வணக்கம் நண்பர்களே!
தெரிஞ்சோ தெரியாமலோ போன இடுகைல கண்டிப்பா ஆணி புடுங்குவேன் சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ தாங்க புரியுது. "உன்னை இவ்வளவு நாள் சும்மா விட்டதே பெருசு. இப்படியே விட்டா நீ இன்னும் பெரிய ஆள் ஆயிடுவ" என்று நினைத்து என் டேமேஜர், "நீ சமூகத்துக்காக ஒன்னும் புடுங்க வேண்டாம், முதல்ல நான் கொடுக்குற ஆணிகளை ஒழுங்கா புடுங்கு என்று நிறைய ஆணிகளை சொருகிவைத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனா நாம யாரு, வெள்ளைக்காரன் கண்ணுலேயே விரல விட்டு ஆட்டுவோம்ல, அதான் டக்ளஸ்க்கே டக்கால்டி வேலை காமிச்சுட்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.
சபாஷ் சரியான போட்டி- அட இது புதுசா வெளிவந்து ஓடிகிட்டு இருக்குற படம் பேருங்க. முதல்ல படக்குழுவினர் விவரத்தை சொல்லிடுறேன்.
நடிப்பு: ஸ்ரீராம் கார்த்திக்,ஜெயராம்,ஸ்ரீரஞ்சனி,அஞ்சனா, மயில்சாமி,டெல்லிகணேஷ்,வையாபுரி,வேணு அர்விந்த் & வேணு அர்விந்த் மற்றும் பலர்.
இசை: தமன்
தயாரிப்பு: வி.ஆர்.ரகுநாதன்
இயக்கம்: வேணு அர்விந்த்
பாடல்கள்: நா.முத்துக்குமார்,கதிர்மொழி மற்றும் தரங்கை சூர்யா
படத்துல என்ன சொல்லவர்றாங்கன்னா... இது முழுக்க முழுக்க ஜாலியான படம் அதனால லாஜிக் பாக்குறவங்க எல்லாம் அதை மறந்துடுங்க என்று படத்தின் இயக்குனரே ரெண்டு மூணு காட்சில சொல்லிடுறாரு. ஜே.ஆர் (ஜெயராம்) என்கிற ஒரு மாஸ் ஹீரோ அரசியலுக்கு வரத்துடிப்பதைப் பற்றி தெரியாத படத்தின் உண்மையான நாயகன் (எஸ்.கே - அட தப்பா நெனைக்காதீங்க எஸ்.கேன்னா ஸ்ரீராம் கார்த்திக்) தனது துடுக்குத்தனத்தால் தனது தலைவனைப் பகைத்துக் கொள்வதும், அதன்பின் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறார் என்பதையும் படத்தில் பார்க்கவும்.
படத்தில் பல ப்ளஸ் இருக்குங்க. முதலாவதா இயக்குனர் வேணு அர்விந்த். தனது முதல் படம் என்பதால் தனது மொத்த உழைப்பையும் யூஸ் பண்ணி இருக்காரு. மட்டமான திரைக்கதை அவ்வவ்போது தொய்வை ஏற்படுத்தினாலும் இறுதிக்காட்சியில் தனது நடிப்பிலேயே சுவாரசியப்படுத்திவிடுகிறார். படம் முழுதும் வியாபித்து இருக்கும் சின்ன சின்ன மொக்கை ஜோக்குகள் தான் படத்தை மொக்கைப் படம் ஆக்காமல் விட்டிருக்கிறது. இருப்பினும் இவரது இயக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அதுவும் முதல் காட்சியில் நாட்டில் பிரச்சினை நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் மூணு பேரு காப்பத்துவது போல ஓடி வந்து "உங்களை காப்பாத்த எங்களால முடியாது.. வேறு ஒருத்தரு இப்போ வருவாரு" என்று சொல்லி ஓடிக்கொண்டே இருக்க தியேட்டரில் "வந்துட்டாண்டா" என்ற ஜெயராம் ஓபனிங் சாங் போட்டிருப்பது படா ஜோர்.
அடுத்ததாக ஜெயராம். தனக்கு கொடுக்கப்பட்ட ஜே.ஆர் கதாப்பாத்திரத்தை மனுஷன் நன்றாகவே செய்திருக்கிறார். குடித்துவிட்டு திருப்புகழ் சொல்லிக்காட்டும் சீன் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல. தனக்கு புகழ்ச்சி பரவ ஆரம்பிக்க ஆரம்பக்காட்சிகளில் இவர் தனது கைத்தடிகளான டெல்லிகணேஷ் மற்றும் வையாபுரியின் பேச்சை கேட்டு அரசியலில் நுழைய செய்யும் சேட்டைகள் பழசு என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இறுதிவரை ஒரு மாஸ் ஹீரோ நிஜவாழ்வில் எப்படி இருப்பான் என்பதை பிரதிபலித்திருக்கிறார்.
