Nov 19, 2010

ஓட்டம்...

என் அப்பா சிந்திய
விந்தணுக்களில் ஒன்றான
நான்...

அன்று முந்திக்கொண்டு ஓடிய ஓட்டம்
இன்று வரை ஓயவில்லை

பள்ளிப்பருவத்தில் மதிப்பெண்
கல்லூரி காலத்தில் மணப்பெண்
வாலிப காலத்தில் வேலை

என்று பணத்திற்காக
நான் ஓயாது ஓடிய ஓட்டம்...

இன்று என்னையும்
அமெரிக்காவாசி ஆக்கிவிட்டது!!!

No comments: