிடுங்கிக்கொண்டு அவளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண் தான் பணிபுரியும் அலுவலகத்தின் எச்.ஆரிடம் முறையிட விஷயத்தை காதும் காதுமாக மூடி மறைத்து அப்பெண்ணுக்கு 25 லட்சம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள். இது போல ஊருக்குள் இன்னும் பல கதைகள்.


(தொடரும்..)

Jun 28, 2011

காக்டெயில்

வணக்கம் நண்பர்களே! சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் நான் ரசித்த சில கதாப்பாத்திரங்களும், அதைப்போலவே வாழ்ந்து கொண்டிருக்கும் நான் கண்ட சில மனிதர்களைப் பற்றிய இடுகை இது.




(1) "அவன்-இவன்" ஐனஸ்- இந்த கேரக்டரில் நடித்த குமார் போன்ற அச்சு அசல் உருவமும், அதே போல குசும்பும், வயதானாலும் அதற்கு சம்பந்தமே இல்லாத துள்ளலும், தன் மகனிடம் தனது காதல் கதைகளையும் தனது மகன் சைட் அடித்துக்கொண்டிருக்கும் பிகரை பற்றியும் வெளிப்படையாக பேசும் ஒரு கேரக்டர் தான் என் நண்பன் ஒருவனின் தந்தை. வீட்டுக்குளேயே தனது மனைவி, குழந்தைகள் முன்னாடி தண்ணி போடுவதில் இருந்து, மகனிடம் காசு கொடுத்து சிசர்ஸ் சிகரெட் வாங்கி வரச்சொல்லி அதை கெத்தாக புகைவிடுவது வரை அச்சு அசல் ஐனஸே தான்.இந்த குணாதிசயங்கள் கூட மாறிவிடக்கூடியவை. ஆனால் அந்த கேரக்டரை படத்தில் பார்க்கும் போது திரையில் என்னால் என் நண்பனின் அப்பாவை மிக எளிதாக உருவகப்படுத்திக்கொள்ள செய்தது இருந்த சொத்துக்களை எல்லாம் தனது வெகுளித்தனத்தால் இழந்த பின்னும் அந்த மனிதனது வாழ்க்கை முறையில் கொஞ்சம் கூட குறையாத உற்சாகம் தான். இந்த கேரக்டரைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நிறைய முரணான கருத்துக்களும், விமர்சனங்களும் வந்திருந்தாலும் நான் ரசித்தேன். ஆனால் ரசித்தது ஐனசை இல்லை, என் நண்பன் கமல் அப்பா உமல் பாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை தான்.



(2) "ஆரண்ய காண்டம்" காளையன்- இதுவும் ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீன் கேரக்டரே. ஆனால் இந்த கேரக்டரை படத்தில் பார்க்கும் போது என் மனதுக்குள் தோன்றியது என்னவோ என் அப்பா தான். அதுவும் தனது மகனிடம் "நீயும் அப்படி சொல்லாதடா!" என்று அழுது கொண்டே தன் மகனை தேற்றும் காட்சி அருமை. அதுவும் அந்த சின்ன பையன் தன் அப்பனின் பொறுப்பின்மையையும், கையாலாகாத்தனத்தையும் கண்டு எரிந்து விழுவது போல பேசும் காட்சிகள் நான் என் அப்பனிடம் சிறு வயதில் பேச நினைத்தவை. அப்பன் மேல் அதீத கோபம் இருந்தாலும் பயந்துபோய் மனதுக்குள்ளேயே திட்டிக் கொள்வேன். அதுவும் இறுதியில் "உங்க அப்பான்னா உனக்கு பிடிக்குமா?" என்ற கேள்விக்கு அந்த பையனின் அசால்ட்டான உடல்மொழியுடன் கூடிய பதில் அட்டகாசம். இந்த சோமசுந்தரம்-மாஸ்டர் வசந்த் (காளையன்-கொடுக்காபுளி) மனதில் நச்சென்று ஒட்டிக்கொள்ள காரணம் அது என் சொந்த புரானாத்தை கொஞ்சம் சுரண்டிப் பார்த்ததால் எனலாம்.



