எல்லாரும் கலவை இடுகைகளுக்கு மிக்சர், கொத்து பரோட்டா, நூடில்ஸ் என்று விதம் விதமாக பேரு வெச்சிட்டாங்க.
என்னை மாதிரி புதுசா எழுத வர பதிவருங்க நிலைமை இங்க தான் சிக்கல் ஆகிடுதுங்க. சரி நாமளும் கலந்து கட்டி சில விஷயங்களை ஒரு இடுகையாக போடலாமுன்னு பார்த்த தலைப்பு என்ன கொடுக்குறதுனு தெரியல. ஹாப் பாயில் (இது குடிச்ச்சதுக்கு அப்புறம் போடுறது), இடியாப்பம், பிரைட் ரைஸ் என்னென்னமோ யோசிச்சு அப்புறமா இந்த தலைப்பை வெக்கிறேன்.
சிறு சிறு செய்திகளை நூல் விடுராப்புல விடனும் என்பதால் "மாஞ்சா" என்று பேரு வெக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். படிச்சுட்டு நல்ல இருந்தா சொல்லுங்க.
1. ஐ.பி.எல்:
ஐ.பி.எல் மூன்றாம் ஆண்டின் போட்டிகள் தொடங்கிவிட்டன. இப்போது சில ஆட்டங்களுக்குப் பிறகு போட்டி கலை கட்டத் தொடங்கியிருக்கிறது. இருநூறு ஓட்டங்கள் எடுத்தும் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணியின் பரிதாபம், போராடி ஜெயித்த சென்னை அணி, சச்சினின் அபார ஆட்டத்தால் இருநூறை கடந்த மும்பை அணி என்று இம்முறையும் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை. இதில் நேற்று மும்பை அணி அடித்த ஓட்டங்களே இதுவரை ஐ.பி.எல் மூன்றாம் சுற்றின் அதிக பட்ச ஓட்டங்களாகும். சென்னை அணி பரிதாபகரமான நிலையிலிருந்து சற்று மீண்டிருக்கிறது. இரு ஆட்டங்களிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹய்டேன் ஏமாற்ற தோனி மற்றும் பத்ரிநாத் "அடிவாங்க மிதிவாங்க வலிதாங்க அடி,வலி பொட்டிக் கடிக" என்ற வடிவேலின் டையலாக் போல பல காயங்களுடன் போராடி வெற்றிக்கு வித்திட்டனர்.
போன வருஷம் எல்லாரையும் விட கலக்குன "பேக் ஐ.பி.எல் ப்ளேயர்" இந்த வருஷம் என்னங்க ஆனாரு?
சன் டி.வி இதையும் விளம்பரப்படுத்தறாங்க. விளம்பரம் இல்லாம கிரிக்கெட் பாக்க சன் டி.டி.எச் வாங்க சொல்றாங்கோ. அப்போ அதுல ஒன்லி சன் பிச்சர்ஸ் பட விளம்பரம் மட்டும் வருமா? அதுக்கு மத்த விளம்பரங்களே பரவாயில்லைங்க, ஜூ-ஜூ விளம்பரம் பார்க்கலாம். என்ன சொல்றீங்க?
2 . தோனி எனும் போராளி:
இப்போது மக்கள் அனைவரும் கூறும் ஒருமித்த கருத்து, தோனி முன்பு போல ஆடுவதில்லை. ஆட்டம் சற்று கடின நிலையில் இருக்கும் போது இறங்காமல், அப்படியே இறங்கினாலும் அடிக்காமல் செல்கிறார். இல்லை எனில் ஆட்டம் நன்கு சென்று கொண்டிருக்கும் போது மட்டும் மூன்றாவதாக களம் இறங்குகிறார். மற்ற நேரங்களில் இல்லை என்று. இந்திய அணியில் முதல் நான்கு இடங்களில் ஆடுவதற்கு என்றே அதற்கென்று பிரசித்தி பெற்ற பேட்ஸ்மேன்கள் இருப்பதால் தான் மூன்றாம் நிலையில் இறங்குவது மிகவும் கடினம் என்று ஏற்கனவே அவர் பெட்டி அளித்து இருக்கிறார். சில மேட்ச்சுகளில் ஓட்ட விகிதம் அதிகப்படுத்த அவர் மூன்றாம் நிலையில் இறங்க வேண்டி உள்ளது. அனைத்து மேட்சுகளிலும் மூன்றாம் நிலையில் ஆட வேண்டிய தேவை இல்லை என்ற கருத்துக்கு நான் ஒத்துப் போகிறேன். தவிர நம் இந்திய அணியின் பலவீனமே ஆடினால் அனைவரும் அடித்து நொறுக்குவார்கள் இல்லையேல் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழப்பார். இதில் தான் நாம் மற்ற முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிகாவிடம் இருந்து வேறு படுகிறோம். மேட்ச் சேவர் (மைக் ஹஸ்சி,பெவன் போன்றோர் )என்று கூறப்படும் அளவுக்கு நம் அணியில் இன்னும் சொல்லிக்கொள்ளும் படி யாரும் இல்லை.
