நீ என்ன
நம் சந்திப்பின் போதெல்லாம்
காதல் ஒட்டு
உனக்கு
தேர்தல் நாளன்று மட்டும்
இன்னும்
இப்பொழுது என் கேள்விக்கு
அரசியல்வாதியின் மகளா?
ஐந்து நொடிக்கொருமுறையே
உன் பார்வையை
என் இதயத்தொகுதி மேல்
செலுத்தினாய்.
உன் இலவச
முத்தங்களுக்கும்
செல்லக் கொஞ்சலுக்கும்
ஏகமாய் துடித்தது
என் இதயம்.
கொடுத்த காதல் வாக்குறுதிகளை
நீ கொடுக்கும்
கடித்தத்தில் மட்டும்தான்
நிறைவேற்றினாய்...
அழகு தமிழ்
பழகு கவி பேசியே
என் அறிவை மயக்கினாய்...
உனக்கு பரிசளிக்க
காதல் வரியாக செலவழித்த
உழைத்து சம்பாதித்த ஊதியத்தை
நன்கு அனுபவித்தாய்...
கேட்டு வந்தேன்
என் ஒட்டு பெற
என்ன சலுகை என்றாய்?
உனக்கு
என்ன வேண்டுமோ கேள்
என்றதற்கு
எதுவும் வேண்டாம் எனக்கு
என் வோட்டு உனக்கு என்று
சரியென தலையாட்டினாய்...
தேர்தல் நாளன்று மட்டும்
ஏன் உன் ஓட்டை
இன்னொருவனுக்கு
மாற்றிக் குத்திவிட்டாய்...
இன்னும்
என்னிடம் சலுகைகளைக் கேட்க
உனக்கு என்ன தயக்கம்?
இன்னொருவன் தந்த சலுகைகளில்
உனக்கு என்ன மயக்கம்?
காதல் தொகுதியில்
டெபாசிட் இழந்தாலும்
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
அடுத்த தேர்தலுக்கு...
இப்பொழுது என் கேள்விக்கு
பதில் சொல்
நீ என்ன
அரசியல்வாதியின் மகளா?
6 comments:
Super kavithai. . .
Vadai
அட அட அட சூப்பர் பாஸ்!
//கொடுத்த காதல் வாக்குறுதிகளை
நீ கொடுக்கும்
கடித்தத்தில் மட்டும்தான்
நிறைவேற்றினாய்.//
:-))
அட..அட..அட..கலக்கி இருக்கீரே!..நல்லா இருக்குய்யா உம்ம மிக்ஸிங்கு!
hahaha....super maapla!
boss .. anubavichu eluthiniatha ithu ? :)
Post a Comment