வணக்கம் நண்பர்களே,
நம்ம பவர் ஸ்டார் டாகுடறு அடுத்தடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறார் என்ற லிஸ்ட் உங்களுக்காக. இப்போவே உடல் அளவாலும், மனதளவாலும் முன்னேற்பாடக தயாராகிக் கொள்ளுங்கள்.

அண்ணன் விக் இல்லாம எவ்வளவு தெகிரியமா போஸ் கொடுத்துருக்காரு பாருங்க. அது சரி அவருக்கென்ன கவலை, அதைப் பார்க்கிற நாம தானே கவலைப்படணும். யோவ்!!! பார்ட்னர் பன்னிக்குட்டி இந்த மொத்த இடுகையும் உனக்கே சமர்ப்பயாமி!!!
யாரு சார் அந்த ஹீரோயினி தேவிகலா? அந்த பொண்ணோட சகிப்புத்தன்மை மற்றும் தைரியத்துக்காக எதாச்சும் ஒரு அவார்டு கொடுங்கப்பூ... அவ்வவ்வ்வ்வ்....
நம்ம டாகுடறு ஒரு விஷயத்துல மட்டும் ரொம்ப தெளிவா இருக்காருங்க. 'சுரங்கப்பாதை'ல யுவராணி, 'தேசிய நெடுஞ்சாலை'ல சங்கவி. ஒ.கே ஒ.கே. அட நான் அந்த சமாசாரத்தை சொல்லலைங்க. இந்த ரெண்டு ஹீரோயினி கூட ஆரம்ப காலத்துல நடிச்சு நம்ம டாகுடறு மாதிரியே பெரிய ஹீரோ ஆனா இன்னொரு டாகுடறு இருக்காரு. என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா?
இந்திரசேனா படத்துக்கு தான் ஐ ஆம் வெயிடிங். பிகாஸ் டூ லெஜெண்ட்ஸ் ஆர் அக்டிங் டுகெதர் யு நோ. ஆமாங்க நம்ம "18 வயசு புயலே' படப்புகழ் தமிழரசன் மற்றும் லத்திகா புகழ் 'டாகுடறு' இவுங்க ரெண்டு பேத்தையும் தான் சொல்றேன். எல்லாம் சரி அது யாருங்க இயக்குனர்? பேரை பார்த்தீங்களா? பன்ச் பரத் ஆம்... ஐயோ ஐயோ... அதெப்படி அண்ணனோட எல்லா படத்துக்கும் ஒரே இயக்குனர் இருக்காரு. அண்ணனோட கலை அற்பணிப்பை பார்த்து மிரண்டிருப்பாரோ?
இதெல்லாம் நம்ம அண்ணன் டாகுடறு சீனிவாசரை (ர்ர்ர்ர் ர்ர்ர்ர்...மரியாதை...நான் ர்ர்ர்அ வுடுலீங்க) பற்றி இணையத்தில் குவிந்த கமெண்ட்ஸ்.


ஆக மொத்தம் இன்றைய தேதியில கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் 'பயங்கர' பிசியான ஒரே நடிகர் நம்ம அண்ணன் தான்.
இன்னிக்கு இந்த அளவுக்கு கொடுமை போதும்னு நினைக்கிறேன். மீண்டும் இதே போல எழவு கொட்ட வருகிறேன். ஹி ஹி...
நன்றி: Popcorn India Website



12 comments:
அண்ணன் விக் இல்லாம எவ்வளவு தெகிரியமா போஸ் கொடுத்துருக்காரு பாருங்க. அது சரி அவருக்கென்ன கவலை, அதைப் பார்க்கிற நாம தானே கவலைப்படணும். யோவ்!!! பார்ட்னர் பன்னிக்குட்டி இந்த மொத்த இடுகையும் உனக்கே சமர்ப்பயாமி!!!//
ஐயோ....ஐயோ....காளியம்மா நீ தான் நம்மளைக் காப்பாத்தனும்,
பவர் ஸ்டாரின் வயிற்றில் புளியைக் கரைக்கப் போகும் படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
தகவல் பகிர்விற்கு நன்றி மாப்பு.
யோவ் டக்கால்டி, இதுக்கு பேசாம ஒரு முழம் கயிறு வாங்கி தந்துருக்கலாம் ம்ஹும் முடியலைடா சாமியோ....
சத்தியமா பவர்ஸ்டாருக்கு சூனியம் வைக்கப்ப்படும்னு, டாகுடர் விஜய் சொல்லிட்டாராம் ஹி ஹி....
கண்ட கண்ட கருமாந்திரம் பிடிச்சவனுங்க படங்களை பதிவா போட்டு நாரடிங்க பதுவுலகம் மெல்ல வாழும் இனி அவ்வ்வ்வ்வ்.....
யோவ் டக்கால்டி, இதுக்கு பேசாம ஒரு முழம் கயிறு வாங்கி தந்துருக்கலாம் ம்ஹும் முடியலைடா சாமியோ...// repeatuuuuuuuuuu.
//
அது சரி அவருக்கென்ன கவலை, அதைப் பார்க்கிற நாம தானே கவலைப்படணும்
//
உண்மைதான்
எங்க தலைவர ரொம்ப ஓட்ரிங்க .. நல்லதுக்கு இல்ல .. அப்புறம் எல்லா படைத்தும் பாக்க வைதுடுவோம்
டாக்டரைப் பத்தி பெரிய ஆராய்ச்சியே செஞ்சிருக்கீங்களே..
thank you for important things to us hehe!
பார்ட்னர், பவர் ஸ்டார்கிட்ட வேலைக்கு சேர்ந்துட்டீங்களா?
உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு ஹி ஹி
Post a Comment