படம் சொல்லும் பாடம் என்ற தலைப்பில் அவ்வப்போது நமது தமிழ் திரைப்படங்களில் வந்த சில நல்ல கருத்துள்ள காட்சிகளை பகிர்வதன் மூலம் அதன் கருத்தையும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்ட இந்த இடுகையை தொடங்கலாம் என்று இருக்கிறேன். உங்களின் ஆதரவைப் பொறுத்து இது போன்ற இடுகைகள் தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன். இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னியுங்கள். சுட்டிக் காட்டுங்கள் தட்டி திருத்திவிடுகிறேன்.
அறை எண் 305 இல் கடவுள் என்ற திரைப்படத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அதில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்னவென்றால், பிரகாஷ்ராஜ் கஞ்சாகருப்பு மற்றும் சந்தானத்தின் வீட்டுக்கு சென்று உரையாடும் காட்சி. "என் மேல ஆத்தா வந்திருக்கா டா" என்று உண்மையான கடவுளையே மன்னிப்பு கேட்க வைப்பார் கஞ்சா கருப்பின் அண்ணி. "சாமிக் குத்தம் ஆயிப்போச்சுயா" என்று பிரகாஷ் ராஜிடமே சொல்லுவார் கஞ்சா கருப்பின் தந்தையான பெரியார்தாசன்.
அதைத் தொடர்ந்து சந்தானத்தின் வீட்டில் அவரது பென்ஷன் வாங்கும் அரசு ஊழியரான, அப்பாவான டெல்லி கணேஷுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் நடக்கும் உரையாடல் என்னை சிந்திக்க வைத்தவை. அந்த உரையாடல் உங்களுக்காக. சிவப்பு நிறத்தில் இருப்பவை டெல்லி கணேஷின் பேச்சையும், நீல நிறம் பிரகாஷ் ராஜினது பதிலையும் குறிக்கும்.
உன் வயசு என்ன?
35 சார்.
பேங்க் எக்ஸாம் எழுத முடியுமா டா? - டெல்லி கணேஷ் அவரது பையனிடம்.
இல்ல பா.முடியாது. -அவரது மூத்த மகன்.
ஹ்ம்ம் முடியாது. ஏஜ் பார் தாண்டிடுச்சு.பப்ளிக் சர்வீஸ், சிவில் சர்வீஸ் எதுவும் எழுத முடியாது. நல்லாதான் ஒன்னு சேர்ந்துருக்கீங்க. என்ன பார்த்தியா 35 வருஷம் கவர்ன்மென்ட் சர்வீஸ். ஒரு நாள் லீவ் எடுத்தது கிடையாது. மூணு பசங்களையும் படிக்க வெச்சேன். இப்போ ரிட்டையர் ஆனா பின்பும் சுளையா மாசா மாசம் 4500 ரூபாய் பென்ஷன் வாங்குறேன். நீங்க எல்லாம் எங்க உருப்பட போறீங்க?
எது சார் சந்தோசம்?இந்த 35 வருஷத்துல ஒரு தடவையாவது குழந்தை, மனைவியை கூட்டிகிட்டு வெளியூர் எங்கயாவது போயிருக்கீங்களா? தனி ஆளா மலை உச்சிக்கு மேலே உக்காந்து வானத்தைப் பார்த்திருக்கீங்களா?யாருக்காவது உங்களால முடிஞ்ச சிறு உதவி செஞ்சிருக்கீங்களா? இது எதுவுமே செய்யாம எதை வெச்சு சந்தோஷமா இருக்கேன்னு சொல்றீங்க? நாய் கூட தான் தனக்கு பிஸ்கட் போட்டவங்களுக்கு காலம் பூராவும் நன்றியோட இருக்கும். அது இல்ல சார் வாழ்க்கை..
இந்த உரையாடலை நன்கு கவனித்திருப்போருக்கு "நாம் இது போல ஏதாவது செய்து இருக்கோமா?" என்ற எண்ணம் கண்டிப்பாக மனதில் தோன்றியிருக்கும்.காலை எழுந்து இரவு உறங்கும் வரை எந்திரத்தனமாகவே மாறி விட்ட வாழ்க்கையில் இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்ய தவறிவிடாதீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்ட இந்த இடுகை.
பி.கு. இவை மட்டும் அல்லாமல் நெடுந்தூர மழைக்கால பைக் பயணம், அருவி குளியல் போன்றவற்றை நான் ரசித்து அனுபவித்து இருக்கிறேன்.
3 comments:
நல்லப்பதிவு. வாழ்த்துக்கள்!
வருகைக்கு மிக்க நன்றிங்க...
நெடுந்தூர மழைக்கால பைக் பயணம்
enakkum romba pidikkum.. :)
Post a Comment