(3) "அவன்-இவன்" வால்ட்டர் வணங்காமுடி- இந்த கேரக்டரை அநேகமாக நீங்களும் உங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பார்த்திருக்கலாம், பழகி இருக்கலாம். ஆமாங்க எங்கள் பள்ளியில், நாங்கள் படித்த வகுப்பில் சூரியநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பன் இப்படி தான் இருப்பான். உடல்மொழி, பேசும் விதம், முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு பழிப்பு காட்டுவது என்று இவன் செய்யும் அனைத்து சேஷ்டைகளும் பெண்கள் செய்வது போலவே இருக்கும். ஆண்கள் மட்டுமே படித்த பள்ளியில் இப்படி இருந்தால் அவனுக்கு என்ன பெயர் வைத்து அப்போது அவனை கூப்பிட்டிருப்பார்கள் என நான் சொல்லி உங்களுக்குப் புரியவேண்டியது இல்லை.அதே சூரியநாதன் இன்று பிரெஞ்சு தாடியுடன் எங்கள் ஊரில் டூ-வீலரில் கெத்தாக வலம் வருகின்றான் என்று அவனைப் பார்த்த என் நண்பர்கள் சொல்கின்றனர்.



(4) "அவன்-இவன்" கும்பிடுறேன் சாமி- இந்த கேரக்டர் யாரென்று நீங்களே கண்டுபிடித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள். ஒரு சின்ன க்ளூவுக்காக இந்த காட்சி. அதிகமாக தண்ணி அடித்துவிட்டு விஷாலைப் பற்றி ஐனசிடம் "நீ நடிகன் டா..த்ரிஷா உனக்கு தாண்டா!!!ஆனா நான் இப்படி தான் உன்கூட எப்பவுமே முறைச்சிக்கிட்டே இருப்பேன்" என்று சொல்லும் போது ஆர்யா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.



(5) "ஆரண்யகாண்டம்" பசுபதி - நாம் வாழ்கையில் ஓடாத நாளே இல்லை எனலாம். பணத்துக்காகவும், நல்ல சுகமான வாழ்க்கை முறைக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் என இப்படி எதோ ஒன்றுக்காக நாமும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் இதில் எத்தனை பேர் நம்மில் இலக்கை அடைகிறோம்? இந்த ஓட்டத்தின் போது நான் பலமுறை நிதானித்து சிந்தித்து பார்ப்பதுண்டு. இந்த காரியத்தை எதுக்கு பண்றோம்? ஏன் பண்றோம்? இதனால் வரப்போகும் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம்? என்று. இந்த படத்திலும் திரும்பிய பக்கமெல்லாம் (பசுபதி) சம்பத்தை துரத்த, அவர் ஓடிக்கொண்டே ஒவ்வொரு சிக்கலையும் தீர்க்க ஊகிக்கும் காட்சி அம்சம்.



இதே போல இன்னும் சில கேரக்டர்களுடன் மீண்டும் வருகிறேன்.பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் நன்றி!!!

Jun 10, 2011

ஒரு குவார்ட்டருக்காகவா இவ்ளோ கலாட்டா?

வணக்கம் நண்பர்களே !!!



மொக்கைத் தனமா இடுகை எழுதி ரொம்ப நாள் ஆயிட்டதால..(அட யாருப்பா அது அங்க "இவன் எழுதுற எல்லாமே மொக்கையா தான் இருக்கு, இதுல மொக்கைனு சொல்லி ஒரு இடுகையா?என்ன வாழ்கைடா இது ?!" என்று கல் எடுக்குறது) இன்னைக்கு கொஞ்சம் மொக்கை போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். (ஆமா இவரு பெரிய ஐ.நா சபை லீடரு முடிவு பண்ணிட்டாரு..ப்ளாகை ஒப்பன் பண்ணி வெச்சுட்டு ஓட்டுப் பிச்சை எடுக்கப்போவுது இதுக்கு லவுட்ட பாரு)





இன்னைக்கு எதைப் பற்றிய மொக்கைனா, ஒரு கற்பனை கலந்த மொக்கை. உலகத்தில பெட்ரோல் உற்பத்தி குறைந்து வருவதையும், அதனால் விலைவாசி உயர்வதையும், இன்னபிற பிரச்சினைகளையும் ஒவ்வொரு இந்தியனும் அறிவான். அதே போல உலகில் மது உற்பத்தி (பொண்ணு பேரு இல்லீங்க..மது என்றால் சாராயம்,சரக்கு, சோமபானம், உற்சாகபானம்..ஹி ஹி!!!) குறைந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை (ஆமா இவரு பெரிய அணு விஞ்ஞானி...விளைவுகள் பத்தி விலாவரியா விளக்க வந்துட்டாரு...அணு விஞ்ஞானிகளே விளைவுகளைப் பத்தி கவலைப்படறது இல்ல...இவரு புத்தி சொல்றாராம்... )மையமாகக் கொண்ட கற்பனை கலாட்டாக்கள் உங்கள் பார்வைக்கு. இதில் தல கவுண்டரின் மைன்ட் வாய்சும் கூடவே அடைப்புக் குறிக்குள்...(யப்பா இவன் தமிழ் இம்சை தாங்க முடில டா சாமி...இதுக்கு பேதியே பரவால்லடா யம்மா...)



