வணக்கம் நண்பர்களே!!!
நீண்ட நாளைக்குப் பின் உங்களை அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். வேலைப் பளு காரணத்தால் பலரது தளங்களுக்கு அடிக்கடி வர இயலவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து வருகிறேன். பின்னூட்டம் இட நேரமில்லை. அதற்கு அடியேனை மன்னிக்கவும். நெல்லை பதிவர் சந்திப்பு மிக அருமையாக நடந்து முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இதை மிகச்சிறப்பாக நடத்திய ஆபிசர் அண்ணனுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த பதிவுலக நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளும்,வணக்கங்களும், நன்றியும். (குற்றாலத்தில் குரங்கு கடி வாங்கிய அண்ணன் சி.பிக்கு எனது சிறப்பு வாழ்த்துகள். கூட்டிச் சென்ற அண்ணன் மனோவுக்கு எனது பாராட்டுக்கள்..ஹி ஹி) .
இன்றைய இடுகை சற்று சீரியசும், செண்டிமெண்டும் கலந்த இடுகைங்க. எனவே இதை வாசிக்க பொறுமை இல்லாதவங்க தயவு செய்து இதோட எஸ்கேப் ஆகிடுங்க. இன்றைய இடுகையின் தலைப்பு "கார்ப்ரெட் கறவைமாடுகள் ". சுமார் இருபது வருடம் முன்னர், கல்யாண சந்தையில் கவர்ன்மென்ட் மாப்பிளைகள் ஏகபோக விற்பனைக்கு பெண்வீட்டாரால் வாங்கப்பட்டனர். அடுத்த பத்து வருடத்தில் வங்கி பணியாளர்களும், ஆசிரியர் மாப்பிளைகளும் திருமணச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தினர். மாறிவரும் காலப்போக்கில்,அதிவேகமாக இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியதிலிருந்து, கம்ப்யுட்டர் இஞ்சினியார்களும், அமெரிக்கா மாப்பிளைகளும் சிறிது காலம் ஹிட் லிஸ்ட்டில் இருந்தனர். செப்டம்பர் ௨௧ இரட்டை கோபுர தாக்குதல், உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் வேலை இழப்பு போன்றவற்றால் அவர்களும் சோடை போக ஆரம்பித்த இந்த கால கட்டத்தில், கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு கணிப்பொறி பொறியாளன் படும் அவஸ்த்தைகளை நான் நேரில் கண்ட சில சம்பவங்களை வைத்து எழுதுகிறேன். அதைப் பற்றிய ஒரு சிறு அலசல்.பார்ப்போமா?
குறிப்பாக இந்த இடுகையை "அவனுக்கென்ன பா அவன் புள்ளை சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்த்து மாசாமாசம் ஆயிரக்கணக்குல சம்பளம் வாங்குறான்" என்று புழுங்குபவர்களுக்கும், "சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்குற இல்ல, அப்போ உங்களுக்கு எல்லாம் காசுக்கு பஞ்சமே இல்ல" என்று டூ-வீலரை மடக்கி பணம் பறிக்கும் ட்ராபிக் போலீசுக்கும், "எல்லாம் நெறைய பணம் சம்பாதிக்கிறோம் என்ற திமிரு" என்று அறிவுரையை அள்ளி வழங்கும் நல்ல உள்ளங்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.
சாப்ட்வேர் கம்பெனியில் வேலை என்றவுடன் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் மாட மாளிகையில் ஒளிரும் கண்ணாடி பிம்பத்தின் வெளிச்சம் மட்டுமே தெரிவதால் அதில் உள்ளே மண்டையைக் குடைந்து பாடுபட்டு பணிபுரியும் மனிதர்களின் அவலங்கள் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை தெரியப்படுத்துவதன் நோக்கமே இந்த பதிவு. எல்லோரும் படிக்கிறோம், அனைவரும் பெரும்பாலும் ஒரே துறையை தேர்ந்தெடுத்து படிப்பது கிடையாது. குடும்ப சூழ்நிலையும், பொருளாதாரமும் இதற்கு காரணமாகின்றன. இன்னும் வெகு சிலர் பத்தாம் வகுப்பு கூட முடிப்பது இல்லை. இருப்பினும் ஒவ்வொருவனும் தனது ஜீவாதராத்திற்காக எதோ ஒரு வேளையில் ஒட்டிக்கொள்கிறோம். ஆக இங்கு சம்பளம் மட்டுமே மாறுபடுகிறது. செய்கிற வேலை என்பது எதோ ஒரு வகையில் கடினம் தான் அல்லவா?