அடுத்ததாக நடிகராக மீண்டும் வேணுஅர்விந்த் தான். இரட்டை வேடங்களில் ஒன்றான "ஹை- டெக்" திருடன் ஜேம்ஸ் கேரக்டரில் கலக்கி இருக்கிறார்.இன்னொரு கேரக்டரில் தனியார் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சி நிர்வாக இயக்குனர் தனது நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் ஏற என்ன தகிடுதத்தம் செய்வார்கள் என்பதை அழகாக செய்திருக்கிறார்.மிமிக்ரி செய்யும் ஆர்டிஸ்ட்டுகள் சில பிரபலங்களின் மிரட்டலுக்கு ஆளாகும் நிஜவாழ்வு காட்சிகளும் படத்தில் புகுத்தியிருப்பது அருமை.
ஜேம்ஸ் கேரக்டருக்கு ஜோடியாக வரும் சின்னத்திரை நடிகை "தீபா நரேந்திரன்" (வாரணம் ஆயிரம் படத்தில் வரும் சூர்யாவின் தங்கை) முதலில் கோமாளித் தனமாக செய்யும் காட்சிகள் கடுப்பை வரவழைத்தாலும் போகப்போக செம காமெடி.
இப்போ படத்தின் சில மொக்கை காட்சிகள். எல்லாப் படத்திலையும் வரத்து போலவே தனது மகனை (ஹீரோவை) பாசத்தின் கயிற்றில் கட்டிப் போடும் அப்பாவி ஹார்லிக்ஸ் அம்மா. ஊரையே கலாய்க்கும், தனது அபிமான நடிகரான ஜெயராமைக் கூட கலாய்க்கும் ஹீரோ அவர் அம்மா சொன்னதை மட்டும் எப்போதும் வேதவாக்காக எடுத்துக்கொள்ளும் அம்மா செண்டிமெண்ட். கதைக்கு ஒட்டாத ஹீரோயின் கிளைக்கதை. ஹீரோயின் வீடு வாடகை கேட்டு சண்டை போடும் ஹவுஸ் ஓனர் பின் நல்லவராக மாறி ஹீரோவுக்கு உதவும் காட்சிகள் புன்னகை தேசம் படத்தில் வரும் மலேசியா வாசுதேவன் சார் கேரக்டரை ஞாபகப்படுத்துகிறது. வெறுப்பேத்தும் பாடல்கள். ஈரம் படத்துக்கு இசையமைத்த தமன் தான் இந்த படத்துக்கும் ஆனா பாடல்கள் படுமட்டம். இறுதிப்பாடலான "ஓடு மாமே" என்ற பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. அதுவும் எதனால் என்றால் பாடலை கந்தசாமி படத்தில் வர்ற "எம் பேரு மீனாகுமாரி
பாடலைப் போன்று படமாக்கி இருப்பதால்.படத்தின் ஓபனிங் பாடலும் குத்துப் பாட்டு என்பதாலும் அதற்கு முந்தைய காட்சியாலும் நன்றாக இருக்கிறது.
படத்தின் நாயகன் ஸ்ரீராம்கார்த்திக் பார்க்க நன்றாக இருக்கிறார். அப்போ நடிப்பு?!அட போங்க பாஸ். ஒளிப்பதிவும் படத்துக்கு ரிச் லுக் கொடுக்கவில்லை. லோ-பட்ஜெட் படம் எல்லாத்துலையும் ஒளிப்பதிவு 'டல்'லாகவே இருக்கே அது ஏன்? படம் கண்டிப்பாக பார்க்கலாம். பொறுமையும்,நேரமும், மொக்கை கடிகளை ரசிக்கும் மனவுறுதியும் இருந்தால்.இன்னொரு வித்தியாசமாக வந்திருக்க வேண்டிய படம்,சில சொதப்பல்களுடன்.
படங்கள் உதவி- நன்றி; கூகிள் இமேஜஸ்
6 comments:
Rasaleela Sir Welcome...he he...
Thanks for your visit..
எலேய் மாப்ள இவ்ளோ வேலையிலயும் உனக்கு கிளு கிளுப்பு!......ஹிஹி நல்லாத்தான் இருக்கு விமர்சனம் நன்றி!
நல்லாருக்கு விமர்சனம். இந்தப்படம் ஈரோட்ல ரிலீஸ் ஆகி 2 நாள்ல யே தூக்கிட்டாங்க.. அதனால தான் பார்க்க முடியல..
டெம்பிளேட் டிசைனிங் அருமை.
ஆணி புடுங்க வைச்சிட்டாங்களா..
ஹி...ஹி...அதான் நெட் பக்கம் கொஞ்ச நாளா காண முடியலை.
விமர்ச்னம் அருமை..படத்தை பார்த்த பின்னர் மிகுதியைச் சொல்றேன் மாப்பிளை.
வாங்க தல நீங்க இல்லாம பதிவு வுலகம் வெறிச்சோடி கிடக்கு..
Post a Comment