(1) மாப்பிள்ளை வீட்டு வரதட்சணை சீதனமாக தங்கத்துக்கு பதில் மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்கேற்ப மது புட்டிகளின் எண்ணிக்கை வாங்கப்படும். இல்லையென்றால் கன்னிப்பெண்கள் கன்னியாகவே காத்திருக்க வேண்டியது தான். பாரத மாதவே எம் தாய்க்குலங்களை காப்பாற்று...(டேய் டேய் டேய்..இந்த ஜிகினா வேலையெல்லாம் என்கிட்டே வுடாதடி... முதல்ல ஊர்ல இருக்குற குளங்களை எல்லாம் ஒழுங்கா தூர் வாருங்கடா..தாய்க்குலங்களை அப்புறம் காப்பாத்திக்கலாம்...அது என்னா எவனுக்கு சமூக அக்கறை வந்தாலும் தாய்க்குலமே தந்தைக்குலமேன்னு இறங்கிடுறீங்க...படுவா பிச்சு புடுவேன்..)



(2) மதுபான தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு திருமண சம்பந்தம் முடிக்க பெண்ணைப் பெற்றோர் போட்டி போடுவார்கள்.மாப்பிள்ளை டாஸ்மாக்ல வேலை பாக்குறாரு என்பது இன்றைய ஐ.டியில வேலை பாக்குறாரு என்பது போல ஒரு மிகப்பெரிய கவுரவ அந்தஸ்தாக கருதப்படும். (நல்ல குடும்பம்...ஏர்ல பூட்டுன எருமை மாதிரி... குட் பாதர்...குட் மாதர்...குட் பொண்ணு... இவனுங்க எல்லாம் வொஸ்ட்டு மா...கடன் வாங்கி கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு அப்புறம் வயசான காலத்துல பொலம்பியே மண்டையப் போட்டுடுவானுங்க...அட ஊருக்குள்ள இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா..குவார்ட்டர் பாட்டிலை ப்ளாக்ல விக்குறவன் எல்லாம் தொழிலதிபர் ஆயிடுரானுங்க)



(3) "பத்து வருஷத்துக்கு முன்னாடி நம்ம நாட்டோட அந்நிய செலாவணி வெறும் 2000 கோடி ரூபாய்..ஆனா இப்போ 8 லட்சம் கோடி ரூபா..திஸ் இஸ் ஆல் பிகாஸ் ஆப் டாஸ்மாக்" என்று பெருமை பீத்திக்கொள்வார்கள் மதுபானம் சம்பந்தமான துறையில் வேலையில் இருப்போர்...(அடேய் அடி அடேடி..இப்படியே நீ பேசிகிட்டு இருந்த வாயில வறட்டி கொளுத்தி போட்டுருவேன்..டேய் இங்க வாடா...அடச்சே போடா..போடா டேய் போடடா...)



(4) மதுபானத் துறை என்ற புதிய அரசியல்துறை உருவாக்கப்படும். அந்த துறையைப் பெறுவதற்கு மந்திரிகள் மத்தியல் பலத்த போட்டி நிலவும். பொதுப்பணித்துறையை யாரும் சீண்ட மாட்டார்கள். (அரசியல்னாலே இதெல்லாம் இருக்கறது தான..ஆயிரம் என்குயரீஸ்..ஆயிரம் என்கேஜ்மென்ட்... )



(5) திரைப்படங்களில் மதுபானம் அருந்தும் காட்சிகள் குறையும்...இல்லையெனில் பெரிய பட்ஜெட் படத்தில் மட்டும் குடிக்கும் காட்சிகள் இடம்பெறும். மெகா பட்ஜெட் படங்களில் கதாநாயகன் மதுபானம் நிரம்பிய ஸ்விம்மிங் பூலில் குளிப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.லோ பட்ஜெட் படம் எடுப்போரெல்லாம் செட் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டியது தான். சரக்குக்கு பதிலாக வெறும் தண்ணீரையோ இல்லை குளிர்பானங்களையோ குடிப்பது போல காட்சி வைத்து ஒப்பேற்றலாம்.(அடங்கொன்னியா இப்பவே இவனுங்க தொல்லை தாங்க முடில...சுதிய ஏத்துறேங்கறானுங்க அப்புறம் சுதிய   இறக்கனும்கிறானுங்க...இதுல இது வேறயா? கண்ண கட்டுதுடா சாமி )