இன்றைய தேதியில் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு படித்து வந்தவர்களே. வெகு சிலரே சில்வர் ஸ்பூன் பீடிங்கில் வளர்ந்து பாக்கெட் மணிக்காக வேலையில் சேர்பவர்கள். அதுவும் ஒன்றிரண்டு வருடம் தான் அவர்கள் ஒரு நிறுவனத்தில் இருப்பார்கள். அதன் பின் மேல்படிப்புக்கோ, இல்லை தனது குடும்ப தொழிலை எடுத்து நடத்தவோ கிளம்பி விடுவார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் இவர்களுடன் பழகும் பல நடுத்தர இளைஞர்களும் மேற்கத்திய ஆதிக்கத்தில் மாறி வரும் கலாசாரத்தின் சிற்றின்பத்தை அனுபவிக்க நகரம் முழுதும் அலைபவர்கள். இவர்கள் மட்டுமே சமூகத்தின் கண்ணுக்கு தெரியும்.
ஆனால் தன் குடும்பத்துக்காக தனது இளமையை அடகு வைத்து மனதை அடக்கி இயந்திரத் தனமாக வாழும் பெரும்பாலான இளைஞர்களும் இதே கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இப்போது நான் சொல்லப் போவது ஒரு உண்மை சம்பவம். ஒரு ஞாயிற்றுகிழமை அன்று ப்ரொடக்ஷன் ரிலீசுக்காக பணிபுரிய சென்ற பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பிரதான சாலையிலிருந்து அலுவலகம் இரண்டு கிலோ மீட்டர் உள்ளே இருக்கிறது. அதுவும் சென்னையின் புறநகர் பகுதியில். கேட்கவா வேண்டும்? ஆட்டோவுக்காக காத்திருந்த வடஇந்திய பெண்ணை ஏற்றிக் கொண்ட ஒரு ஆட்டோ, ஆட்டோ டிரைவரின் இன்னும் சில மூன்று நண்பர்களையும் ஏற்றிக்கொண்ட பின் பாதை மாறி அருகிலிருக்கும் ஒரு புதருக்கு செல்கிறது. கூட்டத்தில் ஒருவன் அப்பெண்ணின் வாயைப் பொத்திக்கொள்ள, இன்னொருவன் கத்தியை காட்டி பயமுறுத்த, உயிருக்கு பயந்த அப்பெண் "என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்கள், என்னை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறியதை தொடர்ந்து நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை அனுபவித்துவிட்டு அவளிடமிருந்த பணம் மற்றும் நகையையும் பிடுங்கிக்கொண்டு அவளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண் தான் பணிபுரியும் அலுவலகத்தின் எச்.ஆரிடம் முறையிட விஷயத்தை காதும் காதுமாக மூடி மறைத்து அப்பெண்ணுக்கு 25 லட்சம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள். இது போல ஊருக்குள் இன்னும் பல கதைகள்.
(தொடரும்..)
10 comments:
நான்தான் first
இன்று என் வலையில்
உங்கள் கடவு சொல்லை (PASSWORD) பாதுகாப்பது எப்படி ?
'தன் குடும்பத்துக்காக தனது இளமையை அடகு வைத்து மனதை அடக்கி இயந்திரத் தனமாக வாழும் பெரும்பாலான இளைஞர்களும் இதே கூட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்"
>>>>>
மாப்ள இந்த வார்த்தைகள் மனசை கசக்குகிறது என்ன சொல்லன்னு தெரியல்ல! ...
எல்லா வேலையும் உழைப்புக்கு மட்டுமே ஊதியம் தருகின்றன என்பதை நிறைய பேர் உணர்வதில்லை. IT யில் பணம் அதிகம், பாதுகாப்பு குறைவு
Yes...We are பாவம் :)
உண்மையை உரக்கச் சொல்லும் டகால்ட்டிக்கு ஒரு சபாஷ்.
அடகு வைக்கும் இளைஞர்கள் உண்மைதான் டகால்ட்டி...
போக ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..
ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...
வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..
அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்
நன்றி
http://vallinamguna.blogspot.com/
சாப்ட்வேர் கம்பெனியில் வேலை என்றவுடன் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் மாட மாளிகையில் ஒளிரும் கண்ணாடி பிம்பத்தின் வெளிச்சம் மட்டுமே தெரிவதால் அதில் உள்ளே மண்டையைக் குடைந்து பாடுபட்டு பணிபுரியும் மனிதர்களின் அவலங்கள் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை தெரியப்படுத்துவதன் நோக்கமே இந்த பதிவு//உண்மையை உரக்கச் சொல்லும் டகால்ட்டிக்கு ஒரு
நன்றி ............
வணக்கம் சகோ,
சீதனச் சந்தையில் பேரப்படும் மணமகன்களின் தராதரம் பற்றிய நிலையினையும்,
நவீன யுகத்தில் இடம் பெறும் வெளித்தெரியாத அவலங்களையும் பதிவிட்டிருக்கிறீங்க.
அடுத்த பாகத்தைப் படிப்பதற்காக காத்திருக்கிறேன்.
Post a Comment