தற்போது இவரின் வழிநடத்துதல் அபாரமாக இருக்கிறது. இதற்கும் "தோனிக்கு சரியானான் லக்கு டா." என்கின்றனர் பலர். இறுதி வரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மற்றும் போராடும் குணம் டோனியிடம் அதிகமாகவே இருக்கிறது. அதில் கிடைத்தது தான் அவரின் தலைமையில் நாம் பெற்ற அனைத்து வெற்றிகளும் என்பது என் கருத்து.
3 . சோத்துக்கட்சி:
நான் என்னுடைய முந்தைய இடுகையின் ஒன்றில் கூறியதை போல, என்னைப் போன்ற அன்லிமிட்டெட் மீல்ஸ் கேசுகள் செல்ல ஏதுவான இடம் வேளச்சேரி - விஜயநகர் பை-பாஸ் ரோட்டில் உள்ள "கலவறா ரெஸ்டாரன்ட்". அமைதியான சூழ்நிலை, கேரளா பாரம்பரிய உணவு வகைகள், நல்ல ருசியான மீன் கறி என்று பிராமதமான இடம். விலையும் மாடரேட்டாக தான் இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அங்கு வேலை பார்க்கும் பேரர் ஒருவரே ஸ்பீக்கரில் ஒலிக்கும் கரோகேவுக்கு ஏற்றவாறு அருமையாக பாடுவார். லவ்வுரவங்களுக்கு ஏற்ற இடமும் கூட.
4 . கவுண்டமணி செத்துட்டாரு...
கடந்த மூன்று நாட்களாகவே கவுண்டமணி செத்துட்டாரு என்று புரளி கிளம்புவதும் பின் அது புரளி என்று நாம் தெரிந்து கொள்வதும் என போய்க்கொண்டிருக்கிறது. இப்படியே போனால் ஒரு வேலை சில உண்மையான நிகழ்வுகள் கூட நமக்கு அசாத்தியமாக தோன்ற வாய்ப்பிருக்கிறது. எப்படியோ தலைவர் நலமாகத் தான் இருக்கிறார் என்று ஒவ்வொரு புரளியின் முடிவில் அது புரளி தான் என ஊர்ஜிதம் ஆகும் போது மனதுக்குள் ஒரு திருப்தி.
மீண்டும் சந்திப்போம்!!!
6 comments:
தலைவர் இன்னும் பல வருடம் நல்லா இருக்கனும்...
நீங்க வேளச்சேரியா?
தலைவர் இருப்பாருங்க, மீடியாக்காரங்கதான் இந்த மாதிரி இம்சைய குடுக்கறாங்க. அவர் வந்தா, நிருபர்களை பாத்து, "டேய் கேமரா தலையா, இந்த மைக் மண்டையனுக்கு சொல்லி வை, நான் இன்னும் குத்துக்கல்லாட்டம்தாண்டா இருக்குறேன்"னுவார்
நமக்கு வேளச்சேரியும் ஒரு ஊரு தானுங்க...
நாடோடிகளுக்கு ஏது ஊரும், பேரும்..
"நல்ல கேள்விக் கேக்குற ஆளுங்கள பாரு ...
ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கு லேபில் சுத்தின மாதிரி...
டே ஆம்புலன்ஸ் வாயன்களா நான் எதுக்கு டா சாகப் போறேன்?
புரளியை கெளப்பாதீங்க டா பூசணிக்கா மண்டையனுங்களா"
இது நான் யோசிச்சு வெச்ச்சதுங்க...
வருகைக்கு நன்றி புலவரே
இப்ப உள்ள எல்லா காமெடிக்கும் கவுண்டர்தானே அஸ்திவாரம்..
நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன் கவுண்டரே..
@பட்டாபட்டி..
வாங்க பட்டாப்பட்டி...
வருகைக்கு நன்றி
Post a Comment