(6) மதுவுக்காக நாட்டில் கொலை,கொள்ளை,அடிதடி போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும். பெரும் பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை ஏலம் எடுத்து வாங்கி செல்வார்கள்.(அஹ்ஹான் நான் என்ன இளிச்சவாயனா...இந்த மாதிரி எந்த படுவா பண்ணினாலும் மூஞ்ச அப்படியே செவுத்துல வெச்சு தரதரதரன்னு தேச்சு புடுவேன்...அப்புறம் குடிக்கறதுக்கு வாய் இருக்காது...மொழுக்கட்டினு தான் சுத்தணும்)



(7) "இன்றைய விஸ்கி மற்றும் பிராண்டி நிலவரங்களை காணலாம்" என்று வணிகச் செய்திகளில் விலை நிலவரங்கள் இடம்பெறும். ஏறுதா இறங்குதா என்று வாயைப் பிளந்துகொண்டு மதுபான பங்குகளில் முதலீடு செய்த கூட்டம் பார்த்துக்கொண்டு இருக்கும். (ஆமா..ஒலக நடப்ப தெரிஞ்சிக்கிட்டாராம்... )



(8) உலகக்கோப்பைக்கு பதிலாக குவார்ட்டர் பாட்டிலை மையமாக வைத்து அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். போட்டியில் வென்று குவார்ட்டர் பாட்டிலை எப்படியாக கைப்பற்றுவோமென்று அணித் தலைவர் தெரிவிப்பார். (டேய்..சிலம்புக்கு ஒரு கண்ணகி...கம்புக்கு இந்த காளிங்கன்..படுவா சுத்துனன்னு வையி...)



(9) எல்லாவற்றிற்கும் மேலாக எந்த நாட்டில் மது உற்பத்தி அதிகம் இருக்கிறதோ அந்த நாட்டுக்கு தீவிரவாத முத்திரை குத்தி அமெரிக்கா போர் தொடுக்கும்.(ஆக பாட்டியும்,பேரனும் இருநூறு ரூவா கதவுக்கு தான் ப்ளான் போட்டிருக்கீங்க...அடத் த்த்தூ)



(10) இறுதியாக அக்கால தமிழ்த் திருவள்ளுவர்கள் பலர் "புன்னகை இருக்க பொன்னகை எதற்கு?" என்பதெல்லாம் பழமொழி, "மாது இருக்க மது எதற்கு?" என்பது புதுமொழி என்று இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பார்கள். (இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா திருப்புகழையே பாடிகிட்டு இருப்பீங்க..அவனவன் கம்ப்யூட்டர்ல பல்லு வெளக்கிட்டு இருக்கான்..நீங்க இன்னும் திருப்புகழையே பாடிகிட்டு திரியுங்க)



என்ன மக்களே?இதுக்கே கண்ண கட்டுதா? எனக்கும் தான். இதே போல உங்களுக்கு தெரிஞ்ச,நீங்க யோசிச்ச இந்த மாதிரி விஷயங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்க. பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி.மீண்டும் சந்திப்போம்!!!

Jun 9, 2011

கபாலி vs ககன்லால்சேட்

"துஜே தேகோ யெ ஜானா சனம்
ப்யார் ஹோத்தா ஹாய் தீவானா சனம்
அப் யஹான் சே கஹான் ஜாயே ஹம்
தேரி பாஹூன் மெய்ன் மர் ஜாயே ஹம்"



"இன்னா சேட்டு..பாட்டெல்லாம் ஷோக்கா கீது...செம குஜாலாகீற போல"

"ஹரே கபாலி...ஆமாம்பா ... நம்மல் சேட் பக்வான் புண்ணியத்துலே படா படா குஷியா இர்க்கான்...நிம்மல் எப்டி இர்க்கான்? "

" அட போ சேட்டு..உனக்கென்ன கந்து வட்டிக்கு துட்டு கொடுத்தே சவுக்கார்பேட்டைல நம்ம புள்ளைங்க ஏரியாவாண்ட வூட்ட கட்டிட்ட...எங்கள மாதிரி ஆளுங்க பொயப்பெல்லாம் படா பேஜாராக்கீது"

