Feb 17, 2010

ஊடல்

தினமும் இரவில்
உன் குறுந்தகவலுக்கு
உடனே பதில் தராததால்
உண்டாகும் ஊடல்
இறுதியில்
குறுந்தகவலின் மூலமே
முள்ளை முள்ளால் எடுப்பதாய்
முடிவது அழகு!


அந்த நீளமான
அர்த்தமற்ற
தகவல் பரிமாற்றம்
அர்த்தமாக்குகிறது
ஒவ்வொரு ராத்திரியையும்...


குவார்ட்டரை தாண்டி
மூன்று ரவுண்டு
முடிந்த நிலையில்
உட்கொண்ட
முட்டை பரோட்டாவின்
வேதி வினையில்
வந்த வாந்தியின்
மறுவிளைவில்
எழுந்த
இனி குடிக்க மாட்டேன்
என்ற சபதம்
மறுநாள் மாலையில்
மற்றொருமுறை
உடைபடுவதைப் போல
உடைபடுகிறது
என்னுடன்
உன் ஊடலும் கூட!

6 comments:

vino said...

ரொம்ப டெக்னிகலா எய்ம் பண்றீங்க :o

டக்கால்டி said...

வருகைக்கு நன்றிங்க...
எதுக்குமே எய்ம் பண்ணலீங்க...
மனுசுல பட்டதை கிறுக்கியிருக்கேன்...

padmahari said...

ஏ....இது நல்லாயிருக்கப்பு! தொடர்ந்து இது போன்ற கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்!

டக்கால்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பத்மஹரி...

ச ம ர ன் said...

//குவார்ட்டரை தாண்டி
மூன்று ரவுண்டு
முடிந்த நிலையில்
உட்கொண்ட
முட்டை பரோட்டாவின்
வேதி வினையில்
வந்த வாந்தியின்
மறுவிளைவில்//

என்ன ஒரு சிந்தனை ஓட்டம்..என்ன ஒரு கற்பனை..வாழ்க்கையோட மொத்த தத்துவமே இதுதான்..

பட்டைய கிளப்பிட்டீங்க :)

டக்கால்டி said...

வாங்க சமரன்...
என்னைய வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே...
:-)