"நிம்மல் கஷ்டப்படறான் சேட்டு துட்டு கொடுக்கறான்...அதுக்கு நம்மல் இன்னா செய்வான் சொல்லுபா"



"கரீக்ட்டு தான்யா...முப்பது வருஷம் முன்னாடி பொண்டாட்டி,புள்ளைங்களோட வந்து டேரா போட்ட..இப்போ ஊரே உன் வூட்டு வாசல்ல தான் வந்து நிக்குது...மெய்யாலுமே நீ பெரிய ஆளுப்பா"

"ஹரே..இப்போ இப்படி தான் நிம்மல் சொல்லுது...ரெண்டு மாசம் முன்னாடி நிம்மல் ஆளுங்க யாரும் நம்மள்கிட்டே பணம் கேக்க வர்லே"

"அட அதுவா சேட்டு...ரெண்டு மாசம் முன்னாடி எலெக்சனு டைம்முபா..நெறய துட்டு கெடைக்கும்னு குஜாலா காத்துகினு இருந்தோம்...அதுவும் எலெக்சனு ஆப்பிசர்களுன்னால மெர்சல்லா பூடுச்சு"


"பாப்ரே...அப்றம் நிம்மல் இன்னா செய்தான்?"


"அப்பாலிக்கா இன்னா பண்ண முடியும்..கள்ள வோட்டு போட்டா துட்டு கொடுப்பாங்கன்னு நியூசு வந்துச்சு..ஏரியாலகீற புள்ளைங்க அல்லாத்தையும் இஸ்துகினு கொளத்தூர் பூத்துக்கு போயிட்டேன்...கடசில தலீவரு ஜெயிச்சுட்டாருல..அல்லாம் நம்ம புள்ளைங்களோட தெர்ம தான். ஆளுக்கு 1000 ரூவா கொடுத்தாங்கோ"


"ஹரே துஷ்மன்...பணம் வாங்கிட்டு வோட்டு போடுறே...அபி தேகோ, நிம்மல் வோட்டு போட்ட ஆத்மி பூரா நம்மல் ஊருக்கு போயிட்டாங்கோ"



"இன்னாமோ போ சேட்டு..உன்னாண்ட துட்டுகீது நீ 'லா' பேசற..எங்களாண்ட இன்னா கீது? கெட்ச்ச வரீக்கும் லாபம்னு பண்றோம். ஆமா சேட்டு இங்கன வந்து எப்புடி நீ தமிழ் கத்துகின ... எங்க தலீவரு தான் உன் ஆளுங்க பாஷைய எதித்துகினு உன்னோட காலத்துலேயே தண்டவாளத்துல தலய வெச்சாரு..எங்க புள்ளைங்க எல்லாம் ஹிந்தி தெர்யாம ரொம்ப பேஜார் ஆவுராங்கோ...மெட்ராச தாண்ட முடில..."


"அட போப்பா..நிம்மல் தலீவரு புள்ளைங்க எல்லாம் ஹிந்தி,இங்க்லீஷ் நல்லா பேசுவாங்கோ... இல்லைனா திகார்ல எப்டி அவங்கள் சமாளிக்கிறான்? நம்மல் மாதிரி ஆளுங்க எல்லாம் அப்போ ரொம்ப கஷ்டப்பட்டான்...ஹிந்தி பேசுனாலே நிம்மல் ஆளுங்கோ அடிப்பான்.இப்போ கூட அப்டி தான். வேற வழி இல்லாம சேட்டு டமில் கத்துக்கிட்டான் "


"யோவ் சேட்டு..நீ உஷாரான ஆளுதான்யா...சும்மா வருமாடா சோமாறிங்கற..நீயி சந்தோஷமா எதுக்கு பாடிகினு வந்தன்னு எனக்கு இப்ப தான் பிரியுது. சரி சரி!!! என் வூடு வந்துருச்சு நான் வரேன். ஈவ்னிங் உன் ஊட்டாண்ட வர்றேன்..கைமாத்தா 1000 ரூவா கடன் வேணும்பா"


 
"அச்சா..அச்சா..ஆவோ கபாலி ஆவோ..."





"துஜே தேகோ யெ ஜானா சனம்
ப்யார் ஹோத்தா ஹாய் தீவானா சனம்
அப் யஹான் சே கஹான் ஜாயே ஹம்
தேரி பாஹூன் மெய்ன் மர் ஜாயே ஹம்"